பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Nov 20, 2018 10:48 AM தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 'கஜா' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாலிடெக்னிக் தேர்வுகள் வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Nov 20, 2018 10:37 AM சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கான கலந்தாய்வு - 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 24 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,110 இடங்கள் இருக்கின்றன.
Nov 19, 2018 11:01 AM மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் மிதிவண்டி ஜனவரிக்குள் மடிக்கணினி பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும்11.17 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் மிதிவண்டியும், ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினியும் வழங்கப்படும்.
Nov 19, 2018 10:56 AM விரைவு தகவல் குறியீட்டுடன் மாணவர் அடையாள அட்டை விரைவு தகவல் குறியீடுகளுடன் (QR CODE) கூடிய அடையாள அட்டை 4-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 22 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Nov 17, 2018 10:33 AM பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. மேலும், சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Nov 17, 2018 10:17 AM ஐஆர்சிடிசி சார்பில் மலேசியா, துபாய்க்கு விமான சுற்றுலா தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியா, துபாய் மற்றும் அபுதாபி செல்ல விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
Nov 16, 2018 10:14 AM பேரிடர் நேரங்களில் உதவும் ‘TN SMART’APP புயல், மழை, வெள்ளம் போன்றவற்றின் நிலை, வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் டிஎன் ஸ்மார்ட் எனும் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
Nov 15, 2018 10:28 AM ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
Nov 14, 2018 10:11 AM இபிஎஃப் அலுவலகம் மட்டுமல்லாமல் இ-சேவை மையத்திலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் ஓய்வூதியர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மட்டுமல்லாது, வங்கிக் கிளை, இ-சேவை மையம், பொது சேவை மையத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Back to top