பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க தர்பைப் புல்

தர்பைப் புல் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

தர்பைப் புல்

உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்குத் தர்பைப் புல் பயன்படுத்தலாம்

நானோ தொழில்நுட்பம்

 1. பல அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கி வருகிறது. நானோ தொழில்நுட்ப ஆய்வு விண்கலன் போன்ற உயர்ந்த தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமே புரட்சி செய்துள்ளது என எண்ணுகிறோம். ஆனால், இந்திய பாரம்பரிய வழக்கங்களில் நானோ தொழில்நுட்பவியலின் பங்கு தொன்று தொட்டு வந்துள்ளது
 2. கோயில்களிலும், இல்லத்திலும் உணவுப் பதார்த்தங்கள் பிரசாதமாக அளிக்கப்படும்போது தர்பைப் புல் கொண்டு புனிதமாக்கப்படுகின்றன என்பது நம்பிக்கை. மேலும், கிரகண காலங்களில் நொதிக்கும் தன்மையுடைய உணவுப் பொருள்கள் கெடாமல் இருப்பதற்காக அவற்றில் தர்பைப் புல்லைப் போடுவது வழக்கம். கிரகணம் முடிந்தவுடன் அந்தப் புல்லை நீக்கிவிட்ட பின்னர் அந்த உணவு உண்பதற்குத் தகுந்ததாக இருக்கிறது.
 3. தர்பையின் செயல்பாட்டை புரிந்து கொள்ள கெட்டிப் பசுந்தயிர் எவ்வாறு நொதிக்காமல் இருக்கிறது என்பது விளக்கம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அருகம்புல், மூங்கில் முதலான மேலும் ஐந்து வகைப் புல்கள், அவற்றின் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மை, நீர் ஒட்டாத இயல்பு ஆகிய தன்மைகளின் அடிப்படையில் முடிவுகளை ஒப்புநோக்கிப் பார்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
 4. அணுக்கூறு நுண்நோக்கியின் மூலம் உற்று நோக்கும்போது விளக்கத்தக்க நானோ நுட்பக் கூறுகள் படிநிலை இயல்புகளாகத் தர்பைப் புல்லின் மேற்பரப்பில் காணப்பட்டன. இந்த வகையான இயல்புகள் மற்ற புல் வகைகளில் காணப்படவில்லை.

பயன்கள்

 1. பசுந்தயிரில் உள்ள நொதித்தலுக்குக் காரணமாக இருக்கும் நுண் கிருமிகள் தர்பைப் புல்லின் மேற்பரப்பில் இருக்கும் நானோ, நுண்கூறுகளில் ஈர்க்கப்படுவது தெரியவந்தது. கிரகண காலங்களில் பூமிக்கு வரும் ஊதா, புற ஊதா கதிர் வீச்சுகள் குறைந்து விடுகின்றன.
 2. இந்தக் கதிர் வீச்சுகளுக்குத்தான் இயற்கையான நுண்ணுயிர் கட்டுப்படுத்தும் தன்மை இருக்கிறது.
 3. எனவே, முற்காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத நிலையில் நொதிக்கும் தன்மையுடைய உணவுப் பொருள்களான தயிர், மாவு போன்றவற்றை கிரகண காலத்தில் கெடாமல் இருப்பதற்குத் தர்பைப் புல் போடப்பட்டது. தர்பையை சேர்ப்பதால் உணவுப் பொருள்களின் சுவையோ, நிறமோ மாறுவதில்லை.
 4. உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்க வேதிப்பொருள்களை உபயோகிப்பதற்கு பதிலாக தர்பையை உபயோகிக்கலாம். மேலும், தர்பையின் படிநிலை நானோ நுட்பக் கூறுகளை ஒத்த செயற்கை மேற்பரப்புகள் மருத்துவப் பயன்பாட்டில் நுண்கிருமிகளால் வரும் தொற்று நோய்களைத் தடுக்க உதவும்.

கேள்வி பதில்கள்

1. உணவு பாதுகாப்பு என்றால் என்ன?

உணவுகளின் அளவு பயன்பாட்டிற்கு மீறி கிடைக்கும் என்னும் நிலையில் அவற்றை பின்வரும் காலங்களில் நுகர்வதற்காக பாதுகாக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல் பருவமற்ற காலகட்டங்களில் அனைத்து இடங்களிலும் உணவு கிடைக்க வழி வகுக்கிறது.

2. உணவு கெட்டு போவதற்குண்டான காரணம் யாது?

 • நுண்ணுயிர்களான பாக்டீரியா காடி மற்றும் பூஞ்சான வளர்ச்சி
 • நொதிகளின் செயல்பாடு
 • உணவுகளின் நொதிகளற்ற வினை செயல்பாடுகளான ஆக்ஸீஜனேற்றம் எலி மற்றும் பூச்சிகளினால் ஏற்படும் பொருட்கள் அழிவு

3. உணவு பாதுகாக்கும் முறைகள் யாது?

தற்காலிக பாதுகாப்பு:

இத்தகைய முறையில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியானது சில வேதிப் பொருட்கள் பயன்பாட்டினால் தடுக்கப்பட்டு உணவு பாதுகாக்கப்படுகிறது.

நிரந்தர பாதுகாப்பு:

இத்தகைய முறையில் பதப்படுத்துதல், உறையிடுதல் மற்றும் உலர்த்தல் செயல்பாடுகளினால் நுண்ணுயிர்களின் வளர்ச்சி முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

4. உணவு பாதுகாப்புகளின் கொள்கைகள் யாது?

 • நுண்ணுயிர்கள் சிதைவுறுதல் தடுக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது
 • நுண்ணுயிர்கள் வெளியேற்றப்படுகிறது
 • நுண்ணுயிர்கள் வடிகட்டுதலின் மூலம் நீக்கப்படுகிறது
 • குறைந்த வெப்பநிலை உலர்த்தல், வேதிப்பொருட்கள் மூலம் நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படுகிறது
 • வெப்ப கதிர் வீச்சின் மூலம் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது

ஆதாரம் : சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

3.25
Anonymous Dec 27, 2018 11:02 AM

உணவை பாதுகாக்கும் தொழிநுட்பங்கள் என்ன?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top