பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

சலுகைகள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

  • இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
  • வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

அட்மா திட்டம்

  • அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.04807692308
முத்துக்குமார் Dec 28, 2018 08:40 AM

மானிய விலையில் பவர் டில்லர் வாங்க வேண்டும் யாரை தெடர்பு கொள்ள வேண்டும்

Saravanan Dec 27, 2018 05:06 PM

ஐயா எனக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் தேவை யாரை அணுக வேண்டும் எப்படி பெறவேண்டும்

SANKAR NAVAN Dec 16, 2018 05:24 PM

அய்யா எனக்கு இரண்டு மாடுகள் உள்ளன அதற்கு மானியத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம் உள்ளதா

முத்துப்பாண்டி Dec 13, 2018 07:42 PM

வணக்கம் விவசாயமானியம் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு இந்த காணொளியை காண்க.
https://youtu.be/ikDnBZAer8w

சிவக் குமார் Dec 11, 2018 12:08 PM

ஐயா எனக்கு ஆழ்துளை கினறு அமைக்க மானியம் தேவை யாரை அனுகுவது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top