பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வங்கி மற்றும் கடன் / தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்

கூட்டுறவுச் சங்கம்

'கூட்டுறவே நாட்டு உயர்வு’ என்ற கோஷத்துடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை அமைத்து பயிர்க்கடன், நகைக்கடன், தானிய ஈட்டுக்கடன், இயந்திரங்களுக்கான கடன் என பல வகையான கடன் திட்டங்களைச் செயல்படுத்துவதோடு, உரம், பூச்சிக்கொல்லி, விதை போன்றவற்றையும் விற்பனை செய்து வருகிறது. இத்தகைய சங்கங்களில் சில சரிவர இயங்காமல் இருந்தாலும், தவணை பாக்கி இல்லாமல் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களும் பல உண்டு

”இந்தச் சங்கம் 1958-ம் ஆண்டு துவங்கப்பட்டது. உறுப்பினர்கள் மூலமாக விவசாயிகளின் பங்குத்தொகை 67 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வரவு-செலவு நடக்கிறது. 8 கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி உள்ளது.

”தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி’ மாவட்டம்தோறும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் கொடுக்கிறது.

மத்திய கூட்டுறவு வங்கி, அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கடன் கொடுக்கிறது.

கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளுக்குக் கடன் கொடுக்கின்றன. கூட்டுறவு சங்கம் என்பதால், கண்டிப்பாக விவசாயிகளின் பங்களிப்பு இருக்க வேண்டும். அதனால், கடன் பெறும் தொகையில் 10 சதவிகிதம் விவசாயிகள் பங்குத் தொகையாகச் செலுத்த வேண்டும்.

சங்கம் லாபத்தில் இயங்கினால், இந்தப் பங்குத் தொகைக்கு டிவிடென்ட் கிடைக்கும். எங்கள் சங்கத்தில், விவசாயிகளின் பங்குத் தொகைக்கு லாபத்தில் 14 சதவிகிதம் டிவிடென்ட் கொடுக்கிறோம்.

பயிர்க் கடனுக்கு வட்டியில்லை

 • பொதுவாக, குறுகியகால பயிர்க் கடன்களுக்கு 7 சதவிகித வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தின் பட்டா, சிட்டா- அடங்கல் போன்ற ஆவணங்கள் கொடுத்து கடன் பெறலாம். நெல், நிலக்கடலை போன்ற குறுகியகால பயிர்களுக்கு 6 மாதங்களும், வெல்லம் உற்பத்திக்கான கரும்புக்கு மற்றும் மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு 12 மாதங்கள், ஆலைக் கரும்புக்கு 15 மாதங்கள் என, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டால், முழுமையாக வட்டி செலுத்தத் தேவையில்லை. அப்படி செலுத்தாத பட்சத்தில், 7 சதவிகித வட்டியுடன் ஒரு சதவிகித அபராத வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
 • பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகள் முறையான விளைபொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதால் குறிப்பிட்ட தொகைக்கு விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி போன்றவற்றையும் கொடுக்கிறோம். அதிக அளவு உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வேண்டாம் என்பவர்கள், கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, தேவையான அளவுக்கு மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்தால், தோட்டத்தை கூட்டுறவு வங்கியின் செயலர் ஆய்வு செய்த பிறகு முழுக் கடன் தொகையும் வழங்க பரிந்துரை செய்வார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலங்களுக்கும் பயிர்க் கடன்கள் உண்டு.

நகை மூலம் பயிர்க் கடன்

 • சொந்த ஜாமீனில் பயிர்க் கடனாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டும்தான் வழங்கப் படும். அதற்குமேல் தேவைப்படுவோர், நகைக் கடன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலத்தின் ஆவணங்களைக் கொடுத்து, அதில் குறிப்பிட்டுள்ள பயிரின் ஆயுள் காலத்துக்கு வட்டியில்லாத கடன் பெறலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள்,
 • 7 சதவிகித வட்டியுடன், கூடுதலாக ஒரு சதவிகிதம் அபராத வட்டியும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயிர்க் கடன் பெறுபவர்கள் உரம், விதை என எதுவும் வாங்காமல், முழுக்கடனையும் பணமாக பெற்றுக்கொள்ளலாம்”

14.5 சதவிகித வட்டியில் மத்திய காலக்கடன்

 • சாதாரண நகைக்கடன், 14.5 சதவிகித வட்டியில், தனி நபருக்கு 8 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். தவணை தவறினால், கூடுதலாக 3 சதவிகித அபராத வட்டி செலுத்த வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அமைத்தல் போன்றவற்றுக்கும், டிராக்டர், பவர்-டில்லர் ஆகியவை வாங்கவும், சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் போன்றவற்றை அமைக்கவும் கடன் உண்டு.
 • இக்கடன்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பிணையம் தேவையில்லை. அதற்கு மேல் வேண்டுவோர், கடனுக்கு ஈடான நிலத்தின் பத்திரத்தை அடமானமாகக் கொடுக்க வேண்டும். இதற்கான வட்டி 14.5 சதவிகிதம். 3 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கூட்டுப் பொறுப்புக் குழுவுக்குக் கூடுதல் கடன்

 • பத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப்பொறுப்புக் குழுவை அமைக்கலாம். குழுவில் இருக்கும் விவசாயிகள், நிலங்களின் ஆவணங்களைக் கொடுத்து, நெல், நிலக்கடலை, வாழை போன்ற பயிர்களுக்கு பயிர்க்கடன் வாங்கலாம். தவிர, இவர்களுக்கு டிராக்டர், பவர்-டில்லர் போன்ற இயந்திரங்களை வாங்குவதற்கும் கடன் உண்டு. தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு குழுவுக்கும் 10 ஆயிரம் ரூபாய் மானியமும் உண்டு.
 • நெல், மணிலா மாதிரியான வேளாண் விளைபொருட்கள் மீது 14.5 சதவிகித வட்டியில், மார்கெட் மதிப்பில் 75% தானிய ஈட்டுக்கடன் உண்டு. அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 3 லட்சம் ரூபாய் கடன் கிடைக்கும். இதற்கான தவணைக்காலம் 180 நாட்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதல் கட்டமாக அவர்களின் சேமிப்புத் தொகையைப் போன்று 4 மடங்கு தொகையை நேரடிக் கடனாக வழங்குகிறோம். அக்கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திவிட்டால் சுழல்நிதிக் கடனாக 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக 14.90 சதவிகித வட்டியில், அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது

சிறுபான்மையினருக்குக் கடன்

 • டாப்செட்கோ நிதி மூலம், கிராமங் களில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தனி நபருக்கு 5 சதவிகித வட்டியிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 சதவிகித வட்டியிலும் கடன் வழங்குகிறோம். மேலும், டாம்கோ நிறுவன நிதி மூலம், 60% சிறுபான்மையினரை உறுப்பினராகக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்குகிறோம்” என்ற கிருஷ்ணமூர்த்தி நிறைவாக,
 • ”கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக சேமிப்புக் கணக்குகளையும் செயல்படுத்து கிறோம். தவிர, 9.25 சதவிகிதம் வட்டியில் நிரந்தர வைப்புநிதி (ஃபிக்ஸட் டெபாசிட்) மற்றும் தொடர் வைப்புநிதி (ஆர்.டி) போன்றவற்றையும் செயல்படுத்துகிறோம்.
 • கடன் வாங்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் 15 ரூபாய் கட்டணத்தில் தனி நபர் காப்பீடும் உண்டு. இதன் மூலம், விபத்தில் இறக்க நேரிட்டாலோ, அல்லது  நிரந்தர ஊனம், உடலில் இருக்கும் இரண்டு உறுப்புகள் பாதிக்கப்பட்ட்டாலோ 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்

கேள்வி பதில்

1. சிறு கடன் திட்டம் என்றால் என்ன?

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் திட்டத்தை சிறு மற்றும் குறு வர்த்தகர்கள், தெரு வியாபாரிகள், மலர்கள், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடைகள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருபோர்களுக்கு நடைமுறை படுத்தப்படுகிறது. இவர்கள் கந்து வட்டி கொடுப்போரிடம் பணம் பெற்று சிக்கித் தவிக்கும் சூழலில் ஏற்படுத்தபவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கடன் தேவைகள் மிகவும் குறைவு, ஆனால் அது மிக முக்கியமானவை. அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் பல வருடங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டவை. இத்திட்டத்தின் கீழ் எந்த பாதுகாப்பும் இன்றி ரூ. 5,000 வரை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை மேலும் கடன் அட்டை வழங்கி (அதன் பயனீட்டாளர்களுக்கு) அதை சுய உதவிக்குழுவாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. பெண் சுய தொழில் முனைவோர் கடன் திட்டம் வட்டி விகிதம் எவ்வளவு?

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன்களை ரூ. 10 லட்சம் வரை வழங்குகிறது. இதை 60 மாதத்  தவணைகளில் 12 சதவிகிதம் வட்டியில் பெண் சுய தொழில் முனைவோர்க்கு சிறு அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த சேவை செயல்களை எடுத்துச் செய்தல் போன்றவை.

3. வேலை செய்யும் பெண்களுக்கான கடன் திட்டம் வட்டி விகிதம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மத்திய வங்கிகள் மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன் உதவிகளை ரூ. 1.00 லட்சம் வரையிலும் 12 சதவிகிதம் ஒரு வருடத்திற்கு வட்டி விகிதத்திலும் வேலை செய்யும் பெண்களுக்கு மாத வருமானமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடனை 36 தவணைகளில் திருப்பிச் செலுத்தவேண்டும்.

4. தாய்மை காலக் கடன் திட்டம் வட்டி விகிதம் எவ்வளவு?

கூட்டுறவு கடன் நிறுவனங்கள் தாய்மை கடன்களை கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 2000 வரை 11 சதவிகிதம் வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

5. தொழில்நெறிஞர் கடன் திட்டம் வட்டி விகிதம் எவ்வளவு?

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொழில்நெறிஞர் கடன்களை மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை 12 சதவிகிதம் வட்டி விகிதத்தில் ஒரு ஆண்டுக்கு வழங்குகிறது. இந்த கடனை 15 வருட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தவேண்டும்.

ஆதாரம் : தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்

3.0
தேசிங்குராஐா Jan 11, 2018 12:07 PM

தொடக்கேளாணமை கடன் சங்கத்தில்,பயிற் இண்சூரன்ஸ் பதிவேடுகளை பார்க்க முடியுமா? சங்கஉருப்பினா் என்கிற வகையில்

மணிகண்டன் Nov 15, 2017 06:23 PM

அனைத்து விவசாயிகளுக்கும் லோன் வழங்கும்படி இணைப்பதிவாளர் காந்தி நாதன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதன்படி அனைத்து விவசாயிகளுக்கும் லோன் வழங்க வேண்டும். ஆனால் தற்போது நடப்பது அப்படி அல்ல என்னுடைய விவசாய நிலம் கருவேலியில் உள்ளது எனக்கு கூட்டுறவு வடமட்டம் அங்கு சென்று முறையிட்டால் உனது வீடு கருவெளியில் இருந்தால் மட்டும் உனக்கு லோன் உண்டு என்கிறார்கள் இருப்பினும் தவறான பதில் எனது வயல் எங்கு இருக்கிறதோ அங்குதான் லோன் தரவேண்டும். இதற்கு புகர் கொடுக்கவேண்டிய நம்பரை தந்தார்கள் அந்த நம்பர் பெரும்பாலான நேரங்களில் அணைத்தே வைத்திருக்கிறார்கள். இது பணம் படைத்தவர்களின் ஒரு வித விளையாட்டு இதற்கு பலியாவது எண்ணுமோ ஒரு ஏழை விவசாயியின் உயிர்தான் திருவாரூர் மாவட்டம்

ப.ராஐ்குமார் Aug 22, 2017 11:12 AM

எங்களின் சொந்த ஊர் கழுகூர்,இங்கு சில வருடங்களாக செயளாலராக உள்ளவர் எந்த ஒரு விவசாயிக்கும் எந்த கடனும் தர மறுக்கிறார்...சில வருடங்களுக்கு முன்னர் விவசாய லோன் தள்ளுபடி ஆனதில் அவரின் பெயரில் மட்டும் 9 லோன் 13லட்சம் தள்ளுபடி...இதை யாரல் தட்டி கேட்பது???

கோ.பார்த்தசாரதி Aug 08, 2017 08:02 PM

நான் கடந்த பதினேழு வருடமாக விவசாயம் செய்து வருகிறேன்,எனது ஊரில் உள்ள தொடக்க வேளாண்மை மையத்தில் உறுப்பினராக சேர்த்து கொள்ள மறுக்கிறார் அதன் செயலாளர்.எனக்கு உதவிதேவை

மணி May 20, 2017 05:11 PM

தகவல் அறியும் உரிமை சட்ட விதிகளின் படி தள்ளுபடியானவர்களின் பட்டியலை சங்கத்தில் ஆய்வு செய்ய முடியுமா அல்லது தகவல் வழங்க தடையுள்ளதா? விளக்கம் தெரிந்த அலுவலர் யாரேனும் சொல்ல முடியுமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top