பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துதல்

இத்தலைப்பில் திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விவரித்துள்ளனர்.

திட்ட மதிப்பீடு

திறந்தவெளி கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. மானியமாக அளிக்கப்படும் ரூ.1499.27 கோடி உட்பட இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.1798.71 கோடி.

செயல்படுத்தபடும் இடங்கள்

நிலத்தடி நீர் அளவிற்கு மிஞ்சி பயன்படுத்தப்பட்ட, நீர்மட்டம் இக்கட்டான அல்லது நெருக்கடியான நிலைக்கு சென்றுள்ள  ஆந்திராபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகம், இராஜஸ்தான், தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 1180 ஓன்றியங்கள்/தாலுகாக்கள் அல்லது மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கம்

தற்போதுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்துதல், நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்துதல், பற்றாக்குறை காலங்களிலும் நீர் இருப்பை தக்கவைத்தல் மற்றும் ஒட்டு மொத்த வேளாண் விளைச்சலை அதிகப்படுத்துதல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

விபரங்கள்

இத்திட்டத்தின் மூலம் 4.45 மில்லியன் கிணறுகள் மூலம் செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டம் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2.72 மில்லியன் கிணறுகள் சிறுகுறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை; மற்றவை பிற விவசாயிகளுக்குச் சொந்தமானவை. ஒரு கிணற்றில் நீர்சேமிப்பு அமைப்பு அமைக்க சராசரியாக ரூ.4000/- செலவாகிறது. தங்கள் சொந்த நிலத்தில் கிணறு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். சிறுகுறு விவசாயிகளுக்கு 100% மானியமும் பிற விவசாயிகளுக்கு 50% மானியமும் அளிக்கப்படவுள்ளது.

Filed under:
2.9756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top