பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அலங்கார மீன் வளர்ப்பு

தகுந்த அலங்கார மீன்கள் & அவற்றின் வளர்ப்பிற்கான குறிப்புகள் பற்றி இங்கே விளக்கியுள்ளனர்.

அலங்கார மீன் உற்பத்தி

அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி, மனதுக்கு இதமான ஒரு பணியாக இருப்பதோடு, ஒரு வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் அமைந்துள்ளது. உலகத்தில் 600 வகை அலங்கார மீன்கள் பல்வேறு நீர் நிலைகளில் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்திய நாட்டிலுள்ள பல நீர் நிலைகளில் 100 அலங்கார மீன் வகைகள், நமக்கே உரியதாக இருப்பது மட்டுமல்ல, இதே அளவுக்கு வெளிநாட்டின் வகைகளும், நம் நாட்டில் வாழ்வது, நம் நாட்டின் அலங்கார மீன் வளத்தை வெளிப்படுத்துகிறது. /p>

இனப்பெருக்கத்திற்கு உகந்த மீன் வகைகள்

நம் நாட்டிலுள்ள அலங்கார மீன் வகைகளில், வியாபார ரீதியில் பெரும் மதிப்பு உடையவற்றை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யலாம். இதுபோன்ற வகைகள், முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும் வகை மற்றும் மீன் குட்டிகள் ஈன்று இனப்பெருக்கம் செய்யும் வகை என் இரண்டு வகைகளில் அடங்கும்.

மீன்குட்டிகள் ஈனும் வகைகள்:

 • கப்பீ (பியோசில்லியா ரெட்டிகுலேட்டா)
 • மோலி (மொல்லினேசியா)
 • கத்திவால் (சிபோபோரஸ்)
 • ப்ளேட்டி

முட்டையிடும் வகைகள்:

 • தங்கமீன் (கரேசிய அவுரேட்டஸ்)
 • கோய் மீன் (சைப்ரினஸ் கார்பியோ வகை கோய்)
 • சீப்ரா டேனியோ (ப்ரேச்சிடேனியோ ரீரியோ)
 • கருப்பு ஜன்னல் டெட்ரா (சிம்னேக்ரோ-சிம்பஸ்)
 • நியோன் டெட்ரா (ஹைபி-ப்ரைகான் இன்னேசி)
 • செர்பே டெட்ரா (ஹைபிப்ரைகான் காலிஸ்டஸ்)

மற்றவை

 • குமிழ்க்கூடு கட்டுபவை
 • தேவதை மீன் (டீரோபில்லம் ஸ்காலேர்)
 • சிவப்புகோடு டார்பிடோ மீன் (புன்டியஸ் டெனிஸோனி)
 • லோச்ச (போட்டியா)
 • இலை மீன் (நான்டஸ் நான்ட)
 • பாம்புத்தலை (சன்னா ஓரியன்டாலிஸ்)

முதன்முதலாக இத்தொழிலில் ஈடுபடுபவர், குட்டிபோடும் மீன் வகையை வாங்கி வளர்க்க வேண்டும். பின்னர் தங்கமீன் அல்லது முட்டையிடும் வகைகளை வாங்கி வளர்க்கும்போது, மீன்வளர்ப்பு முறைகள், அதிலுள்ள நுணுக்கங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். உயிரியலில் நல்ல அனுபவம், உணவளிக்கும் முறை, சரியான சூழல் இவையாவும் தான் அலங்கார மீன் வகைகளை இனப்பெருக்கம் செய்ய அடிப்படைத் தேவைகளாகும். உயிருள்ள உணவு வகைகளான புழுக்கள், பூச்சிகள், மண்புழுக்கள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. தொடர்ந்து இந்த உணவு வகைகள் கிடைப்பது வெற்றிகரமான அலங்கார மீன் உற்பத்திற்கு பெரிதும் உதவும். இத்துடன் அலங்கார மீன்உற்பத்தியாளர், செயற்கை உணவையும் தானே தயார் செய்து கொள்ளலாம். அலங்கார மீன் வகைகளுக்கு நோய், நொடிஏற்படாமல் இருக்க நீர்நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். தரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அலங்கார மீன் உற்பத்தி, தகுந்த சூழல் நிலவும் பட்சத்தில் வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யலாம்.

அலங்கார மீன் வளர்ப்புக்கான குறிப்புகள்


மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தின் அலங்கார மீன்வளர்ப்பு யுனிட்

 • இனப்பெருக்கம் மற்றும் மீன் உற்பத்தி தொகுதி - தொடர்   நீர்வரத்து மற்றும் மின்சாரம் கிடைக்கும் பகுதியில் அமைக்கப்பட வேண்டும். நீரோடைக்கு அருகில் அமையப்பெற்றால், தண்ணீரின் தரம் நன்றாக இருக்கும்.
 • வேளாண் உபபொருட்களான புண்ணாக்கு, அரிசித்தவிடு, கோதுமைத்தவிடு, மீன் உணவு, இறால் தலை உணவு ஆகியவை தொடர்ந்து கிடைக்கும் இடங்களில் திடமான குருணை வடிவ, மீன் உணவு தயார் செய்ய இயலும். அலங்கார மீன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் குஞ்சுகள் அதிக தரம் உடையவையாக இருத்தல் வேண்டும். இளம்குஞ்சுகள் நல்ல வளர்ச்சி அடையும்வரை வளர்க்கப்பட வேண்டும். இது நமக்கு நல்ல அனுபவத்தைக் கொடுப்பதோடு, நல்ல தரமான மீன்களை தேர்தெடுக்கவும் உதவுகிறது.
 • குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு இடங்கள் விமான நிலையம், ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட வேண்டும். இதனால் எளிதில், விரைவாக உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் உயிருள்ள மீன் குஞ்சுகளை அனுப்ப இயலும்.
 • மீன்குஞ்சு உற்பத்தியாளர், ஒரே ஒரு வகையினை உற்பத்தி செய்வதிலும், இனப்பெருக்கம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
 • விற்பனை வாய்ப்பு, நுகர்வோரின் தேவை, உலகளவிலான விற்பனை குறித்த தகவல்களை சொந்தமாகவும், மக்கள் தொடர்பு மூலமாகவும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
 • இத்துறையில் அதிக அனுபவம் பெற்றவர்களிடமும், நிபுணர்களிடமும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.  இதன்மூலம் இத்துறையில் ஏற்படும் புதிய வளர்ச்சி, மாற்றம், விற்பனை நுணுக்கங்கள்,  ஆராய்ச்சி, பயிற்சி போன்றவை குறித்து நாம் தெரிந்து கொள்ள இயலும்.

மீன் வளர்ப்பு பொருளாதாரம்

வ.எண்

பொருள்

தொகை (ரூபாயில்)

I.

செலவு

 

அ.

நிலையான மூலதனம்

 

1

300ச.அடி கொட்டகை-குறைந்த செலவில் (மூங்கில், வலை கொண்டு போடுதல்)

10,000

2

இனப்பெருக்க குளம் (6'x3'x1'6"- சிமெண்ட் தொட்டிகள், 4 எண்கள்)

10,000

3.

வளர்ப்புக் குளம்(6'x4'x2'- சிமெண்ட் தொட்டிகள் - 2 எண்கள்)

5,600

4.

குஞ்சுகள் இருப்பு செய்யும் குளம் 6'x4'x2' - தொட்டிகள்- 2 எண்கள்

5,600

5.

புழுவளர்ப்புக் குளம் (4'x1'6"x1' சிமெண்ட் தொட்டிகள் - 8 எண்கள்)

9,600

6.

ஆழ்குழாய் கிணறு- ஒரு எச்.பி. மோட்டாருடன்

8,000

7.

பிராணவாயு சிலிண்டர் உபகரணங்களுடன்
(1 எண்)

5,000

 

மொத்தம்

53,800

 

நடைமுறை செலவு

 

1.

800 பெண், 200 ஆண்( ஒரு மீனுக்கு ரூ 2.50)  (கப்பி, மோலி, கத்திவால், ப்ளேட்டி போன்றவை)

2,500

2.

தீவனம்(150 கிலோ/ வருடத்திற்கு 20 ரூபாய் ஒரு கிலோவிற்கு)

3,000

3.

பல்வேறு விதமான வலைகள்

1,500

4.

மின்சாரம் /எரிபொருள் (250 ரூபாய் ஒரு மாதத்திற்கு)

3,000

5.

துளை இடப்பட்ட ப்ளாஸ்டிக் இனப் பெருக்க கூடைகள் (20எண்கள் -30 ரூபாய் ஒன்றுக்கு)

600

6

கூலி (1000 ரூபாய் ஒரு மாதத்திற்கு)

12000

7

இதர செலவுகள்

2,000

 

மொத்தம்

24,600

மொத்த செலவு

1.

நடைமுறை செலவு செலவு

24,600

2.

நிலையான மூலதனத்திற்கு வட்டி (15% ஒரு வருடத்திற்கு)

8,070

3.

நடைமுறை செலவிற்கு வட்டி (15%,  6 மாதத்திற்கு)

1,845

 

தேய்மானம்(20% நிலையான மூலதனத்தில்)

10,780

 

ஆக மொத்தம்

45,295

II

மொத்த வருமானம்

 

76800 மீன்கள் விற்பனை - ஒரு ரூபாய் ஒரு மீனுக்கு ஒரு மாதம் வளர்த்த பிறகு (40 எண்கள் /பெண்/ ஒரு முறைக்கு, 3 முறை ஒரு வருடத்திற்கு, 80% பிழைப்புத் திறன் இருக்கும் என்ற வகையில்)

76,800

III

நிகர வருமானம் (மொத்த வருமானம் -மொத்த செலவு

31,505

மூலம் : ஒரிசா, புவனேஷ்வர் -மத்திய நன்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம்

3.05217391304
viji Apr 19, 2017 04:11 PM

எப்படி மீன் உணவு தயாரிப்பது

காமாட்சி செல்வம் Apr 09, 2017 10:30 AM

தங்கமீன் குஞ்சி யீன் உணவு என்ன?

கார்த்திக் Nov 13, 2016 07:13 PM

மீன் வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும் இதற்கான மூலப்பொருள் எங்கு கிடைக்கும்

TASNA Mar 07, 2016 11:08 AM

அலங்கார மீன் வளர்ப்பு குறித்து அறிய மேற்கண்ட தகவலைக் காணவும். நன்றி

தனசேகர் Mar 06, 2016 07:10 PM

நான் புதிதாக அலங்கார மீன் கடை வைக்கவேண்டும்.அதற்கு உங்களுடைய வழிகாட்டுதலும் வேண்டும்.அலங்காரமீன்கள் வாங்க டீலர்கள் யாராவது இருக்கிறார்களா அப்படி இருந்தால் எனக்கு தகவல் கொடுக்கவும். என்னுடைய செல் நெம்பர் 86*****93

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top