பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

"மா" சாகுபடி முறை தொழிநுட்பம்

"மா' சாகுபடி முறை தொழிநுட்பம் பற்றிய குறிப்புகளை பற்றி இங்கே காணலாம்

"திக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்

ரகங்கள்

நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதின், காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர் -1, அல்போன்சா, சிந்து.

வீரிய ஓட்டு ரகங்கள்

பெரியகுளம் -1, மல்லிகா, அமரப்பாலி, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன், சிந்து சேலம், பெங்களூரா.

மண்ணும், தட்பவெப்ப நிலையும்

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலம். மா பயிர் செய்வதற்கு ஏற்றதாகும் மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 8 வரை இருக்க வேண்டும். மா நட ஜூலை முதல் டிசம்பர் வரை ஏற்ற பருவமாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பின்பு 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை செடிகள் நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் வெட்டி, பின்னர் குழி ஓன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 100 கிராம் லின்டேன் உடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு குழியின் முக்கால் பாகம் வரை மூட வேண்டும்.

ஓட்டுச் செடிகளை நடுதல் - இடைவெளி

 • ஓட்டுச் செடிகளை குழிகளின் மத்தியில் நட வேண்டும். செடிக்குச்செடி 6 முதல் 10 மீட்டர் வரை இடைவெளி விட வேண்டும். அடர் நடவு முறையினை (10 ஷ் 5 மீ) அல்போன்சா, பங்கனப்பள்ளி, மல்லிகா போன்ற ரகங்களில் பின்பற்றலாம்.
 • செடிகள், நன்றாக வளரும் வரை அடிக்கடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
 • மேலும் பயிறு வகைகள், நிலக்கடலை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம். ஒரு மரத்துக்கு ஒரு கிலோ உரமிட வேண்டும்.
 • உரங்களை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செடிகளின் வயதிற்கேற்ப செடிகளின் அடிப் பாகத்திலிருந்து 45 முதல் 90 செ.மீ தூரத்தில் இட்டு பின் அவற்றை மூடி நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
 • ஒரு ஹெக்டருக்கு இட வேண்டிய சத்துக்கள் (கிலோ ஒரு மரத்துக்கு) முதல் வருடத்துக்கு தழை 0.2, மணி 0.2, சாம்பல் 0.3, 6 வருடங்களுக்குப் பிறகு தழை 1, மணி 1, சாம்பல் 1.5. காம்ப்ளக்ஸ் 10:26:26 அளவிலும் இட வேண்டும்.
 • யூரியா இட வேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்துக்கு) முதலாம் ஆண்டும், வருடந்தோறும் காம்ப்ளக்ஸ் 12, யூரியா 0.2, 6 வருடங்களுக்குப் பிறகு காம்ப்ளக்ஸ் 4.0, யூரியா 1.3, பொட்டாஷ் 0.840.
 • வருடத்துக்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை வெட்டிவிட்டு ஆரோக்கியமான கிளைகளை மட்டும் வளரவிட வேண்டும். பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்க என்.ஏ.ஏ. என்ற வளர்ச்சி ஊக்கி ஒரு மில்லி மருந்தை 50 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சதவீதம் யூரியா கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

பூச்சிகள்

 • ஹெக்டருக்கு பாசலோன் 35 இசி 1.5 மிலி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து கிளைகள் தண்டுகள் மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும் அல்லது கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் 2 கிராமுடன் 2 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து மரம் பூக்க ஆரம்பிக்கும் காலத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
 • அசுவினி செதில் பூச்சி, தண்டு துளைப்பான், பழம் ஈ, சாம்பல் நோய், இலைப்புள்ளி, கரும்பூஞ்சாண் நோய் போன்றவற்றுக்கும் அதிகாரிகள் பரிந்துரைகளின்படி மருந்துகள் தெளிக்க வேண்டும்.

அறுவடைக் காலம்

மார்ச் முதல் ஜூன் வரை அறுவடை செய்யலாம். ரகத்துக்கேற்பவும், நடப்படும் இடைவெளிக்கேற்பவும் மகசூல் வேறுபடும்

கேள்வி பதில்

1. மா பழகூழ் மற்றும் பதனப்படுத்தப்படும் பொருள்களை தயாரிக்க எந்த மா இரகங்களை சாகுபடி செய்யலாம்?

அல்போன்சா, பங்கனபள்ளி, தோட்டபூரி

2. ஏற்றுமதிக்கேற்ற மா உற்பத்தி செய்ய எந்தெந்நத இரகங்களை தேர்வு செய்யலாம்?

அல்போன்சா, பங்கனபள்ளி, செந்தூரா

3. வணிரீதியாக மா சாகுபடி செய்ய விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளை பயன்படுத்தலாமா?

நடவுக்கு பயன்படுத்த கூடாது. ஒட்டு கட்டிய நாற்றுகளையே பயன்படுத்த வேண்டும்

4. பூக்காத மா மரங்களை எவ்வாறு பூக்கச் செய்யலாம்?

பிப்ரவரி மாதத்தில் பூ பூக்காத மரங்களுக்கு 0.5% யூரியா கரைசல் (அ) 1% பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் தெளிக்க வேண்டும்.

5. வருந்தோரும் மா காய்க்க சில வழி முறைகளை கூறவும்.

1.வருடந்தோரும் காய்க்கும் இரகங்களை நடவு செய்யவும்

2.முறையான வழவியல் முறைகளான உர, நீர் நிர்வாகம், கவாத்து முறை மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்,

Filed under:
3.14102564103
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Manikandan Jul 21, 2017 01:57 PM

இயற்கை உரம் வளர்ப்பு மகசூல் அதிகமாக இருக்கும் மாங்காய் நல்ல தரமாக இருக்கும் இயற்கை உரம் பயன்படுத்துங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top