பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / பயிர்கள் தொடர்பானவை / நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA) வேளாண் உற்பத்தியை குறிப்பாக, மழைபெறும் பகுதிகளில் பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பண்ணையம், தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்துதல், மண் ஆரோக்கிய மேலாண்மை, வளங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் இந்தத்திட்டம் கவனம் செலுத்தும்.

முக்கியமான நோக்கங்கள்

 1. உற்பத்தித்திறம் மிகுந்ததாக, நீடித்து நிலவக்கூடியதாக, வருவாய் தரக்கூடியதாக, பருவ நிலைகளுக்கேற்ப மீளும் தன்மை உடையதாக வேளாண்மையை மாற்றுவதற்கு ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை முறைகளைக் கையாளுவதை ஊக்குவிப்பது.
 2. பொருத்தமான மண்பாதுகாப்பு, ஈரப்பதப் பாதுகாப்பு முறைகளின் மூலம் இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்தல்,
 3. மண் வளத்திட்டங்களின் அடிப்படையிலும், மண் பரிசோதனை அடிப்படையிலும் பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்களை அளித்து, தேவையான அளவுக்கு உரங்களை முறையாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த மண் ஆரோக்கிய நிர்வாகத்தைப் பின்பற்றுதல்.
 4. நீர்வளங்களைத் திறம்பட நிர்வகித்து அவற்றின் அதிகபட்ச பயனைப் பெற்று, விளைநிலப்பரப்பை அதிகரித்து ஒவ்வொரு துளி நீருக்கும் அதிகமான விளைச்சல் என்ற இலக்கை எட்டுவது.
 5. விவசாயிகள், விவசாயத்தில் தொடர்புடைய அனைவரது திறமைகளையும் பருவநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், தனிப்பு  நடவடிக்கைகள் ஆகிய தளங்களில் செயல்படும் பிற திட்டங்களான வேளாண் விரிவாக்கம், தொழில் நுட்பத்திற்கான தேசியத்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பருவநிலைகேற்ப மீளும் தன்மை கொண்ட வேளாண்மைக்கான தேசிய முன்முயற்சி (NICRA) போன்ற திட்டங்களை ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி வளர்த்தல்.
 6. NICRA மூலம் செம்மைப்படுத்தப்பட்டிருக்கும், மழைப்பகுதிகளில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பரவலாக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் முன்னோடி மாதிரி வாய்ப்புத் திட்டம் (MGNREGS), ஒருங்கிணைந்த நீர்வடி மேலாண்மைத்திட்டம்  (IWMP). ராஷ்டிரீய க்ருஷி விகாஸ் யோஜ்னா (RKYV) போன்ற பிற திட்டங்களின் வள ஆதாரங்களை நெம்புகோல்களாகப் பயன்படுத்திக் கொண்டும் இந்தத்திட்டம் செயல்படும்.
 7. பருவநிலை மாற்றத்துக்கான தேசியத்திட்டத்தின் ஆதரவில் செயல்படும் நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டத்தின் முக்கியமான நோக்கங்களை அடைவதற்காக துறைகளுக்குள்ளும், துறைகளுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பை உருவாக்குவது.

திட்டத்தின் செயல்பட்டுமுறை

 • பயிர்கள், கால்நடை, மீன்வளர்ப்பு, தோட்டப் பயிர்கள், மேய்ச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விவசாய முறையை மேம்படுத்தி பிழைப்பிற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், துணைப் பயிர்கள்/எஞ்சிய வளர்சார்பயிர் உற்பத்தி முறைகளின் மூலம் பயிர் விளைச்சல் இல்லாமல் போகும் ஆபத்தை சமாளித்தல்.
 • நிலத்திலும், வெளியிலும் வளங்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களைப் பிரபலப்படுத்துதல்.  நீண்டகால வறட்சி, வெள்ளம் போன்ற தீவிரமான பருவநிலை மாற்றங்களின்போது ஏற்படக்கூடிய பேரழிவு மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய நடைமுறைகைளை அறிமுகம் செய்வது.
 • நீர் இருப்பு, நீர்த்தேவை ஆகியவை பற்றிய கணிப்புகளுடன் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி நம்மிடம் இருக்கக்கூடிய நீர்வளத்தை சிறப்பாகக் கையாண்டு நீரைத் திறம்பட பயன்படுத்திக் கொள்வதை மிகுவிப்பது.
 • பண்ணை உற்பத்திப் பெருக்கம், மேம்பட்ட மண் மேலாண்மை, நீரைப்பிடித்து வைக்கும் திறமையை மேம்படுத்துதல், வேதிப் பொருள்கள் / ஆற்றல் ஆகியவற்றை தேவையான அளவில் பயன்படுத்துதல், மண்ணில் கரிமத்தின் இருப்பை அதிகரித்தல் ஆகியவற்றிற்கான மேம்பட்ட வேளாண் நடைமுறைகளுக்கு ஊக்கமளித்து ஆதரித்தல்.
 • நில அளவை, மண்ணின் தன்மை பற்றிய ஆய்வு, மண் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் மண்வளம் பற்றிய அடிப்படைத் தரவுகளை உருவாக்கி உரப் பயன்பட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்து மண் வகைக்கேற்ற பயிர்களையும், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற பயிர்களையும் பயிரிடச் செய்து, குறிப்பிட்ட இடம்சார்ந்த, பயிர்வகை சார்ந்த ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகளுக்கு ஆதரவளித்து, மண் ஆரோக்கியம், உற்பத்திப் பெருக்கம், நிலத்தின் தரத்தைப் பேணுதல், நீர்வள நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துதல்.
 • அறிவாற்றல் துறைகளையும், தொழில்முறை விற்பனையாளர்களையும் ஈடுபடுத்தி பருவநிலை மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், இடர்களைத் தணிவிப்பதற்குமான செயல்திட்டங்களை அந்தந்த வேளாண் பருவநிலை சூழல்களுக்கு ஏற்ப உருவாக்கி பொருத்தமான விவசாய முறைகளை வளர்த்தெடுப்பது.

திட்டத்தின் தலையீடுகள்

நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA) பின்வரும் நான்கு முக்கியமான திட்டக்கூறுகள் அல்லது செயல்பாடுகளைக் கொண்டதாக இருக்கிறது.

மழைநீர் வளப்பகுதிகளின் வளர்ச்சி (RAD)

வேளாண் வழி முறைகளோடு இணைந்த இயற்கைவள ஆதாரங்களின் பாதுகாப்பிற்கும், மேம்பாட்டிற்கும் அந்தந்தப் பகுதிகளுக்கு இசைவான அணுகுமுறைகளை RAD – மழைபெறும் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்கிறது. இயற்கைவள ஆதார அடிப்படை / ஆஸ்திகள் / நீர்வடிமேம்பாடு, மண் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உருவான வளங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (MGNREGS) ஓருங்கிணைந்த நீர்வடி மேலாண்மைத்திட்டம் (IWMP), மழைபெறும் பகுதிகளில் வடிநீர் மேம்பாடுத்திட்டம் (NWDPRA), ஆற்றுப்பள்ளத்தாக்குத் திட்டங்களும் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆறுகளும் (River Valley Objects and Flood Prone Rivers) போன்ற திட்டங்களின் மூலம் உருவான வளங்கள் ஆகியவற்றை முறைப்படுத்தி செயல்திட்டங்களை உருவாக்கும் பகுதியாகும் இது. பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளர்ப்பு, காடுகள் வளர்ப்பு போன்ற பற்பல வேளாண் பகுதிகளை வேளாண் அடிப்படையில் அமைந்த வருவாய்ப் பெருக்கச் செயல்பாடுகள், மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றோடு ஒன்றிணைத்து பொருத்தமான வேளாண் முறைகளை இந்தக்கூறு ஆறிமுகம் செய்விக்கிறது. மண் பரிசோதனை, மண் வள அட்டையில் அடிப்படையிலான ஊட்டச்சத்து நிர்வாக நடைமுறைகள், பண்ணை நில மேம்பாடு, வளங்களைப் பாதுகாத்தல், உள்ளுர் வேளாண் பருவநிலைக்கேற்ற பயிர்த்தெரிவு ஆகியவை இந்த திட்டக்கூறு மூலம் மேம்படுத்தபடுகின்றன. 100 ஹெக்டேர் அல்லது அதற்கும் அதிகமான நிலத் தொகுப்பு அணுகுமுறையின்படி நிலம் தத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடினமான பகுதிகளில் இடைஞ்சலான நிலையிலுள்ள நிலங்களும்கூட தத்து எடுத்து மேம்படுத்தப்படுவதால் இதனால் புலப்படும் நன்மைகள் உள்ளூர் விவசாயிகளை உற்சாகப்படுத்தி பங்கேற்றிடச் செய்யும். இதேபோன்ற மாதிரியில் எதிர்காலத்தில் வேறு இடங்களில் அதிகப்பரப்பில் தத்தெடுத்தல் மேற்கொள்ளப்படும். RAD நிலத்தொகுப்புகள் மண்பகுப்பாய்வு / மண்வள அட்டை / மண் அளவை வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டவையாக இருக்க வேண்டும். இதனடிப்படையில்தான் தலையீடுகள் மேற்கொள்ளப்படும். வேளாண் வழிமுறைகளில் குறைந்தது 25% நிலத்திலேயே நீர் மேலாண்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ICAR பரிந்துரைத்துள்ள எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திட்டங்கள், NICRA திட்டங்களின் வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் ஒருங்கிணைந்ததிட்ட வளர்ச்சியின்போது கருதிப்பார்த்திட வேண்டும். இவைதவிர, சொத்து வளங்கள் / சொத்துக்கள் / தானியவங்கி எஞ்சிய வளம்சார் பயிர்கள், தீவனவங்கி, குழுச்சந்தை போன்ற பயன்நோக்கிய வசதிகளையும் உருவாக்க உற்சாகம் தரப்படுகிறது.

நிலத்தின் மீது நீர் நிர்வாகம் (OFWM)

நிலத்தின் மீது நீர்நிர்வாகத்தை அதற்கான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் கொண்டு திறம்பட நிர்வகிப்பது பற்றி இந்தக் கூறு கவனம் செலுத்துகிறது. திறமான நீர் நிர்வாகம் மட்டுமின்றி RAD செயல்பாடுகளுடன் இணைந்த திறமைன அறுவடை, மழைநீர் நிர்வாகம் ஆகியவற்றையும் இந்தக்கூறு வலியுறுத்துகிறது. நீர் சேமிப்புத் தொழில்நுட்பங்களைக் கையாளுவதற்கும், திறமையான நீர்பங்கீடு முறைகளுக்கும் உதவி தரப்படும். நீரைப் பயன்படுத்துவோரின் சங்கம் மூலமாக வளங்களை சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்கு முக்கியத்துவம் தரப்படும். நிலத்தின் மீது நீரை சேமிக்க பண்ணைக்குட்டைகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டும், மண் அகற்றும் எந்திரங்களின் உதவியோடும் அமைக்கப்படும். இயன்றவரை மனித உழைப்பைக் கொண்டே பண்ணைக் குட்டைகள் உருவாக்கப்படும்.

மண்வள நிர்வாகம் (SHM)

குறிப்பிட்ட இடங்களையும் குறிப்பிட்ட பயிர்வகைகளையும் மனதில் கொண்டு நீடித்த மண்வள நிர்வாகம் மேற்கொள்ளப்படும். வேளாண் கழிவுகளை நிர்வகித்தல், இயற்கை வேளாண்மை நடைமுறைகள் போன்றவை இடம் பெறச் செய்யப்படும். மண்வள வரைபடம், பேரூட்டம், நுண்ணூ ட்டம் ஆகியவற்றை நிர்வகித்தல், நிலத்தின் தன்மையைப் பொறுத்த நிலப்பயன்பாடு, உரங்களை அளவாகப் பயன்படுத்துவது, மண் அரிமானம், மண் தரமிழப்பு போன்றவற்றைக் குறைப்பது ஆகியவற்றோடு இணைந்ததாக இந்த வேளாண் நடைமுறைகள் அமையும். நிலப்பயன்பாடு, மண்ணின் இயல்பு, நிலம்-மண் ஆகியவற்றின் பண்புகள் பற்றி களத்தில் விரிவாக நடத்தப்பட்ட ஆய்வுகள், அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அளவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சிறந்த வேளாண் முறைகளுக்கு உதவிகளும் வழங்கப்படும். இவை தவிர, மண்ணின் (அமில / கார / உண்பு) பிரச்சனைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தத்திட்டக்கூறு மூலம் ஆதரவளிக்கப்படும். மாநில அரசுகள், இயற்கை வேளாண்மைக்கான தேசியமையம் (NCOF), மத்திய உர தரநிர்ணயம் மற்றும் பயிற்சி நிறுவனம் (CFQC&TI), மண் மற்றும் நிலப்பய்னபாட்டு அளவை அமைப்பு (SLUSI) ஆகியவற்றின் மூலம் இவை செயல்படுத்தப்படும்.

பருவநிலை மாற்றமும் நீடித்த வேளாண்மையும் : மேற்பார்வையிடல், மாதிரிகளை உருவாக்குதல்,  கூட்டமைப்பை ஏற்படுத்துதல் (CCSAMMN)

பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய இருவழி (நிலம் / விவசாயிடமிருந்து ஆய்வு /அறிவியல் அமைப்புகளிடமிருந்து விவசாயிக்கு) தகவல் தொடர்பை இது உருவாக்குகிறது. பருவநிலை மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், இழப்பைக் குறைப்பதற்கான ஆய்வுகள், மாதிரித் திட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்தி உள்ளூர் வேளாண் பருவநிலைக்கு ஏற்புடைய நீடித்த வேளாண்மைக்கான மாதிரி செயல்பாடுகளை வழங்குவது இதன்பணி. முன்னோடி வட்டாரப் பகுதிகள் உருவாக்கப்பட்டு மழைநீர் தொழில்நுட்பம், திட்டமிடல் போன்றவற்றைச் செய்வது, உள்ளூர் அளவில் உற்பத்தி நீடித்திருப்பதற்கு வகை செய்யும் அரசின் முன்னோடித் திட்டங்களான MNREGS, IWMP, AIBP, RKVY, NFSM, NHM, NMAET போன்றவற்றுடன் ஒருங்குவித்தும், ஒன்றிணைந்தும் செயல்படுவது, ஆகியவை வேளாண்மை, கால்நடை வளர்ச்சி போன்றவற்றில் வளர்ச்சியைப் பெருக்கும்.

ஆதாரம்:  நீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம்.

2.97894736842
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top