பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்

தாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

  1. தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படகிறது.
  2. இக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன.
  3. இக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாமையின் மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது.
  4. தற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன.
  5. தாவர படுக்கை சுத்திகரிப்பு முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், குறைந்த செலவினை உடையதாகவும் உள்ளது.

தாவர படுக்கை முறை

இம்முறையில் தாவரங்கள் மற்றும் புவியியல் பொருட்களை ஒருங்கிணைத்து கழிவு நீரிலிருந்து நச்சு பொருட்கள் நீக்கப்படுகின்றன.

கோரை புற்கள்

  • கன உலோகங்கள் மற்றும் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவுநீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.
  • வேர் கசிவு வேதிப் பொருட்கள் மூலம் வேர் பகுதியில் உள்ள கன உலோகங்களை மண்ணில் முடக்கி விடுகின்றன.

ஆகாய தாமரை

நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவு நீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.

வெர்மிகுலைட்

  • இது அதிக அளவு நேர்மின் அயனி பரிமாற்று திறனை உடைய சிலிகேட் தாதுப் பொருளாகும்.
  • இதன் மூலம் அதிக அளவிலான உலோகங்களை ஒட்டுதல் மூலம் நீக்குகிறது.

நன்மைகள்

  • கழிவு நீரிலிருந்து 90-100% கன உலோகங்களை நீக்குகிறது.
  • வேதியியல் மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது.(70-90%).
  • கரைந்திருக்கும் திடப் பொருட்களை குறைக்கிறது (>90%)
  • கழிவு நீரிலிருந்து நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டை நீக்குகிறது (80 - 98%).

பயன்பாடுகள்

தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை மற்றும் காகித தொழிற்சாலை ஆகியவற்றின் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

3.02597402597
சு.மாரியப்பன் Oct 03, 2017 12:40 PM

தாவர படுக்கை முறை பற்றி அதிக அளவில் தெரிய வேண்டும் எனக்கு உதவி செய்யுங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top