பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பதப்படுத்தப்பட்ட பனைபொருட்கள்

பதப்படுத்தப்பட்ட பனைபொருட்கள் பற்றிய தகவல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

பனைபொருட்கள்

பனை உலகின் பூக்கும் தாவரங்களில் பழமையானதாக கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக பல வகையான பனைகளிலிருந்து இனிப்பு கள், புளிக்க வைத்த பானங்கள், பனப்பாகு, பனை வெல்லம் பனையிலிருந்து பெறப்படுகிறது. உலகின் முதல் சர்க்கரை ஆதாரமாக அரங்கா பினாட்டா எனும் பனைவகை விளங்குகிறது. கி.மி 4-ஆம் நூற்றாண்டில் பொராசஸ் ஃபிலாபெலிபர் பனை வெல்லத்தை பற்றி மன்னர் சந்திர குப்தரின் கிரேக்க தூதுவர் மற்றும் வரலாற்று வல்லுவரான மெகஸ்தனிஸ் குறிப்பு வரைந்துள்ளார். இலங்கையில் காரியோடா யுரன்ஸ் சாற்றிலிருந்து பிரிதெடுக்கப்படும் வெல்லம் மற்றும் பாகு பழங்காலத்திலிருந்து முக்கிய சர்க்கரை ஆதாரமாக உள்ளது. ஆப்பிரிக்காவில் பனைச்சாறு பாரம்பரிய மது உற்பத்திக்கு பயன்படுகிறது.

பெரும்பாலான பனை வகைகள் பனைசாறுக்கு மட்டுமல்லாது பழங்கள், கட்டுமானப்பொருகட்கள், எரிபொருள், இழைகள், மெழுகு போன்று பலவகைகளில் பயன்படுகிறது. கிராமபுற மக்களுக்கு சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக பனை விளங்குகிறது. காந்தி பொராசஸ் ஃபிலாபெலிபர் வகை பனையை வறுமையை போக்கும் வகையான மூலதனமாக கருதினார். தமிழ் நாட்டில் அருணாச்சலம் அவர்களால் இயற்றப்பட்ட தமிழ் பாரம்பரிய கவிதை தொகுப்பான தலா விலாசம் பனையின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டு பனையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் 801 வகையான பனைப்பொருட்களை பட்டியலிடுகிறது. குடிசை தொழிலுக்கு ஏற்றதாக பனையை இயற்கை படைத்திருக்கிறது.பனை மரங்கள் இருக்குமிடத்தில் பனை வெல்லம் எளிதாக பெறலாம்.

இந்தியாவில் தமிழ் நாடு பனைப்பொருட்களின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது. நம் நாட்டில் உள்ள 8.59 கோடி பனை மரங்களில் தமிழ் நாட்டில் சுமார் 5.10கோடி மரங்கள் உள்ளன. பனை பொருட்கள் ஏற்றுமதி மூலம் அந்நிய செலவானி ஈட்ட தமிழ் நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தாகம் தனிப்பதற்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் பனை நொங்கு சிறந்தது. பதப்படுத்தப்பட்ட நொங்கு சிறந்த மதிப்புக்கூட்டு பொருளாக முன்னிருத்தப்படுகிறது. பதனி, பனை வெல்லம், பனை சர்க்கரை, மிட்டாய், பதப்படுத்தப்பட்ட நொங்கு, பழக்கூழ் மற்றும் பனை சாக்லேட் சந்தையில் கிடைக்கிறது.

செய்முறைகள்

நுங்கு பழச்சாறு கலந்த பானம்

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

800 கி

திராட்சை

200 கி

அன்னாசி பழம்

200 கி

மாம்பழம்

200 கி

சர்க்கரை

2 கிலோ

சிட்ரிக் அமிலம்

2 கி

பாதுகாப்பான்

0.1 கி

தண்ணீர்

1 லி

செய்முறை

நுங்கு பனங்கூழ்

திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல்

சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்)

சர்க்கரைப்பாகு வடிகட்டுதல்

சர்க்கரைப்பாகு குளிர்வித்தல்

பழக்கூழுடன் சேர்த்தல்

நுண்ணுயிரி நீக்குதல்

பாதுகாப்பான் சேர்த்தல்

குடுவையில் அடைத்தல்

காப்பு உறையிடல்

சேமித்தல்

நுங்கு தயார் நிலை பானம்

 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

800 கி

திராட்சை

200 கி

அன்னாசி பழம்

200 கி

மாம்பழம்

200 கி

சர்க்கரை

2 கிலோ

சிட்ரிக் அமிலம்

2 கி

பாதுகாப்பான்

0.1 கி

தண்ணீர்

2.5 லி

செய்முறை

நுங்கு பனங்கூழ்

திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல்

சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்)

சர்க்கரைப்பாகு வடிகட்டுதல்

பழக்கூழுடன் சேர்த்தல்

பாதுகாப்பான் சேர்த்தல்

குடுவையில் அடைத்தல்

காப்பு உறையிடல்

நுண்ணுயிரி நீக்குதல் (80c 30நிமிடத்திற்கு)

ஆறவைத்தல்

சேமித்தல்

நுங்கு பழப்பாகு (ஜாம்)

 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

800 கி

திராட்சை

200 கி

அன்னாசி பழம்

200 கி

மாம்பழம்

200 கி

சர்க்கரை

750கி

சிட்ரிக் அமிலம்

5 கி

செய்முறை

நுங்கு பனங்கூழ்

திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல்

சர்க்கரை சேர்த்தல்

குறைந்த தீயில் வைத்தல் தொடர்ந்து கலத்தம்

சிட்ரிக் அமிலம் மற்றும் நிறமிகள் சேர்த்தல்்

மிருதுவாக உருண்டை பதம்(TSS 68bx/105 c)

சுத்தமான கலன்களில் ஊற்றுதல்

காப்பு உறையிடல்

சேமித்தல்

நுங்குப்பாகாய் வடித்த பழப்பாகு (ஜெல்லி)

 

 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

100 கி

சர்க்கரை

75 கி

சிட்ரிக் அமிலம்

0.2 கி

பெக்டின்

2 கி

செய்முறை

நுங்கு சுத்தம் செய்தல்

சிறு துண்டுகளாக வெட்டுதல்

பழத்தை போன்று 1 1/2 மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க செய்தல்

வடிகட்டுதல்

பெக்டின் சோதனை(சர்க்கரை அளவை நிர்ணயம் செய்வதற்காக)

சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்தல்

கொதிக்கவைத்தல்

ஏடுகளாக விழும் வரை சோதனை (65° Bx/105° c)

நுறை அகற்றுதல்

நிறமி சேர்த்தல்

சுத்தமான குடுவைகளில் சூடாக நிறப்புதல்

காப்பு உறையிடல்

சேமித்தல்

நுங்கு மிட்டாய்

 

 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

100 கி

சர்க்கரை

300 கி

சிட்ரிக் அமிலம்

0.5கி

செய்முறை

நுங்கு சுத்தம் செய்தல்

பழங்களை சர்க்கரை சேர்ப்பதற்காக தயார் செய்தல்

பழங்களை 40% TSS சர்க்கரை பாகில் ஊறவைத்தல்

பழம் அகற்றுதல்

சர்க்கரைப்பாகை 50% TSS-க்கு சர்க்கரை சேர்த்து அதிகரித்தல்

பழத்தை ஒரு நாளைக்கு ஊறவைத்தல்

மேற்கூறிய செய்முறையை கொண்டு சர்க்கரைப்பாகை 50-லிருந்து 75%

TSS அதிகரித்தல்

75%TSS-ல் பழங்களை ஒரு வாரத்திற்கு ஊறவைத்தல்

பழங்களை வடிகட்டுதல்

நுங்கு மிட்டாய்களை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து தேவையற்ற சர்க்கரை பாகை நீக்குதல்

நிழலில் காயவைத்தல்/இயந்திர உலர்ப்பானில் 6 - 8 மணி நேரத்திற்கு 50° c வைத்தல் ்

பொடித்த சர்க்கரை அல்லடு சோள மாவை தூவுதல்

நுங்கு பதனிடல்


 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

100 கி

சர்க்கரை

300 கி

சிட்ரிக் அமிலம்

0.5 கி

செய்முறை

நுங்கு சுத்தம் செய்தல்

சிறு துண்டுகளாக வெட்டுதல்

சர்க்கரை பாகில் கொதிக்கவைத்தல் (68° Bx)

ஆறவைத்தல்

உலர்ந்த கலன்களில் நிரப்புதல்

காப்பு உறையிடல்

நுங்கு இனிப்பு சோடா

 

 

 

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

100 கி

சர்க்கரை

300 கி

சிட்ரிக் அமிலம்

0.5 கி

செய்முறை

நுங்கு பனங்கூழ்

திராட்சை, அன்னாசி, மாம்பழம் கூழாக்கி பனங்கூழுடன் கலத்தல்

சர்க்கரைப்பாகு தயாரித்தல்(சர்க்கரை + தண்ணீர் + சிட்ரிக் அமிலம் கரையும் வரை சூடாக்கவும்)

சர்க்கரைப்பாகு வடிகட்டுதல்

சர்க்கரைப்பாகு குளிர்வித்தல்

பழக்கூழுடன் சேர்த்தல்

நுண்ணுயிரி நீக்குதல்

பாதுகாப்பான் சேர்த்தல்

குடுவையில் அடைத்தல்

காப்பு உறையிடல்

சேமித்தல்

நுங்கு பனிக்கூழ்

தேவையான பொருட்கள்

பனங்கூழ்

20 கி

சோளமாவு

80 கி

சர்க்கரை

800 கி

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி

100 கி

நிலைபடுத்தி(ஜெலாடின்)

6 கி

பால்மமாக்கி

6 கி

பால்

500 மிலி

பாலேடு

60கி

திரவ குளுக்கோஸ்

15கி

செய்முறை

  • கனமான பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவும்.
  • கொதிக்கவைக்கவும்.பனங்கூழ்,சோளமாவு, சர்க்கரை கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொடி, நிலைபடுத்தி(ஜெலாடின்), பால்மமாக்கி ஆகியவற்றை காய்ச்சாத பால் சேர்த்து கூழாக அரைத்து கொதிக்கும் பாலுடன் சேர்க்கவும்.
  • பின் திரவ குளுக்கோஸ் சேர்த்து இடைவிடாது கலக்கவும்.
  • ஆரவைத்தப்பின் பாலேடு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இவற்றை கலவை கருவியில் இட்டு உறைவிக்கும் முன் 30 நிமிடம் கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை பனிக்கூழ் கோப்பையில் ஊற்றி உறைநிலை கருவியில் 4 மணி நேரம் வைக்கவும்.
  • மிருதுவான வழுவழுப்பான பனிக்கூழ் பெற ஒவ்வொரு 1/2 மணி நேரத்திற்கும் கலக்கி -2° c உறைநிலையில் வைக்கவேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.90909090909
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top