பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வறட்சி மேலாண்மை

பயிர் உற்பத்தியின் போது வறட்சியை குறைக்க மேற்கொள்ள வேண்டிய பொதுவான வறட்சி மேலாண்மை மற்றும் அவசர திட்டங்களை பற்றி இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன

வறட்சி வருவதை கண்டறிதல்

அனுபவங்களை கொண்டு, வேளாண் பட்டங்களில் / பருவங்களில் வரப் போகும் வறட்சியை குறிப்பிடும் சில எச்ச்ரிக்கை சூழ்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன;

கரீஃப் (ஜுன் - ஆகஸ்ட் காலக்கட்டத்தில் விதைப்பு)

  • தென் மேற்கு பருவ மழை காலதாமதமாகுதல்
  • தென் மேற்கு பருவ மழை செயல்பாட்டில் அதிக இடைவெளி
  • ஜுலை மாதத்தில் போதுமான மழை பொழியாது இருத்தல்
  • கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்
  • நீர் சேமிப்பு அணைகளில், நீர் வரத்து அதிகமாகாமல் இருத்தல்
  • கிராமபுற குடிநீர் தேவைகளை சந்திக்கும் நீரிநிலைகள் வற்றுதல்
  • வறட்சியற்ற நல்ல வருடத்தில் காணப்படும் அளவிற்கு, நிலங்களில் தொடர் விதைப்பு செயல்பாடுகள் குறைவுபடுதல்

ரபி (நவம்பர் - ஜனவரி காலக்கட்டத்தில் விதைப்பு)

  • தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசியில் (செப்டம்பர் 30ல்) போதுமான மழை இல்லாது இருத்தல்
  • வறட்சியற்ற வருடத்தில் உள்ள நிலத்தடி நீரை விட, நிலத்தடி நீர் கம்மியாதல்
  • அணைகளில் நீர் மட்டம் வழக்கத்தை விட குறைவாக இருத்தல். இது தென் மேற்கு பருவ மழைக்கு பின்பு, குறைந்த அளவு நீர்வரத்தை குறிக்கும்
  • மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைந்து காணப்படுதல்
  • கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்
  • தமிழ் நாடு மற்றம் புதுச்சேரிக்கு, வடகிழக்கு பருவ மழை, மிக அவசியமாகும் (அக்டோபர் - டிசம்பர்)

ஏனைய பருவங்களுக்கு

  • குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் பகுதிகளுக்கு, மார்ச் அல்லது ஏப்ரல் முக்கிய மாதங்களாகும். இந்த சமயங்களில், போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்தால், பல பகுதிகளில் தீவிர குடிநீர் தட்டுபாடு காணப்படும்.
  • சில மாநிலங்களுக்கு, சில பயிர்களுக்கு வருடத்தில் குறிப்பட்ட நேரத்தில் ஏற்படும் மழை மிக முக்கியமானதாகும் உதாரணத்திற்கு, கேரளாவில் பணப்பயிர்களுக்கு, பிப்ரவரியில் மழை அவசியமாகும்

மூலம்: வேளாண் துறை

இந்தியாவின் வறட்சி - சில தகவல்கள்

இந்தியாவில், பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை (ஜுன் - செப்டம்பர்) பொய்க்கும் போது, வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அடுத்த பருவகாலம் வரும் வரை பயிரிடுவதற்கு காத்திருக்க வேண்டும். ஏனென்றால், நாட்டின் 73% வருடாந்திர மழை, தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே கிடைக்கிறது.

நாட்டின் மழை அளவு பற்றிய புள்ளி விவர குறிப்புகள் அடிப்படையில், வறட்சி சம்பந்தப்பட்ட கீழ்கண்ட தகவல்களை அறியலாம்.

  • நம் நாட்டின் மொத்த பரப்பளவில், 16% வறட்சியடைவதற்கான வாய்ப்பும், வருடத்தில் 50 மில்லியன் மக்கள் வறட்சியின் தாக்கத்திற்கும் ஆளாகின்றனர்.
  • Êசாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில், 68% வெவ்வேறு அளவிளான வறட்சி சூழ்நிலைகளை சந்திக்கிறது
  • 35% பரப்பளவு, 750 - 1125 மீ.மீ மழையை பெறக்கூடியவை. இவை வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • பெரும்பாலும் வறட்சிக்கு உட்படும் பகுதிகள், வறண்ட நிலப்பகுதி (19.6%), பகுதி வறண்ட நிலப்பகுதி (37%) மற்றும் மிதமான ஈரப்பசையை உடைய நிலப்பகுதி (21%) ஆகிய பகுதிகளே ஆகும். இவை நாட்டின் மொத்த நிலப்பரப்பான 329 மில்லியன் ஹெக்டரில், 77.6% ஆகும்.
  • நாட்டின் சராசரி வருடாந்திர மழை அளவு 1160 மீ.மீ ஆகும். இதில் 85%, 100-120 நாட்களுக்குள்ளேயே (அதாவது தென்மேற்கு பருவ மழையின் போது) பெறக்கூடியது.
  • 33% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியவை. இவை கடுமையான வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம்.
  • 21% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியது (இராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் தீபகற்ப பகுதி)
  • பத்து வருடத்தில், நான்கு வருடங்கள் நிலையற்ற மழையை பெறக்கூடியது இந்திய வானிலை.
  • இந்நியாவின் பாசன திறன் 140 மில்லியன் ஹெக்டர் ஆகும் (76 மில்லியன் ஹெக்டர் நிலமட்ட நீர்ப்பாசனம் + 64 மில்லியன் ஹெக்டர் நிலத்தடி நீர் பாசனம்)
  • குறைந்து வரும் நிலத்தடி மற்றம் நிலமட்ட நீர் வசதிகள், சாகுபடி செய்யப்படும் அனைத்து நிலங்களும் பாசனம் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை என்பதை குறிக்கிறது.
  • பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நகரமயமாதல், தீவிர சாகுபடி மற்றும் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியன, தனி நபருக்கான நீர் கிடைக்கும் நிலையை குறைய செய்கிறது. இப்பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.
  • இதனால், வறட்சி சில பகுதிகளிலோ அல்லது பல பகுதிகளிலோ வருவதை தவிர்க்க இயலாது.


வறட்சி நிலங்களில் விவசாயம்

மூலம்: வறட்சி - தேசிய நெருக்கடி மேலாண்மை திட்டம், இந்திய அரசின் வேளாண் அமைச்சகம்

Filed under:
2.73469387755
Anonymous Jan 23, 2018 05:39 AM

பயனுள்ள கருத்து

Anonymous Sep 26, 2015 02:36 PM

குட்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top