பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / பூச்சிக் கொல்லிகள் / பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக உபயோகித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக உபயோகித்தல்

இந்த தலைப்பு பூச்சிக்கொல்லிகளை கையாளும் போது எடுத்துக் கொள்ளவேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கைகளைப் பற்றி விளக்குகிறது

பூச்சிக்கொல்லிகள் வாங்கும்போது

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிக்கொல்லி மற்றும் உயிர்ப்பூச்சிக்கொல்லி மருந்துகளை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும்
  • ஒருமுறை ஒரு குறிப்பிட்ட நில அளவுக்கு உபயோகிக்கத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்தினை மட்டுமே வாங்க வேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்து அட்டை அல்லது பாட்டிலின் மீதுள்ள அப்பூச்சிக்கொல்லி அங்கீகரிக்கப்பட்டதற்கான விவரத்தினைப் பார்க்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி செய்த பேட்ச் எண், பதிவு எண், உற்பத்தி செய்த நாள், உபயோகிப்பதற்கான காலக்கெடு போன்றவற்றை பார்க்கவும்
  • பூச்சிக்கொல்லி மருந்து நன்றாக பேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தல் அவசியம்
  • அங்கீகரிக்கப்படாத விற்பனையாளரிடமிருந்து பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது
  • ஒரு பருவத்திற்கு தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக வாங்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் அல்லது பாக்கெட்டில் அங்கீகரிக்கப்பட்ட லேபிள் இல்லாதவற்றை வாங்கக்கூடாது
  • உபயோகிப்பதற்கான காலக்கெடு முடிந்த பூச்சிக்கொல்லிகளை வாங்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்து இருக்கும் பாட்டிலில் கசிவு அல்லது அவற்றின் சீல் உடைக்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்கக்கூடாது

 

பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும்போது

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிற்கு வெளியே வைக்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை அவை வாங்கிய பாட்டிலிலேயோ அல்லது பையிலேயோ வைக்கவேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை தனிதனியே வைக்க வேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்திருக்கும் இடத்தில் அபாயத்தினை குறித்து எழுதி வைக்கவேண்டும்
  • குழந்தைகள் மற்றும் கால்நடைகளுக்கு எட்டாத வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரியவெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்..
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை வீட்டிலோ அல்லது வீட்டின் சுற்றுபுறத்திலோ வைக்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை அவைகளுடையது அல்லாது வேறு பாட்டில்களிலோ அல்லது பைகளிலோ மாற்றி வைக்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வைக்க கூடாது.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை வைக்கும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை சூரிய வெயில் மற்றும் மழையில் படுமாறு வைக்கக்கூடாது

பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளும்போது

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிக்கொல்லி மருந்துகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் போது தனியாக கொண்டு செல்ல வேண்டும்
  • வயல்களில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக கொண்டு செல்லும்போது கவனமாக கொண்டு செல்லவேண்டும்
  • எப்பொழுதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உணவு, தீவனம் மற்றும் இதர உண்ணும் பொருட்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை மொத்தமாக எடுத்துச்செல்லும்போது தோளிலோ, தலையிலோ அல்லது முதுகிலோ சுமந்து செல்லக்கூடாது

பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்கும்போது

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • எப்பொழுதும் சுத்தமான தண்ணீரையே உபயோகிக்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி கரைசலை தெளிக்கும்போது பாதுகாப்பு உடைகளான கை உறை, முகக்கவசம், தொப்பி, கோட், முழுக்கால் பான்ட் மற்றும் இதர உடைகளை உடல் முழுவதும் மூடிக்கொள்ளுமாறு அணிந்து கொள்ளவேண்டும்
  • தெளிக்கும் போது பூச்சிக்கொல்லி மருந்து உங்கள் கண், மூக்கு, காது, கை போன்ற உறுப்புகளின் மேல் படாதவாரு பாதுகாத்து கொள்ளவும்
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து அதன்படி உபயோகிக்கத் தவறக்கூடாது
  • தேவைக்கேற்ப பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை தயாரிக்கவேண்டும்
  • குருணைவடிவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை அப்படியே உபயோகிக்க வேண்டும்
  • பூச்சிக்கொல்லி கரைசலை தெளிப்பானில் ஊற்றும் போது கீழே சிந்தக்கூடாது
  • பூச்சிக்கொல்லி, பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிக்கவேண்டும்
  • உங்கள் உடல்நலத்தினை பாதிக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது
  • சேறு கலந்த அல்லது தேங்கிய தண்ணீரை உபயோகிக்கக்கூடாது
  • பாதுகாப்பு உடைகளை அணியாமல் பூச்சிக்கொல்லி கரைசலை தயாரிக்க கூடாது.
  • உடம்பின் பாகங்களில் பூச்சிக்கொல்லி படுவதை தவிர்க்கவேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு தயாரிக்கும் போது அதன் பையில் அல்லது பாட்டிலில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படிக்கத் தவறக்கூடாது.
  • 24 மணிநேரத்திற்கு முன்பு தயாரித்த பூச்சிக்கொல்லி கரைசலை உபயோகிக்கக்கூடாது
  • குறுணை பூச்சிக்கொல்லியை தண்ணீரில் கலந்து தெளிக்கக் கூடாது
  • பூச்சிகொல்லி தெளிப்பானை நுகரக் கூடாது
  • தேவையான அளவுக்கு மேல் பூச்சிகொல்லியை உபயோகிக்கக் கூடாது. அவ்வாரு செய்வது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்
  • பூச்சிகொல்லிகளை கையாளும் போது சாப்பிடுவது, குடிப்பது, புகைப்பிடிப்பது, பான்பராக் மெல்லுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது

உபகரணங்களைத் தேர்வு செய்தல்

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான உபகரணங்களைத் தேர்வு செய்யவேண்டும்
  • பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க சரியான அளவு துவாரமுடைய உபகரணத்தை தேர்வு செய்யவேண்டும்
  • களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் தனித்தனி தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும்

  • பூச்சிமருந்து கரைசலைத் தெளிக்க, கசியும் அல்லது குறையுடைய உபகரணங்களைத் தேர்வு செய்யக்கூடாது
  • கோளாறுடைய அல்லது பரிந்துரைக்கப்படாத துவாரம் கொண்ட உபகரணங்களை உபயோகிக்கக்கூடாது. மேலும் அடைத்துள்ள உபகரணத்தின் மருந்து தெளிக்கும் துவாரத்தினை சுத்தம் செய்ய வாயினால் ஊதக்கூடாது. மாறாக பல்துலக்கும் பிரஷ்ஷினை தெளிப்பானுடன் கட்டிக்கொண்டு துவாரத்தினை சுத்தம் செய்ய உபயோகிக்கலாம்
  • களைக்கொல்லி மருந்துக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஒரே தெளிப்பானை உபயோகிக்ககூடாது

 

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும்போது கவனிக்கவேண்டியவை

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும்
  • பொதுவாக வெயில் அடிக்கும் நாட்களில் பூச்சிக்கொல்லி அடிக்கவேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட தெளிப்பானை தனித்தனியே ஒவ்வொரு கரைசலுக்கும் உபயோகிக்கவேண்டும்
  • காற்றடிக்கும் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கவேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை சோப்பு கொண்டு சுத்தமான நீரினால் கழுவவும்
  • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தவுடன் இதர வேலையாட்கள் மற்றும் விலங்குகளை வயலுக்குள் அனுமதிக்கக்கூடாது.

  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகிக்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்தினை அதிக வெப்பத்துடன் கூடிய வெயில் அதிகமாக உள்ள நாட்களிலும் அதிகம் காற்றடிக்கும் நாட்களிலும் தெளிக்கக்கூடாது
  • மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்த பின்பும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக்கூடாது
  • பேட்டரியின் மூலம் இயங்கும் ULV தெளிப்பானில் அடர்த்தி மிகுந்த பூச்சிக்கொல்லி மருந்து கரைசலை உபயோகிக்கக்கூடாது
  • காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பூச்சிக்கொல்லி மருந்தினை அடிக்கக்கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு தெளிப்பான் மற்றும் வாளியினை நன்கு கழுவிய பின்பும் வீட்டு உபயோகத்திற்கு உபயோகிக்கக்கூடாது
  • பாதுகாப்பு கவச உடைகளை அணியாமல், பூச்சிக்கொல்லி மருந்தடித்த வயலுக்குள் செல்லக்கூடாது

பூச்சிமருந்து தெளித்த பிறகு செய்யகூடியவை

செய்யவேண்டியவை

செய்யக்கூடாதவை

  • பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை தனியான யாரும் உபயோகப்படுத்தாத இடத்தில் கொட்டிவிட வேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்தினை உபயோகப்படுத்தியபின்பு அது இருந்த பாட்டில்களை கல் அல்லது குச்சி கொண்டு ஒடுக்கி நீர்நிலைகள் இல்லாத இடத்தில் புதைத்துவிட வேண்டும்
  • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு முகம் மற்றும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிய பின்பே உணவருந்த செல்லவேண்டும்
  • விஷம் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால் முதலுதவி அளித்தபின்பு மருத்துவரிடன் நோயாளியை அழைத்துச்செல்ல வேண்டும். கூடவே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலையும் எடுத்துச்செல்ல வேண்டும.
  • பூச்சிமருந்து கரைசலை தெளித்தபிறகு மீதமிருக்கும் கரைசலை குளத்திலோ அல்லது தண்ணீர் இருக்கும் இடங்களிலோ கொட்டக்கூடாது
  • காலியான பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை மற்ற பொருட்களை சேமித்துவைக்க உபயோகப்படுத்தக் கூடாது
  • பூச்சிக்கொல்லி மருந்தினை தெளித்தபின்பு குளிக்காமலோ அல்லது துணிகளைத் துவைக்காமலோ சாப்பிடச் செல்லக்கூடாது
  • விஷம் தாக்கிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லத்தயங்கக்கூடாது. ஏனெனில், விஷம் தாக்கியவர் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்

மூலம்: பயிர்ப்பாதுகாப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு இயக்ககம்

2.992
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top