பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு பொதியிடும் முறைகள்

உணவு பொதியிடும் முறைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொதியல்

உணவுப் பொதியல் என்பது போக்குவரத்து மற்றும் உணவு விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் கலவையாகும். உணவுப் பொதியியலின் முதன்மையான பங்கு புறச்சூழல் மற்றும் உராய்வு சேதத்திலிருந்து உணவைப் பாதுகாப்பதும், உணவில் சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதாகும்.

சர்வதேச வர்த்தகம் விரிவடையும் போது உள்நாட்டு பொதியல் முறையை மேம்படுத்துவது இன்றியமையாததாகும். அளவு மற்றும் தரம் பிரிக்கப்பட்ட சிறந்த பொதியல் விற்பனையாளார்களுக்கும் நுகர்வோருக்கும் சந்தைபடுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது. சிறந்த / மேம்படுத்தப்பட்ட பொதியலின் தன்மை கழிவுகளை குறைப்பதாக இருக்கவேண்டும்.

செயல்பாடுகள் மற்றும் பொதியலின் பிரிவுகள்

பொதியலின் பிரிவுகள்

ஒற்றைப்பொதியல்/தொகுதிபொதியல் : இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

இடைநிலை பொதியல்: இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

மொத்தப்பொதியல்:இது மூலப்பொதியல், விநியோகப்பொதியல் மற்றும் போக்குவரத்திற்கான பொதியல் என்றும் அழைக்கப்படும். இது தனி/ஒற்றை பொதியல் அல்லது இடைநிலை பொதியலுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வகை பொதியல் இயந்திர தன்மையுடைய பாதிப்பிலிருந்து காக்கப்படவேண்டும்.

செயல்பாடுகள்

பொதியலின் முக்கியமான 3 செயல்பாடுகள் - பாதுகாப்பு, பதனிடுதல் மற்றும் விற்பனை மேம்படுத்துதல்/ஊக்குவிப்பு ஆகும்.

பாதுகாப்பு - இது காலநிலை மற்றும் எந்திரத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாத்தல். காலநிலை பாதுகாப்பு காற்று மண்டல ஈரப்பத்தம், ஆக்ஜிஸன், ஒளி, வெப்பம், குளிர் மற்றும் நுண்ணுயிரி வழியாக ஏற்படக்கூடியது.எந்திரத்தன்மையுடைய பாதிப்பு என்பது பொதியல், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், தாக்கவிளைவு, அதிர்வு மற்றும் அழுத்தத்தால் ஏற்படக்கூடியதாகும்.

பதனிடுதல் - உணவுப் பதனிடுதல்/ பாதுகாத்தல் என்பது குறிப்பிட்ட உணவு பொதியலில் எத்தனை காலத்திற்கு கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதாகும். உணவின் தரம் நுகரும் வரை அதன் தரம் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.

விற்பனை ஊக்குவிப்பு - சரியான பொதியல் சிறந்த விற்பனையாளராக செயல்பட்டு நுகர்வோரை ஈர்க்கின்றது. இதன் மூலம் விளம்பரஸ் செலவுகளும் கனிசமாக குறையும்.

உணவு பொதியிடும் முறைகள்

தொற்றில்லா பொதியல்/சிப்பமிடுதல்
இந்த பொதியல் முறையில் உனவு மற்றும் தனித்தனியே கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின் உணவுப்பொருளை கிருமி அற்ற சூழலில் அடைக்கப்படுகின்றது. இதனால் உணவுப்பொருளின் ஆயுள் நீட்டிக்கப்படுகின்றது.

வெற்றிட பொதியல்/சிப்பமிடுதல்

இந்த முறையில் பொதியலில் உள்ள காற்று நீக்கப்பட்டு வேறு வாயுக்கள் சேர்க்காமல் உணவுப் பொருள் அடைக்கபடுகின்றது. இது பதப்படுத்தப்பட்ட இறைச்சி நீண்டகாலமாக பயன்படுத்தப்ப்டுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலை

இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாயுக்களின் செறிவு துள்ளியமாக சேர்க்கப்பட்டு, சேமிப்பு மற்றும் விநியோகத்தின் போது அதன் அளவு குறையாமல் பராமரிக்கப்படுகிறது. இந்த முறைக்கு விலையுயர்ந்த கருவுகள் தேவைப்படுவதால் குளிர் சேமிப்பு கிடங்குகளிலும் மற்றும் கப்பல்வழி அனுப்புவதற்கும் பயன்படுகிறது.

திருத்தப்பட்ட சூழ்நிலை

இந்த முறையில் உள்ளிருக்கும் வாயுக்கள் நீக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட வாயுக்கலவை செலுத்தி பொதிக்கப்படுகிறது. இதற்கு கார்பன்- டை- ஆக்ஸைட், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் உபயோகப்படுத்தப்படுகின்றது.

சில புதிய பொதியல் முறைகள்

மக்கும் தன்மையுடைய பொதியல் முறை

நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பாசிகள் கொண்டு மக்க வைக்ககூடிய நெகிழ்களைக் கொண்டு பொதியல் செய்யப்படுகிறது.

இயங்கக்கூடிய/செயல்படக்கூடிய பொதியல்

இந்த புதிய முறையில் உணவுப்பொருள், பொதியல் மற்றும் சுற்றுப்புற சூழல் இடைவினைபுரிந்து உணவுப்பொருளின் தேக்க ஆயுள், பாதுகாப்பு மற்றும் புலன் இயல்புகளை அதிகரிக்க செய்கிறது. இந்த பொதியல் முறை தேவைக்கேற்ப சுற்றுச்சூழலை மாறுபடுத்தவும், தேவையற்ற வாயுக்களை வெளியேற்றவும் அல்லது பொதியலின் மேம்பாகத்தில் இருக்கக்கூடிய வாயுக்களின் கலவையை நிர்ணயித்தும் உணவுப்பொருளின் தேக்க ஆயுளை நீட்டிக்கிறது.

உண்ணக்கூடிய பொதியல் உணவுப்பொருட்களின் மேல் அல்லது உணவுப் பொருட்களின் இடையே உண்ணக்கூடிய பொருட்களை கொண்டு மெல்லிய பூச்சு செய்வது உண்ணக்கூடிய பொதியலாகும். இயற்கையான பலமூலக்கூறுகளை கொண்டு பல ஆய்வுகளை செய்யப்படுகிறது. பலவகையான பல்கூட்டு சர்க்கரை, புரதங்கள், கொழுப்புகளை தனித்தோ அல்லது கலவையாக உண்ணக்கூடிய பொதியல் செய்யப்படுகிறது.

திறன்பொதியல்

இது அடிப்படையில் கண்காணிக்க மற்றும் உணவு தரம் பற்றி தகவல் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயந்திர, ரசாயன, மின் மற்றும் மின்னனுவால் ஒருங்கிணைக்கப்பட்டு உணவுப்பொருளின் பயன்பாட்டையும் செய்திரணையும் அதிகரிக்கவல்லது.

நுண் அலகு/நானோபொதியல்

நுண் அலகு தொழில் நுட்பத்தின் மூலம் பொதியலின் மூலக்கூறுகளின் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டு பொதியலுக்கு தேவையான பண்புகளை புகுத்தி வடிவமைக்கலாம். பல்வேறு நானோ வடிவங்கள் கொண்டு நெகிழிகளுக்கு வாயு மற்றும் நீராவி உட்புகுதன்மை உணவுப்பொருட்களின் தன்மைக்கு ஏற்றவாறு அளிக்கலாம். இந்த இயல்புகள் தேக்க ஆயுளை, ப்லன் பண்புகளை அதிகரிப்பதோடு போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளை அதிகரிக்கிறது.

பொதியலுக்கு பயன்படும் பொருட்கள்

 

உணவு பொருட்களை பொதியிட பொதுவாக கண்ணாடி, உலோகங்கள், காகிதம் மற்றும் காகித அட்டை மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் பல அடுக்கு கொண்ட பொதியில் செய்ய பல விதமான பிளாஸ்டிக் அல்லது பல்வேறு பிளாஸ்டிக் கலவையுடன் காகிதம் / அட்டை, உலோகம் அல்லது கண்ணாடி போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது.

காகிதம்

காகிதம் மற்றும் காகித அட்டைகள் சல்போட் மற்றும் சல்பைட் கொண்டு பின்னப்பட்ட இழைகளாகும். பின்னர் இழைக்கப்பட்ட நார்கள் கூழாக்கி, வெளுக்கப்பட்ட , இரசாயனங்கள் மற்றும் வலுவூட்டும் பொருட்களைஸ் சேர்த்து காகித பொதியக் செய்யப்படுகிரது.

காகித அட்டை

காகித அட்டை காகிதத்தை விட தடிமனானது கனமானது பல அடுக்குகளை கொண்டது. இது பொதுவாக பொட்டிகள், அட்டை பெட்டிகள், தட்டுகள் போன்ற உணவுப் பொருட்கள் போக்குவரத்துக்கு பயன்படுகிறது. மிகச்சில உனவுகளே நேரடியாக பொதிக்கப்படுகின்றது.

கண்ணாடி

கண்ணாடி கொள்கலங்கள் சிலிக்கா, சோடியன் கார்பனேட் கால்சியம் கார்பனேட் மற்றும் அலுமினாவை அதிக வெப்பத்திற்கு உட்படுத்து அடர்த்தியான திரவமாக மாற்றி பின் அச்சுக்களில் வார்க்கப்படுகின்றன.

நன்மைகள்

கண்ணாடி புறக்காரணி தடை பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது உற்பத்தி செய்யப்பட்ட உணவு பொருட்களின் புத்துணர்ச்சி, சுவை, வாசனை மற்றும் பதப்படுத்துதலின் போது ஏற்படும் உயர் வெப்பத்தை தாங்க கூடியது.

குறைபாடுகள்

எளிதில் உடையக்கூடியது, கனமானது மற்றும் மக்காதவை.

நெகிழி

நெகிழி தனிமூலக்கூறுகள் சுருக்குதல், சேர்ப்பு அல்லது குறுக்கு சேர்ப்பு மூலம் தொகுக்கப்படுகிறது. வெப்பம் மற்றும் இயந்திர பண்புகளில் சிலவற்றை மாற்றி அதிக வெப்பத்தில் உருகக்கூடிய வெப்பப்பத பொதிகள், குறைந்த வெப்பத்தில் உருகக்கூடிய வெப்பத்தால் அடைக்கப்பட்ட பொதியல், வளையக்கூடிய பொதியல்கள், குறைந்த உறுதித்தன்மை மற்றும் உறுதியான பொதிகளையும் உருவாக்கலாம்.

உலோகம்

உலோக பொதிகலங்கல் வெற்றிட அடைத்தல் செய்து குறைந்த ஆக்சிஜன் அழுத்தத்தில் நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படுகிறது. உலோகம் ஆக்சிஜன், வெளிச்சம், ஈரத்திலிருந்து உணவுப்பொருட்களை காப்பதால் அழுகுதல் குறைவாக உள்ளது அலுமினியம் அல்லது இருமௌ உலோகப் பொதியலுக்கு பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : இந்திய உணவு பொதியல் நிறுவனம்

2.94117647059
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top