பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கறிக்கோழி வளர்ப்பு

கறிக்கோழிகள் குறிப்பாக இறைச்சி உற்பத்திக்காகவே வளர்க்கப்படுகின்றன. கோழிகள் என்பது மிகவும் பொதுவான மற்றும் பரவலான உள்நாட்டு விலங்குகளுள் ஒன்று.

கறிக்கோழி

கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோழி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்

கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.

காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.

மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.

தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி

மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.

கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு

 • நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
 • மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போட வேண்டும்.
 • 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1  போட வேண்டும்.
 • கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.
 • பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.
 • தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.

விற்பனை செய்தல்

 • 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.
 • கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.
 • திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க் போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,

 • சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்
 • கோழிக் கொட்டகை அமைத்தல்
 • தீவனம் அளித்தல்
 • நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்

போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.


கரி கோழி வளர்ப்பு தொழில் நுட்பம்
Filed under:
3.43181818182
சதிஷ் Jan 08, 2018 07:18 PM

புதிதாக தொடங்க மானியம் கிடைக்குமா எவ்வலவு முதலீடு செய்ய வேண்டும்

வெங்கடேசன் Dec 14, 2016 06:54 AM

கோழி வளர்ப்பு புதிதாக தொடங்க வேண்டும் அதர்க்குஆலோசனைகள் தேவை

TASNA Nov 19, 2015 11:18 AM

கால்நடை வளர்ப்பு துறையை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களைப் பெறவும். தொலைப்பேசி எண்: 044-25665566.
நன்றி

கதிர்வல் Nov 19, 2015 10:45 AM

கோழி வளர்ப்புக்கு பயிற்ச்சி எங்கு வழங்கபடுகிறது.எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் . அரசாங்கத்தினால் மானியம் அல்லது கடன் வழங்கபடுமா? விவரங்களை அறிய ஆவளாக உள்ளேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top