பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்
பெயர் கருத்து கருத்து நாள்
கார்த்தி நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி திருமெய்ஞானம் கடலோர கிராமமாகும். எங்கள் கிராமத்தின் மயானத்திற்க்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராம மக்களிடம் கருத்து எதுவும் கேட்காமல் ரகசியமாக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்க வாய்ப்புள்ளதா? இந்த அனுமதிக்கு தடையாணை பெற முடியுமா? Mar 12, 2017
சீ.ஷியாம் கிருஷ்ணன் யூனியன் அலுவலகத்தில் மானியத்தில் விவசாயிகளின் நன்மைக்கு உழவு இயந்திரம் கொடுக்கலாம் இப்போது கொடுக்கீர்களா? Mar 04, 2017
மண்ணாங்கட்டி ஐயா கால்நடை கடன் எப்படி வாங்குவது அதனுடைய விளக்கம் தேவை Mar 03, 2017
Gopalakrishnan ஐயா நான் விவசாயி எங்களுக்கு எந்த ஒரு மானியம் கிடைப்பதில்லை அப்படி தமிழகஅரசு எந்த மானியம் அரிவித்தால் எங்களுக்கு தெரியப்படுத்துவம் 9442671054 Feb 14, 2017
வீரமணி.த சோற்று கற்றாழை கன்று கிடைக்குமிடம் எங்குள்ளது.தமிழ் நாட்டில் Feb 14, 2017
Shobana வணக்கம். சமீபத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்த சூழ்நிலையில் விகாஸ்பீடியா வலைதளத்தில் மின்னணு பணப்பரிமாற்றம் பற்றிய தகவல் தமிழ் மொழியில் இருப்பதை முகநூல் மூலமாக அறிந்தேன். ஸ்மார்ட் மொபைல் வைத்திருந்தாலும் UPI போன்ற செயலிகளை பயன்படுத்த தெரியாமல் இருக்கும் என் போன்ற மக்களுக்கு இத்தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. விகாஸ்பீடியாவின் உதவியால் தற்போது அனைத்து பணப்பரிமாற்றங்களும் மின்னணு முறையிலேயே மேற்கொள்கிறேன். மிக்க நன்றி. ஷோபனா.S ஈரோடு மாவட்டம் Jan 24, 2017
Annadurai இவ்விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத்தொடர் மருத்துவரீதியாகவும் மனரீதீயாகவும் சிறந்த ஆய்வுக்கட்டுரை. Jan 20, 2017
prabhu Mobile number வேண்டும் சில விவசாய குறிப்புகளை கேட்க Jan 17, 2017
கோகிலா ஆசிரியை என் பெயர் கோகிலா நான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வடசேரி S.V.R.V மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்து வருகின்றேன். நான் கடந்த மாதம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “விகாஸ்பீடியா - தமிழ்” வலைதள பயிற்சி முகாமில் பள்ளிக்கல்வித்துறையின் எங்கள் பள்ளியின் சார்பில் கலந்து கொண்டேன். இப்பயிற்சியில் “கல்வி – உட்பிரிவில்” மாணவர்கள் பகுதி, ஆசிரியர் பகுதி, பொதுஅறிவுத் தகவல்கள் பற்றிய தகவல்களை பார்த்தேன். இத்தகவல் என்னை மாதரி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் என்பதை அறிந்தேன். ஏனெனில் நாங்கள் பள்ளிப்பாடபுத்தகங்களை மட்டும் படித்து மாணவ மாணவியருக்கு பாடம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுபோன்ற தமிழ் வலைதளம் மூலம் பயனுள்ள பல்வேறு வகையான தகவல்கள் என்போன்ற ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்பெறும். மறுநாள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத எனது சக ஆசிரியர்களுடன் இவ்வலைதளம் பற்றிய தகவல்களையும், தொழிற்நுட்பங்ளையும் எடுத்துரைத்தேன். கணிப்பொறி மூலம் இவ்வலைதளத்தில் பதிவு செய்யுங்கள் எனவும் அறிவுறித்திதேன். மேலும் ஒருபாடப்பரிவில் விகாஸ்பீடியா வலைதளம் பற்றி மாணவர்களிடமும் எடுத்துரைத்தேன். இப்பாடத்தில் பொதுஅறிவு வினாக்கள் இருப்பதையும் எடுத்துக்கூறி நான் மறுநாள் வகுப்பறை வீட்டுப்பாடமாக தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளை எழுதி வரவேண்டும் என்று கூறினேன். இதை ஒரு மாணவன் மறநாள் எழுதி வந்தான் என்னிடம் காண்பித்து அதில் ஆதாரம் விகாஸ்பீடியா தமிழ் எனவும் எழுதியிருந்தான். நான் அவனிடம் கேட்டேன். இது என்ன விகாஸ்பீடியா என்றேன். டீச்சர் தாங்கள் தான் நேற்று விகாஸ்பீடியா வலைதளத்தைபற்றி எங்களுக்கு பாடம் நடத்தினீர்கள். இதனால் நான் வீட்டில் சென்று கல்லூரியில் படிக்கும் எனது அக்காவிடம் சென்று கூறினேன். அப்போது இருவரும் இந்த வலைதளத்தைப்பார்தோம். அப்போது தாங்கள் எழுதி வரச்சொன்ன விருதுகள் பற்றிய தகவல்களை பார்த்தேன் எழுதிவந்தேன் என்றான். உடனே நான் வகுப்பறையில் அந்த மாணவனை பாரட்டினேன். மேலும், விகாஸ்பீடியா வலைதளத்தை “பாடசாலை” வலைதளத்திலும் இத்தகவல்களை வழங்க பரிந்துரையும் செய்தேன். நன்றி கோகிலா, ஆசிரியை S.V.R.V மேல்நிலைப்பள்ளி வடசேரி கன்னியாகுமரி மாவட்டம் Dec 30, 2016
Chandraganesan I want Ph.d Scholarship information Dec 28, 2016
ஐீவானந்தம் நான் கடந்த ஏழூ ஆண்டுகளுக்கு முன் நிலம் விட்டு மனைப்பிரிவு வாங்கியுளேன் பட்டா மாறுதல்செய்ய என்னசெய்யவேண்டும் Dec 01, 2016
Latha வணக்கம். என் பெயர் லதா. தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். சமீபத்தில் விகாஸ்பீடியா பற்றிய விளம்பரத்தை சென்னை நலத்தகவல் புத்தகத்தில் பார்த்து, அவ்வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்தேன். இதில் தகவல்களை பகிரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது நன்றிகள் பல. மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிய உதவும் ஒரே வலைதளம் விகாஸ்பீடியா தான். இதுவரை அறிந்திராத பல்வேறு திட்டங்களை இதன் மூலம் தெரிந்துக்கொண்டு பயன் பெற்றேன். நான் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். இவ்வலைதளத்தில் கருத்தாய்வு செய்து சமுதாய மேம்பாட்டிற்கான எனது பங்களிப்பை தருவேன் என உறுதி அளிக்கிறேன். நன்றி Nov 30, 2016
J.ஜோசப் சேவியர் வணக்கம். எனக்கு அனைத்து விதமான Watch களுக்கும் பழுது நீக்கம் செய்ய தெரியும். Watch கடை போட விரும்புகிறேன்.எனக்கு Lone கிடைக்குமா? நான் என்னசெய்ய வேண்டும். எங்கு சென்று விசாரிக்க வேண்டும் என தயவு கூர்ந்து விளக்கவும். நான் மதுரை(18) கூடல் நகர் பகுதியில் வசிக்கிறேன்.நன்றி. Nov 28, 2016
காளிதாஸ் பின்புறத் தலைவலிக்குக் காரணம் என்ன? காளிதாஸ் சென்னை Nov 25, 2016
நியூட்டன் காய்கரி குளிர் பதன கிடங்கு பற்றிய தகவல் Nov 15, 2016
ஏ.பாபு விவசாயிகளுக்கு கிணறு மானிய முறையில் தூர்வார மானியம் கிடைக்குமா Nov 07, 2016
deepan சிறந்த இணையசேவை பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி Nov 06, 2016
G. சுகன்யா என்னுடைய பெயர் சுகன்யா. நான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய வளர்ச்சி நிறுவனம் அறக்கட்டறை (இந்தோ அறக்கட்டளை) யில் குடும்பல நல ஆலோசகராக (Family Councellor ) பணிபுரிந்து வருகிறேன். 27.10.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற விகாஸ்பீடியா வலைதளபயிற்சியில் கலந்து கொண்டேன். தமிழில் மிகவும் எளிய முறையில் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறிய முடிந்தது. நான் ஒவ்வொரு நாளும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று வறுமையான மக்களுக்கு மருத்துவ தொடர்பான விளக்கங்களை எடுத்துரைத்து வருகிறேன். தற்போது விகாஸ்பீடியா வலைதளம் மூலம் மேலும் பல்வேறு வகையான மருத்துவ விபரங்களை தமிழில் அறிய முடிகிறது. இதை 27.10.2016 அன்று மாலை நேரத்தில் சென்று கைப்பேசி வழியாக உள்ள மதர் ஆப்பை பற்றி 6 மாத கர்ப்பிணிக்கு அவர்களில் கைப்பேசியில் பதவிறக்கம் செய்து கொடுத்தேன். அவற்றில் அவர்கள் பல்வேறு வகையான விபரங்களை அறிந்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த தகவல்களை அனைத்து கர்ப்பிணிக்களுக்கு தெரிவிக்கவும் கூறினேன். நன்றி G. சுகன்யா இந்திய வளர்ச்சி நிறுவனம் அறக்கட்டளை ( இந்தோ அறக்கட்டளை) 151, முதல் தளம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் 621212. 8760606635 மின்னஞ்சல் : suganyabriel@gmail.com Oct 28, 2016
Sabestain இன்று 26.10.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விகாஸ்பீடியா தகவல் பயிற்சி பட்டறையில் நான் கலந்து கொண்டேன். இதில் பல்வேறு விதமான தகவல்களை எவ்வாறு வலைதளத்தில் பதிவு செய்துவது குறித்தும், கருத்துகளை எவ்வாறு தயார் செய்வது பற்றியும் தெரிந்துகொண்டடேன். நன்றி கு.. செபாஸ்டியன் செல்லையா கல்வித்துறை பெரம்பலூர் மாவட்டம் Oct 27, 2016
farook CSC மத்திய அரசு அங்கீகாரம் பெறுவது எப்படி ?  Oct 18, 2016

Back to top