பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / சிறந்த நடைமுறைகள் / புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்

புகையான் பூச்சித் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

புகையான் பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்

சேத அறிகுறி

பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போலக் காணப்படும்.

மேலாண்மை முறைகள்

  • நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்தல். மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3-4 முறையாகப் பிரித்து இடவேண்டும். களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
  • புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, கோ42, பிஒய் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.
  • விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.
  • பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும். குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி-150 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் - 100 மிலி, பயூப்ரோபெசின் 25 எஸ்.சி - 800 மி.லி. டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி 625 மி.லி. அசிப்பேட் 76 எஸ்.பி. - 625 கிடிரைஅசோபாஸ் -40 இசி- 625 மி.லி. இட வேண்டும்.
  • புகையானின் மறு உற்பத்தியைப் பெருக்கும் மிதைல் பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

மேலும், நெல் வயலில் பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஒரு கிலோ வீதம் ஒரு ஏக்கருக்கு இடவேண்டும்

ஆதாரம் :தினமணி

நன்றி :சுமதி (திருவள்ளூர் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர்)

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top