பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இனப்பெருக்க மேலாண்மை

செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற பொதுவான இனப்பெருக்க மேலாண்மை நடைமுறைகள் பற்றி இங்கே விளக்கியுள்ளனர்

  • இலாபகரமாக இருக்க ஆடுகள் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன வேண்டும்
  • வேகமாக வளரும் தன்மை மற்றும் அதிக எடை கொண்ட ஆடுகளை இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • பெட்டை ஆடுகளை 1 வருட வயதில் இனபெருக்கத்திற்கு பயன்படுத்தவேண்டும்
  • குட்டி போட்ட 3 மாதத்திற்கு பிறகு இனச்சேர்க்கை செய்யவேண்டும். அப்போது தான் 2 வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈனும்
  • சினை பருவ காலம் 18-21 நாட்கள் இடைவெளியில் வரும். அது 24-72 மணி காலம் நீடிக்கும்.
  • சினை பருவ காலத்தில் பெட்டை ஆடுகள் வலி இருக்க மாதிரி ஓங்கி கத்தும். மேலும் வாலை ஆட்டி கொண்டிருக்கும். இனப்பெருக்க உறுப்புகள் சிறிது வீங்கியும் சிவந்தும் காணப்படும். இனப்பெருக்க உறுப்பிலிருந்து திரவம் ஒழுகவதால் வாலை சுற்றி ஈரமாகவும் அழுக்காகவும் காணப்படும்.சில ஆடுகள் தீனி திங்காமலும் சிறுநீர் அடிக்கடி கழித்து கொண்டு இருக்கும். சில சமயங்களில் மற்ற ஆடுகள் மீது ஏறும் அல்லது ஏற அனுமதிக்கும்
  • சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 12-18 மணி நேரத்தில் கிடாவுடன் சேர்க்கவேண்டும்.
  • சில ஆடுகளில் சினைபருவ காலம் 2-3 நாட்கள் இருக்கும் எனவே அவற்றை இரண்டாவது தடவையாக 1 நாட்கள் கழித்து மீண்டும் கிடாவுடன் சேர்க்கவேண்டும்
  • சினை காலம் 145-150 நாட்கள்.

கேள்வி பதில்கள்

1. வெள்ளாடுகளில் செயற்கை கருவூட்டல் செய்தல் எந்நிலையில் உள்ளது?

இன்னும் முழுமையடையவில்லை

2. பெட்டை வெள்ளாடு எப்போது பருவ வயதுக்கு வரும்?

8 மாதங்கள்

3. பெட்டை வெள்ளாடு எப்போது இனவிருத்திக்கு தயாராகும்?

10-12 மாதங்கள்

4. பால் உற்பத்திக்கு உகந்த வெள்ளாட்டினங்கள் என்ன?

சானன், ஆங்கிலோ நூபியன்

5. வெள்ளாட்டின் சினைக்காலம் எவ்வளவு?

150 நாட்கள்

Filed under:
3.10810810811
நிதர்சன் Mar 31, 2017 08:13 PM

ஒரு வருட வயதாண ஆடு சினை அறி குறியை காட்டவில்லை தீர்வு கூற முடியுமா

ஜனா Aug 12, 2016 10:19 AM

ஒரு வருட வயதாண ஆடு சினை அறி குறியை காட்டவில்லை தீர்வு கூற முடியுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top