பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே

உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே

Posted by Anonymous at November 25. 2015
வானத்திடம் மழைக்கு மனுப் போட்டுவிட்டு, தன்னிடம் இருக்கும் சொத்தை அடமானம் வைத்து அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு வேளாண்மை செய்யும் விவசாயி வாழ்வது நம்பிக்கையை சுவாசிப்பதால் மட்டுமே.

Re: உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே

Posted by TASNA at November 25. 2015

எப்பொழுது மழை வரும் என்று தெரியாது. மழை வந்தாலும் அது போதுமானதாக இருக்குமா? அல்லது பெருமழை வந்து பெரும் சேதம் ஏற்படுமா? என்றும் தெரியாது. இப்படி எதுவுமே தெரியாமலும் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்யும் உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே என்று சொன்னால் அது முற்றிலும் உண்மைதான்.

Re: உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே

Posted by Anonymous User at November 30. 2015
இது எல்லா இந்திய விவசாயிகளுக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏற்றத் தாழ்வு நிலை விவசாயிகளையும் விட்டு வைக்க வில்லை. அந்தக் காலத்திலேயும் ஜமிந்தார், மிட்டாதார் , மிராசுதார், பண்ணையார் இனத்தார் விவசாயிகளை அடிமைகாளாக வைத்திருந்தனர். இப்போது பெரிய பண முதலாளிகள், மந்திரிமார்கள், ரியல் எஸ்டேட் ஒனர்கள் கூட விவசாய நிலங்களை பங்கு போட்டு ஆட்சி செய்து வருகின்றனர். அரசு அளிக்கும் இலவச மின்சாரம் அனைத்து சலுகை களையும் பெற்று பயன் பெறுகின்றனர். இந்நிலையில் சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மானாவாரி நிலங்கள் (மழையை நம்பிய பூமி ) என்று தெரியும் பட்சத்தில் முறையான திட்டமிடுதல் மூலம் விவசாயம் செய்து முன்னேற வேண்டும். தண்ணீரே இல்லாத இஸ்ரேல் நாட்டில் நவீன முறைகளை மேற்கொண்டு விவசாயம் நடைபெறுகின்றது. நம் விவசாயிகளும் நவீன முறை விவசாயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top