பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோட்டக்கலைத்துறைத் திட்டங்கள்

தோட்டக்கலைத்துறைத் திட்டங்கள் பற்றிய தகவல்.

அக்மார்க் தரம் பிரிப்பு

மற்ற விவரங்கள்

அக்மார்க் அதிகார சான்றிதழ் பெற்று சிப்பம் கட்டுபவர்கள்

எப்படி பெறுவது

வேளாண்மை அலுவலர், மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகம் மேல்முறையீட்டு அதிகாரி துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)

விரிவாக்கம்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நுகர்வோருக்குத் தரமான கலப்படமற்ற உணவுப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதேயாகும். தமிழ்நாட்டில் 30 மாநில அக்மார்க் ஆய்வகங்களும் சென்னையில் ஒரு முதன்மை ஆய்வகமும் செயல்பட்டு வருகின்றன. அக்மார்க் தரம் பிரிப்பின் கீழ் மத்திய கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட உணவு பண்டங்களுக்கும், மத்திய கட்டுப்பாட்டிற்கு உட்படாத உணவு பண்டங்களுக்கும் தரம்பிரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற்ற சிப்பம் கட்டுவோருக்கு உணவுப் பண்டங்களின் தரம் மற்றும் சுத்தத் தன்மைக்கு ஆய்வகப் பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் “அக்மார்க் முத்திரை” இடப்படுகிறது. அக்மார்க் முத்திரை கலப்படமற்ற, தரமான, சரியான எடை கொண்ட உணவுப் பொருட்களுக்கு அரசு அளிக்கும் உத்தரவாதமாகும் ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு 15 நாட்கள்

அங்ககச்சான்றளிப்பு

மற்ற விவரங்கள்

அங்ககச்சான்று திட்டத்தில் அங்கக வேளாண் முறையில் உற்பத்தி செய்ய விரும்பும் எவர் வேண்டுமானாலும் அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து உற்பத்தி செய்யலாம். பதிவுக் கட்டணமாக சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.500/-ம் இதர விவசாயிகளுக்கு ரூ.1000/-ம் இத்துடன் ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/- மற்றும் பயணக் கட்டணமாக ரூ.200/-ம் தனிநபர் பதிவிற்கு செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணமாக ரூ.5000/- ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.1000/-, பயணக்கட்டணமாக ரூ.200/-ம் செலுத்த வேண்டும். இதேபோல் வணிக நிறுவனங்கள் பதிவு செய்யக்கட்டணமாக ரூ.5000/-, ஆய்வு மற்றும் சான்றுக் கட்டணமாக ரூ.2000/-, பயணக்கட்டணமாக ரூ.400/- செலுத்த வேண்டும். அனைத்து வகை பயிர்களும் அங்ககச்சான்று பெற தகுதியுடையவையாகும்.

எப்படி பெறுவது

தர மேலாளர், விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநரகம், கோவை 641 013. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2435080 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - tnocdcbe(at)gmail.com இணைய தளம் - www.tnocd.com

விரிவாக்கம்

தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின்படியும் ஐஎஸ்ஓ 65 தரத்தின் அடிப்படையிலும் அங்ககச் சான்றளிப்பு வழங்கப்படுகிறது. அங்ககச்சான்றளிப்பு பணி கீழ்குறிப்பிட்ட வழிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

  1. அங்ககச்சான்றுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு செய்தல் மற்றும் கூர்ந்தாய்வு செய்தல்
  2. வயல் ஆய்வுகள்
  3. அறுவடைக்கு பிந்தய நிலையில் ஆய்வுகள்.
  4. மாதிரி எடுத்தலும் பகுப்பாய்வு செய்தலும்
  5. சான்றளிப்பு வழங்குதல் விண்ணப்பங்கள் ஏற்பு/மறுப்பு தொடர்பான விபரம் உரிய உற்பத்தியாளருக்கு 10 தினங்களில் தெரிவிக்கப்படும்.

உயிர் உர விநியோகம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

முழு விலையில் உயிர் உரங்கள் விநியோகம் - அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா (ஒவ்வொன்றும் 200 கிராம் எடையுள்ள பாக்கெட்) ஒன்று ரூ.6/-

உழவர் சந்தைகள்

மற்ற விவரங்கள்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் அடையாள அட்டை பெற்ற, காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடும் விவசாயிகள்.

எப்படி பெறுவது

மாவட்ட ஆட்சியர் / துணை இயக்குநர் (வேளாண் வணிகம்)/ செயலாளர், விற்பனைக்குழு/ நிர்வாக அலுவலர் (உழவர் சந்தை). வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், சிப்பெட் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண் 044-22253885 / 22253884. நிகரி எண் 044-22252754. மின் அஞ்சல் agrimarkbusiness(at)gmail.com

விரிவாக்கம்

தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் நகர்ப் பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாநிலம் முழுவதுமாக மொத்தம் 179 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இச்சந்தைகள் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உறுதி செய்யப்படுவதுடன், நுகர்வோருக்கு வெளிச்சந்தையைக் காட்டிலும் குறைவான விலையில் பண்ணையிலிருந்து நேரடியாக புத்தம் புதிய விளைபொருட்கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு கால வரையறை ஏதுமில்லை

எண்ணெய்ப்பனை

மற்ற விவரங்கள்

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) சாகுபடி பராமரிப்பு செலவினம் - எக்டருக்கு இரண்டாம் ஆண்டிற்கு ரூ.2,450/- 3ம் ஆண்டிற்கு ரூ.2,800/- 4ம் ஆண்டிற்கு ரூ.3,250/-

2) எண்ணெய்ப்பனை உற்பத்திக்கான விவசாயிகள் பயிற்சி - 50 விவசாயிகள் கொண்ட ஒரு குழுவிற்கு 2 நாட்கள் பயிற்சிக்கான இடைநிகழ்வு செலவினங்கள் - பயிற்சி சாதனங்கள், பயிற்சியாளர்களுக்கான ஊக்கத் தொகை, சிற்றுண்டி செலவு, உணவு, போக்குவரத்து செலவினம் உட்பட பயிற்சிக்கு ரூ.15,000/-

3) கன்றுகளின் வேர்களை எலிகளின் சேதத்திலிருந்து பாதுகாக்க கம்பி வலை அமைத்தல் கன்று ஒன்றுக்கு ரூ.20/- வீதம் எக்டருக்கு ரூ.2,860/-

4) ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மையின் கீழ் காண்டாமிருக வண்டின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கவர்ச்சிப் பொறி - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.100/- (இதில் எது குறைவோ)

எண்ணெய்வித்துக்கள்

மற்ற விவரங்கள்

துறைக்கு ஆதார மற்றும் சான்று விதை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள் அனைவரும் இதனைப்பெற தகுதி உடையவர் ஆவர். கன்னியாகுமரி, சென்னை, நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட எண்ணெய்வித்து பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் தகுதியுள்ளவர்கள். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு திட்ட நிதியில் – 24 பண்ணை மகளிர்களுக்கு திட்ட நிதியில் – 30

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) ஆதார மற்றும் சான்று விதைகள் உற்பத்தி - விதைப் பண்ணை அமைத்து வேளாண்மைத்துறைக்கு விதைகள் உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000/- மானியம்

2) சான்று விதைகள் விநியோகம் - விதையின் விலையில் 50 சதவீதம் அல்லது குவிண்டாலுக்கு ரூ.1,200/- மானியம் (இதில் எது குறைவோ)

3) பெருவிளக்கத் திடல் அமைத்தல் ஒவ்வொன்றும் 5 எக்டர் வீதம் இடுபொருள் விலையில் 50 சதவீதம் அல்லது திடல் ஒன்றுக்கு நிலக்கடலை - ரூ.4,000/- எள் - ரூ.1,500/- சூரியகாந்தி - ரூ.2,500/- (இதில் எது குறைவோ)

4) ரைசோபியம் பொட்டலங்கள் வழங்குதல் - விலையில் 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.100/- (இதில் எது குறைவோ)

5) ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல்விளக்கத் திடல்கள் - 10 எக்டர் கொண்ட செயல் விளக்கத்திடல் ஒன்று அமைக்க இடுபொருள் செலவினம் மற்றும் பயிற்சிக்காக ரூ.22,680/-

6) ஜிப்சம் விநியோகம் - எக்டருக்கு போக்குவரத்து செலவினம் உட்பட இடுபொருள் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.750/- (இதில் எது குறைவோ)

7) பயிர் பாதுகாப்பு கருவிகள் விநியோகம் - அ) கைத்தெளிப்பானுக்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.800/- (இதில் எது குறைவோ) ஆ) விசைத்தெளிப்பானுக்கு 50 சதவீத மானியம் அல்லது கருவி ஒன்றுக்கு ரூ.2,000/- (இதில் எது குறைவோ)

8) எண்ணெய்வித்துக்கள் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி - ஒரு பயிற்சிக்கு 50 விவசாயிகளுக்கு இடைநிகழ்வு செலவினமாக ரூ.15,000/-

9) தாவர பூச்சிக்கொல்லி மருந்து விநியோகம் - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.250/- (இதில் எது குறைவோ)

10) களைக்கொல்லி விநியோகம் - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.500/- (இதில் எது குறைவோ)

11) நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் எடுத்து செல்லுதல் - 800 மீட்டர் நீளம் வரை அனைத்து வகை குழாய்களுக்கும் (பி.வி.சி / எச்.டி.பி.இ., ஏனையவை - விவசாயிகளின் தேவைக்கேற்ப) 50 சதவீத மானியம் அல்லது ரூ.15000/- (இதில் எது குறைவோ)

12) மணிலா பயிருக்கு கூட்டு நுண்ணூட்டக் கலவை தெளிப்பு - டி.ஏ.பி., அமோனியம் சல்பேட், போராக்ஸ் அடங்கிய நுண்ணூட்டக் கலவை தெளிப்பிற்கு எக்டருக்கு ரூ.200/- மானியம்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில்

விரிவாக்கம்

நடவுச் செடிகள், வீரிய ரக / உயர்விளைச்சல் காய்கறி விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்குதல் பழப்பயிர்களுக்கு ஒரு பயனாளிக்கு ஒரு எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல் காய்கறி விதைகளுக்கு ஒரு பயனாளிக்கு 0.5 எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும் மலர் விதை / செடிகளுக்கு ஒரு பயனாளிக்கு 0.5 எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் (சிறப்பு)

மற்ற விவரங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்

விரிவாக்கம்

நடவுச் செடிகள், வீரிய ரக / உயர்விளைச்சல் காய்கறி விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்குதல் பழப்பயிர்களுக்கு ஒரு பயனாளிக்கு ஒரு எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும் காய்கறி விதைகளுக்கு ஒரு பயனாளிக்கு 0.5 எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும் மலர் விதை / செடிகளுக்கு ஒரு பயனாளிக்கு 0.5 எக்டர் வீதம் மானியம் வழங்கப்படும் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

மற்ற விவரங்கள்

திட்ட செயலாக்கத்தின் போது நீர்வடிப்பகுதி குழுக்களால் அந்த நீர்வடிப்பகுதிக்கு தேவையான பணிகள் முடிவு செய்யப்படும்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை (மாவட்ட அளவில்). முதன்மை செயல் அலுவலர், மாநில அளவிலான இணைப்பு முகமை, சென்னை -32. (மாநில அளவில்)

விரிவாக்கம்

பண்ணை உற்பத்தி திட்டம் மற்றும் இதர சிறு தொழில்கள் வேளாண்மை மற்றும் சார்ந்த துறைகளில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன ரகங்கள் பற்றிய செயல் விளக்கத் திடல் அமைத்தல், உற்பத்தி முறைகளை பன்முகப்படுத்துதல்- உதாரணம் காடு வளர்ப்பு தோட்டக் கலைப் பயிர்கள், இயற்கை உரங்கள், உயிர் உரங்களைப் பயன்படுத்துதல், ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை, சிறு பாசன முறை, இயற்கைப் பண்ணையம், மேம்படுத்தப்பட்ட ஊடுபயிர் திட்டம், விதைப்பண்ணை அமைத்தல், பட்டுப் பூச்சி வளர்ப்பு, மீன்வள உற்பத்தி, கால்நடை மேலாண்மை, கோழி வளர்ப்பு, கிராமக்குளம் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு மற்றும் இதர தொழில்கள் போன்றவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. மானியம் எக்டருக்கு ரூ.1200/-

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள்

மற்ற விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்வடிப்பகுதி களில் உள்ள தனியார் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான நிலங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது. நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பங்களிப்பும், பயனாளிகள் தேர்வும் நீர்வடிப்பகுதி குழுக்களால் தேர்வு செய்யப்படும். நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதிக்காக பொதுப்பணிகள் மற்றும் ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 5 சதவிகிதமும் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 10 சதவிகிதமும் வசூலிக்கப்படும்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை (மாவட்ட அளவில்). முதன்மை செயல் அலுவலர், மாநில அளவிலான இணைப்பு முகமை, சென்னை -32. (மாநில அளவில்)

விரிவாக்கம்

அ) நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக்குட்டைகள், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல், பழமரக் கன்றுகள் வளர்த்தல், வேளாண் காடுகள் வளர்த்தல், தீவனப் பயிர் மேம்பாடு செய்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் ஆகியவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. மானியம் எக்டருக்கு ரூ.8720/-

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம்

மற்ற விவரங்கள்

தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் மாவட்ட பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - சம்பந்தப்பட்ட மாவட்டம் தோட்டக்கலை துணை இயக்குநர் - சம்பந்தப்பட்ட மாவட்டம்

விரிவாக்கம்

தோட்டக்கலை செடிகள் விநியோகம், தனி நபர் பழத்தோட்டம் அமைத்தல், வீரிய ஒட்டு காய்கறி விதைகள் விநியோகம், ஆயில் இன்ஜின், நுண்ணீர் பாசனம் மற்றும் உரப்பாசனக் கருவிகள் விநியோகம், சுற்றுலா மற்றும் பயிற்சி தனிநபர் பழத்தோட்டம் அமைத்தல் 75 சதவீத மானியம் / 0.40 / எக்டர் குடும்பம் உயர் விளைச்சல் காய்கறி விதைகள் விநியோகம் - 90 சத மானியம் / 0.4 எக்டர் / குடும்பம் - ரூ.500க்கு மிகாமல் ஒரு குடும்பத்திற்கு ஆயில் இன்ஜின் விநியோகம் (5- 7.5 எச்பி - 75 சதவீத மானியம் ரூ.11,250/ எண்ணிக்கை பயிர்பாதுகாப்பு கருவிகள் விநியோகம் - 75 சதவீத மானியம் ரூ.3750/ எண்ணிக்கை நுண்ணீர் பாசனம் அமைத்தல் (90 சதவீத மானியம் ரூ.12000 /0.4 எக்டர்) தோட்டக்கலை சுற்றுலா (ரூ.1500/ நபர்) தோட்டக்கலைப் பயிற்சி (ரூ.200/ நபர் - 2 நாட்கள்) தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

மேற்கண்ட 7 மாவட்டங்களில் திட்டம் செயலாக்கப்படும் மலைப்பகுதிகளில் சொந்த நிலங்கள் உள்ள பழங்குடியின விவசாயிகள் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்ட அளவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் - பழங்குடியினரின் நிலங்களில் மண் அரிப்பு மற்றும் மண்வளம் குறைதலை கட்டுப்படுத்துதல் மற்றும் நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல். பழங்குடியினரின் நிலங்களின் மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்துதல் பழங்குடியினரின் நிலங்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல். பழங்குடி விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துதல். செயல்படுத்தப்படும் பணிகள்

சம உயர கல் வரப்பு சம உயர கற்சுவர் கட்டுதல் நிலம் வடிவமைத்தல் குழாய் பதித்தல் உழவுப் பணிகள் பாசன தடுப்பு அணைகள் கட்டுதல் பெரிய மற்றும் சிறிய தடுப்பு அணைகள் கட்டுதல் கம்பிவலை தடுப்பணை கட்டுதல் மானியங்களும், சலுகைகளும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின விவசாயிகளின் நிலங்களின் 100சதம் மானியத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்,செயலாளர், விற்பனைக்குழு

விரிவாக்கம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மிக முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு தாங்கள் விற்ற விளைபொருட்களுக்கு உடனடியாக பணம் பெற்றுத் தருவதே ஆகும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வியாபாரிகள் கோரிய விலைக்கு விற்றிட இசைவு தெரிவித்தவுடன் அந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்கள், விவசாயிகளிடமிருந்து வாங்கிய விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலிருந்து வியாபாரிகள் வெளியே கொண்டு செல்வதற்கு முன் விவசாயிகளுக்கு உடன் பணம் பட்டுவாடா செய்வதை உறுதி செய்கின்றனர்.

ஓருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

மற்ற விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்வடிப்பகுதி களில் உள்ள தனியார் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான நிலங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது. நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பங்களிப்பும், பயனாளிகள் தேர்வும் நீர்வடிப்பகுதி குழுக்களால் தேர்வு செய்யப்படும். நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதிக்காக பொதுப்பணிகள் மற்றும் ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 5 சதவிகிதமும் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 10 சதவிகிதமும் வசூலிக்கப்படும்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். முதன்மை செயல் அலுவலர், மாநில அளவிலான இணைப்பு முகமை, சென்னை -32. (மாநில அளவில்)

விரிவாக்கம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப் படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக் குட்டைகள் மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல், பழமரக் கன்றுகள் வளர்த்தல், வேளாண் காடுகள் வளர்த்தல், தீவனப்பயிர் மேம்பாடு செய்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் ஆகியவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. மானியம் எக்டருக்கு ரூ.5,100/-

கால நிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களான திண்டுக்கல், தருமபுரி, சேலம், பெரம்பலூர், விருதுநகர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்டம். சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்.

விரிவாக்கம்

இயற்கையின்சீற்றம் அல்லது எதிர்பாராத இன்னல்களில் (மழை, வெள்ளம், புழல், பூச்சி நோய் தாக்குதல் போன்றவை) காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதம் அல்லது நிதி இழப்பீடு - பிரிமியம் தொகையில் 50 சதவீத தொகையை வழங்குதல். உரிய பருவத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல்.

கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கையாளுவது மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி அளித்தல்

மற்ற விவரங்கள்

பயிற்சி மையத்திலிருந்து 40 கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்

எப்படி பெறுவது

அணுக வேண்டிய அலுவலர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாளுதல் மற்றும் பராமரித்தல். வேளாண் இயந்திரமயமாக்குதலில் மனித ஆற்றலின் தரத்தை மேம்படுத்துதல். மாநிலத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தினை வேகப்படுத்துதல். திறன் வளர்த்தல். வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஊரக இளைஞர்களை நவீன வேளாண்கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல். செயல்படுத்தப்படும் பணிகள் கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் கையாள்வது மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி அளித்தல. மானியங்களும், சலுகைகளும் அரசின் 100 விழுக்காடு மானியத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடுதல் மானியம் வழங்குவதன் மூலம் பயறு உற்பத்தியை அதிகரித்தல்

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

கூடுதல் மானியம் வழங்குவதன் மூலம் பயறு உற்பத்தியை அதிகரித்தல்  பயறு வகைகளில் சான்று விதை உற்பத்தி - கூடுதல் மானியமாக கிலோவுக்கு ரூ.15/-பயறு வகைகளில் சான்று விதை விநியோகம் - கூடுதல் மானியமாக கிலோவுக்கு ரூ.8/-

சிப்பம் கட்டும் கூடம் அமைப்பதற்கு வங்கி கடனுடன் கூடிய மானியம்.

மற்ற விவரங்கள்

வேளாண் உற்பத்தி / உபபொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்புரிவோர்கள்

எப்படி பெறுவது

துறை இயக்குநர் (வேளாண் வணிகம்)வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், சிப்பெட் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண் 044-22253885 / 22253884. நிகரி எண் 044-22252754. மின் அஞ்சல் agrimarkbusiness(at)gmail.com

விரிவாக்கம்

வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான காய் மற்றும் கனிகளில் அறுவடைக்குப்பின் ஏற்படும் சேதாரத்தை தவிர்க்க சேகரித்து, சுத்தம் செய்து, தரம் பிரித்து, சிப்பம் கட்டுவதற்கு ஏதுவாக விளைநிலத்திற்கு அருகாமையில் சிப்பம் கட்டும் கூடம் அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. திட்ட செலவினத்தில் 50 சதம் அல்லது ரூ.1,50,000/- இதில் ஏது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இம்மானியத் தொகை சிப்பம் கட்டும் கூடம் அமைக்க கடன் வழங்கும் வங்கி மூலம் நேரிடையாக சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்கப்படும். இத்திட்டம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் தற்சமயம் 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.வங்கியிடம் இருந்து கடன் வழங்க ஒப்புதல், மாவட்டக் குழுவின் ஒப்புதல் மற்றும் முடிவறிக்கை சமர்ப்பித்த மூன்று மாத காலத்திற்குள்ளாக.

சிறுபாசனத் திட்டம்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

புவியியல் நில அளவை மூலம் புதிய திறந்த மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க இடம் தேர்வு செய்தல். புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் கூடுதல் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். தற்போதுள்ள பாசனப் பரப்பை நிலைப்படுத்துதல். நிலத்தடி நீரை வெளிக் கொணர்ந்து நிலப்பரப்பு நீரையும் நிலத்தடி நீரையும் இணைத்து பாசனத்திற்கு உபயோகப்படுத்துதல் குழாய் கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைத்திட தகுந்த இடங்களை தேர்ந்தெடுக்க ஆய்வு மேற்கொள்ளுதல். மணற்பாங்கான இடங்களில் குழாய் கிணறு அமைத்தல் கடினப்பாறைப் பகுதியில் உபயோகமற்ற அல்லது வறண்டு போன திறந்த வெளி கிணறுகளில், வெடிவைத்து நேர் மற்றும் பக்கவாட்டு துளைகள் இட்டு மீண்டும் கிணற்றினை உபயோகிக்க தக்க வகையில் ஏற்பாடு செய்தல். கடினப் பாறை பகுதியில் துளைக் கிணறு அமைத்தல் அரசு நிர்ணயித்த வாடகை விகிதங்கள்படி விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன

செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டம்

மற்ற விவரங்கள்

அதி நுகர்வு, மோசமான நிலையிலுள்ள மற்றும் மித மோசமான நிலையிலுள்ள வட்டாரங்களில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

1) நோக்கம்: நிலத்தடி நீரை மேம்படுத்த மழைநீரை சேகரித்தல், மண்வளத்தைக் காத்து மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்துதல், பாசன நீரின் தரத்தை உயர்த்துதல்.

2) செறிவூட்டு குழாய் கிணறுகளுடன் கூடிய கசிவு நீர் குட்டைகள் அமைத்தல்.

3) பெரிய தடுப்பண்ணைகள் அமைத்தல். புதிய கிராம குளங்கள் ஊரணிகள் அமைத்தல் போன்ற செயற்கை முறையில் நிலத்தடி நீர்செறிவூட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மானியங்களும், சலுகைகளும் அரசின் 100 விழுக்காடு மானியத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு உழவர் மேம்பாடு மற்றும் நலத் திட்டம்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு வருடத்தில் ஒரு மெட்ரிக் டன் அல்லது அதற்கு கூடுதலாக விற்பனை செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் / மேற்பார்வையாளர்.தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம், சென்னை-32. தொலைபேசி எண் 044-22253156 நிகரி எண் 044-22253156 மின் அஞ்சல் tansamb(at)yahoo.co.uk

விரிவாக்கம்

இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 1 மெட்ரிக் டன் அல்லது அதற்குமேல் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யும் விவசாயிகள் குத்தகைதாரர்கள், விபத்தின் காரணமாக உயிர் இழக்க நேரிட்டாலோ / நிரந்தர ஊனமுற்றாலோ அல்லது பாம்பு கடியின் காரணமாக உயிர் இழக்க நேரிட்டாலோ ரூ.1,00,000/- வரை உதவித் தொகை வழங்கப்படும். அதேபோன்று, விபத்தின் காரணமாக இரண்டு கைகள் / கால்கள் / கண்கள் இழக்க நேரிட்டால் ரூ.75,000/- உதவித் தொகையும், விபத்தின் காரணமாக ஒரு கை / கால் / கண் அல்லது நிரந்தரமாக இடுப்பு செயல்பாடு இழக்க நேரிட்டால் ரூ.50,000/- உதவித்தொகையும் தகுதியுடைய விவசாயிகள் குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. இத்திட்டத்தில், ஒருவருக்கு வருடத்திற்குரிய கட்டணமான ரூ.10/-ஐ சம்பந்தப்பட்ட விற்பனைக்குழுவும், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியமும் பங்களிப்பாகச் செலுத்துகின்றன.விபத்து / மரணம் நேரிட்ட மூன்று மாத காலத்திற்குள்ளாக தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்திற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள், வேளாண் உபபொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள், ஏற்றுமதி மண்டலத்தில் அமைக்கப்படும் வேளாண் தொழிற்சாலைகள், குழுமங்கள், விவசாய பட்டதாரிகள்

எப்படி பெறுவது

மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு சிப்பெட் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண் – 044/22253498.மேலாண்மை இயக்குநர், சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு என்.சி.யூ.ஐ ஆடிட்டோரியம் பில்டிங், 5வது மாடி, ஆகஸ்டு கிராந்தி மார்க், புதுடில்லி - 110 016. தொலைபேசி எண். 011 - 26966017 / 37 / 39 நிகரி எண். 011 - 26862367 / 26966039. மின் அஞ்சல் sfac(at)ren02.nic.in

விரிவாக்கம்

தமிழகத்தில் சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் முறைகளை கடைபிடிக்கச் செய்து அதன் மூலம் வேளாண் வணிகத்தில் அவர்களை ஈடுபடுத்த ஏதுவாக பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அரசு, தனியார் துறை, விவசாய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். இந்த அமைப்பின் மூலம் விவசாய தொழில் அபிவிருத்தி செய்பவர்கள் பயன்பெறும் வகையில் மூலதன முதலீட்டு பங்கு உதவி மற்றும் திட்ட மேம்பாட்டு வசதி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில் முனைவோர்களிடமிருந்து பெற்பபடும் விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் மற்றும் தகுதியைப் பொறுத்து ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு மாறுபடும்.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் (உலக வங்கித் திட்டம்)

மற்ற விவரங்கள்

60 நீர்வடி பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட ஆயக்கட்டுகளில் வாழும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்டங்கள். மாவட்டம் - மாவட்ட ஆட்சியர் / தலைவர் (சம்பந்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு) தலைமையிடம் - மாநில திட்டம் செயல்படுத்தும் அலுவலர் / நிர்வாக இயக்குநர், டான்ஹோடா

விரிவாக்கம்

தமிழ்நாட்டில் வடிநிலப் பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்தல் மற்றும் உயர் மதிப்புடைய தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பினை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதிக அளவு பாசன நீரை பயன்படுத்தும் பயிர்களிலிருந்து குறைவான பாசன நீரை உபயோகப்படுத்தும் உயர் விளைச்சல் தரக்கூடிய வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்து ஆயக்கட்டுப் பகுதியில் வாழும் விவசாயிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தித் திறன், மண்ணின் அங்ககத்தன்மையை அதிகரித்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒருங்கிணைப்பு அலுவலருடன் முன் கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் - அரசு ஒப்புதல் மற்றும் நிதி ஆணைக்குட்பட்டது - பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்துதல்.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

மற்ற விவரங்கள்

உபநீர் வடிநிலப்பகுதி நீர் உபயோகிப்போர் சங்கத்தில் அல்லது விளைபொருள் குழுவில் உறுப்பினர்கள்

எப்படி பெறுவது

துறை இயக்குநர் (வேளாண் வணிகம்) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர், சிப்பெட் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032. தொலைபேசி எண் 044-22253885 / 22253884. நிகரி எண் 044-22252754 . மின் அஞ்சல் agrimarkbusiness(at)gmail.com

விரிவாக்கம்

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, உபநீர் வடிநில பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள், தங்களின் வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் விலை பெறும் பொருட்டு வணிகச் செய்தி மற்றும் தகவல்களின் வாயிலாக விவசாயிகளின் சந்தை முனைப்புத் திறனை ஒருமுகப்படுத்துதல் ஆகும். மேலும் உபநீர்வடி நிலப்பகுதி விவசாயிகளின் சந்தை பயன்பாட்டிற்காக உலர் களங்கள், சேமிப்பு கிட்டங்கிகள், வேளாண் வணிக மையங்கள் மற்றும் கொள்முதல் மையங்கள் ஆகிய கட்டுமானங்களும், ஈரப்பதமானி, எடையிடும் கருவிகள், தார்பாலின், அட்டகங்கள், பிளாஸ்டிக் கிரேட்டுகள் ஆகிய தளவாடச்சாமான்களும் வழங்கப்படுகின்றன.ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு


நீர்வள நிலவளத் திட்டம்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் (iamwarm)- கூடுதல் பணிகள் - i

மற்ற விவரங்கள்

பாசன நீர் உபயோகிப்பாளர் சங்கம் மூலமாக பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறுவர். முதற்கட்டம் - 9 பாசனப் பகுதிகள் - வராக நதி (விழுப்புரம் திருவண்ணாமலை), மேல்வெள்ளார் (சேலம்), பாலாறு (கோயம்புத்தூர் திருப்பூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), தென்வெள்ளார் (புதுக்கோட்டை) பாம்பாறு (புதுக்கோட்டை / சிவகங்கை), கோட்டக்கரையாறு (சிவகங்கை / இராமநாதபுரம்), மணிமுத்தாறு (சிவகங்கை / இராமநாதபுரம் / மதுரை) மற்றும் அர்ஜுனா நதி (விருதநகர்) இரண்டாம் கட்டம் - 16 பாசனப் பகுதிகள் - பொய்னி (வேலூர்), கவுண்டன்யா நதி (வேலூர்), பொன்னையாறு கிருஷ்ணகிரி வரை (கிருஷ்ணகிரி), ஸ்வேதாநதி (சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர்), சின்னாறு (பெரம்பலூர்),அக்னியாறு (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை), அம்புலியாறு (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை), மேல்வைகை (தேனி), வரட்டாறு-நாகலாறு (தேனி), நிசாபாநதி (திருநெல்வேலி), கலிங்கலாறு (திருநெல்வேலி), சின்டப்பள்ளி-உப்போடை (விருதுநகர்), சிங்கோட்டையாறு (விருதுநகர், தூத்துக்குடி), மேல்குண்டாறு (மதுரை) மற்றும் தெற்காறு (மதுரை) மூன்றாம் கட்டம் - 30 பாசனப் பகுதிகள் – ஆரணியாறு (திருவள்ளூர்), கொசஸ்தலையாறு (வேலூர் / திருவள்ளூர்), நல்லாவூர் (விழுப்புரம்), ஆங்கூர் (காஞ்சிபுரம் / விழுப்புரம் / திருவண்ணாமலை), மார்கண்டநதி (கிருஷ்ணகிரி), கம்பைநல்லூர் (தர்மபுரி), கோவிலார் (கோட்டப்பட்டிகல்லார்) (தர்மபுரி), பாம்பனாறு - வரட்டாறு (திருவண்ணாமலை), கெடிலம் (கடலூர் / விழுப்புரம்), பாம்பாறு-திருக்கோவிலூர் வரை (திருவண்ணாமலை, விழுப்புரம்) துரிஞ்சலாறு (திருவண்ணாமலை / விழுப்புரம்), கோமுகிநதி (விழுப்புரம் / கடலூர்), கானல்ஒடை (விருதுநகர் / இராமநாதபுரம் மதுரை), உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்), வேம்பாறு (தூத்துக்குடி / இராமநாதபுரம் / விருதுநகர்), பாலாறு (இராமநாதபுரம்), கிருதாமால் (சிவகங்கை / மதுரை / விருதுநகர் / இராமநாதபுரம்), கீழ்குண்டாறு (இராமநாதபுரம், விருதுநகர்), தேவியாறு (திருநெல்வேலி, விருதுநகர்), நகரியாறு (விருதுநகர்), சீவலப்பேரியாறு (விருதுநகர்), உப்பாத்தூர் (தூத்துக்குடி, விருதுநகர்), வல்லம்பட்டி (விருதுநகர்), உப்போடை (திருநெல்வேலி), தூத்துக்குடி), அனுமான்நதி, நம்பியாறு (திருநெல்வேலி), கருமேனியாறு (திருநெல்வேலி தூத்துக்குடி), சாலிக்குளமாறு (தூத்துக்குடி), கோரம்பள்ளம் (தூத்துக்குடி), வைப்பாறு (தூத்துக்குடி, விருதுநகர்), தேனியாறு (தேனி) ஆகிய பாசனப் பகுதிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ)நவீன தொழில் நுட்பங் களுக்கான செயல்விளக்கங் களைப் பார்வையிடுதல் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பாசனப் பகுதிகள்) 1) தொடர் பயிர்த் திட்டமாக பசுந்தாள் உரப்பயிர் - திருந்திய நெல் சாகுபடி - நெல் தரிசில் பயறு 5 எக்டர் தொகுப்பாக செயல்விளக்கம் அமைக்க 50 சதவீத மானியம் – அதிகபட்சமாக தொகுப்பு ஒன்றுக்கு ரூ.22,500/- 2)வீரிய ஒட்டுரகமக்காச்சோளம் – 5 எக்டர் தொகுப்பாக செயல் விளக்கம் அமைக்க 50 சதவீத மானியம்–அதிக பட்சமாக தொகுப்பு ஒன்றுக்கு ரூ.10,000/- 3) பயறு வகைகள் - 5 எக்டர் தொகுப்பாக செயல்விளக்கம் அமைக்க 50 சதவீத மானியம் – அதிகபட்சமாக தொகுப்பு ஒன்றுக்கு ரூ.6,250/- ஆ) விதை கிராமத்திட்டம் (முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பாசனப் பகுதிகள்) பயறுவகைகள், நிலக் கடலை மற்றும் பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்யும் குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.54,400/- (உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.50,000/- பதிவு செய்தல் மற்றும் பயிற்சிக்கு ரூ.4,400/-) இ) ஒருங்கிணைந்த நுண்ணூட்ட உர மேலாண்மை செயல்விளக் கங்கள் (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பாசனப் பகுதிகள்) சில்பாலின் கொண்டு மண்புழு உர செயல்விளக்கங்கள் அமைக்க செயல் விளக்கம் ஒன்றுக்கு மானியம் அதிக பட்சமாக ரூ.6000/- ஈ) வேளாண் கருவிகள் விநியோகம் (முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பாசனப் பகுதிகள்) 1) ரூ.1750/- மதிப்புள்ள கோனோ களையெடுக்கும் கருவிகளுக்கு 100 சதவீத மானியம். 2) பயறுவகைப் பயிர்களில் ரூ.700/- மதிப்புள்ள அடையாளமிடும் கருவிகளுக்கு 100 சதவீத மானியம். 3) தைத்தெளிப்பான் - 50 சதவீத மானியம் அல்லது கருவி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1250/- 4) விசைத் தெளிப்பான் - 50 சதவீத மானியம் அல்லது கருவி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ3000/-

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் (iamwarm)- கூடுதல் பணிகள் - ii

மற்ற விவரங்கள்

பாசன நீர் உபயோகிப்பாளர் சங்கம் மூலமாக பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறுவர். முதற்கட்டம் - 9 பாசனப் பகுதிகள் - வராக நதி (விழுப்புரம் திருவண்ணாமலை), மேல்வெள்ளார் (சேலம்), பாலாறு (கோயம்புத்தூர் திருப்பூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), தென்வெள்ளார் (புதுக்கோட்டை) பாம்பாறு (புதுக்கோட்டை / சிவகங்கை), கோட்டக்கரையாறு (சிவகங்கை / இராமநாதபுரம்), மணிமுத்தாறு (சிவகங்கை / இராமநாதபுரம் / மதுரை) மற்றும் அர்ஜுனா நதி (விருதநகர்) இரண்டாம் கட்டம் - 16 பாசனப் பகுதிகள் - பொய்னி (வேலூர்), கவுண்டன்யா நதி (வேலூர்), பொன்னையாறு கிருஷ்ணகிரி வரை (கிருஷ்ணகிரி), ஸ்வேதாநதி (சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர்), சின்னாறு (பெரம்பலூர்),அக்னியாறு (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை), அம்புலியாறு (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை), மேல்வைகை (தேனி), வரட்டாறு-நாகலாறு (தேனி), நிசாபாநதி (திருநெல்வேலி), கலிங்கலாறு (திருநெல்வேலி), சின்டப்பள்ளி-உப்போடை (விருதுநகர்), சிங்கோட்டையாறு (விருதுநகர், தூத்துக்குடி), மேல்குண்டாறு (மதுரை) மற்றும் தெற்காறு (மதுரை) மூன்றாம் கட்டம் - 30 பாசனப் பகுதிகள் – ஆரணியாறு (திருவள்ளூர்), கொசஸ்தலையாறு (வேலூர் / திருவள்ளூர்), நல்லாவூர் (விழுப்புரம்), ஆங்கூர் (காஞ்சிபுரம் / விழுப்புரம் / திருவண்ணாமலை), மார்கண்டநதி (கிருஷ்ணகிரி), கம்பைநல்லூர் (தர்மபுரி), கோவிலார் (கோட்டப்பட்டிகல்லார்) (தர்மபுரி), பாம்பனாறு - வரட்டாறு (திருவண்ணாமலை), கெடிலம் (கடலூர் / விழுப்புரம்), பாம்பாறு-திருக்கோவிலூர் வரை (திருவண்ணாமலை, விழுப்புரம்) துரிஞ்சலாறு (திருவண்ணாமலை / விழுப்புரம்), கோமுகிநதி (விழுப்புரம் / கடலூர்), கானல்ஒடை (விருதுநகர் / இராமநாதபுரம் மதுரை), உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்), வேம்பாறு (தூத்துக்குடி / இராமநாதபுரம் / விருதுநகர்), பாலாறு (இராமநாதபுரம்), கிருதாமால் (சிவகங்கை / மதுரை / விருதுநகர் / இராமநாதபுரம்), கீழ்குண்டாறு (இராமநாதபுரம், விருதுநகர்), தேவியாறு (திருநெல்வேலி, விருதுநகர்), நகரியாறு (விருதுநகர்), சீவலப்பேரியாறு (விருதுநகர்), உப்பாத்தூர் (தூத்துக்குடி, விருதுநகர்), வல்லம்பட்டி (விருதுநகர்), உப்போடை (திருநெல்வேலி), தூத்துக்குடி), அனுமான்நதி, நம்பியாறு (திருநெல்வேலி), கருமேனியாறு (திருநெல்வேலி தூத்துக்குடி), சாலிக்குளமாறு (தூத்துக்குடி), கோரம்பள்ளம் (தூத்துக்குடி), வைப்பாறு (தூத்துக்குடி, விருதுநகர்), தேனியாறு (தேனி) ஆகிய பாசனப் பகுதிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. நான்காம் கட்டம் - 5 பாசனப் பகுதிகள் - கூவம் (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்), செய்யாறு - கிளியாறு (காஞ்சிபுரம், திருவண்ணாமலை), பரளையார் (சிவகங்கை, இராமநாதபுரம் , விருதுநகர்), கயல்குடியாறு (விருதுநகர்), அடையாறு (திருவள்ளூர், காஞ்சிபுரம்)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

2. கூடுதல் பணிகள் - II அ) நெல் தரிசில் பயறுவகைகளை நீர் பிடிப்பு பகுதி முழுவதிலும் சாகுபடி செய்தல் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பாசனப் பகுதிகள்). வட்டாரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட 2 கிராமங்களில், கிராமம் ஒன்றில் 50 எக்டர் தொகுப்பாக செயல்விளக்கம் அமைக்க, எக்டருக்கு ரூ.2,000/- மானியம் ஆ) பண்ணைக் கழிவுகளிலிருந்து சூடோமோனாஸ் மூலம் மக்கு உரம் தயாரிக்கும் மையங்கள் அமைத்தல் (முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) மையம் ஒன்றுக்கு ரூ.1,500/- மானியம். இ) திருந்திய நெல் சாகுபடி மற்றும் மக்காச்சோள சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்குதல். பாசன பகுதிக்குள் முதல் பரிசு - ரூ.5,000/- இரண்டாம் பரிசு - ரூ.3,000/- மூன்றாம் பரிசு - ரூ.2,000/- பாசனப் பகுதிகளுக்கிடையே முதல் பரிசு - ரூ.7,500/- இரண்டாம் பரிசு - ரூ.5,000/- மூன்றாம் பரிசு - ரூ.2,500/-

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் (iamwarm)- தற்போதைய செயல்பாடுகள்

மற்ற விவரங்கள்

பாசன நீர் உபயோகிப்பாளர் சங்கம் மூலமாக பாசனப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன் பெறுவர். மூன்றாம் கட்டம் - 30 பாசனப் பகுதிகள் – ஆரணியாறு (திருவள்ளூர்), கொசஸ்தலையாறு (வேலூர் / திருவள்ளூர்), நல்லாவூர் (விழுப்புரம்), ஆங்கூர் (காஞ்சிபுரம் / விழுப்புரம் / திருவண்ணாமலை), மார்கண்டநதி (கிருஷ்ணகிரி), கம்பைநல்லூர் (தர்மபுரி), கோவிலார் (கோட்டப்பட்டிகல்லார்) (தர்மபுரி), பாம்பனாறு - வரட்டாறு (திருவண்ணாமலை), கெடிலம் (கடலூர் / விழுப்புரம்), பாம்பாறு-திருக்கோவிலூர் வரை (திருவண்ணாமலை, விழுப்புரம்) துரிஞ்சலாறு (திருவண்ணாமலை / விழுப்புரம்), கோமுகிநதி (விழுப்புரம் / கடலூர்), கானல்ஒடை (விருதுநகர் / இராமநாதபுரம் மதுரை), உத்திரகோசமங்கை (இராமநாதபுரம்), வேம்பாறு (தூத்துக்குடி / இராமநாதபுரம் / விருதுநகர்), பாலாறு (இராமநாதபுரம்), கிருதாமால் (சிவகங்கை / மதுரை / விருதுநகர் / இராமநாதபுரம்), கீழ்குண்டாறு (இராமநாதபுரம், விருதுநகர்), தேவியாறு (திருநெல்வேலி, விருதுநகர்), நகரியாறு (விருதுநகர்), சீவலப்பேரியாறு (விருதுநகர்), உப்பாத்தூர் (தூத்துக்குடி, விருதுநகர்), வல்லம்பட்டி (விருதுநகர்), உப்போடை (திருநெல்வேலி), தூத்துக்குடி), அனுமான்நதி, நம்பியாறு (திருநெல்வேலி), கருமேனியாறு (திருநெல்வேலி தூத்துக்குடி), சாலிக்குளமாறு (தூத்துக்குடி), கோரம்பள்ளம் (தூத்துக்குடி), வைப்பாறு (தூத்துக்குடி, விருதுநகர்), தேனியாறு (தேனி) ஆகிய பாசனப் பகுதிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளது. நான்காம் கட்டம் - 5 பாசனப் பகுதிகள் - கூவம் (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்), செய்யாறு - கிளியாறு (காஞ்சிபுரம், திருவண்ணாமலை), பரளையார் (சிவகங்கை, இராமநாதபுரம் , விருதுநகர்), கயல்குடியாறு (விருதுநகர்), அடையாறு (திருவள்ளூர், காஞ்சிபுரம்)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

3. தற்போதைய செயல்பாடுகள் அ) செயல்விளக்கஙகள் அமைக்க 100 சதவீத மானியம் (மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) 1) பசுந்தாள் உரப்பயிர் - திருந்திய நெல் சாகுபடி - நெல் தரிசில் பயறுவகை - எக்டருக்கு ரூ.9,000/- 2) திருந்திய நெல் சாகுபடி - நெல் தரிசில் பயறுவகைகள் - எக்டருக்கு ரூ.7,500/- 3) மானாவாரி நெல் - எக்டருக்கு ரூ.6,000/- 4) மேம்படுத்தப்பட்ட திருந்திய நெல் சாகுபடி - எக்டருக்கு ரூ.6,000/- 5) மானாவாரி நெல் - நெல் தரிசில் பயறுவகைகள் - எக்டருக்கு ரூ.7,500/- 6) மக்காச்சோளம் / சோளம் சூரியகாந்தி / நிலக்கடலை - எக்டருக்கு ரூ.4,000/- 7) ராகி பயறுவகைகள் - எக்டருக்கு ரூ.2,500/- 8) தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் – எக்டருக்கு ரூ.10,000/- ஆ) ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக செயல்விளக்கம் (மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) சில்பாலின் கொண்டு மண்புழு உர செயல்விளக்கங்கள் அமைக்க செயல்விளக்கம் ஒன்றுக்கு மானியம் அதிகபட்சமாக ரூ.6,000/- இ) வேளாண் கருவிகள் விநியோகம் 1) ரூ.1,750/- மதிப்புள்ள திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கான கருவிகளை 100 சதவீத மானியத்தில் வழங்குதல் (மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) 2) ரூ.700/- மதிப்புள்ள அடையாளமிடும் கருவிகள் 100 சதவீத மானியத்தில் வழங்குதல். (நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) 3) ரூ.1,250/- மதிப்புள்ள கைத் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குதல் (நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) 4) ரூ.3,000/- மதிப்புள்ள விசைத் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் வழங்குதல் (நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) ஈ) விதை கிராமத்திட்டம் (நான்காம் கட்ட பாசனப் பகுதிகள்) பயறுவகைகள், நிலக்கடலை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்யும் குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ரூ.54,400/- (உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.50,000/- பதிவு செய்தல் மற்றும் பயிற்சிக்கு ரூ.4,400/-)

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் காட்டன் ப்ளஸ் (வளர்ச்சி ஊக்கி) விநியோகம் -

மற்ற விவரங்கள்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி நீங்கலாக பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.750/-

தரமான விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

மற்ற விவரங்கள்

தரமான விதைகள் உற்பத்தி செய்து வேளாண்துறைக்கு ஒப்பந்தப்படி வழங்குவதற்கு விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் சேரவும், அவர்களின் விதைப் பண்ணைகளை பதிவு செய்யவும் தகுதியானவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும். பண்ணை மகளிர் குழுக்களுக்கும், உழவர் ஆர்வலர் குழுக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வேளாண்மை துறையால் உற்பத்தி விலைக்கே (கொள்முதல், சுத்திகரிப்பு, சான்றுக் கட்டணம், கொள்கலன் மற்றும் இடைநிகழ்வு செலவு உள்ளடக்கிய) வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் விதை களுக்கு விதைச்சான்றளிப்புத் துறையினால் வழங்கப்படும் சான்றட்டைபொருத்தப்பட்டிருக்கும்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

தரமான விதை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணை விவசாயிகளை ஊக்கப்படுத்த, அவர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதைகளுக்கும் கீழ்க்கண்டவாறு ஊக்கத்தொகை கொள்முதல் விலையுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. நெல் ஊக்கத் தொகை சான்று விதை உற்பத்திக்கு ஒரு கிலோ விதைக்கு ரூ.2/- சிறுதானியங்கள் ஊக்கத் தொகை சான்றுவிதை உற்பத்திக்கு ஒரு கிலோ விதைக்கு ரூ.2/- பயறுவகைகள் ஊக்கத் தொகை ஆதார விதை உற்பத்திக்கு ஒரு கிலோவிற்கு ரூ.10/- ஊக்கத் தொகை சான்று விதை உற்பத்திக்கு ஒரு கிலோவிற்கு ரூ.5/- நிலக்கடலை ஊக்கத் தொகை ஆதார விதை உற்பத்திக்கு ஒரு கிலோவிற்கு ரூ.3/- சான்று விதை உற்பத்திக்கு ஒரு கிலோவிற்கு ரூ.2/- ஊக்கத்தொகை உண்மைநிலை விதை உற்பத்திக்கு ஒரு கிலோவிற்கு ரூ.1/- எள் ஊக்கத்தொகை ஆதார விதை உற்பத்திக்கு உள்ளூர் அங்காடி விலைக்கு மேல் கிலோவிற்கு 7.5 சதவீதம் கூடுதல் சான்று விதை உற்பத்திக்கு உள்ளூர் அங்காடி விலைக்கு மேல் கிலோவிற்கு 5 சதவீதம் கூடுதல் சூரியகாந்தி - ஆதார விதை - உற்பத்திக்கு உள்ளூர் அங்காடி விலைக்கு மேல் கிலோவிற்கு 7.5 சதவீதம் கூடுதல் சான்று விதை - உற்பத்திக்கு உள்ளூர் அங்காடி விலைக்கு மேல் கிலோவிற்கு 5 சதவீதம் கூடுதல்

திட்டத்தின் பெயர் - தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்

மற்ற விவரங்கள்

தேர்வு செய்யப்பட்ட உப வடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டலஅளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் - ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக வருமானத்தை ஈட்டுதல் நீர் சேதாரத்தை குறைத்து பாசனத் திறனை அதிகப்படுத்துதல் பயிர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடுதல் செயல்படுத்தப்படும் பணிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் அமைத்தல் பண்ணை இயந்திரமயமாக்கல் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் நீர் சேகரிப்பு க்ட்டமைப்பு அமைத்தல் குழாய் பாசனம் அமைத்தல் தகவல், கல்வி பரிமாற்றம் மற்றும் பயிற்சிகள் மூலம் திறமை வளர்த்தல் மானியங்களும், சலுகைகளும் சொட்டு மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம் மத்திய அரசு வழிமுறைக்குட்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100சதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75சதம் மானியம் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் பொது பிரிவினருக்கு 90சதம் மானியம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 95சதம் மானியம் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல் (சமுதாய நிலங்களில்) 100சதம் மானியம் குழாய் பாசனம் அமைத்தல் 100சதவீதம் மானியம்

திருந்திய தரிசுநில மேம்பாட்டு திட்டம் - நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு தரிசு நிலங்களை இலவசமாக வழங்கும் திட்டம்

மற்ற விவரங்கள்

  1. கிராம நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  2. அரசு தரிசு நில மேம்பாடு- ஆக்கிரமிப்பு இல்லாத அரசு தரிசு புறம்போக்கு நிலங்கள் (இனம் I)
  3. அரசு தரிசு நில மேம்பாடு- சிறு / குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு தரிசு புறம்போக்கு நிலங்கள் (இனம் II). 4. பட்டா தரிசு நில மேம்பாடு- விரும்பி தாமாக முன்வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலங்களை விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மேம்படுத்துவது (இனம் III).

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

விரிவாக்கம்

இது வரை 2,12,965 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தினை 1,78,994 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு ரூ.27.17 கோடி செலவில் 53,818 ஏக்கர் பரப்பில் தரிசு நிலங்கள் சீர்படுத்துதல், தொகுப்பு நிலங்கள் மேம்படுத்துதல் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் ஆகிய பணிகள் இத்திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளது. வருவாய் துறையின் மூலமாக நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு தரிசு நிலங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆதலின் எந்த மேம்பாட்டு பணியும் நடைபெறவில்லை.

திருந்திய தரிசுநில மேம்பாட்டு திட்டம் - வேளாண்மை பயிர் தொகுப்பு நில மேம்பாடு

மற்ற விவரங்கள்

50.00 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் தொகுப்பாக உள்ள இனம் III நிலங்களில் விவசாயிகள் தாமாகவே முன்வந்து நீர்பாசன சங்கம் அமைக்க விரும்பினால் அத்தொகுப்பு நிலங்களில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்து மேம்படுத்தப்படும்

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

விரிவாக்கம்

மானிய தொகை / ஏக்கருக்கு ரூபாய் 1. நில சீரமைப்பு பணிகள் - 3400.00 2. ஆழ்துளை கிணறு அமைத்தல்- 8900.00 3. சொட்டு நீர் மற்றும் உரப்பாசனம் - 32000.00 4. சமுதாய நாற்றங்களால் அமைத்தல் - 2000.00 5. விதைகள் மற்றும் கன்றுகள்- 2000.00 6. நீர் கரைசல் உரங்கள் - 6000.00 7. பயிர் பாதுகாப்பு மருந்துகள் - 2000.00

தென்னை 1. தென்னங்கன்றுகள் விநியோகம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) நெட்டை தென்னங்கன்றுகள் விநியோகம் - கன்று ஒன்றின் விலை ரூ.15/-

2) நெட்டை X குட்டை தென்னங்குன்றுகள் விநியோகம் கன்று ஒன்றின் விலை ரூ.25/-

3) குட்டை நெட்டை தென்னங்கன்றுகள் விநியோகம் கன்று ஒன்றின் விலை ரூ.75/-

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட விவசாயிகள் சிறு / குறு / மகளிர் விவசாயிகளுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 16 சதவீதம் ஒதுக்கீடு பழங்குடியின விவசாயிகளுக்கு 8 சதவீதம் ஒதுக்கீடு ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஐந்து எக்டருக்கு மானியம் வழங்கப்படும்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) ஆதார மற்றும் சான்று விதை உற்பத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.1,000/-

2) சான்று விதை விநியோகம் 50 சதம் மானியம் அல்லது குவிண்டாலுக்கு ரூ.1,200/- (இதில் எது குறைவோ)

3) ஜிப்சம் விநியோகம் எக்டருக்கு 50 சதவீத மானியம் (போக்குவரத்து செலவினம் உட்பட) அல்லது எக்டருக்கு ரூ.750/- (இதில் எது குறைவோ)

4) நுண்ணூட்ட உர விநியோகம் 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.500/- (இதில் எது குறைவோ)

5) ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல்விளக்கத்திற்கான இடுபொருள் விநியோகம் 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.750/- (இதில் எது குறைவோ)

6) தெளிப்புநீர் பாசனக் கருவிகள் விநியோகம் 50 சதவீத மானியம் அல்லது ஒரு எக்டருக்கு ஒரு கருவிக்கு ரூ.7,500/- (இதில் எது குறைவோ)

7) ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா விநியோகம் - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.100/- (இதில் எது குறைவோ)

8) பயிர்பாதுகாப்பு மருந்து விநியோகம் - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.500/- (இதில் எது குறைவோ)

9) பம்பு செட் ஒன்றுக்கு 50 சதவீத மானியம் வழங்குதல் அல்லது ரூ.10,000/- (இதில் எது குறைவோ)

10) சுழல் கலப்பை ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.30,000/- (இதில் எது குறைவோ)

11) களைக்கொல்லி விநியோகம் - 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.500/- (இதில் எது குறைவோ)

12) தெளிப்பான்கள் விநியோகம் - ஒன்றுக்கு 50 சத மானியம் அல்லது ரூ.3,000/- (இதில் எது குறைவோ)

13) குழாய்மூலம் நீர் ஆதாரங்களிலிருந்து வயல்வெளிக்கு நீர் எடுத்துச் செல்லுதல் - 50 சதவீத மானியம் அல்லது ஒரு விவசாயிக்கு ரூ.15,000/- (இதில் எது குறைவோ)

14) உழவர் வயல்வெளிப் பள்ளி - பயிற்சி ஒன்றுக்கு ரூ.17,000/-

15) நிலம் சமன்படுத்தும் லேசர் இயந்திரம் ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது 10 விவசாயிகள் கொண்ட ஒரு குழுவிற்கு ரூ.1.50 இலட்சம் (இதில் எது குறைவோ)

16) விசை உழுவை இயந்திரம் வழங்குதல் - ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது ரூ.45,000/- (இதில் எது குறைவோ)

17) தெளிப்பான்கள் மழைத்தூவான்கள் கருவி ஒன்றுக்கு ரூ.10,000/- மானியம்

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் இ) அதிவிரைவு பயறு வகை உற்பத்தி திட்டம்

எப்படி பெறுவது

கிராம அளவில் உழவர் நண்பர்கள். வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் / வட்டார தொழில்நுட்ப குழு / வட்டார ஆலோசனைக் குழு / வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் / மாவட்ட திட்ட அலுவலர் (அட்மா)

விரிவாக்கம்

0.2 எக்டருக்கு தேவையான விதை, சிறுதளைப்பைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் மற்றும் மின்னணு மூலம் பூச்சி கண்காணிப்பு பயிற்சிக்கு 100 சதவீத மானியம் அ) துவரை - எக்டருக்கு ரூ.5,400/- ஆ) உளுந்து - எக்டருக்கு ரூ.4,800/-

தேசிய தோட்டக்கலை இயக்கம் (மத்திய மற்றும் மாநில அரசு பகிர்ந்தளிப்பு திட்டம்)

மற்ற விவரங்கள்

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, திருநெல்வேலி, இராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், திருப்பூர் மற்றும் அரியலூர் ஆகிய 22 மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்டம். மாவட்ட ஆட்சியர் / தலைவர் (சம்பந்தப்பட்ட மாவட்ட இயக்கக்குழு) மற்றும் தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர் சம்பந்தப்பட்ட மாவட்டங்கள்.

விரிவாக்கம்

50–75 சதவீத மானியத்தில் புதிய தோட்டங்கள் உருவாக்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் தோட்டக்கலைப் பயிர்களை வளர்த்தல, இயற்கை பண்ணையம், மனிதவளம் மேம்படுத்தும் திட்டம், தேனி வளர்ப்பு மூலம் மகரந்தச் சேர்க்கை, அறுவடைக்குப்பின்செய் நேர்த்தி, உள் கட்டமைப்பு மேம்பாடு, இயந்திரமயமாக்குதல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்.

தேசிய நுண்ணீர் பாசன இயக்கம் (மத்திய மற்றும் மாநில அரசு பகிர்ந்தளிப்பு திட்டம்)

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள். அனைத்து மாவட்டங்கள் (சென்னை தவிர)

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில். மாவட்ட ஆட்சியர் தலைவர் (சம்பந்தப்பட்ட மாவட்ட நுண்ணீர் பாசன இயக்கக்குழு) வேளாண்மை இணை இயக்குநர் தோட்டக்கலை துணை இயக்குநர் சம்பந்தப்பட்ட மாவட்டம்.

விரிவாக்கம்

தென்னை உட்பட அனைத்துத் தோட்டக்கலை பயிர்கள் - மற்றும் கரும்பு உட்பட அனைத்து தோட்டக்கலை அல்லாத பயிர்களுக்கும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் நுண்ணீர் பாசனம் அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குதல் (அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 5 எக்டர் வரை). தேவையான விவரங்கள் உரிய அலுவலரிடம் முழுமையாக வழங்கிய பிறகு வழங்கப்படும்.

தேசிய மானாவாரி நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்.

மற்ற விவரங்கள்

40 சதவீத பங்களிப்பு தொகை இதர விவசாயிகளிடமிருந்தும் 20 சத பங்களிப்பு தொகையும் ஆதி திராவிட மற்றும் பழங்குடி பயனாளிகளிடமிருந்து தனிப்பட்ட மற்றும் சமுதாய பணிகளுக்காகவும் வசூலிக்கப்பட்டு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர்வடிப்பகுதி சங்கங்களால் வருங்கால பாதுகாப்பிற்காக சேமிக்கப்படுகிறது.

எப்படி பெறுவது

  1. துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,
  2. செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

வேளாண்மை தொழில் நுட்பம் மற்றும் இதர சிறு தொழில்கள் வேளாண்மை மற்றும் சார்ந்த துறைகளில் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் நவீன ரகங்கள் பற்றிய செயல் விளக்கத் திடல் அமைத்தல், உற்பத்தி முறைகளை பன்முகப்படுத்துதல் உதாரணம் காடு வளர்ப்பு தோட்டக் கலைப் பயிர்கள், இயற்கை உரங்கள், உயிர் உரங்களைப் பயன்படுத்துதல், ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சிநோய் மேலாண்மை, சிறு பாசன முறை, இயற்கைப் பண்ணையம், மேம்படுத்தப்பட்ட ஊடுபயிர் திட்டம், விதைப்பண்ணை அமைத்தல், பட்டுப் பூச்சி வளர்ப்பு, மீன்வள உற்பத்தி, கால்நடை மேலாண்மை, கோழி வளர்ப்பு, கிராமக்குளம் பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு மற்றும் இதர தொழில்கள் போன்றவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

தேசிய மூங்கில் இயக்கம் (100 சத மத்திய சார்பு திட்டம்)

மற்ற விவரங்கள்

கடலூர், ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, கரூர், சேலம், புதுக்கோட்டை, வேலூர், தேனி மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் - வட்டார அளவில் - சம்பந்தப்பட்ட மாவட்டங்கள். மாவட்ட ஆட்சியர் / தலைவர் (சம்பந்தப்பட்ட மாவட்ட இயக்கக்குழு) மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டம்.

விரிவாக்கம்

வனம்அல்லாத பகுதிகளில் புதிதாக மூங்கில் சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு பயிற்சி மாநிலத்திற்குள்ளேயும், வெளி மாநிலங்களிலும் அளிக்கப்படுதல். தனியார் துறைகளில் மையப்படுத்தப்பட்ட நாற்றாங்கால் (25 சதவீத மானியம்) மகிளா நர்சரி, கிசான் நர்சரி, மூங்கில் பயிர் பாதுகாப்பு, ஏற்கனவே உள்ள மூங்கில் தோப்பினை சீரமைத்தல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் பருவ நிலையின் அடிப்படையில் நடவுப் பணி மேற்கொள்ள வற்புறுத்துதல்.

தேசிய மூலிகைப் பயிர்கள் இயக்கம் (100 சத மத்திய சார்பு திட்டம்)

மற்ற விவரங்கள்

சென்னை தவிர அனைத்து மாவட்டங்களில் விவசாயிகள் தொகுப்பு, சங்கங்கள் மற்றும் டிரஸ்ட் அமைப்புகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை துணை இயக்குநர் (மாவட்ட அளவில்) தோட்டக்கலை உதவி இயக்குநர் தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில். மாவட்ட ஆட்சியர் / தலைவர் (சம்பந்தப்பட்ட மாவட்ட இயக்கக்குழு) மற்றும் தோட்டக்கலை துணை இயக்குநர் சம்பந்தப்பட்ட மாவட்டம்.

விரிவாக்கம்

நடவு கன்றுகள் உற்பத்தி செய்ய நாற்றங்கால் அமைப்பதற்கு மான்யம் வழங்குதல். மூலிகைப் பயிர்களின் சாகுபடி பரப்பினை விரிவுபடுத்துவதற்கு 20 சதம் முதல் 75 வரை சதம் மான்யம். அறுவடை பின்செய் மேலாண்மைக்கு - திட்ட அடிப்படையில் உதவித் தொகை வழங்குதல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு பருவ நிலையின் அடிப்படையில் நடவுப் பணி மேற்கொள்ள வற்புறுத்துதல்

தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில். சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்.

விரிவாக்கம்

வாழை, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரவள்ளி, மஞ்சள், தென்னை, அன்னாசி மற்றும் இஞ்சி பயிரிடும் விவசாயிகளுக்கு இயற்கை பேரழிவுகள் மற்றும் பூச்சி நோய் தாக்குதலினால் ஏற்படும் அதிக அளவு சேதத்தினை ஈடுகட்டும் வகையில் பயிர் காப்பீட்டு பிரிமியத்தொகைக்கு 50 சதவீத மானியம் அளித்தல். உரிய பருவத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பயிறு கிராம மேம்பாட்டுத்திட்டம்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம்

  1. மானாவாரி நிலங்களில் மழைநீர் சேமிப்பு மற்றும் மேலாண்மை மூலம் நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்பினைக் குறைத்து நிலையான பயறுவகை பயிர்கள் உற்பத்தி செய்தல். 2 பயறுவகை பயிர்களின் வளர்ச்சி காலங்களில் கூடுதல் பாசனம் அளித்தல். செயல்படுத்தப்படும் பணிகள் 1 பாலித்தீன் தளத்துடன் கூடிய புதிய பண்ணைக்குட்டைகள் அமைத்தல்.
  2. பழைய பண்ணைக்குட்டைகளில் பாலித்தீன் தளமிடுதல். மானியங்களும், சலுகைகளும்  புதிய பண்ணைக்குட்டைகள் அமைத்தல். அ. பண்ணைக்குட்டைகள் அமைத்தல் - 100 மானியம் ஆ. பாலித்தீன் தளமிடுதல் - 50 மானியம்  பழைய பண்ணைக்குட்டைகளுக்கு பாலித்தீன் தளமிடுதல் - 50 மானியம்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த இனங்களில் 4சதம் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சியினை எய்திடுதல். செயல்படுத்தப்படும் பணிகள் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் பண்ணை இயந்திரங்கள் / கருவிகள், அதிக விலையுள்ள வேளாண் பண்ணைக் கருவிகள் மற்றும் இலகுவாக இயக்கும் வேளாண்மைக் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல் மானியங்களும், சலுகைகளும் விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகள் வாங்க 50சதம் மானியம் வழங்குதல். (ஒவ்வொரு கருவிக்கும் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வரம்பு தொகைக்குட்பட்டு) விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள பண்ணை இயந்திரங்கள் வாங்க 50சதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.4.00 இலட்சம் வரை வழங்குதல்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - உயர் தொழில்நுட்ப உயர் விளைச்சல் திட்டம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் நீங்கலாக பிற மாவட்டங்களின் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - சம்பந்தப்பட்ட மாவட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்

விரிவாக்கம்

தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க - அடர் நடவு, பரப்பு அதிகரித்தல், பசுமைக்குடில் சாகுபடி, இயந்திர மயமாக்குதல், அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம், பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல், கிளை மேலாண்மை ஆகிய திட்டங்களுக்குத் தகுந்தாற்போல் நடவுச்செடிகள், விதைகள், உரங்கள், நுண்ணூட்டங்கள் பண்ணைக் கருவிகள் ஆகியவற்றை அடக்கிய சாகுபடிக்கு அதிகபட்சமாக 1 எக்டர் வரை 50 சதவீத மானியம் வழங்குதல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - மானாவாரிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், உதகை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 1 எக்டர் வரை

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர்கள் - சம்பந்தப்பட்ட மாவட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்

விரிவாக்கம்

மானாவாரி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நீராதாரத்தை ஏற்படுத்தி பழத்தோப்புகள் அமைத்து அவற்றில் காய்கறிகள் ஊடுபயிர் செய்தல். இதற்கு 50 சதவீத மானியம் வழங்குதல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் உழவர் மையம் (kisan bhavan)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளிடையே பரவலாக்க 10 வட்டாரங்களில் உழவர் மையங்கள் அமைத்தல்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் எண்ணெய்ப்பனை

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) எண்ணெய்ப்பனை கன்றுகள் விநியோகம் - கன்றுகள் விலையில் 85 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.10,000/- ஆ) பயிர் வளர்ச்சிப் பருவத்தில் சாகுபடி செலவிற்கு உதவித்தொகை முதலாம் ஆண்டு - 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.6,000/- இரண்டாம் ஆண்டு பராமரிப்பு - 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.3,500/-

2) சொட்டுநீர்ப்பாசன கருவிகள் வழங்குதல் - 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ15,000/-நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள். கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

3) சொட்டுநிர்ப்பாசனத்திற்கு டீசல் அல்லது மின் பம்புசெட் வழங்குதல் - 10 எச்.பி. பம்ப்செட்டுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.10,000/-

4) எண்ணெய்ப்பனை சாகுபடி நிலங்களில் ஊடுபயிர் செய்ய இடுபொருள் மானியம் - வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவையான நடவுப் பொருட்களுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.10,000/-

5) ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு மேலாண்மை, பாசன நீர்வழி உரமிடல், பயிர்பாதுகாப்பு மருந்துகள் மற்றும் மரங்களுக்கு வேலி அமைத்து பாதுகாக்க மானியம் - 50 சதவீத இடுபொருள் மானியம் அல்லது அதிகபட்சமாக எக்டருக்கு ரூ5,000/-

6) எண்ணெய்ப்பனை சாகுபடி செய்யும் நிலங்களில் மண்புழு உர மையங்கள் அமைத்தல் - மையம் ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/-

7) எண்ணெய்ப்பனை சாகுபடி செய்யும் நிலங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் - ஆழ்குழாய் கிணறு (அல்லது) மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஒன்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/-

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைந்த பயறு கிராமங்கள் அமைத்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

0.2 எக்டருக்குத் தேவையான விதை, சிறுதளைப்பைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள் மற்றும் மின்னணு மூலம் பூச்சி கண்காணிப்பு பயிற்சிக்கு 100 சதவீத மானியம் அ)துவரை - எக்டருக்கு ரூ.5,400/- ஆ)உளுந்து- எக்டருக்கு ரூ.4,800/-

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம்- செயல் விளக்கங்கள் அமைத்து துவரை சாகுபடியை தீவிரப்படுத்துதல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

செயல்விளக்கம் அமைக்க எக்டருக்கு ரூ.5,000/-

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்விளக்கம் மூலம் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பரவலாக்குதல்

மற்ற விவரங்கள்

நெல் சாகுபடி முறையில் செயல்விளக்கம் அமைக்கும் அனைத்து மாவட்ட விவசாயிகள் இச்சலுகைக்கு தகுதியுடையவர்கள். சிறு / குறு / பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

எக்டருக்கு ரூ.1,000/- மதிப்புள்ள விதை மற்றும் இதர முக்கிய இடுபொருட்கள் இலவசமாக வழங்குதல். இத்தொழில்நுட்பம் கடைபிடிக்கப்பட்டதை உறுதி செய்தபின் மீதமுள்ள மானியத் தொகை ரூ.2,000/- வழங்கப்படும்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் -தமிழ்நாடு மகளிர் வேளாண் வணிகம் மற்றும் விரிவாக்கத் திட்டம் (டான்வேப்)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) மாவட்டம் ஒன்றுக்கு 10 புதிய குழுக்கள் அமைத்தல், 3 நாட்களுக்கு குறுந்தொழில் துவங்குவதற்கான பயிற்சிகள் வழங்குதல் மற்றும் வயல்வெளிகளைப் பார்வையிடுதல்

1) ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ரூ.200/- உதவித்தொகை

2) ஒரு நபருக்கு ரூ.20/- பெறுமான பயிற்சி பொருட்கள் ஆ) குறுந்தொழில் துவங்க - குழு ஒன்றுக்கு மானியம் ரூ.15,000/- இ) வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் - மாவட்டம் ஒன்றுக்கு 5 எண்கள் 8 எச்.பி. திறன் கொண்ட விசை உழுவைகள் வழங்க 40 சதவீத மானியம் அதிகபட்சமாக இயந்திரம் ஒன்றுக்கு ரூ.45,000/-

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் தீவிர சிறுதானிய சாகுபடி மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு அளித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) செயல்விளக்கம் அமைத்தல் - 2 எக்டருக்குத் தேவையான இடுபொருட்களை இலவசமாக வழங்குதல்.

1) சோளம், கம்பு, ராகி - எக்டருக்கு ரூ.3,000/-

2) வரகு, சாமை, குதிரைவாலி - எக்டருக்கு ரூ.2,000/- ஆ)சிறுதளைப்பைகள் விநியோகம் 1) சோளம், ராகி, குதிரைவாலி, வரகு மற்றும் சாமை - ஒரு எக்டர் நில உடைமைதாரருக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான 4 கிலோ சிறுதளைப்பை ஒன்றுக்கு ரூ.200/- அதிகபட்சமாக 2 எக்டருக்குத் தேவையான சிறுதளைப்பைகள். 2) கம்பு - ஒரு எக்டர் நில உடைமைதாரருக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான 1.5 கிலோ சிறுதளைப்பை ஒன்றுக்கு ரூ.250/- அதிகபட்சமாக 2 எக்டருக்குத் தேவையான சிறுதளைப்பைகள். இ) கம்பு, ராகி, சோளம் மற்றும் குறுதானியங்கள் பயிர்களில் உயர்விளைச்சல் இரகங்களில் விதை உற்பத்தி - ஒரு கிலோ விதை உற்பத்திக்கு ஊக்கத்தொகையாக ரூ.7.50-ம், விதை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரூ.2.50-ம் ஆக மொத்தம் கிலோவிற்கு ரூ.10 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். கீழ்க்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சார்ந்த செயல்விளக்கம் அமைக்கும் அனைத்து விவசாயிகள். கம்பு - திண்டுக்கல், விழுப்புரம், மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராகி - தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர், ஈரோடு சோளம் - சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி குறுதானியங்கள் - திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், மதுரை கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் ஈ) மாவட்ட அளவிலான கருத்தரங்கம் - மாவட்டம் ஒன்றுக்கு 120 விவசாயிகளுக்கு பயிற்சி 1) உணவு மற்றும் போக்குவரத்துக்கான உதவித்தொகை - ஒரு விவசாயிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200/- 2) பயிற்சி பொருட்கள் - ஒரு விவசாயிக்கு ரூ.50/- விழுப்புரம், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், மதுரை, தர்மபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உ) விவசாயிகள் பயிற்சி - 50 விவசாயிகளுக்கு 5 நாட்கள் பயிற்சி 1) உணவு மற்றும் போக்குவரத்துக்கான உதவித்தொகை - ஒரு விவசாயிக்கு நாளொன்றுக்கு ரூ.500/- 2) ஒரு விவசாயிக்கு ரூ.500/- மதிப்புள்ள பயிற்சி பொருட்கள். 3) சிற்றுண்டி செலவினம் - நாளொன்றுக்கு ரூ.40/- சோளம் - சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல் கம்பு - விழுப்புரம், தூத்துக்குடி ராகி - கிருஷ்ணகிரி வரகு - கடலூர், விழுப்புரம் சாமை - வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி குதிரைவாலி - மதுரை, விருதுநகர்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - துல்லிய பண்ணையம்

மற்ற விவரங்கள்

குழுக்களாக பதிவு செய்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு எக்டர் வீதம். i. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ii. இதர விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) முக்கிய இடுபொருட்கள் 50 சதவீதம் அதிகபட்ச மானியமாக எக்டருக்கு ரூ.25,000/- ஆ) சொட்டு நீர் வழி உரமிடல் i. மொத்த செலவில் 100 சதவீத மானியம் அதிகபட்சமாக சிறு குறு விவசாயி ஒருவருக்கு ரூ.43,816/- ii. மொத்த செலவில் 75 சதவீத மானியம் இ) விவசாயிகள் பயிற்சி 2 நாட்கள் பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ரூ.1,000/- வீதம்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் தென்னங்கன்றுகள் விநியோகம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) நெட்டை இரகங்கள் விநியோகம் செய்ய கன்று ஒன்றுக்கு ரூ.7.50 மானியம். ஆ) வீரிய ஒட்டு இரகங்கள் விநியோகத்திற்கு கன்று ஒன்றுக்கு ரூ.15/- மானியம்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - நிலக்கடலைப் பயிருக்கு ஜிப்சம் விநியோகம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

ஒரு எக்டருக்கு தேவையான இடுபொருட்களுக்கு (போக்குவரத்து செலவினம் உட்பட) 50 சதவீத மானியம் அல்லது எக்டருக்கு ரூ.750/- (இதில் எது குறைவோ)

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் நெல் பயிரிடும் பகுதிகளில் துத்தநாக சல்பேட் இடுதல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

இடுபொருட்கள் 50 சத மானியம்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் -பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி இலைவழி உரம் தெளித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

பயறுவகைப் பயிர்களில் டிஏபி 2 சதம் கரைசல் இலைவழி தெளிப்பதற்கு எக்டருக்கு ரூ.250/- மானியம்

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மானாவாரிபகுதி மேம்பாட்டுத் திட்டம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) பரிந்துரைக்கப்பட்ட பயிர்த்திட்டம் மேற்கொள்ளுதல்

அ) நெல் சார்ந்த திட்டம் - விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் விலையில் 25 சதவீத மானியம் (அல்லது) எக்டருக்கு ரூ.10,000/-

ஆ) சிறுதானியப் பயிர்கள் சார்ந்த திட்டம் - விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் விலையில் 25 சதவீத மானியம் (அல்லது) எக்டருக்கு ரூ.5,000/-

இ) எண்ணெய்வித்துப் பயிர்கள் சார்ந்த திட்டம் - விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் விலையில் 25 சதவீத மானியம் (அல்லது) எக்டருக்கு ரூ.7,500/-

ஈ) பயறுவகைப் பயிர்கள் சார்ந்த திட்டம் - விதை, உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி போன்ற இடுபொருட்கள் விலையில் 25 சதவீத மானியம் (அல்லது) எக்டருக்கு ரூ.5,000/- கீழ்க்குறிப்பிடப்பட்ட மாவட்ட விவசாயிகள் திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி. பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல். வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, தேனி, இராமநாதபுரம், விருதுநகர். கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி. கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள்

2) மண்புழு உர மையங்கள் (30” x 8’ x 2.5’) அமைத்தல் மையம் ஒன்றுக்கு மொத்த செலவில் 50 சதவீத மானியம் (அல்லது) ரூ.30,000/- அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

3) பயறு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் விதை உற்பத்தி - மொத்த விதை உற்பத்தி செலவில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.25,000/- அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்

4) பல்வேறு பயிர் திட்டத்திற்கான பயிர் காப்பீடு - காப்பீடு கட்டணத்திற்கு 100 சதவீத மானியம்.

அ) நெல் சார்ந்த திட்டம்

ஆ) சிறுதானியப் பயிர்கள் சார்ந்த திட்டம்

இ) எண்ணெய்வித்துப் பயிர்கள் சார்ந்த திட்டம்

ஈ) பயறுவகைப் பயிர்கள் சார்ந்த திட்டம் திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மற்றும் கன்னியாகுமரி. பெரம்பலூர், அரியலூர், கரூர், மற்றும் திண்டுக்கல். வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, தேனி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

நதிப்பள்ளத்தாக்குத் திட்டங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

தென்பெண்ணை மற்றும் மேட்டூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

எப்படி பெறுவது

1) உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் - அலகு 1, 210 இ, சேலம் மெயின்ரோடு, ரகுபதி ஆஸ்பிடல் பின்புறம், கிருஷ்ணகிரி - 635 001.

2) உதவி செயற் பொறியாளர் (வே.பொ), நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-2, 21/A1, சீனிவாசா காலனி முதல் தெரு, கிருஷ்ணகிரி-635 001. உதவி செயற் பொறியாளர் (வே.பொ), நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், அலகு-1, எண். 4/494(1) முதல் தளம், (இரயில் நிலைய ரோடு, தர்மபுரி-636 701.

3) உதவி செயற் பொறியாளர் (வே.பொ) நதிப்பள்ளத்தாக்குத் திட்டம் அலகு-2, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தர்மபுரி - 636 701.

4) செயற் பொறியாளர் (வே.பொ), நதிப்பள்ளத்தாக்குத் திட்டம், தர்மபுரி. கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.), சேலம். தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை. நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண்.2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் நீர்த்தேக்கங்களில் வண்டல் மண் படிவதைக் குறைத்திடும் பொருட்டு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மண் அரிமானத்தை தடுத்தல் நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் நீர்பிடிப்புப் பகுதி நிலங்களின் தரம் குறையாமல் தடுத்தல் நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரம் மற்றும் ஈரப்பதத்தினை மேம்படுத்துதல் நீர்வடிப் பகுதிகளில் உள்ள நிலங்களின் தரத்திற்கேற்றவாறு நிலப்பயன்பாட்டினை மேற்கொள்ளுதல் செயல்படுத்தப்படும் பணிகள் சம உயர வரப்பு தோட்டக்கலைப் பயிர் வளர்த்தல் ஓடை பராமரிப்புப் பணிகள் செயல்படுத்துதல்

பண்ணைக்குட்டைகள் அமைத்தல் வேளாண் காடு மற்றும் காடு வளர்த்தல் வண்டல் சேகரிப்பு கட்டுமானங்கள் நீர்சேகரிப்பு கட்டுமானங்கள் போன்ற மண்வளப் பாதுகாப்புப் பணிகள் விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. மானியங்களும், சலுகைகளும் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் அரசின் 100 மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன. எனினும், தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தப்படும் நிலம் சமன்செய்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் ஆகிய பணிகள் 75மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 25 விவசாயிகள் பங்களிப்பாக பெறப்படுகிறது.

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம் :

சுயஉதவிக் குழுக்கள் நிலமற்றவர்கள் மற்றும் மகளிர்க்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் பணிகள் மானியம்- எக்டருக்கு ரூ.900/-

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி-பயிற்சி

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

பயிற்சி நீர்வடிப்பகுதி பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது - இவர்களுக்கு ஊரக பங்கேற்பு முறையின் அடிப்படையில் தேவைக்கேற்ப நீர்வடிப்பகுதி திட்டமிடுவது குறித்து பயிற்சி. மானியம்-எக்டருக்கு ரூ.1500/-

நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி-மானியம்

மற்ற விவரங்கள்

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் பட்ட நீர்வடிப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராம பொது நிலங்களில் பண்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். 16 சதவீத உடலுழைப்பு அல்லது சிரமதானம் பயனாளிகளால் கொடுக்கப்பட வேண்டும். இதில் 8 சதவீதம் கிராம நீர்வடிப்பகுதி சங்கத்தல் பராமரிப்பு பணிகளுக் கான தொகையாக வைக்கப்படுகிறது

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

செயல்பரப்பு பணிகள் வயல் வரப்பு, சமவெளி வரப்பு தடுப்புகள், நீர்சேகரிப்பு குழிகள், பண்ணைக் குட்டைகள், வேளாண் காடுகள், பழ மரக் கன்றுகள், கால்நடை வளர்ப்பு, புல்வெளி வளர்த்தல் ஆகிய பணிகள். வடிகால் அமைப்பு பணிகள் கல்தடுப்பு அமைப்புகள், நீர்சேகரிப்பு அமைப்புகள் சீரமைத்தல், பண்ணைக் குட்டைகள், குளங்கள் தூர்வாருதல், வாய்க்கால்கள் சரிசெய்தல், ஆகிய பணிகள். மானியம்- எக்டருக்கு ரூ.8400/-

நில மேம்பாட்டுத் திட்டம்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

நோக்கம் விவசாய நிலங்களில் நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் இதர விவசாய பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ளும் பொருட்டு நிலம் சமன்படுத்துதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி அதன் மூலம் விவசாயம் செய்வதற்கான நிலப்பரப்பை அதிகப்படுத்தி விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல்.

செயல்படுத்தப்படும் பணிகள்

நிலம் வடிவமைத்தல் நிலம் சமன் செய்தல் நிலச்சீரமைத்தல் உழுதல், பரம்படித்தல் நெல் கதிரறுக்கும் இயந்திரத்தின் மூலம் நெல்

அறுவடை செய்தல் சலுகைகளும்

அரசு நிர்ணயித்த வாடகை விகிதங்கள் படி விவசாயிகளுக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டு மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் வேளாண்மைப் பொறியியல் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. (கருவிகள் விபரம் மற்றும் வாடகை விகிதங்கள் கீழ்க்கண்டவாறு

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் (ssi)

மற்ற விவரங்கள்

அனைத்து மாவட்ட கூட்டுறவு / தனியார் சர்க்கரை ஆலைகள் / கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள். அனைத்து மாவட்ட கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள்

1) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு

2) இதர விவசாயிகள் அனைத்து மாவட்ட கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் / சர்க்கரை ஆலைகளின் கரும்பு அலுவலர்கள்

எப்படி பெறுவது

வட்டார அளவில் கரும்பு அலுவலர்கள் / கரும்பு ஆய்வாளர்கள் கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) ஒரு விதைப்பரு நாற்று தயாரிக்க நிழற்வலை அமைத்தல் - 50 சதவீத மானியம் அதிகபட்சமாக நிழற்வலை ஒன்றுக்கு ரூ.50,000/- ஆ) முக்கிய இடுபொருட்கள் விநியோகம் - 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.25,000/- இ) சொட்டு நீர் உரமிடல் 1) மொத்த செலவில் 100 சதவீத மானியம் அதிகபட்சமாக விவசாயி ஒருவருக்கு ரூ.43816 2) மொத்த செலவில் 75 சதவீத மானியம் ஈ) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் இத்திட்டம் குறித்து பயிற்சி அளித்தல் விவசாயி ஒருவருக்கு ரூ.1000

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள்

விவரங்கள்

நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகிறது. 10 சதவீத பங்களிப்பு தொகை தனிப்பட்ட பயனாளியிடமிருந்து தனிப்பட்ட பயன்களுக்கும், சமுதாய நலப்பணிகளுக்காகவும் 5 சதவீத பங்களிப்பு தொகையும் ஆதி திராவிட மற்றும் பழங்குடி பயனாளிகளிடமிருந்து தனிப்பட்ட மற்றும் சமுதாய பணிகளுக்காகவும் வசூலிக்கப்பட்டு, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் நீர்வடிப்பகுதி சங்கங்களால் வருங்கால பாதுகாப்பிற்காக சேமிக்கப்படுகிறது.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

விரிவாக்கம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப் படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக்குட்டைகள் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப் படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் போன்றவை. மானியம் எக்டருக்கு ரூ.3,000/-

நீலப்பச்சைப்பாசி விநியோகம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அனைத்து பயிர்களுக்கான நுண்ணூட்டக்கலவை முழு விலையில் விநியோகித்தல் கிலோ ஒன்றுக்கு நெல் (அடி உரம்) - ரூ.24.80 சிறுதானியங்கள் - ரூ.56.30 தென்னை - ரூ.55.30 பருத்தி (அடி உரம்) - ரூ.72.00 பயறுவகைகள் - ரூ.97.50 கரும்பு (அடி உரம்) - ரூ.29.00 நிலக்கடலை - ரூ.45.70

நுண்ணூட்டக் கலவை விநியோகம்

மற்ற விவரங்கள்

மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்

விரிவாக்கம்

அனைத்து பயிர்களுக்கான நுண்ணூட்டக்கலவை முழு விலையில் விநியோகித்தல் கிலோ ஒன்றுக்கு நெல் (அடி உரம்) - ரூ.24.80 சிறுதானியங்கள் - ரூ.56.30 தென்னை - ரூ.55.30 பருத்தி (அடி உரம்) - ரூ.72.00 பயறுவகைகள் - ரூ.97.50 கரும்பு (அடி உரம்) - ரூ.29.00 நிலக்கடலை - ரூ.45.70

பசுந்தாள் உர விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகம்

மற்ற விவரங்கள்

இராமநாதபுரம், சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக மாநிலத்தின் பிற மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

பசுந்தாள் உர விதை விநியோகம் விதை விலையில் 25 சதவீத மானியம்.

பயறு அதிசயம் வழங்குதல்

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

எக்டருக்கு மானியமாக ரூ.425/-

பயிர்க்காப்பீடு -தென்னை காப்பீட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டுத் கட்டணத்தில் 50 சதவீதத்தை தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீத மானியத்தை மாநில அரசும், மீதமுள்ள 25 சதவீத மானியத்தை விவசாயிகளும் ஏற்பர்.

பயிர்க்காப்பீடு - தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் (nais)

மற்ற விவரங்கள்

  1. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி, பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகள்
  2. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.
  3. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டு கட்டணத் தொகையில் கடன் பெறும் அனைத்து சிறு / குறு விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 50 சதவீத மானியம் மற்றும் கடன்பெறா சிறு / குறு விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 55 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு (குத்தகைதாரர்கள் உட்பட) 50 சதவீத மானியம்

பயிர்க்காப்பீடு - மாற்றி அமைக்கப்பட்ட தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் (mnais)

மற்ற விவரங்கள்

1. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, பருத்தி, பணப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் கடலூர், சிவகங்கை, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் (முன்னோடித் திட்டமாக)

2. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.

3. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுவர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்

விரிவாக்கம்

காப்பீட்டு படிமுறை வீதம் - மானியம் 2 சதவீதம் வரை - இல்லை 2 – 5 சதவீதம்- 40 சதவீதம்(குறைந்தபட்சம் 2) 5 – 10 சதவீதம்- 50 சதவீதம்(குறைந்தபட்சம் 3) 10 – 15 சதவீதம்- 60 சதவீதம்(குறைந்தபட்சம் 5) 15 சதவீதம்- 75 சதவீதம்(குறைந்தபட்சம் 6)

பயிர்க்காப்பீடு - வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (wbcis)

மற்ற விவரங்கள்

1. தர்மபுரி, சேலம், அரியலூர், விருதுநகர், பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கடன் பெறும் மற்றும் கடன்பெறா விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் சலுகை பெற தகுதியுடையவர்கள்.

2. கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவர்.

3. கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தினையோ வானிலை அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டத்தினையோ தேர்வு செய்யலாம்.

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

காப்பீட்டுத் தொகையில் மானியம் - விவசாயிகளின் பங்குத் தொகை நீங்கலாக மீதமுள்ள காப்பீட்டுத் தொகையினை மானியமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் சரிசமமாக வழங்குகின்றன.

பருத்தி

மற்ற விவரங்கள்

விதைப் பண்ணை அமைப்பதற்காக துறையுடன் பதிவு செய்து விதை வழங்கும் விவசாயிகள் அனைவரும் இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். அனைத்து மாவட்ட பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள், பண்ணை மகளிர் குழுக்கள் (டான்வேப்) இம்மானியத்திற்கு தகுதியுடையவராவர். ஆதிதிராவிடர் / பழங்குடியின பருத்தி விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு - 20 சதவீதம் (19 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீதம் பழங்குடியினர்) பண்ணை மகளிருக்கு நிதி ஒதுக்கீடு - 30 சதவீதம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) சான்று விதைகள் உற்பத்தி இரகங்கள் வீரிய ஒட்டு இரகங்களுக்கு குவிண்டாலுக்கு 25 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ1,500/- (இதில் எது குறைவோ)

2) சான்று விதை விநியோகம் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.20/-

3) தாவர பூச்சிக்கொல்லி உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் விநியோகம் - 50 சதவீத மானியம் எக்டருக்கு ரூ.900/- வரை 4) 30 விவசாயிகள் அடங்கிய உழவர் வயல்வெளிப் பள்ளி ஒன்றுக்கு மொத்த மானியத் தொகை ரூ.17,000/- 5) உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த முன்னோடி செயல் விளக்கங்கள் அமைத்தல் – ஏக்கருக்கு ரூ.2,000/- மானியம்

பருத்தியில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.

மற்ற விவரங்கள்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி நீங்கலாக பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.300/

பெரு நகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித்திட்டம்

மற்ற விவரங்கள்

சென்னை மாநகரைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் சம்பந்தப்பட்ட மாவட்டம். சம்பந்தப்பட்ட மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் / தோட்டக்கலை துணை இயக்குநர்.

விரிவாக்கம்

உயர் விளைச்சல் இரக / வீரிய ஒட்டுரக காய்கறிகள் பரப்பு அதிகரிப்பதன் மூலம் உற்பத்தியை பெருக்குவதற்கு 75 சதவீத மானியம், பசுமைக்குடில் சாகுபடி, நிழல் வலை குடில்கள் மற்றும் அறுவடைக்கு பிந்திய மேலாண்மை ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியம் அளித்தல். தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்.

பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் - 50 சதம் மற்றும் அதற்கு மேல் ஏற்படும் பயிர் இழப்பிற்கு வேளாண் இடுபொருட்களுக்கான மானியம்

மற்ற விவரங்கள்

1)இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் 2)இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட இதர விவசாயிகளுக்கு ஒரு எக்டர். எனினும் தொடர்ந்து இரு ஆண்டுகள் பாதிப்பு ஏற்படுமாயின், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 எக்டருக்கு நிவாரணம்

எப்படி பெறுவது

கிராம அளவில் - வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் - துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் - வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) வேளாண் பயிர்கள் தோட்டக்கலை வருடாந்திர மலைப்பயிர்கள் அ) நெல் எக்டருக்கு ரூ.10,000/-

ஆ) மானாவாரி பகுதியில் எக்டருக்கு ரூ.4,000/-

இ) இறவைப் பகுதியில் எக்டருக்கு ரூ.7,500/-

ஈ) விதைக்கப்படாத வேளாண் விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களுக்கு வேளாண் இடு பொருட்கள் மானியம் கிடையாது.

உ) மிக குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு

குறைந்தபட்ச நிவாரணத்தொகை ரூ.250/-

2) பல்லாண்டு பயிர்கள்

அ) அனைத்து பல்லாண்டுப் பயிர்களுக்கும் எக்டருக்கு ரூ.9,000/-

ஆ) விதைக்கப்படாத வேளாண் விளைநிலங்கள் மற்றும் தரிசு நிலங்களுக்கு வேளாண் இடுபொருட்களுக்கான மானியம் கிடையாது.

இ) மிக குறைவாக நிலம் உள்ள சிறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத் தொகை ரூ.500/-

மக்காச்சோளம்

மற்ற விவரங்கள்

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் சலுகை பெற தகுதியுடையவர்கள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

1) மக்காச்சோள சான்றுவிதை உற்பத்தி குவிண்டாலுக்கு ரூ1,000/- மானியம்

2) மக்காச்சோள சான்று விதை விநியோகம் சான்று விதைகளுக்கு விற்பனை விலையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.1,200/- (இதில் எது குறைவோ)

3) துறை மூலம் 5 எக்டர் பெருவிளக்கத்திடல் அமைக்க இடுபொருள் செலவினத்தில் 50 சத மானியம் (அல்லது) அதிகபட்சமாக ஒரு செயல்விளக்கத்திற்கு ரூ.4,000/- வீதம்

4) 2 கிலோ மக்காச்சோள சிறுதளைப் பைகள் இலவசமாக வழங்குதல்

5) 10 எக்டர் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செயல் விளக்கம் ஒரு செயல் விளக்கத்திற்கு ரூ.22,680/- வீதம்

6) விவசாயிகளுக்கு பயிற்சி (குழுவிற்கு 50 விவசாயிகள் வீதம்) ஒரு விவசாயிக்கு ரூ.300/- வீதம் 2 நாட்களுக்கு

7) நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் எடுத்து செல்லுதல் - 800 மீட்டர் நீளம் வரை அனைத்து வகை குழாய்களுக்கும் (பி.வி.சி. / எச்.டி.பி.இ., ஏனையவை - விவசாயிகளின் தேவைக்கேற்ப) 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15,000/-

மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-புளூரோட்டஸ் பூஞ்சாணம் மூலம் பண்ணைக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

5 கிலோ யூரியா, ஒரு கிலோ புளூரோட்டஸ் மற்றும் தொழில்நுட்ப துண்டு பிரசுரம் அடங்கிய ரூ.140/- மதிப்புள்ள 5000 சிறுதளைப்பைகள் இலவசமாக வழங்குதல்.

மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-மண் மற்றும் நீர் மாதிரிகள் பரிசோதனை

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

i) மண் மாதிரி பரிசோதனை - மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்களை பரிசோதனை செய்ய சலுகைக் கட்டணம் மாதிரி ஒன்றுக்கு ரூ.10/-ம், நுண்ணூட்டச் சத்துக்களை பரிசோதனை செய்ய மாதிரி ஒன்றுக்கு ரூ.10/-ம் வசூலிக்கப்படுகிறது.

ii) ii) நீர் மாதிரி பரிசோதனை – நீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய சலுகைக் கட்டணமாக மாதிரி ஒன்றுக்கு ரூ.20/- வசூலிக்கப்படுகிறது.

மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-வேளாண் கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

செயல் விளக்கம் மற்றும் பயிற்சி - செயல் விளக்கம் அமைக்க ரூ.1,200/-ம், பயிற்சியில் பங்குபெறும் 50 விவசாயிகளுக்கு இடைநிகழ்வு செலவினமாக தலா ரூ.50/-ம் வழங்குதல்

மத்திய அரசின் விரைவுப் பாசன நலத்திட்டத்தின்கீழ் பாசனப்பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம்

மற்ற விவரங்கள்

தேர்வு செய்யப்பட்ட பாசனப்பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும்

எப்படி பெறுவது

உதவி செயற் பொறியாளர் (வே.பொ), பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டம். மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ) மற்றும் செயற் பொறியாளர் (வே.பொ), பாசனப் பகுதி மேம்பாட்டுத்திட்டம், பரமக்குடி, மானாமதுரை மண்டல அளவில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் (வே.பொ.) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை-600 035. தொலைபேசி எண்.2435 2686, 2435 2622

விரிவாக்கம்

நிதி ஆதாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சம நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

பரப்பிற்கும், உருவாக்கப்பட்ட பாசன நீர்வளம் பெறத் தகுதியுடைய பரப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைத்தல். கால்வாய் பாசனப் பகுதிகளில் பாசன நீரின் பயன்பாட்டுத்திறனை மேம்படுத்துதல் தலைமடை முதல் கடைமடை வரை பாசன நீரை சமமாக கிர்ந்தளித்தல் பாசன மேலாண்மையில் விவசாயிகளின் பங்கேற்பை உறுதி செய்தல். பாசன நீர் வீணாவதைத் தடுத்தல் சிறந்த பயிரிடும் முறைகளை மேற்கொள்ளல் பாசன வாய்க்கால்கள் அமைத்தல் நில வடிகால்கள் அமைத்தல் சுழற்சிமுறை நீர்ப்பாசனம் நீர்த்தேக்கம் மற்றும் பாசன கால்வாய்களின் குறைபாடுகளை சரிசெய்தல். மதகு அளவில் விவசாய சங்கங்கள், பிரிவு கால்வாய் அளவில் விவசாய சபைகள் மற்றும் திட்ட அளவில் விவசாயிகள் பேரவை அமைத்தல்பாசன வாய்க்கால் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.15,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு, 40 மாநில அரசின் பங்களிப்பு மற்றும் 10 விவசாயிகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. நிலவடிகால் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.4,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் 50 மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. சுழற்சி முறை பாசனப் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.300/- வீதம் 100 மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகின்றன. நீர்த்தேக்கம் மற்றும் பாசன கால்வாய்களின் குறைபாடுகளை சரிசெய்யும் பணிகள் ஒரு எக்டருக்கு ரூ.6,000/- வீதம் 50 மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் 50 மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட பாசன சபைகளுக்கு செயல்பாட்டு மானியமாக எக்டர் ஒன்றுக்கு ரூ.1,000/- வழங்கப்படுகிறது. (மத்திய அரசின் பங்கு ரூ.450/- மற்றும் மாநில அரசின் பங்கு ரூ.450/- வழங்கப்பட்டு பாசன சபையின் பங்காக ரூ.100/- வசூலிக்கப்படுகிறது)

மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்.

எப்படி பெறுவது

i) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), IGBP காம்ப்ளக்ஸ், தாவரவியல் பூங்கா சாலை, உதகமண்டலம் - 643 001.

ii) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), மைசூர் ரோடு, செல்விப்பேட்டை, கூடலூர் - 643 312, நீலகிரி மாவட்டம்.

iii) உதவி செயற் பொறியாளர் (வே.பொ.), நிலச்சரிவு தடுப்புத் திட்டம், மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், 117, பிருந்தாவன் ஸ்கூல் ரோடு, வெலிங்டன் பஜார், வெலிங்டன், குன்னூர் - 643 102.

iv) செயற் பொறியாளர் (வே.பொ.), தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகம், விஜயநகரம், உதகமண்டலம் - 643 001. கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ). குன்னூர்.

v) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622

விரிவாக்கம்

நோக்கம் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்தல் மண் அரிமானம் மற்றும் வண்டல் மண் படிவதை தடுத்தல் உள்ளூர் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார நிலையை மேம்படைய செய்தல் மண்வளப் பாதுகாப்பு பணிகளின் நன்மைகளை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நிலச்சரிவைத் தடுத்தல் செயல்படுத்தப்படும் பணிகள் படிமட்ட தாங்கு சுவர் உதிரி கற்கள் தடுப்பணை கம்பிவளை தடுப்பணை சமுதாய பாசன கிணறுகள் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பெரிய தடுப்பணை கருங்கற்தடுப்பணையுடன் கூடிய பாசன கால்வாய் ஒழுங்கு படுத்துதல் மற்றும் காரை வாய்க்கால் அமைத்தல் கால்வாய் அகலப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மழை பாதுகாப்பு அமைப்புடன் கூடிய உளர் கலம் அமைத்தல் நிலச்சரிவு தடுப்பு பணிகள் மானியங்களும், சலுகைகளும் பட்டா நிலங்களில் 90சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளின் பங்காக 10சதம் பெறப்படுகிறது. சமுதாய நிலங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பட்டா நிலங்களில் 95சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 5 சதம் பயனாளிகளின் பங்காகப் பெறப்படுகிறது. சமுதாயப் பணிகள் 95சதம் மானியத்தில் (5சதம் பயனாளிகள் பங்கு) செயல்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு தடுப்பு பணிகள் 100சதம் மானியத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை இணை இயக்குநர் - நீலகிரி மாவட்டம்

விரிவாக்கம்

50 சதவீத மானிய விலையில் காய்கறி விதை விநியோகம் செய்தல் ஆயில் இன்ஜின் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் பவர் டில்லர் 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல் சிறு டிராக்டர் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் தெளிப்பான்கள் 25 சதவீத மானியத்தில் வழங்குதல் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் மேலாண்மைத் திட்டம்

மற்ற விவரங்கள்

மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட நீர்வடிப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

i) நோக்கம் நிலத்தடி நீரை மேம்படுத்த மழைநீரை சேகரித்தல்.

ii) நீர்வடிப் பகுதிகளில் மண்ணின் ஈரப்பதத்தை மேம்படுத்துதல்

iii) மண் அரிமானம், மண்வளம் குறைதல் மற்றும் வண்டல் படிதல் ஆகியவற்றை தடுத்து கட்டுப்படுத்துதல் செயல்படுத்தப்படும்

iv) பணிகள் செறிவூட்டும் குழாய்க் கிணறுடன் கூடிய கசிவு நீர் குட்டைகள் அமைத்தல்

v) பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தடுப்பண்ணைகள் அமைத்தல் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்

vi) புதிய கிராம குளங்கள் ஊரணிகள் அமைத்தல்

vii) செறிவூட்டும் குழாய்க் கிணறுகள் அமைத்தல்.

viii) மானியங்களும், சலுகைகளும் சமுதாய நிலங்களில் 100சதம் மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

ix) சமுதாய நிலங்களில் செயல்படுத்தப்படும் பணிகளின் பராமரிப்பிற்காக பயனாளிகள் பங்காக 10சதம் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5சதம்) பெறப்பட்டு கிராம முன்னேற்ற சங்கம் அல்லது நீர்வடிப்பகுதி சங்கம் கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

x) பட்டா நிலங்களில் பணிகள் 90சதம் மானியத்தில் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளுக்கு 95சதம்) செயல்படுத்தப்படுகின்றன. மேலும் பயனாளிகளின் பங்காக 10சதம் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின விவசாயிகளிடமிருந்து 5சதம்) பணம் பொருள் மனித உழைப்பு என்ற வகையில் பெறப்படுகிறது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு விருது

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்ட விவசாயிகளும் ரூ.150/- பதிவுக்கட்டணம் செலுத்தி திருந்திய நெல் சாகுபடி பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை மேற்கொண்டு, பயிர் விளைச்சல் போட்டியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு ரூ.5.00 இலட்சம் பரிசு தொகையும் ரூ.3,500/- மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.

மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம்

மற்ற விவரங்கள்

கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மட்டும் விவசாய தொகுப்புகள் மற்றும் கூட்டமைப்புக் குழு உறுப்பினர்கள்

எப்படி பெறுவது

தோட்டக்கலை உதவி இயக்குநர் / தோட்டக்கலை அலுவலர் - வட்டார அளவில் - சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் தோட்டக்கலை இணை இயக்குநர் - சம்பந்தப்பட்ட மாவட்டங்கள்

விரிவாக்கம்

50 சதவீத மானிய விலையில் காய்கறி விதை விநியோகம் செய்தல் ஆயில் இன்ஜின் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் பவர் டில்லர் 25 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல் சிறு டிராக்டர் 25 சதவீத மானியத்தில் - முன்னுரிமை நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகளுக்கு வழங்குதல் தெளிப்பான்கள் 25 சதவீத மானியத்தில் வழங்குதல் தோட்டக்கலை நடவடிக்கைகள் பருவ நிலையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இடுபொருட்கள் பருவ நிலையின் அடிப்படையில் வழங்குதல்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்புப் பணிகள்

மற்ற விவரங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் நீர்வடிப் பகுதிகளில் நிலங்கள் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்ட அளவில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

  1. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் சுற்றுப்புற சூழலை மறுசீரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மண் அரிமானம், நிலச்சரிவு மற்றும் வண்டல் மண் படிவதைத் தடுத்து சுற்றுச் சூழல் சமநிலையை பராமரித்தல் விவசாயிகளுக்கிடையே சுற்றுச் சூழலை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த விழிப்புணர்வை உருவாக்குதல் உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல் செயல்படுத்தப்படும் பணிகள் சம உயர குழிகள் அமைத்தல் கம்பிவலை கட்டமைப்புகள் அமைத்தல் வடிகால் பராமரிப்புப் பணி செயல்படுத்துதல்
  1. சம உயர கல்வரப்பு அமைத்தல் வரப்பு அமைத்தல் தடுப்பணை கட்டுதல் கிராம குளங்கள் அமைத்தல் நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைத்தல் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் நிலம் வடிவமைத்தல் கசிவு நீர் குட்டைகள் அமைத்தல் அரிமானத்தை தடுக்கும் கட்டமைப்புகள் அமைத்தல் மானியங்களும், சலுகைகளும்
  1. தனியார் பட்டா நிலங்களில் 90 மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. பயனாளிகளின் பங்காக 10 பெறப்படுகிறது. சமுதாய நிலங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பட்டா நிலங்களில் 95 மானியத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. 5 பயனாளிகளின் பங்காகப் பெறப்படுகிறது.

வளர்ச்சி ஊக்கி (naa) விநியோகம்

மற்ற விவரங்கள்

கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, நீலகிரி நீங்கலாக பருத்தி சாகுபடி செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகள்

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டருக்கு ரூ.100/

வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்

மற்ற விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்வடிப்பகுதி களில் உள்ள தனியார் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுவான நிலங்கள் இத்திட்டத்தில் மேம்படுத்தப்படுகிறது. நீர்வடிப்பகுதிகளில் உள்ள பயனாளி களால் மேற்படி மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் பங்களிப்பும், பயனாளிகள் தேர்வும் நீர்வடிப்பகுதி குழுக்களால் தேர்வு செய்யப்படும். நீர்வடிப்பகுதி மேம்பாட்டு நிதிக்காக பொதுப்பணிகள் மற்றும் ஆதி திராவிடர் / பழங்குடியினருக்கு 5 சதவிகிதமும் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 10 சதவிகிதமும் வசூலிக்கப்படும்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில். முதன்மை செயல் அலுவலர், மாநில அளவிலான இணைப்பு முகமை, சென்னை -32. (மாநில அளவில்)

விரிவாக்கம்

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள் தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தாவர தடுப்புகள், ஓடைத் தடுப்புகள், பண்ணைக்குட்டைகள், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு, தொடர் குழி அமைத்தல், பழமரக் கன்றுகள் வளர்த்தல், வேளாண் காடுகள் வளர்த்தல், தீவனப் பயிர் மேம்பாடு செய்தல் போன்றவை. பொது நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தடுப்பணை, ஊரணி மற்றும் குளம் தூர்வாருதல், கால்வாய் சீரமைத்தல், தற்போது இருக்கும் அமைப்புகளை பராமரித்தல் ஆகியவை இவ்வினத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. மானியம் எக்டருக்கு ரூ.5100/-

வாழ்வாதாரப் பணிகள்

மற்ற விவரங்கள்

முகிர்ந்த சுய உதவிக்குழுக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் மற்றும் தொழில் முனையவும் சுழற்சி நிதியிலிருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.

எப்படி பெறுவது

தலைவர் / மாவட்ட ஆட்சித் தலைவர், திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்ட அளவில்.

  1. துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,
  2. செயல் இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சென்னை-32 (மாநில அளவில்).

விரிவாக்கம்

சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நிலமற்றவர்கள் வருமானத்தை ஏற்படுத்தி தரும் பணிகள் மானியம் எக்டருக்கு ரூ.800/-

விதை உற்பத்தி - விதைச்சான்று விதை தரக்கட்டுப்பாடு – பயிற்சி

மற்ற விவரங்கள்

சான்று விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் விதை தரக்கட்டுப்பாடு தொடர்பாக அளிக்கப்படும் பயிற்சிகளில் எவர் ஒருவரும் பங்கேற்கலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர்கள் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் – dsccbe@gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம் : சான்று விதை உற்பத்தி தொழில் நுட்பங்கள் மற்றும் விதை தரக்கட்டுப்பாடு தொடர்பான கீழ்க்குறிப்பிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

  1. அரசு விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி
  2. தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி
  3. விதை விற்பனையாளர்களுக்கான பயிற்சி முடிவுகள் 10 தினங்களுக்குள் தெரிவிக்கப்படும்.

விதை கிராமத் திட்டம்

மற்ற விவரங்கள்

தரமான விதைகளை தனது சொந்த நிலத்தில் உற்பத்தி செய்து சொந்த உபயோகத்திற்கும், பிற விவசாயிகளுக்கும் வழங்க முன்வரும் அனைத்து விவசாயிகள் (சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக)

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் உதவி விதை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

அ) நெல், சிறுதானியங்கள், பயறு வகைப்பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் ஆதார சான்று விதைகள் - 50 சதவீத மானிய விலையில் விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறது.

ஆ) விதை உற்பத்தி குறித்த 3 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி - தரமான விதை உற்பத்திக்காக துறை மூலம் 50 சதவீத மானிய விலையில் விதைகள் பெற்ற விவசாயிகளுக்கு, பயிர்களின் முக்கிய மூன்று நிலைகளில் (விதைப்பு, பூக்கும்பருவம், அறுவடைக்குப்பின் மற்றும் விதை சுத்திகரிப்பின்போது) பயிற்சி வழங்கப்படுகிறது.

விதைச்சான்றிளிப்பு

மற்ற விவரங்கள்

விதைச்சான்று திட்டத்தில் சான்று விதை உற்பத்தி செய்ய விரும்பும் எவர் ஒருவரும் விதைச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து விதை உற்பத்தி செய்யலாம். விதைப்பு அறிக்கை பதிவுக் கட்டணமாக விண்ணப்பம் ஒன்றுக்கு, ரூ.25/- பெறப்படுகிறது. உரிய வயலாய்வு மற்றும் பகுப்பாய்வு கட்டணமும் பயிர்களுக்கேற்றவாறு தனியாக செலுத்தப்பட வேண்டும். விதைச்சட்டம் 1966 பிரிவு 5ன் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட விதை ரகங்களே சான்று செய்ய தகுதியானவை.

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைச்சான்று உதவி இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

விதை உற்பத்தி கண்காணிக்கப்பட்டு தரமான விதைகளுக்கு சான்றளிப்பு வழங்கப்படுகிறது. விதைச்சான்றுப் பணி கீழ்குறிப்பிட்ட ஆறு வழிகளில் நிறைவு செய்யப்படுகிறது. 1. விதைச்சான்றுக்கு விண்ணப்பங்கள் ஏற்பு மற்றும் கூர்ந்தாய்வு செய்தல் 2. ஆதாரம் மற்றும் இதர தகுதிகள் ஆய்வு செய்தல் 3. வயல் ஆய்வுகள் 4. அறுவடைக்கு பிந்தைய நிலையில் ஆய்வுகள் 5. விதை மாதிரி எடுத்தலும், பகுப்பாய்வு செய்தலும் 6.

தரமான விதைகளுக்கு சான்றளித்தல். விண்ணப்பங்கள் ஏற்பு / மறுப்பு தொடர்பான விபரம் உரிய உற்பத்தியாளருக்கு 10 தினங்களில் தெரிவிக்கப்படும்

விதை தரக்கட்டுப்பாடு

மற்ற விவரங்கள்

விதை விற்பனை செய்ய விரும்பும் எவர் ஒருவரும், உரிய விதை ஆய்வு துணை இயக்குநரிடம் வதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யலாம். புதிய விதை விற்பனை உரிமம் பெற ஒரு விதை விற்பனை நிலையத்திற்கான கட்டணம் ரூ.50/- (மூன்று ஆண்டுகளுக்கு) விற்பனை உரிமம் புதுப்பிக்க கட்டணம் ரூ.20/- (மூன்று ஆண்டுகளுக்கு)

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதை ஆய்வு துணை இயக்குநர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

  1. விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
  2. விதை விற்பனை நிலையங்களை அவ்வப்போது ஆய்வு செய்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் ஆய்வு செய்யப்படுகிறது.
  3. தரக்குறைவான விதை விநியோகம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  4. முறையற்ற விதை விநியோகிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதை விற்பனை உரிம விண்ணப்பங்கள் ஏற்பு / மறுப்பு தொடர்பான விபரம் 15 தினங்களுக்குள் தெரிவிக்கப்படும்

விதைப்பரிசோதனை

மற்ற விவரங்கள்

விதை மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய விரும்பும் எவர் ஒருவரும் விதை மாதிரிகளை அறிவிக்கை செய்யப்பட்ட விதைப்பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பலாம். பரிசோதனைக் கட்டணம் ஒரு விதை மாதிரிக்கு ரூ.30/-

எப்படி பெறுவது

அந்தந்த பகுதி விதைப்பரிசோதனை அலுவலர்கள் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குநர், 1424ஏ, தடாகம் சாலை, கோவை - 641 013. தொலைபேசி எண். - 0422 2432984 நிகரி - 0422 2457554 மின்னஞ்சல் - dsccbe(at)gmail.com இணைய தளம் - www.seedtamilnadu.com

விரிவாக்கம்

விதைப்பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் விதை மாதிரிகள் அவைகளின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு கீழ் குறிப்பிட்ட இனங்களின் மீது முடிவுகள் தெரிவிக்கப்படும்.

  1. புறத்தூய்மை
  2. முளைப்புத்திறன்
  3. ஈரப்பதம்
  4. விதை நலம்
  5. பிற ரக கலப்பு விதை மாதிரிகள் பெறப்பட்ட 30 தினங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும்

வியாபாரிகளுக்கு பொருளீட்டுக்கடன்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யும் உரிமம் பெற்ற அனைத்து விவசாயிகள்.

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்

விரிவாக்கம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் பொருட்டும், விவசாயிகளுக்கு உடனடி பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்ற நோக்கிலும், அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் வியாபாரிகளுக்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாங்கி இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.1,00,000/- வரை பொருளீட்டுக்கடனாக வழங்கப்படுகிறது. இதற்காக 9 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. வியாபாரிகள் 3 மாதம் வரை கொள்முதல் செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்கலாம் ஒப்பளிப்பு / நிராகரிப்பு கால அளவு ஒரு வார காலம்

விரிவாக்கம் மற்றும் பயிற்சிக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள்-உழவர் பயிற்சி நிலையங்கள்

மற்ற விவரங்கள்

அனைத்து மாவட்ட விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு திட்ட நிதியில் 20 சத

எப்படி பெறுவது

மாவட்டத்தில் உள்ள சம்மந்தப்பட்ட வேளாண்மை துணை இய்ககுநர் (உபநி) வேளாண்மை அலுவலர் (உபநி)

திட்டதிற்கான செல்லுபடியாகும் காலம்

விரிவாக்கம்

1) உழவர் பயிற்சி – 2 நாட்கள் நடத்தப்படும் கிராம அடிப்படை பயிற்சிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.50/- வீதம் உதவித் தொகை.

2) உழவர் மன்ற அமைப்பாளர் பயிற்சி – 2 நாட்கள் நடத்தப்படும் பயிற்சிக்கு ஒரு நாளுக்கு ஒரு நபருக்கு ரூ.50/- வீதம உதவித் தொகை.

3) உழவர் சுற்றுலா – 50 விவசாயிகள் அடங்கிய குழுவினை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.4,000/- 4) விவசாயிகளுக்கான பரிசுகள் – சிறந்த சாதனை புரிந்த 15 விவசாயிகளுக்கு உழவர் தினத்தில் ரூ.3,000/- மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது.

விரிவாக்கம் மற்றும் பயிற்சிக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் - பயிர் விளைச்சல் போட்டி

மற்ற விவரங்கள்

சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பின்வரும் பதிவுக்கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும்

1) மாநில அளவில் நடத்தப்படும் போட்டிக்கு நெல் மற்றும் நிலக்கடலைப் பயிருக்கு ரூ.100/-ம் இதர பயிர்களுக்கு ரூ.50/-ம்

2) 2) மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிக்கு நெல் மற்றும் நிலக்கடலைப் பயிருக்கு ரூ.50/-ம் இதர பயிர்களுக்கு ரூ.25/-ம் பதிவுக் கட்டணமாக செலத்த வேண்டும்.

3) மாநில அளவிலான பரிசுகளை வேளாண் ஆணையர் அவர்களும், மாவட்ட அளவிலான பரிசுகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்களும் இறுதி செய்வர்.

எப்படி பெறுவது

கிராம அளவில் வேளாண்மை உதவி அலுவலர்கள் வட்டார அளவில் துணை வேளாண்மை அலுவலர் / வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்

விரிவாக்கம்

மாநில அளவில் பரிசு நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.25,000/- பிற பயிர்களுக்கு ரூ.15,000/- நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000/- பிற பயிர்களுக்கு ரூ.10,000/- மாவட்ட அளவில் பரிசு நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000/- பிற பயிர்களுக்கு ரூ.10,000/- நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு இரண்டாம் பரிசு ரூ.10,000/- பிற பயிர்களுக்கு ரூ.5,000/-

விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன்

மற்ற விவரங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விற்பனை செய்யும் அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மேற்பார்வையாளர்

விரிவாக்கம்

அறுவடைக்காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியினால் சிறு குறு விவசாயிகள் குறைந்த விலையில் விளைபொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் பொருட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிட்டங்கிகளில் 6 மாதம் வரை இருப்பு வைக்கலாம். சிறு, குறு விவசாயிகள், தங்கள் விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 விழுக்காடும், இதர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.2,00,000/- வரை பொருளீட்டுக் கடன் பெறலாம். முதல் 15 நாட்களுக்கு வட்டியில்லை. 15 நாட்களுக்குப் பிறகு 5 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்விளக்கம்

எப்படி பெறுவது

அணுக வேண்டிய அலுவலர் வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

1 புதிய வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடத்தில் பிரபலப்படுத்துதல்.

2 விவசாயிகளை புதிய நவீன வேளாண் கருவிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்த ஊக்குவித்தல். விவசாய நிலங்களில் நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்விளக்கம் மேற்கொள்ளப்படுகிறது

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாளுதல் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

வருவாய்க் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ.) மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ.). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.). தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622

விரிவாக்கம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கையாள்வதில் மற்றும் பராமரித்தலில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் வேளாண்மை இயந்திரமயமாக்கலில் ஈடுபட்டுள்ள மனித ஆற்றலின் தரத்தை மேம்படுத்துதல் மாநிலத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் வேகத்தை முடுக்கிவிடுதல். விவசாயிகளின் திறன் வளர்த்தல் பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றன

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (atma)

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உழவர் ஆர்வலர் குழுக்கள், விளைபொருள் ஆர்வலர் குழுக்கள், டான்வேப் குழுக்கள் மற்றும் விவசாய சங்கங்கள்.

எப்படி பெறுவது

கிராம அளவில் உழவர் நண்பர்கள். வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநர் / வட்டார தொழில்நுட்ப குழு / வட்டார ஆலோசனைக் குழு / வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர் / மாவட்ட திட்ட அலுவலர் (அட்மா)

விரிவாக்கம்

விவசாயிகள் பயிற்சி அ) வெளி மாநில பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ1,000/- (அதிகபட்சம் 7 நாட்கள்) ஆ) மாநிலத்திற்குள் பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.750/- (அதிகபட்சம் 5 நாட்கள்) இ) மாவட்டத்திற்குள்ளான பயிற்சிக்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.400/- (அதிகபட்சம் 2 நாட்கள்)

  1. செயல் விளக்கங்கள் அமைத்தல் 1) அனைத்து வேளாண் பயிர்களிலும் மற்றும் வேளாண் சார்புத் துறைகளிலும் செயல் விளக்கங்கள் அமைக்க - செயல்விளக்கம் ஒன்றுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000/-
  2. கல்வி சுற்றுலா பயண நேரம் தவிர்த்து அதிகபட்சம் 10 நாட்கள் ஒரு சுற்றுலாவிற்கு. 1) வெளி மாநில சுற்றுலாவிற்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.600/- 2) மாநிலத்திற்குள் சுற்றுலாவிற்கு ஒரு விவசாயிக்கு ஒரு நாளைக்கு ரூ.300/- 3) மாவட்டத்திற்குள் சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.250/- வீதம்.
  3. உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் விளைபொருள் ஆர்வலர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிலுள்ள விவசாயிகளுக்கு 1) திறன் மேம்பாடு மற்றும் சேவைப்பணிகள் ஒரு குழுவிற்கு வருடத்திற்கு ரூ.5,000/- 2) விதை நிதி / சுழல் நிதி உழவர் ஆர்வலர் குழு / விளைபொருள் ஆர்வலர் குழு ஒன்றுக்கு ரூ.10,000/-
  4. விவசாயிகளுக்கு பரிசு - சிறந்த விவசாயிகள் குழுக்களுக்கான ஊக்கத்தொகை / பரிசு பல்வேறு தொழில் சார்ந்த 5 குழுக்களுக்கு ஒரு குழுவிற்கு ரூ.20,000/- ஒரு வருடத்திற்கு
  5. சிறந்த விவசாயிக்கான பரிசு வட்டார அளவில் பல்வேறு தொழில் சார்ந்த விவசாயி ஒருவருக்கு ரூ.10,000/- ஒரு வருடத்திற்கு
  6. மாவட்ட அளவில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கருத்து பரிமாற்றம் 25 விவசாயிகள் பங்கு பெறும் ஒரு கருத்து பரிமாற்றத்திற்கு 2 நாட்களுக்கு ரூ.20,000/-
  7. வயல் விழா மற்றும் விவசாயிகள் குழு மூலம் ஆராய்ச்சி - விரிவாக்கம் - விவசாயிகளை இணைத்தல் ரூ.15,000/- (குழு / வட்டாரம் / பருவம்)
  8. வேளாண் ஆலோசனை மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்ட வேளாண் சிறுதொழில் முனைவோர் மூலம் விரிவாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துதல் - வட்டாரத்திற்கு ரூ.25,000/-

10. வயல்வெளிப் பள்ளிகள் அமைத்தல் - முன்னோடி விவசாயிகளின் வயல்களில் வட்டாரத்திற்கு குறைந்தபட்சம் 4 வயல்வெளிப் பள்ளிகள் அமைத்தல் - ஒன்றுக்கு ரூ.29,414/- வீதம்

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

மற்ற விவரங்கள்

அனைத்து விவசாயிகள்

எப்படி பெறுவது

வருவாய்க்கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் (வே.பொ). மாவட்ட அளவில் உள்ள செயற் பொறியாளர் (வே.பொ). மண்டல அளவில் உள்ள கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ.) தலைமைப் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 600 035. தொலைபேசி எண். 2435 2686, 2435 2622.

விரிவாக்கம்

வேளாண்மை இயந்திரமயமாக்குதலை ஊக்குவித்தல். வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளிடத்தில் பிரபலப்படுத்துதல். வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையினை ஈடு செய்தல். விவசாய செயல்பாடுகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள வழிவகுத்தல். வேளாண்மையில் இயந்திர சக்தியை அதிகரித்தல். பயிரிடும் செலவினைக் குறைத்தல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்.டிராக்டர்கள், பவர்டில்லர்கள் மற்றும் ரோட்டவேட்டர்கள் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல்.மானியங்களும், சலுகைகளும் 40 குதிரைத்திறன் வரை உள்ள டிராக்டர்களுக்கு அதன் விலையில் 25 (அதிகபட்சமாக ரூ.45,000/-) 8 குதிரைத்திறன் மற்றும் அதற்கு அதிகமான குதிரைத்திறன் உள்ள பவர்டில்லர்களுக்கு அதன் விலையில் 40 (அதிகபட்சமாக ரூ.45,000/-) ரோட்டவேட்டர்களுக்கு அதன் விலையில் 40 ( அதிகபட்சமாக ரூ.20,000/-)

ஆதாரம் : தமிழ்நாடு அரசாங்க இணையதளம்

3.02564102564
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ராமசந்திரன் Jan 28, 2017 12:21 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலைத்துறையின் முகவரி தரவும்

வெங்கடேசன் Oct 12, 2016 07:36 PM

நீங்கள் வழங்கிய விளக்கங்கள் மிகவும் உதவியாக இருந்தது இதுவரையிலும் நீங்கள் கூறிய எந்த உதவியும் நான் பெற்றதில்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top