பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அங்க வேளாண்மை தொழில்நுட்பங்கள்

அங்க வேளாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

அங்கக வேளாண்மை என்றால் என்ன?

அங்கக வேளாண் முறை இந்தியாவில் தொன்று தொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மட்கச்செய்து, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு அளிக்கிறது. அதை பயிர்கள் கிரகித்து கொள்கின்றன. நுண்ணுயிர்கள் மெதுவாகவும் சீராகவும் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சுற்றுச் சூழலில் நல்ல மகசூலினை பெற முடிகிறது.

அமெரிக்க அங்கக வேளாண் ஆராய்ச்சி குழுவின் விளக்கப்படி “அங்கக வேளாண்மை என்பது செயற்கை ஊக்கிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்த அளவில் தவிர்த்து பயிர்சழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்துதல் இவற்றின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல மண்வளம் அடைவதாகும்”

உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி “அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சுழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகம். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதின் தனித்தன்மையாகும்”.

அங்கக வேளாண்மை ஏன் தேவை?

  • வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.
  • அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.

அங்கக வேளாண்மையின் சிறப்பியல்புகளானது

  • மண்ணின் அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக இயந்திர ஊடுருவல் - இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல்.
  • மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச்சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
  • நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
  • களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு - இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்புசக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும்.
  • இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
  • வேளாண் முறையில் கவனம் செலுத்தல் மூலம் வனவாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.

அங்கக வேளாண்மையின் நெறிமுறைகள்

அங்கக வேளாண்மை நான்கு நெறிமுறைகளை கொண்டது

ஆரோக்கியம்

அங்கக வேளாண்மையானது மண், செடி, விலங்கு, மனிதன் மற்றும் உலகின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தி மேம்படுத்த வேண்டும். தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியமானது இந்த சுற்று சூழலின் ஆரோக்கியத்துடன் பிணைக்கப்பட்டது என்று இந்த நெறி முறை வலியுறுத்துகிறது. வளமான மண், வளமான பயிர்களை விளைவிக்கிறது. இவை மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுகிறது.

சுற்றுச்சூழல்

அங்கக வேளாண்மையானது, சுற்றுப்புற சூழல் மற்றும் சுழற்சிகளை சார்ந்திருக்க வேண்டும். அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவற்றை நிலைநாட்ட வேண்டும். அங்கக வேளாண்மை என்றுமே சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக்காத்து அதனுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும்.

அங்கக மேலாண்மை, இடம், சுற்றுச்சூழல், நடைமுறை இவற்றிற்கு ஏற்றார்போல் மாறுபடும். உள்ளீடு பொருட்களின் அளவை குறைக்க மறுசுழற்சி, மறு உபயோகம், சிறந்த பொருள் மேலாண்மை மற்றும் சக்தி மேலாண்மையை பின்பற்றுதல் வேண்டும். இது இயற்கை மூலதனப் பொருட்களை சிக்கனமாக உபயோகிக்க உதவுகிறது.

நம்பகத்தன்மை

அங்கக வேளாண்மை மற்ற உயிரினங்களுக்கு வாழ நல்லதோர் இயற்கை சூழலை அமைத்து தருவதாக இருக்க வேண்டும். உணவுப் பற்றாக்குறையை நீக்கி மக்களுக்கு தரமான வாழ்வினை அளிக்க வல்லதாக இருத்தல் வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை மூலதனத்தை உபயோகப்படுத்தும் முறையாக அங்கக வேளாண்மை அமைய வேண்டும்.

கவனித்தல்

அங்கக வேளாண்மையை பின்பற்றுபவர்கள் உற்பத்தியின் தரத்தையும் அளவையும் அதிகப் படுத்த முயற்சிக்க வேண்டும். அம்முயற்சி பாதுகாப்பானதாகவும் சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தல் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்.

அங்கக வேளாண்மை ஏன் தேவை?

வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.

அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.

அங்கக வேளாண்மையின் சிறப்பியல்புகளானது

  • மண்ணின் அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக இயந்திர ஊடுருவல் - இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல்.
  • மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச்சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
  • நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
  • களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு - இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்புசக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும்.
  • இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
  • வேளாண் முறையில் கவனம் செலுத்தல் மூலம் வனவாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.

அங்கக வேளாண்மை வழிமுறைகள்

அங்கக வேளாண்மையின் முறைகள்

  1. பண்டைய மேலாண்மை முறையிலிருந்து அங்கக மேலாண்மை முறையாக மாற்றுதல்.
  2. பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் வகையில் சுற்றுச்சூழலை மேலாண்மை செய்திடல் வேண்டும்.
  3. மாற்று மூலகாரணங்களான பயிற்சுழற்சி, பயிற்கழிவு மேலாண்மை, அங்கக எருவு உயிரியல் உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்டு பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.
  4. இயற்பியல், உயிரியல், உழவியல் முறைகளைக் கொண்டு களை மற்று பூச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல்.
  5. கால்நடைகளை அங்கக முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஓர் அங்கமாக ஆக்குதல்.

வெற்றிகரமான அங்கக வேளாண்மை

வெற்றிகரமான அங்கக மாற்றத்திற்கான வழிமுறைகள்:

பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாற பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. விவசாயிகளின் மன உறுதி மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு மாறும் தருவாயில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

சில வழிமுறைகள்

அ. அங்கக வேளாண்மையின் அடிப்படைகளை புரிதல் மற்றும் அவற்றின் தரநிர்ணயம்

  • அங்கக வேளாண்மை என்பது அறிவு சார்ந்த ஓர் முறை. ஆகையால் புதுவரவு தரும் விவசாயிகள், உண்மை விவரங்களை கேட்டு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • முறையாக அளிக்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தங்களது தோட்டத்திலே சில முறைகளை பயனுள்ளதாக்க பயில வேண்டும். அங்கக முறை “வரும் முன் காப்போம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டது.
  • ஆயினும் பல பிரச்சனைகளுக்கு இம்முறையில் தடுப்பு வழிகள் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆ. நமக்கு உதவும் மூலதனங்களை கண்டறிதல்

  • தற்போது உள்ள அங்கக வேளாண் விவசாயிகள் பலர் நல்ல தரமிக்க ஆலோசனைகளை வழங்க முன் வருகிறார்கள். புதிய விவசாயிகள் ஆலோசகர்களை நிச்சயமாக அனுக வேண்டும். நல்ல ஆலோசகர்கள் விவசாயிகளின் உண்மையான நிலை மற்றும் அவர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை நிச்சயம் அறிவர். ஆலோசகர் விவசாயிகளுக்கு மூலதனங்களைப் பற்றின விவரங்களை தந்து உதவுவார்.
  • அங்கக வேளாண் பற்றிய நிறைய குறிப்புகள் வளைதளங்களில் உள்ளது. புத்தகங்களாகவும் அவை கிடைக்கின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் இதைப்பற்றின விவரங்களை சேகரிக்கலாம்.

இ. மாற்றத்தை கவனமாக திட்டமிட வேண்டும்

  • இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்தல் வேண்டும். காலநேரம், வரவு செலவு, விற்பனை ஆகியவற்றை முறையாக திட்டமிடல் வேண்டும். வரவு செலவுகளை திட்டமிடல் மிகவும் முக்கியம். களை அகற்றும் கருவிகள் மட்குதலுக்கு உதவும் கருவிகள், பதப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் முதலீட்டை தீர்மானித்தல் வேண்டும். அங்கக உற்பத்திக்கு தொடர் சந்தை தேவை ஏற்படுத்துதல் முக்கியமானதாகும். இதுவரை உள்ள அங்கக விவசாயிகளின் ஆலோசனைகளை பெறுதல் மிகவும் நல்லது. சில நேரங்களில் பாரம்பரிய முறையை பின்பற்றுதல் அதிக நஷ்டத்தை தவிர்க்க உதவும். கால்நடை பண்ணை வைத்திருக்கும் விவசாயி, அங்கக வேளாண்மையை பின்பற்ற முயன்றால் முதலில் தனது நிலத்திற்கு தரச்சான்றிதழ் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தல் மூலம் அவர் தனது திட்டங்களை உருவாக்கவும் தீவனப் பயிர் வளர்ப்பதைப் பற்றியும் நன்கு அறியலாம்.
  • ஒரு நிலம் முழுவதுமாக அங்கக தன்மையுடையதாக மாற சில ஆண்டுகள் ஆகலாம். இவ்வாறு மாறும் பருவத்தில் ஒரு பகுதி அங்கக முறையிலும், மற்றொரு பகுதி பாரம்பரிய முறையிலும் கொண்டு செல்லப் படலாம். ஆனால் தரசான்றிதழ் வழங்குவோர் இதை அதிகமாக ஊக்குவிப்பதில்லை.

ஈ. மண்தரத்தை நன்கு புரிதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல்

  • அங்கக வேளாண்மையில் புதிய வரவு தர விரும்பும் விவசாயி தனது மண் வளத்தை நன்கு அறிய வேண்டும். மண்வகை, ஆழம், மண் நயம், சுண்ணாம்பு நிலை, உப்பு நிலை, அங்கக கரிமம், களர் அமில நிலை, நீர் உட்புகு திறன், ஊட்டச்சத்து அளவு, உயிரியல் செயல்பாட்டு நிலை, குறைந்த களை மற்றும் பூச்சித்தொல்லைகள் போன்றவை அங்கக தரச் சான்றிதழ் பெற உதவும்.
  • விவசாயி கால்நடைகள் இல்லாமல் பயிரிடதிட்டமிட்டால் ஊட்டச்சத்து மூலதனத்தையும் சேர்த்து திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும். உதாரணத்திற்கு பாறை துகள்கள், சுண்ணாம்பு தூள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உ. அவரவர் சூழலுக்கு ஏற்ப பயிர்களையும் கால்நடைகளையும் திட்டமிடல் வேண்டும்.

ஊ. பயிர் சுழற்சி திட்டமிடல்

பயிர் சுழற்சி மூலம் பூச்சித் தொல்லைகளை தவிர்க்கலாம். களையினை கட்டுப்படுத்தலாம். அங்கக வேளாண்மையில் பயிர் சுழற்சி ஓர்முக்கிய அங்கமாகும்.

எ. பூச்சித்தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல்

தேர்ந்தெடுக்கப்பட்ட பயிரின் பிரதான பூச்சித் தொல்லைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல் மிக அவசியம். உதாரணத்திற்கு கயோலின் (kaolin), ஸ்பைனோசாட் (spinosad) போன்ற அங்கக பொருட்களை பயன்படுத்தலாம்.

ஏ. சொந்த பயிர் சோதனைகளை மேற்கொள்ளவும். இதன் மூலம் சிறந்த பயிர் வகையைத் தேர்வு செய்யலாம்.

ஒ. ஒவ்வொரு குறிப்புகளையும் கவனமாக பதிவேடுகளில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழுவிபரங்களை சேகரித்தல் மற்றும் பதிவு செய்திடல் நல்ல திட்டத்தை வழி நடத்த உதவும்.

ஓ. பொதுவான தவறுகளை தவிர்க்கவும்:

  • மாறுதலுக்குத் தேவையானவற்றை பற்றிய திட்டங்களை குறைவாக மதிப்பிடுதல்
  • அங்கக வேளாண்மைக்கான முழு தேவைகளை அறிந்து கொள்ளாமை, அவற்றை குறைவாக மதிப்பிடுதல்
  • வரும் முன் காக்கும் திட்டத்தின் மேல் அதிக அக்கறை கொள்ளாதிருத்தல் ஆகிய தவறுகளை தவிர்க்கவும்.

 

உரங்கள் & பூச்சிக்கொல்லி

பாரம்பரிய வேளாண்மை

அங்கக வேளாண்மை

எருவு/தொழுவுரம் இடுதல்

o

o

போதுமான அளவில் ரசாயன உரம் இடுதல்

o

X

நுண்ணுயிர் உரம்

o

o

பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல்

o

X

பாரம்பரியம் மற்றும் அங்கக வேளாண்மை

பாரம்பரிய மற்றும் அங்கக வேளாண்மை இவை இரண்டும் வெவ்வேறு வழக்கங்களை கொண்டவையாகும்.

பாரம்பரிய வேளாண்மை

அங்கக வேளாண்மை

இயற்கையை ஆளும் தன்மையுடையது

இயற்கையுடன் இணைந்தது

அத்துமீறல், நிலச் சுரண்டல்

கட்டுப்பாடுகள் நிறைந்தது

  • அங்கக வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையிலிருந்து அடிப்படையிலேயே பல மாற்றங்களைக் கொண்டது. அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல் படுவதால் இயற்கைச் சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது. அங்கக வேளாண்மையில் பூச்சிக்கொல்லி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது பயிர்சுழற்சி கட்டாயப்படுத்தப்படுகிறது.
  • ஆயினும் சில உள்ளீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. பூச்சி இனக்கவர்ச்சிப்பொறி போன்றவை அவசியமாகக் கருதப்படுகிறது.

நவீன வேளாண்மை

இன்றைய ரசாயன வேளாண் முறையில் அதிக மகசூல் மற்றும் லாபம் இருந்தாலும் அவை பாதகமானது என்பது தவிர்க்க முடியாதது. அவற்றுள் சில,

நிலவளத்தை குறைத்தல்

அதிக ரசாயனங்களை பயன்படுத்துவதாலும், பயிர்சழற்சி செய்யாததாலும், நிலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து வருகிறது

ரசாயன உரம்

 

மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கும் செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கின்றனர்

நைட்ரேட் (தழைச்சத்து) அடித்து செல்லப்படுதல்

இரசாயன உரங்களில் இருக்கும் நைட்ரேட் மழையினால் அடித்து செல்லப்பட்டு குடிநீரை அசுத்தப்படுத்துகிறது

மண் அரித்தல்

அதிக மறை ஆழமான உழவு செய்தலினால் மேல்மட்டத்தில் உள்ள மண் அரித்து செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது

மண் இறுகுதல்

மண்ணின் அமைப்பு மிகவும் சேதம் அடைந்து வருகிறது. டிராக்டர் பயன்படுத்தி உழுவதால் மண்ணின் அமைப்பு மாறி இறுகிய நிலை ஏற்பட்டுவருகிறது

உணவு மாசுபடுதல்

 

இரசாயனப் பொருட்களால் உணவு மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும் மாசுபடுத்தப்படுகிறது

பயிர் சுழற்சி

 

  1. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
  2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
  3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல் தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.
  4. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்
  5. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை,  தட்டைப்பயிறு
  6. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்
  7. சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
  8. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.
  9. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்
  10. ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு - உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப்
  11. பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்
  12. ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் - நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.
  13. சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
  14. ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்
  15. சில வறட்சி தாவரங்களைத் தொடர்ந்து ஈரப்பதம் விரும்பும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நெல் - கொண்டைக் கடலை
  16. சில பூச்சிகள் குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. எனவே அவ்வகைப் பயிர்களை பயிரிட்ட பின் அடுத்தமுறை வேறு குடும்பத்தைச் சார்ந்த பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: கரும்பு – துலுக்க மல்லி போன்றவை நூற்புழுவால் பாதிக்கப்படும். தக்காளி / கத்தரி / புகையிலை / உருளைக் கிழங்கு – நெல் / பயிறுவகை போன்றவை ஒரபஞ்சித் தாவரத்திற்கும், கம்பு – ஆமணக்கு போன்றவை ஸ்டிரைகாவிற்கும், பெர்ஸிம் – ஓட்ஸ் போன்றவை கஸ்குட்டாவிற்கும் பயிர்செய்யப்படுகின்றன.
  17. சில பயிர்களில் ஒரு குறிப்பிட்ட வகைக்களைச் செடிகள் தொடர்ந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இப்பிரச்சினையைத் தடுக்க சுத்தப்படுத்தும் முன் பயிரிலிருந்து வேறுபட்ட ஒரு பயிரைப் பயிரிட வேண்டும். எ.கா: கோதுமை – நெல் (பைலாரிஸ் மைனர் எனும் களைச் செடி) பெர்ஸீம் – உருளைக் கிழங்கு / போரோ அரிசியில் சிகோரியம் இன்டைபஸ் என்ற களை, கடுகு, முன்பருவ உருளைக் கிழங்கு - கிலியம் விஸ்கோஸ், அரிசி – சணல் / கரும்பு / காய்கறிகள் / மக்காச்சோளம் + அவரை போன்றவற்றில் எக்கினோகுளோவா கிரஸ்கல்லி, சணல் – காய்கறிகள் கார்கோரஸ் அக்குடன் குலஸ்.
  18. மேய்ச்சல் பயிர்களுக்குப் பின் தீவனம் அல்லது வேறு ஏதேனும் விதைப்பயிர்களை விதைக்கலாம். எ.கா: பாரா புல் – சோளம் + அவரை / நெல்.
  19. சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகும் விதைத் தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: மக்காச் சோளம் / நிலக்கடலை – வெங்காயம் / அவரை / கம்பு (விதைத் தாவரம்)
  20. பொதுவாக ஓம்புயிர்த் தாவரங்களைப் பயிரிட்ட பின் கீழ்க்காணும் சார்நிலை உயிரினங்களுடன் கூடிய பயிர்களைப் பயிரிட வேண்டும்.
  21. 1) ரைஸோபியம் மெலிலோட் – லியூசர்னா , இனிப்பு குளோவர், வெந்தயம்
    2) ரைஸோபியம் டிரைபோலி – பெர்ஸீம், பெர்ஸியன் குளோவர்
    3) ரைஸோபியம் லெகூமினோஸோரம் – மைசூர் பருப்பு, கேசரி பருப்பு, பட்டாணி
    4) ரைஸோபியம் பர்ஸயோலி – பீன்ஸ், பச்சைப் பயிறு, உளுந்து, பில்லிபெஸாரா
    5) ரைஸோபியம் லியூபின் – லியூபின்ஸ்
    6) ரைஸோபியம் ஜப்பானிகம் – அவரை, தட்டைப்பயிறு, சனப்பை, கொண்டைக்கடலை, சோயாபீன்
  22. ஒரே பயிரை பயிரிடாமல் இவ்வாறு பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது மிகுந்த இலாபத்தை ஈட்டித் தரும். அத்தோடு மண் வளத்தைப் பாதுகாக்க ஏதுவாகிறது


அங்கக வேளாண்மை

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. அங்கக விவசாயம் என்றால் என்ன?

அங்கக  உணவு உற்பத்தி என்பது  ஒரு முறையான பண்ணை திட்டம்,இது  இயற்கை சூழ்நிலை அமைப்பை போன்று தோற்றமளிக்கும். மேலும் இதில், நன்மை தரும்  பூச்சி  மற்றும் உயிரினங்களின் சமநிலையை பராமரித்து  மண் வளத்தை மேம்படுத்த உதவுகின்றன. அமெரிக்காவில் 'அங்ககம் ' என்பது பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களை குறிக்கின்றது. அவை யுஎஸ்டிஏ தேசிய அங்கக திட்ட  (என்ஓபி) விதியைக் கடைபிடிக்கின்றன.

2. எப்படி அங்கக விளைநிலங்களின் வளத்தை நிர்வகிப்பது?

அங்கக விவசாயிகள் பொதுவாக, பயிர் சுழற்சி முறையின்  மூலம் பயிர் ஊட்டச்சத்துகளை நிர்வகிக்கிறார்கள். அதில், மூடு பயிர்கள்,  தாவர மற்றும் விலங்குகளின் அங்கக  பொருட்கள், மட்கிய உர பயன்பாடு ஆகியவை அடங்கும். மண் அமைப்பு, மண்ணின் அங்கக தன்மை  மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை  முறையான  உழவு மற்றும் சாகுபடி முறைகள் மேம்படுத்துகின்றன. சுரங்க கனிமங்கள் மற்றும் ஒரு சில செயற்கை பொருட்கள், பயிர்  சத்துக்களுக்கு துணை ஆதாரங்களாக  பயன்படுத்தபடுகின்றன. ஆனால் மண், பயிர் மற்றும் நீர் மாசு பாட்டிற்கு  காரணமான  பொருட்கள்  பயன்படுத்துவது  தவிர்க்கப்பட வேண்டும்.

3. அங்கக  விவசாயிகள், அங்கக   பண்ணைகளில் மட்கு எரு இடும் போது, ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமா ?

ஆமாம். மட்கா உரம், பிற விலங்கு மற்றும் தாவரங்களின் பொருட்கள், நீர், மண் மற்றும் பயிர் மாசுபடுவதைத் தடுக்கும் வண்ணம் கவனமாக கையாள வேண்டும்.தாவர கழிவுகளை அறுவடை செய்த அதே நாள் பயன்படுத்தாமல் நன்கு மட்கிய பின்னர் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் உணவாக பயன்படுத்தும்  கீரைசெடிகளை,  மட்கா உரம் இட்ட  120 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்து பயன்படுத்த வேண்டும். மட்கா உரம் இடப்பட்ட பிற பயிர்களை, எரு இடப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்து உணவாக பயன்படுத்த வேண்டும்.

4. எப்படி பூச்சிகள் அங்கக  பண்ணைகளில் நிர்வகிக்கப்படுகிறது?

உயிரியல் மற்றும் பண்ணை சாகுபடி முறைகளான பயிர் சுழற்சி, பன்முகத்தன்மை, வாழ்விட மேலாண்மை, நன்மை செய்யும் பூச்சிகளை வெளியிடுதல் துப்புரவு மற்றும் நேரம் ஆகியவற்றை அங்கக பண்ணை திட்டத்தில் பயன்படுத்தி பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம். சில இயற்கை பொருட்களான தாவர சாறு மற்றும் சோப் போன்ற நச்சு அல்லாத செயற்கை பூச்சிக்கொல்லிகள், ஒப்பீட்டளவில் யுஎஸ்டிஏ தேசிய அங்கக தரம் மற்றும் பண்ணை திட்டதின்கீழ் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம். தேசிய பட்டியலில் உள்ள விதிமுறைகளை பின்பற்றி அவற்றை பயன்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

2.85365853659
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top