பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தேங்காய் மட்டை மஞ்சியில் இருந்து தயாரிக்கும் கயிறு

தேங்காய் மட்டை மஞ்சியில் இருந்து தயாரிக்கும் கயிறு பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய்மட்டை

 • தென்னை மரத்தில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் பல்வேறு வகையில் மனிதனுக்கு பயன்படுகிறது. தேங்காய் சமையலுக்கும், இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதற்கும் உதவுகிறது.
 • தென்னை மரத்தின் பாளை விசேஷ வீடுகளில் கட்டவும், தோகைகள் கூரைக்கும் பயன்படுகிறது.
 • இதில் கிடைக்கும் சோகை, பண்ணாடை, மட்டைகள் அடுப்பெரிக்க உதவுகிறது.
 • தென்னை மரத்தின் தேங்காய் மட்டையில் இருந்து பெறப்படும் மஞ்சி மூலமாக கயிறு தயாரிக்கப்படுகிறது.
 • இதன் மூலம் குடிசைத்தொழிலுக்கு ஏற்ற வாழ்வாதாரமாகவும் கயிறு தயாரிக்கும் தொழில் விளங்கிவருகிறது.
 • தற்போது அதிகமாக கயிறு தயாரிக்கவும், சீராக கயிரின் தரம் இருக்கவும் இயந்திரங்கள் வந்துள்ளன.
 • தேங்காய்மஞ்சி ஊற வைக்கப்படு பின் உலர வைத்து இயந்திரம் மூலம் அது பிரிக்கப்படுகிறது.

இயந்திரத்தின் செயல்முறைகள்

 • இவற்றை இதற்கென தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் பணியாளர்கள் கொட்டியபின் இயந்திரமே முழுப்பணியையும் மேற்கொள்கிறது.  போதிய அளவு மஞ்சியை எடுத்துக்கொண்டு மூன்று பிரியாக அதை வெளியேற்றி கடையில் ஒரே கயிறாக திரிக்கிறது.  இது உருளையில் சீராக சுற்றவும் செய்கிறது. மூன்று பிரியாக வரும் மஞ்சியானது துண்டாகும்போது இயந்திரம் சமிக்ஞை வழங்குகிறது. உடனே நிறுத்தி விட்டு அறுந்த பகுதியை சேர்த்து இயந்திரத்தை ஆன் செய்தவுடன் பணி தொடர்கிறது.
 • மூன்று இயந்திரங்கள் உள்ள நிலையில் இருவர் இப்பணியை கண்காணித்தால் போதுமானது. உருளைகளில் குறிப்பிட்ட அளவு கயிறு சேர்ந்தவுடன் அதை எடுத்து வைத்து விட்டு அடுத்த உருளையை இணைக்கின்றனர். இதில் சேர்ந்த கயிறை வெயிலில் காயவைத்து மற்றொரு உருளையில் சுற்றி குடோனில் சேமிக்கின்றனர்.  சாதாரண கயிறு ஒரு லாரியில் ஒருடன் வரை ஏற்றும்போது இதே கயிற்றை ஸ்பூலிங் எனப்படும் இறுககட்டும் முறையில் அதே லாரியில் இரண்டு டன் ஏற்றலாம்.  இதற்கான இயந்திரங்களும் தேவைப்படுகிறது.

பயன்கள்

 1. சிறுதொழிலான இது தற்போது கயிறுக்கு அதிக தேவை இருப்பதால் நல்லமுறையில் இயங்கி வருகிறது.
 2. கயிறில் தரைவிரிப்பாகவும், கால்மிதியடியாகவும் தயாரிக்கலாம்.
 3. சரிவான இடங்களில் கட்டி, அதன்மீது மண் கொட்டி செடிகளை வளர்க்கின்றனர்.  இதனால் மண்சரிவு தடுக்கப்படுவதோடு, கயிறு மக்கி நிலத்துக்கும் நண்பனாகிறது.
 4. மலை போன்ற ஊர்களில் இதை பின்பற்றினால் மண்சரிவு தடுக்கப்படும்.  கயிறில் இருந்து தயாரிக்கப்படும் மேட்கள் இத்தாலி, அரபு எமிரேட் நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுவதாலும், இதற்கு அங்கு அதிக வரவேற்பு அதிகமாகிவிட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு நாட்டிற்கு மிகப்பெரும் கேடாகும்.  இதை தவிர்க்க இதுபோன்ற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைத்துறை

3.18181818182
பிரிட்டோ ஆ Jan 17, 2019 05:10 AM

சிறப்பு

விஜய் Aug 28, 2016 10:28 PM

ஐயா எனக்கு கயிறு ஏற்றுமதியாலர்களின்
முகவரி தேவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top