பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாய துணுக்குகள்

விவசாயிகளுக்கு தேவையான உதவிக் குறிப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. துணுக்கு

தென்னக்கன்றினை தாக்கும் காண்டாமிருக வண்டினைக் கட்டுபடுத்த 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 1 கிலோ ஆமணக்கு ஆகிய இரண்டையும் தண்ணீரில் நன்கு கரைத்து, மண் சட்டியில் ஊற்றி, தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் வைத்தால், வண்டுகள் இதில் விழுந்து இறந்துவிடும்.

2. துணுக்கு

தென்னையில் மகரந்த சேர்க்கையை அதிகரித்து அதிக காய் பிடிக்க ஏக்கருக்கு ஜந்து தேனீ பெட்டிகளை வைக்கவும். தேன் கிடைப்பது இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

3. துணுக்கு

களர் நிலத்தை விளைநிலமாக மாற்ற பனை ஓலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வயல் முழுக்க பரப்பி விடவேண்டும். இரண்டு மாதத்தில் இது மட்கிவிடும் மூன்று முறை இவ்வாறு தொடர்ந்து செய்தால் களர் நிலம் வளமான நிலமாகும்.

4. துணுக்கு

விதைகளை சேமிக்க ஒரு யோசனை... புது மண்பானையை மாட்டு சிறுநீரால் கழுவி, ஒரு நாள் முழுக்க நிழலில் உலர வைத்து, இரண்டாவது நாள் வெயிலில் உலர வைத்து மூன்றாவது நாள் விதைகளை அதில் போட்டு மூடி வைத்தால், குறைந்தது இரண்டு வருடம் வரை விதைமுளைப்பு தன்னை குறையாமல் இருக்கும்.

5. துணுக்கு

கரும்பில் வெள்ளைக் கம்புளி அசுவினியைக் கட்டுப்படுத்த அசபேட் 75 SP (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) மருந்தை, தாக்கப்பட்ட வேர்களில் தெளித்தால் சிறந்த நீண்ட நாள் பலன் கிடைக்கும்.

6. துணுக்கு

பயிர் சுழற்சியில் பயிறுவகை பயிர்களை சாகுபடி செய்தல் நன்று.

7. துணுக்கு

பயிறுவகைப் பயிர்களில் மகசூலை அதிகரிக்க இரண்டு சதவித டீஏபி கரைசலைத் தெளிப்பீர்.

8. துணுக்கு

இரத்த சோகையை தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவுடன் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் நிறைந்த உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9. துணுக்கு

ஆடுகளை சாதாரண கொட்டில் முறையில் வளர்ப்பதை விட பரண்மேல் வளர்க்கும் போது ஒட்டுண்ணிகள் தொந்தரவு குறையும். மேலும் புழுக்கைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம்.

10. துணுக்கு

கொண்டைக் கடலை மற்றும் பட்டாணி போன்ற பயறு வகை விதைகளை கடுகு எண்ணெய்யில் நேர்த்தி செய்து நீண்ட காலம் சேமிக்கலாம்.

11. துணுக்கு

எசணி, பாகற்காய், பீர்க்கங்காய் மாதிரியான காய்கறி விதைகளை சூரிய ஒளியில் உலர்த்தி சாம்பலில் கலந்து சேமித்து அடுத்தப் பருவ பயிர் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்.

12. துணுக்கு

ஒரு மூட்டை அரிசியில் 10 - 15 காய்ந்த மிளகாய்களை போட்டு வைத்தால் வண்டு தாக்குதல் இருக்காது.

13. துணுக்கு

உளுந்து, தட்டைப்பயிறு, நரிப்பயிறு ஆகிய பயிறு வகை பயிர்களை சேமிச்சு வைக்கும் போது சாக்கு\ டிரம்ல் முதல் கைப்பிடி அளவு உப்பை அடியில் போட்டிட்டு, அதன் மேல் பயிறுகளை கொட்டி சேமிக்கனும். இப்படி செய்தால், எச்சி, பொட்டு எதுவும் வராது.

14. துணுக்கு

பொதுவாக எருமை மற்றும் மாடுகளுக்கு கொடுக்கும் அடர்தீவனத்தில் சத்துப் பொருட்கள் அதிகமாக இருக்கும். ஆனால் அடர் தீவனம் மட்டும் கொடுப்பதால் சத்துகள் கிடைத்தாலும் வயிறு நிறைவு பெறாது. மேலும் வயிறு கட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. வைக்கோல், புற்கள் ஆகியவை கொடுக்கும் போது அதில் நீர்ச்சத்தும் இருப்பதால் வயிறு நன்கு நிறைவு பெற்ற உணர்வு ஏற்படும். உலர் தீவனம் பால் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நல்ல ஆரேக்கியத்திற்கு பசுந்தீவனம், அடர்தீவனம், உலர்தீவனம் ஆகியவை தினசரி தீவனத்தில் இடம் பெற வேண்டும்.

15. துணுக்கு

பருத்தியில் சொலினாப்ஸிஸ் மாவுப்எச்சி, பினாக்காகஸ் சொலினாப்ஸிஸ் தாக்கம் மற்ற மாவுப்எச்சிகளை விட அதிகமாக இருக்கறது. மாவுப்எச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க உயரியல் எச்சிக்கொல்லிகளான வெர்டிஸியம் லெக்கானி (10 கிராம் / லிட்டர்) மற்றும் பிவேரியா பெஸியானா வை (10 மிலி / லிட்டர் ) அதிக ஈரப்பதம் கொண்ட ஆகஸ்டு - அக்டோபர் மாதங்களில் தெளிக்கவும்.

இயற்கை உரங்கள் உபயோகிப்பை ஊக்குவிப்பதற்கான உதவித்தொகை

அரசானது கீழ்காணும் திட்டங்கள் மூலம் இயற்கை உரங்கள் உபயோகிப்பை ஊக்குவிக்கின்றது

  • இயற்கை உர வேளாண்மைக்கான தேசிய திட்டம் (NPOF) – தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மூலம் பழ/காய்கறி கழிவுகளைக்கொண்டு இயற்கை இடுப்பொருள்கள் தயாரிக்கும் கட்டமைப்புக்கான உதவித்தொகையை திட்டச்செலவில் 25 % அல்லது அதிகபட்சமாக ரூபாய் 40 இலட்சத்தையோ உதவித்தொகையாக அளிக்கிறது. மண்புழு வளர்ப்பிற்காக ரூபாய் 1.50 இலட்சத்தை உதவித்தொகையாக அளிக்கிறது..
  • தேசிய தோட்டக்கலை மிஷன் (NHM) மூலம் மண்புழு உரம் தயாரிப்பு நிலையத்தை உருவாக்க ஒரு நபருக்கு ஆகும் செலவில் 50% அல்லது அதிகபட்சமாக ரூபாய் 30,000 அளிக்கிறது.
  • தேசிய மண் நலம் மற்றும் வளம் மேலாண்மை திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டேருக்கு இயற்கை உரத்திற்காக ரூபாய் 500-ஐ உதவித்தொகையாக அளிக்கிறது.
  • மேலும் வேளாண் மேம்பாட்டு திட்டம் (RKVY) மூலமும் angaga இயற்கை உரங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விவசாய பொருட்கள் சேமிப்புக்கான குளிர்சாதன கட்டமைப்புகளுக்கு அரசாங்க உதவி

கீழ்காணும் திட்டங்கள் மூலம் அரசானது குறிர்சாதன அறைகள் கட்டுவதற்கு உதவித்தொகை அளித்துவருகிறது.

  • தேசிய தோட்டக்கலை மிஷன் (NHM) மூலம் அறுவடைக்கு பிந்திய செயலுக்கான கட்டமைப்பு வசதிகளுக்கு கீழ் குளிர்சாதன அறைகளுக்கும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
  • சிக்கிம், ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேஷ் மற்றும் உத்தரகாண்ட் உட்பட வட கிழக்கு மாநிலங்களுக்கான ஒருங்கிணைந்த தோட்டக்கலை தொழில்நுட்ப மேம்பாட்டு மிஷன் கீழ் அறுவடைக்கு பிந்திய மேலாண்மையில் குளிர்சாதன அறை உருவாக்க, நவீனபடுத்த மற்றும் விரிவாக்கம் புரிவதற்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
  • தேசிய தோட்டக்கலை வாரியம் குளிர்சாதன சேமிப்பு மற்றும் தோட்டக்கலை பொருள்களுக்கான சேமிப்பு என்னும் திட்டத்தின் கீழ் குளிர்சாதன அறை உருவாக்க/ விரிவாக்க மற்றும் நவீன மையம் ஆக்குதல் ஆகியவற்றின் மூலதனத்திற்கான மான்யத்தை வழங்குகிறது.
  • வேளாண் மற்றும் பதப்படுப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் (APEDA) உட்கட்டமைப்பு மேம்பாடு என்னும் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த குளிரூட்டும் வசதியுடன் சேமிப்பு கிடங்குகளை கட்டுவதற்கு உதவித்தொகை அளிக்கிறது.
  • உணவு பதனிடு தொழில்சாலைகளின் அமைச்சகம் குளிர், மதிப்புக்கூட்டல் மற்றும் பதனிடு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் குளிர் சேமிப்புக்கான உதவித்தொகை அளிக்கிறது.

இவைகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள தேவைக்கேற்ற திட்டங்களாகும். அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைகள்படி இத்திட்டங்கள் கீழ் உதவி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகள் வழியாக நடத்தப்படும் உழவர்களுக்கான கணிணி வழியில் நடைபெறும் கல்வித்திட்டம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

Filed under:
3.01612903226
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top