பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு / மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள்

மீன் வளர்க்க மத்திய அரசு தரும் அருமையான வாய்ப்புகள் பற்றின குறிப்புகள்

அரசாங்க உதவிகள்

மீன் வளர்க்கவும், மீன் பிடிக்கவும், பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், பயிற்சி, கடனுதவி, மானியம் வழங்கி வந்த இந்திய அரசின் ""கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்'' இன்று அலங்கார மீன் வளர்க்கவும் மார்க்கெட் செய்யவும் ஏராளமான உதவிகள் செய்து வருகிறது.

அலங்கார மீன் வளர்ப்பில் கிராமப்புறங்களில் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது. அலங்கார மீன் வளர்ப்போர், மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டிடம், இதர பொருட்கள் வாங்க நிதி உதவி. உற்பத்தி, மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதிக்கு உதவுதல் ஆகிய பணிகளை செய்கிறது.

வருடத்திற்கு 60000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.75000, 1,60,000 மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.2 லட்சம் மற்றும் வருடத்திற்கு 5 லட்சம் மீன் உற்பத்தி செய்வோருக்கு ரூ.7.5 லட்சம், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.5 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும்.

சிமென்ட், தண்ணீர் தொட்டி, கண்ணாடித்தொட்டி, தண்ணீர் சுத்தம் செய்யும் கருவிகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு அரசிடம் பதிவு பெற்ற ""அலங்கார மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களுக்கு'' ஏற்றுமதி செய்ய, மார்க்கெட் செய்ய நிதி உதவி வழங்கப்படும். ஆனால் இண்டர்நேஷனல் விமான நிலையத்தில் இருந்து 30 கி.மீ தொலைவுக்குள் ஏற்றுமதியாளர் இருக்க வேண்டும்.

இத்திட்டம் பற்றியும், இந்திய அரசு கடல் பொருள்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களையும் பற்றி அறிந்து கொள்ள
உதவி இயக்குநர் (அலங்கார மீன் வளர்ச்சித் துறை)
கடல் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம்,
MPEDA House,
பனம்பள்ளி அவென்யு,
கொச்சி 682 036,
கேரளா.
தொலைப்பேசி: 0484 231 197.
மின்னஞ்சல்: mpeda@mpeda.nic.in.,
மேலும் விவரங்களுக்கு: http://mpeda.gov.in

கிளை : துணை இயக்குநர்,
MPEDA, AH25, 4வது தெரு,
8வது மெயின் ரோடு,
சாந்தி காலனி,
அண்ணா நகர்,
சென்னை-40.
போன்: 044 - 2626 9192.
மின்னஞ்சல் : chempeda.vsnl.net.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. எத்தனை வகை மீன் வளர்ப்பு முறைகள் உள்ளன?

நமது நாட்டில் பொதுவாக 5 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் மீன்வளர்ப்பு, குளிர்நீர் மீன்வளர்ப்பு, வண்ண மீன் அல்லது அலங்கார மீன்வளர்ப்பு, மற்றும் கடல்நீர் மீன்வளர்ப்பு என்பவை ஆகும்.

2. மீன் வளர்ப்பைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் யாவை?

நீரின்  வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன், (கரியமில வாயு), கார்பன் - டை - ஆக்ஸைடு, மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

3. பிடிப்பு மீன்வளம் என்பது என்ன?

மீன்கள், சுறா, மெல்லுடலிகள், சிங்கிறால் மற்றும் நண்டு போன்றவற்றை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே பிடிப்பு மீன்வளம் ஆகும். நம் நாட்டில் மீன் பிடிப்பு மூலமாக 68 சதம் மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

4. பிற  அசைவ உணவுகளை விட மீன் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ஏன்?

தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

3.0
ஆனந்்தகுமார்் Nov 21, 2016 05:14 PM

மீன் வளர்க்க அரசு மானியம் கிடைக்குமா

pandurangan s Sep 12, 2016 08:28 PM

நான் தேளி மீன் வளர்க்க நினைக்கிறேன். இதற்க்கு மானியம்,சலுகை கிடைக்குமா. My number

97*****09

ராமச்சந்திரன் சு Aug 23, 2016 06:28 PM

வணக்கம் ஐயா நான் திண்டுக்கல் மாவட்டம் B.com பட்டதாரி நான் த‌ற்போது விவசாயம் செய்து வருகிறார் மீன் வளர்ப்பு செய்யலாம் என்று நினைக்கிறேன் அதற்கான வழி முறைகள் நிதியுதவி வேண்டும்

Baskar Aug 17, 2016 12:02 AM

I like to make a fish form In my pond. So what's the procedure to receive the government subsidy. & How to contact the government officers. I'm in Tirunelveli. My number is 85*****95

தர்மதுரை. மு Aug 12, 2016 01:20 PM

அலங்கார மீன் வளர்ப்பதற்கு மட்டும் தான் மானியம் வழங்கப்படுமா.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top