பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பது பற்றிய தகவல்

மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பயனடையலாம்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி, 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.


மீன் வளர்ப்பு

ஆதாரம்: Agri KM

2.9875
bakkiyaraj Apr 01, 2017 12:01 PM

வணக்கம் ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகில் உள்ள கிராமம் நான் மீன் வளர்க்க மிகுந்த ஆசை ஆனால் என்னிடம் போதுமான பணம் இல்லை மீன் வளர்ப்புக்கு அரசு மானியம் கிடைக்குமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் தகுந்த ஆலோசனை வேண்டும்

v.மாதவன் Mar 19, 2017 03:08 PM

நான் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை
மீன் வளர்ப்ப பற்றி தெரிஞ்சுக்க
இதை பற்றி தெரிஞ்சவங்க கொஞ்சம் உதவி பன்னுங்க....
PH.87*****40

கார்த்திக் Mar 17, 2017 02:24 PM

விரால் மீன் வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் மற்றும் குளம் அமைப்பதையும் பற்றி கூறுங்கள்.

muralitharan Dec 27, 2016 03:52 PM

அய்யா வணக்கம் நான் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன் மானம் பார்த்த பூமி எங்களுடையது இது போன்ற நிலத்தில் மீன்கள் வளர்க்க முடியுமா? என்ன வகையான மீன்களுக்கு வரவேற்பு உள்ளது? வெற்று நிலத்தில் எப்படி மீன் தொட்டியை அமைப்பது?

முருகன் Jul 21, 2016 05:13 PM

கிருஷ்ணகிரி அருகில் எனது ஊர் மீன் குஞ்சிகள் கிடைக்கும் இடம் மற்றும் பயிற்சி பள்ளி எங்கு உள்ளது 99*****57

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top