பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / வேளாண் உயிரித்தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வேளாண் உயிரித்தொழில்நுட்பம்

வேளாண் உயிரித்தொழில்நுட்பம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பி.டி. தொழிற்நுட்பம்

‘பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ்’ என்பதன் சுருக்கமே பி.டி.ஆகும். இது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. பி.டி.என்பது பூச்சிக்கொல்லியாக இந்தப் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகிறது.

பி.டி.பொதுவாக எங்கு காணப்படுகிறது?

பி.டி.பொதுவாக எங்கும் காணப்படும். மேலும் மண் மற்றும் தாவர இலை, தளைகள் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களிலும் காணப்படும்.

பி.டி.பூச்சிகளை என்ன செய்கிறது?

பி.டி.யில் உள்ள விஷப்புரதமான ‘இன்சக்ட்டிடால் கிரிஸ்டல்’ (அ) ‘டெல்டா எண்டோ டாக்சிக்’ என்பவை பூச்சிகளைக் கொல்கிறது. இவ்வகை விஷப்புரதமானது மனிதர்களுக்கும் மற்ற பூச்சியற்ற இனத்திற்கும் தீங்கற்றவை. பி.டி.யைக் கொண்டு பல்வேறு விஷப்புரத மரபணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

பி.டி.பூச்சிகளிடம் எப்படி செயல்படுகிறது

‘டெல்டா என்டோ டாக்சின்கள்’ வயிற்று நஞ்சு ஆகும். இது பூச்சிகள் உண்டவுடன் மிகவும் வலிமையுள்ள நஞ்சாக மாறி, உட்சென்றவுடன் அமிலத்தன்மை கொண்டதாக செயல்பட்டு பூச்சிகளைக் கொன்று விடுகிறது.

பி.டி.பூச்சிகளை எவ்வாறு கொல்கிறது?

‘டெல்டா என்டோ டாக்சின்கள்’ பூச்சியின் உணவு செறிமான மண்டலத்தை நேரடியாகத் தாக்கி அழிக்கிறது. எனவே பயிர்த்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. இம் மாற்றமானது நடைபெற சில நாட்கள் ஆகும். மேலும் இவை சற்று வித்தியாசமாக மற்ற மரபு வழியில் பயிரிடப்படுவதிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது

பி.டி.மூலம் எப்படிப்பட்ட தீங்குயுரிகளைக் கட்டுப்படுத்தலாம்

‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ பல்வேறு விதமான வகையில் ‘டெல்டா என்டோடாக்சினை’ உற்பத்தி செய்கிறது. அவை காய்ப்புழு (உ.தா.ஐரோப்பிய காயப்புழு), ஈக்கள் (உ.தா.கொசுக்கள்) (அ) வண்டுகள் ஆகும்

பி.டி.இரகப் பூச்சிக் கொல்லிகள் புதியனவா?

பி.டி.பூச்சிக் கொல்லிகளான ‘டார்மண்ட் பி.டி. மற்றும் டெல்டா என்டோ டாக்சின்’ 30 ஆண்டுகளுக்கு முன்னரே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. (உ.தா.பேக்டிமாஸ், பயோபிட், டைபெல், ஜாவ்லின், டெக்னர், வெக்டோபெக்). இவை முதல் நிலையிலேயே புழுக்கள், பூச்சிகள் மற்றும் கருப்பு கூட்டுப் புழு மற்றும் கொசுக்களை அழிப்பதில் பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.

பி.டி.பாதுகாப்பானதா?

‘டெல்டா என்டோ டாக்சின்’ மிகவும் தேர்வு செய்யப்பட்ட மற்றும் மனித, பிற நஞ்சுயிரியற்ற காரணிகளுக்கு பிற மரபு வழியில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளை விடப் பாதுகாப்பானது. அவை பூச்சி, புழுக்களின் குறிப்பிட்ட மண்டலங்களை மட்டும் தாக்கி அழிக்கும். பொருளாதார ரீதியான பி.டி.பூச்சிக் கொல்லிகள் பொதுவாக பாதுகாப்பானது என சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல அங்கக சான்றளித்தலிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பி.டி.சோளம் என்றால் என்ன?

டெல்டா என்டோ டாக்சின்’ ஒற்றை செல்லின் மூலம் பாக்டீரியாவால் கட்டுப்படுத்தி, பின் மாறுபாடு செய்து சோளப்பயிரில் அமைப்பது ஆகும். சோளப் பயிரில் உள்ள இம் மரபணு ‘டெல்டா என்டோ டாக்சின்’ பூச்சிகளுக்கு நஞ்சாகி விடுகிறது.

ஏன் பி.டி.மரபணு சோளத்தில் பயன்படுத்தப்படுகிறது?

டெல்டா என்டோ டாக்சின்கள் பயிரில் தெளிக்கும்போது புற ஊதாக்கதிர்களால் பாதிப்படைகிறது. அதேபோல் மற்ற மரபு வழிப் பூச்சிக் கொல்லிகளால் அதிக செலவு ஏற்படுவதுடன், பூச்சியினைக் கட்டுப்படுத்துவது சற்றுக் குறைகிறது. ஆனால் பயிரின் திசுக்களில் ‘டெல்டா என்டோ டாக்சின்கள்’, தாங்கு திறனுக்காகவும், உயிரித் தொழில்நுட்பத்தில் பி.டி.மரபணு சோளத்தில் உட் செலுத்தப்படுகிறது.

பி.டி.சோளம் முழுவதும் நஞ்சுத்தன்மை

  • இரு காரணிகளைப் பொருத்தது. (அ) நிகழ்வு (ஆ) வளர்ச்சிக்காரணி இவையே ‘டெல்டா என்டோ டாக்சினைக் கட்டுப்படுத்தவும், பயிரின் அளவில் இருக்கும் உற்பத்திக்கும் காரணம் ஆகும். பல்வேறு விதை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு விதமான ‘நிகழ்வு’ மற்றும் வளர்ச்சியை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான ‘டெல்டா என்டோ டாக்சின்’ உற்பத்தியை தருகின்றன.
  • உட்செலுத்தும் ‘நிகழ்வு’ என்பது பி.டி. மரபணுவை சோளப் பயிரின் மரபணுத்திசுவில் வைப்பதாகும். இதுதான் பி.டி.மரபணு பயிரின் எப்பகுதியில் வைக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. மரபணு இடம்-டெல்டா என்டோ டாக்சினின் உற்பத்தி மற்றும் அளவைத் தீர்மானிக்கும். இதுவரை பி.டி. மரபணு இடத்தினைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. ஆகவே ‘நிகழ்வு’ நடக்கும்போது ‘டெல்டா என்டோ டாக்சினின்’ அளவு மற்றும் உற்பத்தி மாறுபடுகிறது.
  • ‘வளர்ச்சிக்காரணி’ என்பது மரபியல் பொத்தானாக உட்செலுத்தப்பட்ட பி.டி. மரபணு எப்பொழுது மற்றும் எங்கே? ‘டெல்டா என்டோ டாக்சின்’ உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனைத் தீர்மானிக்கிறது.

பி.டி.சோளத்தில் - வகைகள்

பல்வேறு விதமான பி.டி.சோள வீரிய ஒட்டு இரகங்கள் உள்ளன.

பி.டி.சோளம், மோனார்க் வண்ணத்துப் பூச்சிக்கு நஞ்சு எனக் கூறப்படுவது உண்மையா?

மோனார்க் வண்ணத்துப்பூச்சி ‘புழு’ நிலையில் பால்களையை உண்கிறது. அவ்வாறு அவை உண்ணும் பால்களையைச் சுற்றி பி.டி. சோளமானது இருக்கிறது. சில மாறுபாடுகள் ஆய்வகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிகிறது. இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் மோனார்க் வண்ணத்துப்பூச்சி பற்றி தீர்மானமாகக் கூற முடிவதில்லை.

மோனார்க் வண்ணத்துப்பூச்சி சோள வயலின் அருகில் முட்டைகள் இடுமா?

ஆம், சற்று அதிகமான முட்டைகள் சோளவயலின் அருகில் இடப்பட்டிருந்தன என்பது பல சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொண்டதில் அறியப்பட்டது.

மோனார்க் புழுவானது அதிகம் நீடித்திருப்பது, காய்ப்புழு கட்டுப்படுத்துவதுடன் பி.டி. சோளத்துடன் (அ) பூச்சிக் கொல்லிகளுடன் சாத்தியாமா?

  • இனிப்பு மக்காச்சோளத்தில் மோனார்க் புழு, பூச்சிக் கொல்லி வயலில் அதிகமாகவும், பி.டி.சோளத்தில் சற்று குறைவாகவும் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதில் தெரிய வந்துள்ளது.

பி.டி.சோளத்தின் மகரந்தம் ‘அழிக்கும் அளவு’ பி.டி.சோள வயலில் அருகே உள்ள பால்களை வயலிலும் காணப்படுமா?

சோளத்தின் மகரந்தமானது அதிகமாக எங்கும் செல்ல முடியாது. ஆனால் பால்களை தாவர மகரந்தம் ‘அன்பிரியோ’ இடத்தில் 180 மகரந்தம் 15 அடி தூரமும், சராசரியாக மொத்த வயலில் 9 அடி தூரமும் பயணித்துள்ளன. மகரந்தத்தின் அடர்த்தியானது ‘பால்களை’ வயலில் குறைந்து காணப்பட்டது.

மோனார்க் புழுவானது பி.டி.சோளத்தின் மகரந்தத்தை உண்ணும்போது துணை அழிக்கும் விளைவுகள் தோன்றுமா?

சிறிதளவே தோன்றும். எவ்வாறெனில் வளர்ச்சிக் குறைபாடு (அ) தாமதமாக வளர்ச்சி, எப்படிப்பார்த்தாலும், மோனார்க் புழு பி.டி. சோள இலைகளை குறைவாகவும், அவை அல்லா சுத்தமான இலைகளை அதிகமாவும் உண்கிறது.

மகரந்ததூள் உதிரும் நேரத்தில் “மோனார்க் புழு” பால்களைச் செடிகளை உணவாக உட்கொள்ளுமா?

மகரந்தத்தூள் மற்றும் சிறிய மோனார்க் புழுவானது பி.டி.சோளத்தில் உண்ணும் வாய்ப்பு குறைவே ஆகும். இருப்பினும், இருக்கும் காலநிலை, இடம் இவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.

கொலோரடோவில் பி.டி.சோள மகரந்தத் தூளிலிருந்து மோனார்க் வண்ணத்துப்பூச்சியை காப்பதற்கு ஏதேனும் செய்யப்பட்டதா?

மோனார்க் வண்ணத்துப்பூச்சி கொலோரடோவில் மிகவும் அரிதானது. சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆலோசனையின்படி, பி.டி.சோளம் அற்ற செடிகளை மகரந்தச் சேர்க்கையில் பி.டி.சோளம் உள்ள நிலத்தில் விடவேண்டும். இவ்வாறு செய்வதால், இலக்கற்ற புழுக்கள் அழிப்பது தடுக்கப்படும். ஆகவே கண்டிப்பாக பி.டி.சோளத்துடன் பி.டி.அற்ற சோளத்தையும் பயிரிடவேண்டும்.

பி.டி.சோளம் மற்ற பிற பூச்சிகளை பாதிக்கிறதா?

பல்வேறு இனங்களில் புழுக்கள் சோள வயலிலுள்ளன. அவ்வாறு வளரும் காலங்களில் பி.டி.சோளத்தால் அவை பாதிப்படைகின்றன.  ஆனால், அதிக அளவு ஆராய்ச்சிக்கள் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளுக்கே நடைபெறுகிறது. இவ்வகை இனங்களுக்கு நடைபெறுவதில்லை. ஒரு ஐரோப்பியர் செய்த ஆய்வில் ‘பச்சை இறகு புழு’ (சோளத்தில் இருக்கும் இரை விழுங்கி) ஐரோப்பிய காயப்புழுக்களை அழித்தும், மாறுபட்டும் இருந்தது. இவை பி.டி. அற்ற சோளத்தில் சற்று குறைவானதாக இருந்தது.

பி.டி.சோளத்தின் வேர்கள் ‘டெல்டா என்டோ டாக்சின்களை மண்ணிலிருந்து வெளியேற்றுமா?

  • இவ்வாறு வெளியேற்றுவது பல்வேறு ஆய்வகத்தில் செயல்முறையில் காட்டப்பட்டுள்ளது.
  • குறைந்த அளவு ஆய்வுகளே பி.டி.சோளமானது இலக்கற்ற பூச்சிகளுக்கு பயன்படுத்துதலில் மேற்கொள்ளப்பட்டது. முதல் நிலை முடிவுகளில் அவற்றின் பாதிப்புகள் சற்று குறைவே ஆகும்.  பல இலட்சம் ஏக்கர் ‘ஜிப்சி மாவுப்பூச்சி’ மற்றும் மற்ற பூச்சிகள் உடன் பி.டி.பூச்சிக் கொல்லிகளும் கடந்த 30 ஆண்டுகளாக சிறிதளவு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன. அதே போல் மரபு வழி பூச்சிக் கொல்லிகள் பல இலக்கற்ற பூச்சி இனங்களில் பாதிப்படையச் செய்வது குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சில ஆய்வுகளில் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘டெல்டா என்டோ டாகசின்கள்’ அதிவிரைவில் வயிற்றுப்பகுதியில் சிதைந்துவிடுகின்றன. அவை உடலுக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிப்பதில்லை.

உயிரித் தொழில்நுட்பம் மரபியல்முறைப் பயிர்பெருக்கத்தின் வேறுபாடு

உயிரித் தொழில்நுட்பம் என்பது, நவீன தொழில்நுட்பமான மரபுப்பொறியியல் மூலம் தாவரத்தினை மாற்ற (அ) மேம்படுத்த, விலங்குகளிலும் பிற நுண்ணுயிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை இவைப் புதியன அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பே விவசாயிகள் பலர் இனக்கலப்பு செய்து தரமுள்ள புதிய உணவை கண்டறிந்தனர். மரபு வழிப் பயிர்பெருக்கத்தில் ஆயிரக்கணக்கான மரபணுவை கலந்து பல ஆண்டுகளாக மற்றும் பல தலைமுறைகளாக மிகவும் வேண்டப்பட்ட தீர்வை அடைந்தனர்.

விவசாயத்தைப் பொருத்தவரை உயிரித் தொழில்நுட்பப் பொருட்கள் மூலம் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்படும். விளைச்சலும் அதிகரிக்கும். உதாரணமாக பி.டி.பருத்தியானது, பருத்தியைத் தாக்கி அழிக்கும் பல பூச்சிகளை அளித்தது. இதனால் மறைமுகமாக விவசாயத்தில் குறைந்த அளவு இரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா மட்டும் மரபுப்பொறியியல் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் முதலிய பல்வேறு நாடுகள் உயிரி தொழில்நுட்ப இரகங்களான சோளம், சோயா மொச்சை போன்ற பயிர்களை உருவாக்கியுள்ளது. மேலும் பல ஐரோப்பிய கம்பெனிகள் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்களை மேம்படுத்தவும் வணிக ரீதியாக உற்பத்தியை பெருக்கவும் செய்கின்றன. உதாரணமாக ‘அகா ஈவோ’ என்னும் ஜெர்மன் கம்பெனி, நோவர்டிஸ் எனும் ஸ்விட்சர்லாந்து கம்பெனி இரண்டும் இணைந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மற்றும் சோயா மொச்சையினை அமெரிக்க விவசாயிகளுக்கு அளிக்கிறார்கள்.

அறிவியல் வளர்ச்சியில் உயிரித் தொழில்நுட்பத்தால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என எவ்வித சான்றும் இல்லை. பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், தேசிய வளர்ச்சி குழுகமங்கள், விவசாய நிறுவனங்கள், பலவும் இம்முடிவை ஆமோதித்துள்ளனர். உயிரித் தொழில்நுட்பமானது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பின்றி, மரபு வழியில் பயிரிடுவதைக் காட்டிலும் அதிகமாக இலாபத்தைக் கொடுக்கிறது.

உணவுகளை உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும்போது சில சமயம் ‘ஒவ்வாமை’ தோன்றும். உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் ‘ஒவ்வாமை’ ஆய்வு மேற்கொண்ட பின்னரே உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. சராசரியாக 90 சதவீதம் உணவு சம்பந்தப்பட்ட ஒவ்வாமை புரதங்கள் இருப்பவையான கொட்டைகள், சோயா மொச்சை, பால், முட்டை, மீன் மற்றும் கோதுமை இவற்றில் வேளாண்மை உயிரித் தொழில்நுட்ப கம்பெனிகள் ‘ஒவ்வாமை’ பொருட்கள் மரபணுவில் இல்லாதவாறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

‘டெர்மினினேட்டர்’ தொழில்நுட்பம்

‘டெர்மினினேட்டர்’ தொழில்நுட்பம் என்பது விதை, செடிகளை ஆய்வு செய்து ‘கிருமி’ இல்லாத விதைகளை உற்பத்தி செய்வதாகும். இப்போது வரை, விதை மேம்பாட்டு நிறுவனம் மூலம் மட்டுமே இத் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. எந்தத் தனியார் நிறுவனமும் இதில் ஈடுபடவில்லை. மரபணுவானது உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மரபுவழித் தொழில்நுட்பம் இவற்றில் அழிந்துவிடமால் காக்க இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

உயிரித் தொழில்நுட்பம் உபயோகப்படுத்துவதால் தரமிக்க உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கவும், குறைந்த விலைக்குப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவும் முடியும்.

பயோஃபார்மிங்

பயோ ஃபார்மிங் எனப்படுவது உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபுப்பொறியியலினைக் கொண்டு பல பயிர்களை உருவாக்கி அதன்மூலம் மருந்துப் பொருட்கள் மற்றும் இரசாயனத்தை உற்பத்தி செய்வது ஆகும். இவ்வாறு செய்வதில் சாதாரண இரகத்திற்கும், பயோ ஃபார்மிங் செய்யப்படும் இரகத்திற்கும் சிற்சில மாறுபாடுகளுடன் உருவாக்குதல் வேண்டும். மருந்து மற்றும் உயிரித்தொழில்நுட்பக் கழகம் தற்போது பயோஃபார்மிங் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு மருந்துக்குத் தேவையான இரசாயனங்களையும் மற்றும் உயிரியல் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும் முடியும் எனக் கருதுகின்றனர். தாவரப்பகுதியைப் பயன்படுத்தி கருத்தடைச்சாதனங்கள், வளர்ச்சி ஹார்மோன்கள், இரத்தம் உறைதல், தொழிற்சாலை என்சைம்கள் மற்றும் வயிற்றுப்போக்கிற்கான மருந்துப்பொருள் முதலியனவும் தயாரிக்கப்படுகிறது என்பதை அறியலாம். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட திறந்த வெளியில் பயோ ஃபார்மிங் செய்யப்படுகிறது. அவை : சோளம் அதிகமாகவும், சோயா மொச்சை, புகையிலை மற்றும் அரிசி அடுத்தபடியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாவரத் திசு வளர்ப்பு

தாவரத் திசுவானது குறிப்பிட்ட வழிமுறைகளைக் கடைபிடித்து அதன் பகுதிகளை (தண்டு, வேர், உட்கரு) கிருமி இல்லாத நிலையில் வளர்ப்பதாகும். தாவரத் திசு வளர்ப்பு அதிகமாக ஆய்வுக்கூடத்தில் விதையில்லாப் பெருக்கமான ‘நுண் பெருக்கம்’ மூலம் செய்யப்படுகிறது.

நுண் பெருக்கம்

சந்ததியானது ஒரு தாவரப்பகுதியிலிருந்து பெறப்பட்டது. எனவே அவற்றின் மரபணுவானது எப்பகுதியில் இருந்து தாவரத்தை எடுத்துக் கொண்டோமோ அதனைச் சார்ந்து உள்ளது. அவைகள் விதைக் கரணை என்றழைக்கப்படும்.

நன்மைகள்

  • நுண் பெருக்க முறையில் விரைவாக ஆயிரக்கணக்கான தாவரத்தினை உற்பத்தி செய்ய முடியும்.
  • நோய் அற்ற தாவரமானது மண் மற்றும் நோய்காரணிகள் ஏதும் இல்லாத சூழலில் உருவாக்கப்படுகிறது.
  • இவை திட்டமிட்டு குறிப்பிட்ட இலக்குடன், குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படுகிறது. ஏனெனில் இவை, காலநிலை வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.
  • தண்டுக்குச்சி மற்றும் நாற்றுகளுக்கு தக்க கவனம் செலுத்துவதைக் காட்டிலும், நுண் பெருக்கத்தில் குறைந்த அளவே கவனம் செலுத்தப்படுகிறது.
  • அதிக காலம், அதிகப்படியான பொருட்களை, தேக்கி வைக்க முடியும்.
  • குறைந்த இடத்தில் அதிக அளவு பல்வேறு இனங்களை வைக்கலாம்.

திசு வளர்ப்பு ஊட்டச்சத்து பொருட்கள்

  • நீர்
  • அங்கக உப்புகள்
  • தாவர வளர்ச்சி ஊக்கிகள்
  • வைட்டமின்கள்
  • அமினோ அமிலம்

கரிம மூலப்பொருட்கள் மற்றும் திடப் பொருள் ஊடகம்

இதனை உயிர் இயற்பியல் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு நுட்பத்தின் மூலம் ‘வைரஸ்’ அறியும் முறையினை மேற்கொண்டு அறியலாம். மூலக்கூறு அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு முறையே தாவர இனங்களில் மேற்கொள்ளப்படுகிறது. நோய் எதிர்ப்பியல் நுட்பமானது பல் விதை நோய் எதிர்ப்பு பொருள் மற்றும் ஒற்றை விதை கரணை நோய் எதிர்ப்பு பொருள் கரணை, வைரசுக்கு எதிராக உதவுகிறது. பல்கூட்டு கரணையானது நாட்டில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வைரஸ்களாக உள்ளன. பாட்டீவைரஸ், டாஸ்போ வைரஸ், டோபோமோ வைரஸ், பாட்டீ எக்ஸ் வைரஸ், லூடீயோ வைரஸ், பேட்னா வைரஸ், க்ளோஸ்டர் வைரஸ், இவைகள் பல்கூட்டு விதைக் கரணை நோய் எதிர்ப்பொருள்கள் வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

  • இரண்டு தாவர வளர்ச்சி ஊக்கிகள், தாவரத்தில் மாறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன.
  • ஆக்ஸின்கள் : வேர் தோன்றுவதை ஊக்குவிக்கிறது.
  • சைட்டோன்கைனின்கள் : தண்டு தோன்றுவதை ஊக்குவிக்கிறது.
  • பொதுவாக இதன் அளவை மாற்றியமைப்பதன் மூலமே தாவரத்தின் உருவத் தோற்றத்தில் மாறுபாட்டை ஏற்படுத்த முடியும்.
  • ஆக்ஸின் --- சைட்டோகைனின் -- வேர் உருவாக்கம்
  • சைட்டோகைனின் – ஆக்ஸின் – தண்டு உருவாக்கம்
  • ஆக்ஸின் – சைட்டோகைனின் -- விதைக் கரணை உருவாக்கம்

உறுப்புத் தோற்றவியல்

தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் மூலம் இயற்கையாக உருவாகும் உறுப்பிற்கு (அ) இயக்கத்திற்கு உறுப்புத் தோற்றவியல் எனப்படும்.

கரு வளர்ச்சியியல்

உடல் செல்களின் தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் மூலம் கருவில் (அ) கரு மாதிரியான வடிவம் தோன்றுவது ஆகும்.

நுண் பெருக்கத்தின் பல்வேறு நிலைகள் யாவை?

  • நிலை 0 : தேர்ந்தெடுத்தல் மற்றும் தாய் தாவரத்தைத் தயார் செய்தல் - கிருமி நீக்கம் செய்தல் - தாவரத் திசுப் பகுதிகளைச் செய்தல் வேண்டும்.
  • நிலை 1 : தொடக்கநிலை - வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தகுந்த ஊடகத்தில் வைக்கவேண்டும்.
  • நிலை 2 : பெருக்கநிலை : வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தண்டு ஊடகத்திற்கு மாற்றவேண்டும். அவற்றைப் பிரித்து பின் நடவேண்டும்.
  • நிலை 3 : வேர் விடும் நிலை - வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை வேர் ஊடகத்திற்கு மாற்றவேண்டும்.
  • நிலை 4 : மண்ணிற்கு மாற்றுதல் - வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை மண்ணிற்கு மாற்றவேண்டும்.

கரு மீட்புத் தொழில்நுட்பம்

இவை கருவை ஆய்வுக் கூடத்தில் வளர்க்கும் முறையாகும். (கலப்பினம் செய்யும்போது கருவுறுதல் நடைபெற்று ஆனால் கரு வளராமல் இருக்கும். அவ்வாறு நடைபெற்றால், மேற்கண்ட வழியைப் பின்பற்றவேண்டும்)

நன்மைகள்

  • குறுக்குக் கலப்பினம் மூலம் முதல் தலைமுறை கலப்பினம் பெறப்படுகிறது.
  • விதை உறக்க நிலை சரிசெய்யப்படுகிறது.
  • முழுமையான விதை வளர்ச்சி அடையச் செய்யமுடியும்
  • பயிர்பெருக்க நிகழ்ச்சியின் வேகமானது ஒரு தலைமுறையில் அதிகரிக்கச் செய்கிறது.
  • இறந்த (அ) இறந்து கொண்டிருக்கும் தாவரத்திலிருந்து குறுக்குப் பெருக்கம் (அ) தன் மகரந்தச் சேர்க்கை செய்து மீட்கப்படுகிறது

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

2.91666666667
sinthu balaji Jan 09, 2017 03:52 PM

நல்ல குறிப்புகள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top