பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / அரசு திட்டங்கள் / விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

சலுகைகள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

  • இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
  • வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

அட்மா திட்டம்

  • அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.05020920502
Prabhu Jul 25, 2019 05:11 PM

நான் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக பயிர் சாகுபடி செய்ய விரும்புகிறேன். அதற்கு போர்வேல் மற்றும் சூரிய மின்சாரம் அமைக்க ஆகும் செலவுகள் மற்றும் மானிய தொகை பெறும் முறைகள் பற்றிய தகவல்கள் வேண்டுகிறேன்.

சக்தி வேல்.கா Jul 15, 2019 04:01 PM

நான் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக பயிர் சாகுபடி செய்ய விரும்புகிறேன். அதற்கு போர்வேல் மற்றும் சூரிய மின்சாரம் அமைக்க ஆகும் செலவுகள் மற்றும் மானிய தொகை பெறும் முறைகள் பற்றிய தகவல்கள் வேண்டுகிறேன்.

பூமிநாதன் Jul 01, 2019 02:36 PM

இந்த பருவத்தில் பயிர்செய்க்கூடிய பயிர்கள்

கிருஷ்ணமூர்த்தி R May 21, 2019 07:42 AM

ஐயா நான் டராக்டர் வாங்க உள்ளேன் அதற்கு மானியம் எவ்வளவு என்று விளக்கம் தேவை

ஜெயலடசுமி.கு May 15, 2019 04:24 PM

வயலுக்கு நீர் கொண்டு செல்ல பைப் தேவைப்படுகிறது. யாரை அனுகுவது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top