பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / விதைகள் / விதைச் சான்றளிப்பு வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விதைச் சான்றளிப்பு வழிமுறைகள்

விதைச் சான்றளிப்பு வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உணவு தானிய உற்பத்தியை விடவும், அந்த உணவுப் பொருள்களின் உற்பத்திக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்தால் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும்.

தரமான விதைகள் இருந்தால் தான் உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும். ஆகவே, விதைகளின் இனத்தூய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் உள்ளிட்ட பல்வேறு அம் சங்களை ஆராய்ந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகள் தரமானவைதானா என்பதை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற் காகவே விதைச் சான்றளிப்புத் துறை என்ற தனித் துறை செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் அனைத்தையும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைத் துறையால் மட்டுமே வழங்க முடியாது. ஆகவே, தனியார் நிறுவனங்களும், பிற விதை உற்பத்தி நிறுவனங்களும் விவசாயிகளுடன் இணைந்து விதைகளை உற்பத்தி செய்து தருகின்றன.

விதை உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள விதை சான்றளிப்பு அலுவலகத்தை அணுகி தங்கள் விதைப் பண்ணை தொடர்பான விவரங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பயிர் பூக்கும் நிலை யிலும், அறுவடையின் போதும் விதைச் சான்றளிப்பு அலுவலர் நமது விதைப் பண்ணைக்கே நேரில் வந்து விதையின் இனத் தூய்மை குறித்து ஆய்வு செய்வார். அறு வடைக்குப் பின் விதைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அங்கு விதையின் முளைப்புத் திறன் உள்ளிட்ட விதையின் பல்வேறு தரங்கள் குறித்து பரிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு விதையின் தரம் நிர்ணயிக்கப்பட்ட பிறகு அந்த விதைக்கு சான்றிதழ் அளிக்கப்படும். சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைகள் பின்னர் விற்பனைக்கு வரும்.

இவ்வாறு பல கட்ட தரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின்னர் சான்றிதழ் அளிக்கப்பட்டு விதைகள் விற்பனைக்கு வருவதால், விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உரிய லாபம் கிடைக்கிறது.

விவசாயிகள் தாங்களாகவே விதை உற்பத்தியாளராகி பயனடைவதுடன் பிற விவசாயிகளின் விதைத் தேவைகளையும் பூர்த்தி செய்யலாம்.

விதை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் முனைவர் எம்.பாஸ்கரன், தனி அலுவலர் (விதைகள்) விதை மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரியிலோ, 0422 6611232 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94890 56719 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். வேளாண்மைத் துறை அல்லது விதைச் சான்றளிப்புத் துறையைச் சேர்ந்த உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தேவையான விவரங்களைப் பெறலாம்.

ஆதாரம் : வணிகம் - தி இந்து

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top