பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பயிர் காப்பீடு திட்டம்

பயிர் காப்பீடு திட்டம் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயி தன் வயலில் அறுவடை செய்து களத்தில் வைத்திருந்த பயிர், புயல் அல்லது மழை காரணமாக அழிய நேரிட்டால் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பயிர் காப்பீட்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏற்பட்ட சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள ஒரு விவசாயி, தன் வயலில் சாகுபடி பணிகளைத் தொடங்கிய பிறகு, போதுமான மழை இல்லாதது அல்லது அதிக மழை காரணமாக விதைப்பு அல்லது நடவுப் பணியைத் தொடர முடியாமல் போனால், பயிர் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கும்.

அதிக மழை அல்லது அதிக வறட்சி அல்லது பிற இயற்கை சீற்றங்களால் பயிர் சாகுபடி பாதித்து, மகசூல் பாதிப்பு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என தெரிய வந்தால், 25 சதவீத காப்பீட்டுத் தொகை முதலில் வழங்கப்படும். மகசூல் இழப்பீடு பற்றி துல்லியமாக இறுதி மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு மீதி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இதற்கு முன்னர் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வந்தன.

இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் மேம்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை முழுவதையும் தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனமே வழங்கிட வேண்டும்.

ஆதாரம் : வணிகம் (தி இந்து)

3.01886792453
அருண் May 27, 2019 10:03 AM

எனக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை மற்றவர்களுக்கு கிடைத்திருக்கிறது எனக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று நான் எப்படி அறிவது

ஆ. அருள் குமார் Dec 05, 2018 07:06 PM

பயிர் காப்பீடு 2015-2016, 2016-2017 ஆண்டிற்கு கிடைக்குமா, அப்படி கிடைக்காத நிலையில் யாரை தொடர்பு கொள்வது

நிஸாந்தன் Nov 22, 2018 03:01 PM

2018-2019 ஆண்டிற்கான பயிர் காப்பீடு கிடைக்குமா??

மணவழகன். இ Feb 14, 2018 05:58 PM

எனது பயிர் சாகுபடி செய்து தண்ணிர் இன்றி பயிர் கருகி விட்டது நான் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளேன் நான் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் எவ்வாறு காப்பீடு பெற முடியும் ,94*****24

கஜபதி Jan 20, 2018 03:43 PM

பயிர் காப்பீடு திட்டத்தில் நல்ல முறையில் செயல்பாடு யில்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top