பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

சலுகைகள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

  • இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
  • வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

அட்மா திட்டம்

  • அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.055
M.சக்தி Mar 29, 2019 12:38 PM

ஐயா நான் டிராக்டர் வாங்க உள்ளேன் அதற்கு மானியம் எவ்வளவு என்ற விளக்கம் தேவை

தினேஷ் Mar 19, 2019 11:45 PM

ஐயா நான் அறுவடை எந்திரம் வாங்க உள்ளேன் அதற்கு மானியம் எவ்வளவு என்ற விளக்கம் தேவை..

சிவசங்கர் Feb 25, 2019 07:24 AM

ஐயா எனக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் தேவை யாரை அணுக வேண்டும் எப்படி பெறவேண்டும்

Suman Feb 03, 2019 10:25 PM

அய்யா எனக்கு இரண்டு மாடுகள் உள்ளன அதற்கு மானியத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம் உள்ளதா

ரமேஷ் சரோஜா Jan 25, 2019 10:43 AM

அய்யா நான் ஒரு இளைஞர் விவசாயம் செய்ய ஆர்வமுடன் உள்ளேன். இதுவரையிலும் நான் எனது வயல் நிலத்தில் விவசாயம் செய்தது கிடையாது.எனது தந்தையே இதுவரையில் செய்த விவசாயத்தினால் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது.. தற்ப்பொழுது நான் முழு நேர விவசாயியாக இறங்கவுள்ளேன் எனக்கு ஊக்கத்தை தந்து எந்த பயிர்செய்தால் நல்ல மகசூல் எடுக்கலாம்.அரசின் திட்டங்களிள் என்ன என்ன எனக்கு கிடைக்கும் என்று கூறுங்கள்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top