பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / உரம் / இயற்கை உரம் / உயிர் உரங்கள் / திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) தயாரிக்கும் முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) தயாரிக்கும் முறை

திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) தயாரிக்கும் முறை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தயாரிக்கும் முறை

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை (முதல்முறை தயாரிக்கும் போது, வெளியில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். அடுத்த முறை நாம் தயாரிக்கும், இ.எம் கரைசலையே பயன்படுத்திக் கொள்ளலாம்) கலந்து மூடியால் மூடி, வெயில் படாத இடத்தில் டிரம்மை வைத்து விட வேண்டும்.

தினமும் ஒருமுறை, மூடியை லேசாகத் திறந்து உடனே மூடி விட வேண்டும். இதனால், நொதிக்கும் திறன் அதிகரிக்கும். 10 நாள் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால், மேல் பகுதியில், வெள்ளை நிற ஏடு போன்று படிந்திருக்கும். இனிப்பு கலந்த ஒரு வாடை வரும். இந்தக் கலவைதான் செறிவூட்டப்பட்ட திறன்மிகு நுண்ணுயிரி (இ.எம்) என அழைக்கப்படுகிறது. இதை பாட்டில்களில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். தேவைக்கேற்ப தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

பயன்பாடு

இ.எம்.. நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மையை நீக்கும். கொசுக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும். சொட்டுநீர்க் குழாய் வழியாக இதைச் செலுத்தும் போது, குழாய்களில் படிந்துள்ள உப்பு நீக்கப்படும். குப்பை, கூளம் நிறைந்த இடங்கள், மாட்டுக்கொட்டகை, சாணக்குவியல் உள்ள இடங்களில் தெளித்தால், குப்பைகள், சாணம் போன்றவை சீக்கிரம் மட்கும். நீர்நிலைகளைச் சுத்திகரிப்பதற்கு, 200 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் இ.எம் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி கலந்தால் போதும்.

20 லிட்டர் இ.எம் தயாரிக்க, 500 ரூபாய்தான் செலவாகும். வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் இ.எம் 260 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதை விவசாயிகளே தயாரித்துப் பயன்படுத்தும்போது, செலவு குறைவதோடு, விளைச்சலும் நன்றாக இருக்கும். இதைச் செடிகளில் தெளிக்கும் போது, வளர்ச்சி நன்றாக இருக்கிறது. பூச்சி, நோய்த்தாக்குதல் குறைகிறது.

ஆதாரம் : பசுமை விகடன் மாத இதழ்

3.24137931034
டாக்டர் சிவகுமார் Dec 03, 2018 03:42 PM

நீங்கள் 87625-20202 என்ற என்னை தொடர்பு கொண்டு மேப்பில் இ எம் வாங்கலாம் . அல்லது www iorgo in என்ற வலை பக்கத்திலும் வாங்கலாம்

கென்னடி முகேசன். Dec 26, 2017 05:08 PM

இந்த திரவம் எங்கு கிடைக்கும்.

சிவராமன்.எஸ் Sep 21, 2017 04:56 AM

என்ன பொருள் சேர்க்க சோ்க்கவேண்டும் என்ற விவரம்தேவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top