பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / காய்கறிப் பயிர்கள் / வீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம்

வீரிய ரக காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

காய்கறிகள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தும் விவசாயிகள் வீரிய ரக காய்கறிகளை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் அதிக மகசூலை பெறமுடியும்.

காய்கறிகளின் தேவை

காய்கறிகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நீக்கவல்லது. வைட்டமின்கள், தாது உப்புகளை கொண்டதோடு, மருத்துவக் குணங்களையும் அளிக்க வல்லதாகும். ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு தினமும் 284 கிராம் காய்கறிகளை உண்ண வேண்டும். ஆனால், நாம் சராசரியாக 110 கிராம் அளவு காய்கறிகளையே உண்கிறோம். ஆகவே, காய்கறிகளின் உற்பத்தியைப் பெருக்க உடனடியாக வழிகாண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தியைப் பெருக்க வீரிய ரக காய்கறிப் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களே பெரிதும் உதவியாக அமையும்.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் குறைந்த செலவில் அதிக மகசூலை பெற முடியும். ஒவ்வொரு வகை காய்கறிகளுக்கும் தனித்தனியே வீரிய ரக பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை தவறாது பின்பற்றினால் மகசூல் அதிகரிக்கும்.

காய்கறிகள் - நடவு முறை மற்றும் மாதங்கள்

கத்தரிக்காய்

 • ஜூன்-ஜூலை மாதங்களில் யு.எஸ். 172 ரவையா ரக கத்தரிக்காயும், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் உஜாலா, மஹிமா ஆகிய ரகங்களும் விதைக்க ஏற்றது.
 • ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் விதை போதுமானது. இந்த விதைகள் மூலம், ஒரு ஹெக்டேருக்கு 90-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 18,560 செடிகளை நடவு செய்யலாம்.
 • இதற்கு தொழு உரம் 25 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • மேலும், 440 கிலோ யூரியா, 900 கிலோ சூப்பர், 160 கிலோ பொட்டாஷ் ஆகிய அளவில் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். 150 நாள்களில் 25 ஆயிரம் கிலோ முதல் 35 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெறலாம். வெண்டைக்காய் ஜூன்-ஜூலை மாதங்களில் எம் 64, எம் 55 ஆகிய ரக வெண்டைக்காயும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நந்தினி ரகம், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சக்தி, ஒ.செ.016 ஆகிய ரக வெண்டைக்காய் விதைக்க ஏற்றது.
 • ஒரு ஹெக்டேருக்கு 1.5 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம், ஒரு ஹெக்டேருக்கு 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் 1,11,110 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 40 டன் என்ற அளவில் இட வேண்டும். மேலும், 440 கிலோ யூரியா, 600 கிலோ சூப்பர், 160 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 90 நாள்களில் 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

பாகற்காய்

 • ஜூன் - ஜூலை மாதங்களில் விவேக், பச்சை ஆகிய ரக பாகற்காயும், டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நீளம், அபிஷேக் ஆகிய ரக பாகற்காயும் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம், ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு, தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • மேலும், 440 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 115 முதல் 130 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெறலாம்.

சுரைக்காய்

 • ஜூன் - ஜூலை, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வரத் ஹைபிரிட் கௌரவ் பிரசாத், யு.எஸ். 12, 112 ஆகிய ரக சுரைக்காய் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம், ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • மேலும், 440 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும். 115 முதல் 130 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கிலோ முதல் 45 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெற முடியும்.

பீர்க்கன்காய்

 • ஜூன் - ஜூலை, டிசம்பர்- ஜனவரி மாதங்களில் காவேரி, ராகினி, யு.எஸ். 6001 ஆகிய ரக பீர்க்கன்காய் பயிரிட ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு 1.8 கிலோ விதை தேவைப்படும். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 180-க்கு 60 செ.மீ. இடைவெளியில் 9,259 செடிகளை நடவு செய்யலாம். இதற்கு தொழு உரம் 30 டன் என்ற அளவில் இட வேண்டும்.
 • மேலும், 540 கிலோ யூரியா, 625 கிலோ சூப்பர், 165 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
 • 105 முதல் 120 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கிலோ முதல் 45 ஆயிரம் கிலோ வரை மகசூல் பெறலாம்.

எனவே, காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வீரிய ரகங்களை தேர்வு செய்து பயன்பெறலாம்

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top