பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வெந்தயம் சாகுபடி

வெந்தயம் சாகுபடி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள்

கீரையாகவும், விதைகளாகவும் விவசாயிகளுக்கு நல்ல வருவாயை அளிக்கும் வெந்தய சாகுபடி முறையில் தகுந்த தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம்.

ரகங்கள்

கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1, கோ 2 ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

மண், தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச் சத்து மிகுந்த மணற்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.

பருவம்

ஜூன் - ஜூலை, அக்டோபர் - நவம்பர் மாதங்கள் வெந்தய சாகுபடிக்கு உகந்த பருவம்.

விதையளவு

ஹெக்டேருக்கு 12 கிலோ விதைகள் போதுமானது.

விதைநேர்த்தி

ஹெக்டேருக்கு 12 கிலோ விதைக்கு 1.5 கிலோ அசோஸ்பைரில்லம், 50 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு

நிலத்தை நன்கு உழுத பின்பு 3.5-க்கு 1.5 மீட்டர் அளவுள்ள பாத்திகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். விதைகளை 20-க்கு 15 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். பயிர் முளைக்கும் முன் 700 மிலி ப்ளுகுளோரலின் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் களையைக் கட்டுப்படுத்தலாம்.

அடியுரம்: ஹெக்டேருக்கு 20 - 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின்போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இட வேண்டும்.

மேலுரம்

விதைத்த 30 நாள்கள் கழித்து மேலுரமாக ஹெக்டேருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரத்தை இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதைத் தொடர்ந்து 7-10 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

பின்செய்நேர்த்தி

விதைத்த 20-25 நாள்களுக்குப் பிறகு பயிர் களைதல் வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாகப் பயன்படுத்தலாம்.

தேவையானபோது களையெடுத்தல் வேண்டும்.

வேரழுகல்

வெந்தயப் பயிரில் வேரழுகல் நோய் தோன்றும்போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். ஹெக்டேருக்கு 50 கிலோ பிண்ணாக்கை நோய் தோன்றும்போது இடவேண்டும்.

சாம்பல் நோய்

இந்த நோய் தோன்றும்போது ஹெக்டேருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது 2 கிராம் நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைமேல் தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதைத்த 20 - 25 நாள்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாகப் பயன்படுத்தலாம். 90-100 நாள்களில் விதைகள் உருவாகிவிடும். ஹெக்டேருக்கு பசுங்கீரை 4,000 - 5,000 கிலோவும், விதைகள் 500-700 கிலோவும் மகசூலாகக் கிடைக்கும்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

2.98333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top