பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சந்தை விவரம்

இந்தியாவிலுள்ள பல்வேறு வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான வலைத்தளங்களின் இணைப்புகளை வழங்குகிறது

Video image1


தினசரி சந்தை நிலவரம்.

தினசரி சந்தை நிலவரம் (DMI)

வேளாண் விளைபொருட்களின் விற்பனையில், குறிப்பாக விரைவில் அழுகும் தன்மையுள்ள காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களின் பொருட்களின் விற்பனையில், உரிய நேரத்திற்குள்ளான சந்தை தகவல் பரிமாற்றம் மிக முக்கியம். சரியான சந்தை நிலவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு இல்லாமையாலும், இடைத்தரகர்களின் தலையீடுகளாலும் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அருகாமையிலுள்ள ஏதோ ஒரு சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு தங்களின் அருகாமையிலுள்ள பிற முக்கிய சந்தைகளின் விலை நிலவரங்களை அன்றாடம் தேவைக்கேற்ப தெரியப்படுத்தினால், அது அவர்கள் தங்களின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க ஏதுவாக அமையும். தகவல் தொடர்பு மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இத்தகைய சேவைகளை சாத்தியமாக்கியுள்ளது. 'தினசரி சந்தை நிலவரம்’ (DMI) சேவையின் நோக்கம் விவசாயிகளுக்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை விவரங்களை அவர்களின் தேவைக்கேற்ப வழங்குவதே ஆகும்.

இச்சேவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சி-டாக்(C-DAC) இன் இந்திய முன்னேற்ற நுழைவாயில் திட்டத்தின் கூட்டு முயற்சி ஆகும். இதன்மூலம் தமிழகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சந்தைகளின் அன்றாட விலை நிலவரங்களை இணையதளம் மற்றும் மொபைல் வழியாக தினசரி பெறலாம்.

எந்தெந்த சந்தைகள் பற்றிய தகவல் கிடைக்கும்?

கொச்சின், கோவை (எம்.ஜி.ஆர் மார்க்கெட்), ஒட்டன்சத்திரம், சென்னை (கோயம்பேடு), திருச்சி (காந்தி மார்க்கெட்), பெங்களூரு (கே.ஆர் மார்க்கெட்), ஓசூர், கும்பகோணம், மதுரை, மேட்டுப்பாளையம், பண்ருட்டி, தலைவாசல் மற்றும் திருநெல்வேலி

தகவல் பெறுவது எப்படி?

எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) சேவை:

தினசரி சந்தை விவரங்களை இலவசமாக உங்கள் கைபேசி மூலம் பெற agritech.tnau.ac.inஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்

இணையதளம் வழியாக:

நியமிக்கப்பட்டுள்ள சந்தை ஆய்வாளர்கள் தினமும் சந்தைகளுக்கு நேரடியாக சென்று, அன்றைய விலை நிலவரங்களைப் பெற்று, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) வேளாண் விரிவாக்க இயக்குநரகத்தில் இயங்கும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிலையத்திற்கு அனுப்புகின்றனர். அங்கு வல்லுநர்களைக் கொண்டு பெறப்பட்ட தகவல்கள் சரிபார்த்தபின்னர் உடனுக்குடன் agritech.tnau.ac.in இணையதளத்தில் சேர்க்கப்படுகிறது.

தற்போது அளிக்கப்படும் சேவைகள்

  • 161 வகையான விளை பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த விலை பற்றிய தகவல்கள்.
  • குறிப்பிட்ட 13 சந்தைகளின் மார்க்கெட் நிலவரங்கள்
  • விவசாய சங்கங்கள், கூட்டமைப்புகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட சந்தைகளின் முகவரிகள்,  குறைந்தபட்ச ஆதரவு விலை, முன்னோடி விவசாயிகள் பின்பற்றிய செய்திகள் முதலியன
  • சந்தை விலைகளை ஓப்பீடு செய்து முந்தைய நாள்/வாரம்/மாத நிலவரங்களையும் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி :

இயக்குநர்
விரிவாக்க கல்வி இயக்ககம்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641003
தொலைபேசி 0422-6611233

தொடர்புடைய வளங்கள்:

3.10563380282
யாசர் அரபாத் Sep 13, 2019 10:43 AM

பூண்டு பற்றிய மேலும் செய்திகளை பதிவு செய்யவும்

முஹம்மது இப்ராஹிம் Jun 12, 2019 07:33 PM

மணிலா பயிர் விலை பட்டியல் சந்தை நிலவரம் தெறியப்படுத்தவும்

Jayamoorthi Apr 14, 2019 03:29 PM

கிரினி பழம் விலை நிலவரம்

உதயகுமார் Feb 01, 2019 11:26 AM

பயனுள்ள இணையம்

மெய்யப்பன் Jan 07, 2019 11:34 AM

மிகவும் பயனுள்ள இணையம்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top