பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிழல் வீடு

தோட்டக்கலை பயிர்களை வளர்ப்பதில் மற்றும் தளம் தேர்வு செய்வதில் நிழல் வீடுகளின் தேவைகள் பற்றியும், அடிப்படையான நிழல் வீடுகளை கட்டுவதற்கு தேவைப்படும் கட்டுமான பொருட்கள் பற்றியும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன

நிழல் வீடு என்பது, வேளாண் வலை அல்லது இதர பிண்ணப்பட்ட வலைகளினால் சூழப்பட்ட அமைப்பாகும். தேவையான சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் காற்று ஆகியவை வ்லையின் துவாரங்கள் வழியே உட்செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வமைப்புகள் செடி வளர்ச்சிக்கு தேவையான நுண் சூழ்நிலையை உருவாக்குகிறது. இவை, நிழல் வலை வீடு அல்லது வலை வீடு என்றும் அழைக்கப்படுகிறது.


நிழல் வீட்டின் பயன்கள்

  • பூச் செடிகள், தழை மட்டும் காணப்படும் செடிகள், மூலிகை செடிகள், காய்கறிகள் மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஆகியவைகளின் சாகுபடிக்கு உதவுகிறது
  • பழ மற்றும் காய்கறி நாற்றாங்கால்கள் மற்றும் வனப் பயிர்வகைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது
  • வேளாண் பொருட்களை தரமான முறையில் உலர்த்த உதவுகிறது
  • செடிகளை பூச்சி தாக்காதவாரு பாதுகாக்கிறது
  • இயற்கையான வானிலை இடையூறுகளாகிய காற்று, மழை, பனி மற்றும் கல்மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது
  • ஒட்டுச்செடிகளை உருவாக்கவும், வறண்ட கோடை காலங்களில் அவைகள் மடிவதைக் குறைக்கவும் உதவுகி
  • திசுவளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்படும் செடிகளை கடினப்படுத்துவதற்கும் உதவுகிறது
நிழல் வீட்டிற்காக திட்டமிடுதல்

நிழல் வீட்டிற்கான அமைப்பை திட்டமிடும்போது, வளர்க்கப்பட போகிற பயிர் வகை, உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் கால சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக திட்டமிட வேண்டும்.

இடத்தை தேர்ந்தெடுத்தல்

இடுபொருட்களை வாங்குவதற்கும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பதற்கும், விற்பனைக் கூடங்களுடன் நன்றாக இணைக்கப்பட்ட இடத்தில் நிழல்வீடுகளை அமைக்க வேண்டும். இந்த அமைப்பானது பெரிய கட்டிடங்கள் மற்றும் மரங்களை விட்டு தூரமாகவும், தொழிற்சாலை மற்றும் வாகன மாசுபாடுகளினால் பாதிக்கபபடாதபடி இருத்தல் வேண்டும். நல்ல தரமான தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் தேவை. ஆகிலும் காற்று தடுப்பான்கள், இவ்வமைப்பிலிருந்து 30 மீட்டர் தொலைவில் இருக்கலாம்.

நிழல் வீடு அமைக்கபட வேண்டிய திசை

நிழல் வீடுகள் அமைக்கப்பட வேண்டிய திசையை நிர்ணயிக்க இரண்டு காரணிகளை கணக்கில் கொள்ள வேண்டும். அவையாவன, அமைப்பின் உட்புறத்தில் சீரான ஒளி காணப்படுதல் மற்றும் காற்றின் திசை. ஒரே பாகம் கொண்ட அமைப்பாக இருந்தால், அதை கிழக்கு-மேற்கு திசையிலோ அல்லது வடக்கு-தெற்கு திசையிலோ அமைக்கலாம். ஆனால், பல பாகங்கள் கொண்ட அமைப்பாக இருந்தால், வடக்கு-தெற்கு திசையில் அமைக்கப்படுவதே ஒரே சீரான ஒளி காணப்பட உதவும்.

தேவைப்படும் பொருட்கள்

நிழல் வீடு கட்டமைப்பை அமைக்க இரண்டு முக்கிய பொருட்கள் தேவைப்படுகிறது. அவையாவன, சட்டம் (பஃரேம்) மற்றும் மூடப் பயன்படும் வலை. அமைப்பின் சட்டமானது வலை மூட உறுதுணையாக இருப்பதோடு, காற்று, மழை மற்றும் பயிர் வலுவிலிருந்து பாதுகாக்கிறது. துரு பிடிக்காமல் பராமரிக்கப்பட்டால், மிதமான எஃகு (ஸ்டீல்) சட்டங்கள் 20-25 வருடங்கள் வரை உழைக்கும். மூங்கில் சட்டங்களோ 3-5 வருடங்கள் வரை உழைக்கும். வலைகளானது, பல்வேறு நிறங்களிலும், பல்வேறு அளவு (25%, 30%, 35%, 50%, 60%, 75% மற்றும் 90%) .
நிழல் தரக்கூடியவைகளாகவும் கிடைக்கின்றன. இவை கால சூழ்நிலையை பொருத்து 3-5 வருடங்கள் வரை பயன்படும். நிழல் வீடுகளின் சட்டங்கள் தேவைக்கேற்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை பொருத்து அமைக்கப்படுகிறது. அதிக மழை காணப்படும் ஒரிசா போன்ற பகுதிகளில் அங்கே நிலவும் சூழ்நிலைக்கேற்றார் போல் நிழல் வீடு அமைக்கப்பட வேண்டும்.

நிழல் வீடு வடிவமைத்தல் மற்றும் அமைத்தல்

ஒரிஸா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், புவனேஸ்வரில் உள்ள துல்லிய பண்ணை மேம்பாடு மையமானது இரண்டு வகையான நிழல் வீடு வடிவமைப்புகளை உருவாக்கி உள்ளது. இந்த வகையான நிழல்வீடுகளின் சிறப்பு தன்மையானது, இவற்றைக் கட்ட வெல்டிங் தேவைப்படுவதில்லை. மேலும், நிலத்தில் நாட்டப்படும் கம்புகளானது, கரையான் தாக்காத விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த விதமான நிழல் வீடுகளைப் பற்றிய விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிழல் வீடு 1

இதன் வடிவமைப்பானது மிதமான எஃகு (மைல்டு ஸ்டீல்) ஆங்கில் (35 மி.மி x 35 மி.மி x 6 மி.மி) மற்றும் மூங்கில் பஃரேம் கொண்டு அமைக்கப்படுகிறது. மிதமான எஃகு ஆங்கில், அடித்தள கம்பங்களாக பயன்படுத்தப்படுகிறது. அவற்றின் கீழ்பகுதி பிடிப்பு கிடைக்கும் படியாகவும், மேல்பகுதி மூங்கில் கம்புகளை பிடிப்பதற்கு ஏதுவாக ‘U’ வடிவ அமைப்புகளோடும் வடிவமைக்கப்ட்டுள்ளது. மூங்கிலானது கூரை மற்றும் உத்தரமாக பயன்படுத்தப்படுகிறது. நிழல் வீடு அமைய உள்ள இடத்தை சமப்படுத்திவிட்டு, பின்பு அமைப்பை அமைக்க திட்டமிட வேண்டும். அடித்தள கம்பங்களை நடுவதற்கு குழிகள் வெட்டப்பட்டு, அவற்றின் ஒரு பகுதி மணல் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கவேண்டும். பின்பு, கம்பங்களானது சிமெண்ட் கலவை கொண்டு நிறுவப்பட்டு, 3 பக்க வரிசையில் சரியாக அமைக்கப்பட வேண்டும். இதன் பிறகு, கூரை வேயவும், உத்தரம் அமைக்கவும் ஏற்ற வகையில் மூங்கிலானது வெட்டப்பட்டு, கூரை அமைய நன்றாக கட்டப்படுகிறது. கதவு அமைப்புகளும், மற்ற ஏற்கனவே வடிவமைக்கபட்ட அமைப்புகளும் அடிப்படை அமைப்புடன் திருகுகள் மற்றும் உலோக நடுகளை கொண்டு நன்றாக கட்டப்படுகிறது. அதன் பின் 50 - 75% வேளான் நிழல் வலைகள் கூரை பகுதியிலும் 30% வலைகள் பக்க பகுதியிலும் பொருத்தப்படுகிறது. உள் பகுதியில் உள்ள மூலை பகுதிகள் மற்றும் கதவுகளும் நிழல் வலைகளை கொண்டு மூடப்டுகிறது. கடைசியாக மத்தியில் உள்ள நடைபாதை பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளும் செங்கள் பூச்சு வேலை கொண்டு அமைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு நிழல் வீடு அமைப்பிற்கு ஆகும் செலவு ரூபாய் 225/சதுர அடி. இந்த அமைப்பிற்கு தேவைப்படும் பொருட்கள் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் பட்டியல் (நிழல்வீடு I)

வ. எண்

விபரம்

பொருள்

விபரக் குறிப்பீடு

அளவு

1.

U அமைப்பிலான அடிப்படை கம்புகள்

MS கோண இரும்பு

35 மி.மீ X 35 மி.மீ X 6 மி. மீ

209 கிலோ

 

 

MS தட்டை

25 மி.மீ X 6 மி. மீ

7 கிலோ

2.

கதவு அமைப்பு மற்றும் கடைச்சட்டம்

MS கோண இரும்பு

35 மி.மீ X 35 மி.மீ X 6 மி. மீ

71 கிலோ

3.

கூரை வடிவமைப்பு

மூங்கில்

75 மி.மீ – 100 மி. மீ விட்டம்

20 எண்ணிக்கை

4.

கூரை மற்றும் பக்க மூடி

வேளாண் நிழல் வலை

50% - 70% மற்றும் 30%

328 சதுர மீட்டர்

5.

அஸ்திவார அமைப்பு

சிமெண்ட் காண்கீரிட்

1:2:4 ,12 மி.மீ துகள்களுடன்

1.3 மீ3

6.

துருப்பிடிக்காமல் இருக்க வழி செய்தல்

எனாமல் பெயிண்ட், தின்னர்

-

4 லிட்டர்

7.

அமைப்பை எழுப்புதல்

நட், போல்ட்

3/8”x1”

1 கிலோ

 

 

GI கம்பி

4 மி.மீ

2 கிலோ

8.

தளமிடப்பட்ட நடை பாதை

செங்கள் பூசு வேலை

சிமெண்ட் மார்டர் (1:6)

2.4 மீ3

நிழல் வீடு II

இதன் வடிவமைப்பில் எம்.எஸ் கோணமானது (40 மி.மீ x 40 மி.மீ x 6 மி.மீ) அடிபடை கம்புகள், உத்தரம், கடை சட்டம் மற்றும் நிழல் வீட்டின் கதவு அமைப்பு ஆகியவை செய்ய பயன்படுகிறது. எம்.எஸ் தட்டையானது உலோக வளையம் செய்யவும் உடுப்பு பொருட்களுக்கு உதவியாகவும் பயன்படுகிறது. அடிப்படை கம்புகளில் உத்தரம் மற்றும் உலோக வளையங்களை நட் மற்றும் போல்ட் கொண்டு இணைக்க வசதிகள் உள்ளது. அதேப் போல் உலோக வளையமாக பயன்படும் எம்.எஸ் தட்டையானது உத்தரத்தை இணைப்பதற்கான வசதிகள் கொண்டுள்ளது. சமப்படுத்துதல் மற்றும் அமைப்பை திட்டமிடுதல் ஆகியவை நிழல் வீடு ஒன்றில் செய்யப்பட்டதை போல் செய்யபடுக்கிறது. அடிப்படை கம்புகளானது சிமெண்ட் கலவை கொண்டு நிறுவப்பட்டு, ஏழு நாட்களுக்கு குயிரிங் செய்யப்படுகிறது. உத்தரம், உலோக வளையம், கடைச் சட்டம் மற்றும் கதவு சட்டம் ஆகியவை நட் மற்றும் போல்ட் கொண்டு நன்றாக கட்டப்படுகிறது. அதன் பின், வலைகளானது பொருத்தப்படுகிறது. கடைசியாக மத்தியப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளும் செங்கள் பூச்சு வேலை கொண்டு செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட ரு நிழல் வீடு அமைப்பிற்கு ஆகும் செலவு ரூபாய் 500/சதுர அடி. இந்த அமைப்பிற்கு தேவைப்படும் பொருட்கள் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் பட்டியல் (நிழல்வீடு- II)

வ. எண்

விபரம்

பொருள்

விபரக் குறிப்பீடு

அளவு

1.

அடிப்படை கம்பகள்

எம்.எஸ் கோண இரும்பு

40 மி.மீ X 40 மி.மீ X 6 மி. மீ

336 கிலோ

2.

உத்தரம் மற்றும் கடைச்சட்டம்

எம்.எஸ் கோண இரும்பு

40 மி.மீ X40 மி.மீ X 6 மி. மீ

305 கிலோ

3.

கதவு அமைப்பு

எம்.எஸ் கோணம்

40 மி.மீ X40 மி.மீ X 6 மி. மீ

41 கிலோ

4.

உலோக வளையங்கள்

எம்.எஸ் தட்டை

30 மி.மீ X 6 மி. மீ

159 கிலோ

5.

கூரை மற்றும் பக்க மூடி

வேளாண் நிழல் வலை

50% - 70% மற்றும் 30%

328 சதுர மீட்டர்

6.

அஸ்திவார அமைப்பு

சிமெண்ட் காண்கீரிட்

1:2:4 ,12 மி.மீ துகள்களுடன்

1.8 மீ3

7.

தளமிடப்பட்ட நடை பாதை

செகள் பூசு வேலை

சிமெண்ட் மார்டர் (1:6)

2.4 மீ3

8.

அமைவை எழுப்புதல்

திருகு மற்றும் உலோகத் துண்டுகள்

3/8”x1”

4 கிலோ

 

 

GI கம்பி

4 மி.மீ

4 கிலோ

9.

துருப்பிடிக்காமலிருக்க வழி செய்தல்

எனாமல் பெயிண்ட் தின்னர்

-

8 லிட்டர

 

 

தகவல் : ncpah

2.82857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top