பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய தோட்டக்கலை திட்டம்

இத்தலைப்பில் தேசிய தோட்டக்கலை திட்டம் தொடர்புடைய பல்வேறு வளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தோட்டக்கலைத் திட்டம்

எட்டு வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் உட்பட), ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் செயல்படுகிறது. மேற்கூறிய இத்திட்டம் செயல்படாத மாநிலங்களில், மற்றொரு திட்டமான வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசு தேசிய தோட்டக்கலைத் திட்டத்தை தனது பத்தாவது ஆண்டு திட்டத்தில் (2005/06) துவங்கி, இயக்கி வருகிறது.  தோட்டக்கலைத் துறையில் வளர்ச்சியைப் பெருக்கி, உற்பத்தியை அதிகரிப்பதே இதன் நோக்கம் ஆகும். 11வது ஆண்டு திட்டத்தில், மத்திய அரசு 85%மும் மாநில அரசு 15% மும் நிதியுதவி செய்யவுள்ளது.

தேசிய தோட்டக்கலைத் திட்டம் பற்றிய கேள்விகளும் பதில்களும்

அனைத்து பயிர்களும் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின்(NHM)உதவிக்கு தகுதி பெற்றதா?

பதில் : ஆம் தேங்காய் தவிர அனைத்து பயிர்களும் இத்திட்டத்தின் கீழ் வருகிறது.  தேங்காய் மேம்பாட்டு வாரியம், தேங்காய் மேம்பாட்டிற்கான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கிளஸ்டர் என்றால் என்ன?

பதில்: தோட்டக்கலைப் பயிரின் கீழ் வரும் 100 ஏக்டருக்கு குறையாத நிலம் கிளஸ்டர் எனப்படும்.

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் உதவியை பெற ஒரு விவசாயி யாரை அணுக வேண்டும்?

பதில் : தேசிய தோட்டக்கலைத் திட்டத்தை மாநில தோட்டக்கலைத் திட்டம் அமல்படுத்தி வருகிறது.  திட்ட இயக்குநர் இத்திட்டத்தை அமல்படுத்தி வருகிறார்.   மாவட்ட அளவில், மாவட்ட குழு செயல்படுத்தி வருகிறது.  மாவட்ட தோட்டக்கலை அலுவலர் மாவட்ட குழுவின் செயல் உறுபினராக இருப்பதால் உதவிக்கு அவரை அணுகலாம்.

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் பாசன வசதிக்கு உதவி பெற முடியுமா?

பதில் : நீர் நிலைகள் அமைப்பதற்கு உதவி வழங்கப்படும்.

சமூக திட்டங்கள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் /  விவசாயிகள் குழுக்கள் போன்றவற்றிற்கு மட்டும் உதவி அளிக்கப்படுகிறது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களுக்கு நிதியுதவி பெற முடியுமா?

பதில் : ஒரு குழுவில் உள்ள ஒரு பயிரின் முழு வளர்ச்சியை இத்திட்டம் வலியுறுத்துகிறது.  எனவே விவசாயி தனது முதல் பயிருக்கு மட்டுமே நிதியுதவி பெற முடியும்.

அறுவடைக்கு பின் மேற்கொள்ளப்படும் பராமரிப்பிற்கு தேசிய தோட்டக்கலைத் திட்டம்,தேசிய தோட்டக்கலை வாரியம்ஆகிய இரண்டிலும் நிதியுதவி பெற முடியுமா?

பதில்: ஒரே வகையான கட்டமைப்புகளான சேமிப்பு குடோன்கள் மற்றும் பெட்டிப்படுத்தும்/பதப்படுத்தும் அறைகள் போன்றவற்றிற்கு ஒரு திட்டத்தில் இருந்து மட்டுமே உதவி பெற முடியும்.

கேள்வி: கடன் வசதியுடன் இணைந்த மானிபம் என்றால் என்ன? எவ்வாறு இது நிர்வாகம் செய்யப்படுகிறது?

பதில்: தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து உதவிகளும், அதாவது தனியார் துறையின் கட்டமைப்புகளான நாற்றங்கால், ஆய்வகங்கள், அறுவடைக்கு பின் மேற்கொள்ளப்படும்.  பராமரிப்பு மற்றும் விற்பனை போன்றவை கடனுடன் இணைந்த மானிப வசதியின் கீழ் வருகிறது.  இதன்படி இத்திட்டத்தின் பயனாளிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் / நிதி நிறுவனங்களான நபார்ட், ஐ.டி.பி.ஐ, எஸ்.ஐ.டி.பி.ஐ, ஐசிஐசிஐ., மாநில நிதி நிறுவங்கள் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள், என். பி. எப்.சி, என்.ஈ.டி.எப்.ஐ, தேசிய எஸ்.சி. எஸ்.டி./ சிறுபான்மையினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பிற்கான நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிற மாநில / கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து கடன்பெற வேண்டும்.

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள்

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் செயற் குறிப்புகள்

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் திட்டங்கள்

மேலும் விபரங்களுக்குதேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் http://www.nhm.nic.in/ தளத்தை காணவும்.

3.04301075269
ஈசநத்தம் செல்வராஜ் ஆர் Nov 20, 2018 04:18 AM

திட்டங்களை உருவாக்கும் போது சமூக ஆர்வலர்கள், முன்னோடி விவசாயிகளையும் உடன் வைத்து மாவட்டம் தோறும் ஆய்வு செய்து பிறகு திட்டத்தை கொணர ஆவன செய்ய வேண்டும்

இராஜ.ஆனந் ராஜ் May 18, 2018 05:04 PM

தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் எங்களின் கேள்விக்கு சரியான விடை அளிப்பதில்லை.Govt schemes அவர்கள் எங்களுக்கு தெரிவிப்பதில்லை நாங்கள் கேட்டாலும் அவர்கள் எங்களுக்கு சொல்ல மறுக்கிறார்கள்.ஐயா,நான் என்னுடைய நிலத்துக்கு சொட்டு நீர் பாசனம் செய்வதற்காக அவர்களிடம் முறையிட்டேன்.நான் பட்டதாரி எனக்கு 3ஏக்கர் நிலம் உள்ளது.அரசாங்க விதிமுறைப்படி எனக்கு 100சதவிகிதம் இலவசமாக சொட்டு நீர் அமைத்து தர வேண்டும்.ஆனால் அவர்கள் என்னிடம் 50,000பணம் கேட்கிறார்கள்.இதற்கு நீங்களே நல்ல தீர்வு தர வேண்டும்.நம்பிக்கையுடன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top