பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / பழப் பயிர்கள் / கொய்யா / கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

வெப்பமண்டலப் பழப்பயிரான கொய்யா ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகின்றது. இக்கனியில் அனைத்து வகையான சத்துக்களும், தனக்கே உரிய ஒரு தனிமணமும், சுவையும் ஒருங்கே உள்ளன. அனைத்து வகையான மண், கால நிலைகளிலும் சிறந்து வளரக்கூடிய பயிர் கொய்யா. இது மிக குறுகிய காலத்திலேயே கனிகளைக் கொடுக்கக்கூடியது.

கொய்யாவில் சத்துக்கள்

  • ஈரப்பதம் 76 சதம் கொய்யாவில் உள்ளது.
  • புரதம் கொய்யாவில் 1.2 சதம் ஆப்பிளைவிட அதிகமாகவும்,
  • கொழுப்புச்சத்து 0.1 சதம்,
  • மாவுப்பொருள் 1.1 சதம்,
  • நாாச்சத்து 6.9 சதம்,
  • சுண்ணாம்புச்சத்து ஆப்பிளில் உள்ளதுபோன்று 0.01 சதம்,
  • பாஸ்பரஸ் 0.03 சதம் ,
  • இரும்புச்சத்து 0.3 சதம்,
  • எரிசக்தி (கிலோ கலோரி) 10 அதிகமாகவும்,
  • ரைபோபிளாவின் (மில்லி கிராமில், 100 கிராமுக்கு) 30 மில்லி கிராம் சமமாகவும்,
  • வைட்டமின் 'சி' (மில்லி கிராமில், 100 கிராமுக்கு 297 மில்லிகிராம் அதிகமாகவும்,
  • வைட்டமின் 'பி' (மில்லி கிராமில், 100 கிராமுக்கு) 90 மில்லி கிராம் உள்ளன.

கொய்யா பயிர், அடிப்படையில் பதியன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுவதால் ஆணி வேர் உண்டாவதில்லை. பூமிக்கு மேலே மரம் செங்குத்தாக வளர்வதில்லை. எனவே, ஒரு சரியான கட்டமைப்பு ஏற்படுத்த, ஆரம்ப காலங்களில், தரை மட்டத்திலிருந்து 1. மீட்டர் உயரம் வரை கிளைகள் விரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், மூன்று அல்லது நான்கு கிளைகள் மட்டும் சரியான இடைவெளியில் அனுமதிக்கலாம். மரம் உறுதியாக மண்ணில் நிற்கும் வரை, சுமார் 1 மீட்டர் உயரம் கொண்ட வலுவான குச்சிகளைச் செடிகளின் அருகில் நட்டு, செடிகளோடு சேர்த்துகட்டலாம். இதனால் செடிகளைக் காற்றின் வேகத்தால் ஒடிந்து விடாமல் பாதுகாக்கலாம். பின்னர், செடிகளின் அடிப்பக்கத்தில் அவ்வப் போது தோன்றும் கிளைகளை நீக்கி விட வேண்டும்.

கொய்யாவை அடர்வு முறையில் பயிர் செய்ய, 2.5 x 2.5 மீட்டர் இடை வெளியில் கொய்யா பதியனை நட்டு 1 - 1.5 மீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன், அதன் முனையைக் கிள்ளிவிட வேண்டும். பின்பு இதிலிருந்து உண்டாகும் பக்க கிளைகளில் எதிர், எதிர் பக்கமாக இரண்டு அல்லது மூன்று கிளைகளை மட்டும் வளர அனுமதித்து, மற்ற பக்க கிளைகளை நீக்கிவிட வேண்டும். அதன் பின்பு அனுமதித்த பக்க கிளைகள் 1 - 2 அடி வளர்ந்தவுடன் 2 அல்லது 3 பக்க கிளைகளை அனுமதித்து, அதிலிருந்து வரும் காய்கள், கனிகளை அறுவடை செய்யலாம். கொய்யா நடப்புப் பருவத்தில் தோன்றும் இளந்தண்டுகளிலேயே கொய்யாவில் அதிகளவு தோன்ற,  பூக்கும். புதிய தளிர்கள் கவாத்து செய்தல் வேண்டும்.

பொதுவாக செப்டம்பர், அக்டோபர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கவாத்து செய்தல் வேண்டும். உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள் மரங்களை வளைத்துக் கட்டுதல் ஓரளவு வயதான மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி உயரமாக வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்துவிடும். இதனைச் சரிசெய்ய, மேற்படி கிளைகளை வளைத்து, அவற்றின் நுனிப் பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து, அதன் மேல் கல் போன்றவற்றை வைத்து, அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம். அல்லது, முன்பே மண்ணில் கனமான குச்சிகளோடு சேர்த்துக் கட்டலாம். இதன் மூலம், கிளைகளின் கணுக்களில் உள்ள மொட்டுகள் தூண்டப்பட்டு, பூக்கள் அதிக அளவில் தோன்றி அதிக, தரமான கனிகளைக் கொடுக்கும். மரங்களை மட்டம் தட்டுதல் மிக வயதான, உற்பத்தி திறன் இழந்த மரங்களை, தரை மட்டத்திலிருந்து 30 செ.மீ. உயரத்தில் மட்டமாக வெட்டி விட வேண்டும். பின்னர், அவற்றிலிருந்து தழைத்து வரும் புதிய களைகளில் பூக்கள் தோன்றி, காய்கள் பிடிக்கும், உற்பத்தியும் மேம்படும்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடு

  • பல்வேறு நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் கொய்யாவில் காணப்படுகின்றன. துத்தநாகச் சத்து குறைபாட்டினால் நரம்புகளுக்கிடையே மஞ்சள் நிறமாதல், இலைகள் சிறுத்தல், கணுக்களிடையே இடைவெளி குறைந்தும், செடிகள் குத்துச் செடிகள் போல தோற்றம் தருதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் வடிகால் வசதியற்ற நிலங்களில் இக்குறைபாடு காணப்படும். இவற்றை தவிர்க்க 500 கிராம் துத்தநாக சல்பேட், 350 கிராம் சுண்ணாம்பு இரண்டையும் 72 லிட்டர் நீரில் கரைத்து, மரங்களின் மேல் இரண்டு முறை 15 முதல் 30 நாள்கள் இடை வெளியில் தெளித்து நுண்ணூட்ட குறைபாட்டினைத் தவிர்க்கலாம்.
  • துத்தநாகம் தவிர மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்புச்சத்து குறைபாடும் சில நேரங்களில் காணப்படுவதுண்டு, இதன் அறிகுறிகளாக இலைகள் வெளிரி, ஓரங்கள் தீய்ந்தும், இலைகள் சிறுத்தும் காணப்படும். இதனை நிவர்த்தி செய்ய, 25 சதம் துத்தநாக சல்பேட், மக்னீசியம் சல்பேட், மாங்கனீஸ் சல்பேட், 12.5 கிராம் காப்பர் சல்பேட், பொரஸ் சல்பேட் ஆகியவற்றை 5 லிட்டர் நீரில் கரைத்து, இலைகளின் மேல், புதிய தளிர்கள் தோன்றும் சமயத்தில் ஒரு தடவையும், அதைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து ஒரு முறையும், பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையுமாக தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • போரான் நுண்ணுணாட்டச்சத்து குறைபட்டினால் வளர்ச்சிகுன்றி தோன்றுவதோடு பழங்களின் அளவில் சிறுத்துவிடும். மேலும் பழங்களில் வெடிப்பு தோன்றி, பழத்தின் தரத்தையே குறைத்து விடும். இதனை கட்டுப்படுத்த 0.5 சதம் போராக்ஸ் (1 லிட்டர் தண்ணிரில் 3 கிராம் போராக்ஸ்) மருந்தை கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம். கொய்யா மரத்தை மேம்படுத்தும் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக இலாபம் பெறலாம்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.96551724138
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top