பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பனங்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட சிற்றுண்டி வகைகள்

பனங்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட சிற்றுண்டி வகைகள் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

பனங்கிழங்கு மாவு சேர்த்த இட்லி

 

 

தேவையான பொருட்கள்

அரிசி

80 கி

பனங்கிழங்கு மாவு

20 கி

உளுந்து

10 கி

உப்பு

தேவைக்கு ஏற்ப

செய்முறை

 • அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்யவும்
 • அரிசியை 3 மணி நேரமும் உளுந்தை 30 நிமிடமும் ஊரவைக்க வேண்டும்.
 • அரிசி மற்றும் உளுந்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்
 • இதனுடன் பனைகிழங்கு மாவை கலக்கவும். உப்பு சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்.
 • 8 மணி நேரத்திற்கு தேவையான வெப்பனிலையில்(25 - 28) புளிக்கவைக்கவும்.
 • மாவை இட்லி தட்டில் 10 நிமிடத்திற்கு வேகவைக்கவும். சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாரவும்

பனங்கிழங்கு மாவு சேர்த்த பனியாரம்

 

தேவையான பொருட்கள்

அரிசி

80 கி

பனங்கிழங்கு மாவு

20 கி

உளுந்து

10 கி

வெந்தயம்

2 கி

வெங்காயம்

15 கி

பச்சை மிளகாய்

4 கி

சீரகம்

2 கி

கருவேப்பிலை

2 கி

எண்ணெய்

10 மிலி

உப்பு

தேவைக்கு ஏற்ப

செய்முறை

 • அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனியாக 4 மணி நேரம் ஊரவைத்து தண்ணீரை வடித்துவிட்டு நயமாக அரைத்துக் கொள்ளவும்.
 • உப்பு சேர்த்து ஓர் இரவு முழுவதும் புளிக்கவிடவும்.
 • இத்துடன் பனங்கிழங்கு மாவை சேர்த்து கொள்ளவும்.
 • நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கலந்து கொள்ளவும்.
 • பனியார குழியில் எண்ணை ஊற்றி சூடானதும் பனியார மாவு ஊற்றவும்.
 • இருபுறமும் வெந்தவுடன் சட்னியுடன் பரிமாரவும்.

பனங்கிழங்கு மாவு சேர்த்த ரொட்டி

 

தேவையான பொருட்கள்

அரிசி

80 கி

பனங்கிழங்கு மாவு

20 கி

வெங்காயம்

10 கி

பச்சை மிளகாய்

15 கி

பெருங்காயம்

3 கி

சீரகம்

2 கி

கருவேப்பிலை

2 கி

எண்ணெய்

10 மிலி

உப்பு

தேவைக்கு ஏற்ப

செய்முறை

 • அரிசி மாவு மற்றும் பனைகிழங்கு மாவை கலந்து கொள்ளவும்
 • மற்ற பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
 • சூடான தோசைக்கல்லில் தட்டையாக மாவை பரப்பி எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.

பனங்கிழங்கு மாவு சேர்த்த புட்டு

 

தேவையான பொருட்கள்

அரிசி

90 கி

பனங்கிழங்கு மாவு

10 கி

வெல்லம்

20 கி

பச்சை மிளகாய்

10 கி

உப்பு

தேவைக்கு ஏற்ப

செய்முறை

 • அரிசி மற்றும் பனைங்கிழங்கு மாவிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
 • மாவை 20 - 25 நிமிடத்திற்கு வேகவைக்கவும்
 • வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும் சூடாக பரிமாறவும்

பனங்கிழங்கு மாவு சேர்த்த உப்புமா

 

தேவையான பொருட்கள்

ரவை

90 கி

பனங்கிழங்கு மாவு

10 கி

வெங்காயம்

20 கி

மிளகாய்

5 கி

கருவேப்பிலை

2 கி

கடுகு

2 கி

உளுந்து

2 கி

கொண்டகடலை

2 கி

எண்ணெய்

8மிலி

உப்பு

தேவைக்கு ஏற்ப

செய்முறை

 • ரவை மற்றும் பனங்கிழங்கு ரவையும் சேர்த்து தேவையான பதத்திற்கு வறுக்கவும்.
 • ரவையை தவிர மற்றப்பொருட்களை எண்ணெய்யில் வறுக்கவும்.
 • தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதினிலைக்கு கொண்டுவரவும்.
 • வறுத்த ரவை கலவையை சிறுது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கலக்கவும்.
 • 15-20 நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
 • சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.64285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top