பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பது பற்றிய தகவல்

மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பயனடையலாம்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி, 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.


மீன் வளர்ப்பு

ஆதாரம்: Agri KM

3.01652892562
siva Feb 13, 2016 12:51 PM

வணக்கம் சார்,

சிமெண்ட் தொட்டில் கட்டி மீன் வள்க்க முடியுமா. செல்-98*****89. ஈமெயில்-*****@GMAIL.COM

TASNA Feb 04, 2016 12:23 PM

http://madurai.nic.in/fisheries.html என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியைத் தொடர்புக் கொண்டு விவரங்கள் பெறலாம். நன்றி

பெ.பாலமுருகன் Feb 04, 2016 12:10 PM

சிவகங்கை மாவட்டம் நயினார்பட்டி கிராமம்
நீங்கள் மேலே குறிப்பிட்டது போல தாமரை அல்லி கொண்ட ஊரணி உள்ளது அகலம் 40 அடி நீளம் 400 உள்ளது இதில் என்ன வகை மீன்கள் வளர்க்கலாம் என்று தெரியப்படுத்தவும் நான் மீன் குஞ்சிகள் எங்கே வாங்குவது இல்லை யாரை தொடர்புகொள்வது *****@gmail.com
செல் நம்பர் : 99*****07

TASNA Jan 21, 2016 04:44 PM

விகாஸ்பீடியாவில் உள்ள மீன் வளர்ப்பு பகுதியை முழுமையாக படித்து பயன் பெறவும். நன்றி

மணிகண்டன் Jan 21, 2016 04:31 PM

வணக்கம் சார், எனது ஊர் கடலூர். மீன் வளர்ப்பில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. அதற்கு என்னென்ன தேவை என்று சொல்லுங்க. எந்த அளவுக்கு இடம் தேவை என்று சொல்லுங்க. நான் டிப்ளோம இன் மெக்கானிக்கல் படித்திருக்கிறேன். ஆனால் நான் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறேன். எனது ஆர்வத்திற்கு பதில் சொல்லுங்க சார். வங்கியில் கடன் பெரும் வாய்ப்பு உள்ளதா? எனது இமெயில் முகவரி *****@gmail.com நன்றி...

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top