பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

TNAU சமுதாய வானொலி

சமுதாய வானொலி ஒலிபரப்பு நிலையம் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

TNAU சமுதாய வானொலி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சமுதாய இ-வானொலி ஒலிபரப்பு நிலையம், இந்திய அரசின் அனுமதியுடன் புதுடில்லி உலக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மீடியா லேப் ஏசியா கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாய வானொலியின் முக்கியக் குறிக்கோள், அந்தந்தப் பகுதியிலுள்ள சமுதாய மக்களை ஒருங்கிணைக்கப்படுத்துவதே ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சமுதாய இ-வானொலி சுமார் 15-20 கிலோ மீட்டர் வரையில் பயன்படும். இதன் சிறப்பு அம்சம் இணையதள வானொலியில் கேட்கும் வாய்ப்பும் பெற்றுள்ளது. எனவே இந்த நிலையத்தில் தயாரிக்கப்படுகின்ற முக்கியமான நிகழ்ச்சிகளை, உலகம் முழுவதும் கேட்கும் சிறப்பு பெற்றது.

நோக்கங்கள்

  • தொழில்நுட்ப உரைகளை விவசாயிகள், பண்ணை மகளிர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு சமுதாய மக்களுக்கும் ஏற்புடைய வண்ணம் வடிவமைத்துத் தருவது.
  • கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருத்துக்களை புதிய புதிய வடிவங்களில் எழுதி, பேசி, பதிவு செய்து ஒலிபரப்புதல்.
  • தொலைபேசியில் நேரடி நிகழ்ச்சிகளை வடிவமைத்தல்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இ-விரிவாக்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து உலகெங்கும் கேட்பதற்கு வழிவகை செய்தல்.
  • பல்வேறு ஊடக வடிவத்தில் அமைத்து விவசாயிகள், சமுதாய மக்கள் மற்றும் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பது.
  • பல்கலைக்கழகத்தின் மற்ற ஊடகப் பிரிவுகளுக்கு தொழில்நுட்பக் கருத்துக்களை சிறப்பாக வடிவமைத்துக் கொடுக்கும் மையமாக செயல்படுதல்.
  • சமுதாய வானொலி வல்லுநர்களுக்கு செயல்முறை பயிற்சிக் கூடமாக செயல்படுதல்.
  • சமுதாயத்தின் பங்களிப்பினை மேம்படுத்தி, அனைத்துத் தரப் பயனாளிகள் வெற்றி அனுபவங்களைத் தொகுத்து சிறப்பாக ஒலிபரப்பு ஏற்பாடு செய்தல்.

3.1
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top