பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாட்டின் முக்கியப் பயிர் வகைகள்

தமிழ்நாட்டின் முக்கியப் பயிர் வகைகள் (Important Agricultural Crops of Tamilnadu) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலகில் விலங்கினங்களைப் போல தாவரங்களின் எண்ணிக்கையும் எண்ணிலடங்கா. அவற்றுள் நமக்கு உபயோகமான தாவரங்கள் மட்டும் சாகுபடி செய்யப்படுகின்றன. அவை மனிதருக்கு சரிவிகித உணவைக் கொடுப்பதுடன் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகின்றன. சில பயிர்கள் மண் வளத்தை அதிகப்படுத்துகின்றன.

தானியப்பயிர்கள் (Cereals)

மனிதனின் உணவுத்தேவைக்காக அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவுச்சத்தை ஆதாரமாகக் கொண்ட புல்வகை குடும்பத்தைச் சார்ந்த பயிர்கள் தானியப் பயிர்கள் எனப்படும். மாவுச்சத்தை தவிர புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவையும் உள்ளன.

உ.ம். நெல், கோதுமை, பார்லி, ஒட்ஸ்

இவற்றுள் நெல் மற்றும் கோதுமை உலக அளவில் முதன்மை உணவுப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நெல் மட்டுமே முதன்மை பயிராக பயிரிடப்படுகிறது.

சிறுதானியப் பயிர்கள் (Major Millets)

தானியப்பயிர்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் புல்வகைக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள் சிறுதானியப்பயிர்கள் எனப்படும். இவை அதிக அளவு மாவுச்சத்தையும் குறைந்த அளவில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

உ.ம். மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி.

சிறுதானியப் பயிர்களில் மக்காச்சோளம் தமிழ்நாட்டில் விவசாயிகளால் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

குறுதானியப் பயிர்கள் (Minor Millets)

சிறு தானியப்பயிர்களுக்கு அடுத்தபடியாக வறட்சியைத் தாங்கும், குறைந்த மழையளவு பெறும் இடங்களில் மானாவாரியாகப் பயிர் செய்யப்படும் பயிர்களுக்கு குறுதானியப் பயிர்கள் என்று பெயர். உ.ம். தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி.

பயறு வகைப்பயிர்கள் (Pulses)

மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான புரதச்சத்தை கொடுக்கக்கூடிய லெகூம் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள் பயறுவகைப் பயிர்கள் எனப்படும்.

உ.ம். துவரை, அவரை, உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, மொச்சை, சோயாமொச்சை.

எண்ணெய் வித்துப் பயிர்கள் (Oil Seed Crops)

கொழுப்புச்சத்தை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கொடுக்கும் பயிர்கள் எண்ணெய் வித்துப் பயிர்கள் எனப்படும்.

உம். நிலக்கடலை, தென்னை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி, ஆளிவிதை மற்றும் கடுகு

நார்ப்பயிர்கள் (Fibre Crops)

மனிதனுக்குத் தேவையான ஆடை மற்றும் பிற தொழில்களுக்குத் தேவையான நார்ப்பொருளைக் கொடுக்கும் பயிர்கள் நார்ப்பயிர்கள் எனப்படும். இது காய், தண்டு மற்றும் இலைப்பகுதிகளிலிருந்து பெறப்படுகிறது.

சர்க்கரைப் பயிர்கள் (Sugar Crops)

அதிக அளவில் சர்க்கரைச் சத்தை தன்னகத்தே கொண்ட பயிர்களுக்கு சர்க்கரைப் பயிர்கள் என்று பெயர். இது பிரிக்ஸ் என்ற அலகால் அளவிடப்படுகிறது. கரும்பு, பீட்ரூட், பனை போன்ற பயிர்களிலிருந்து சர்க்கரை பிரித்தெடுக்கப்படுகிறது. உலக சர்க்கரை உற்பத்தியில் சுமார் 60 சதம் கரும்பிலிருந்தும், 38 சதம் பீட்ரூட் பயிரிலிருந்தும், 2 சதம் இதர பயிர்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது.

உரப்பயிர்கள் (Manure Crops)

நிலத்திற்கு வளம் சேர்க்க பயன்படுத்தப்படும் பயிர்கள் உரப்பயிர்கள் எனப்படும். இது கீழ்வரும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரப்பயிர்கள் (Green Manure Crops)

ஒரு நிலத்தில் சாகுபடி செய்யப்படும் லெக்யூம் குடும்ப பயிர் ரகங்களை மடக்கி உழுது அதே நிலத்திற்கு உரமாக்கினால் அப்பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்கள் எனப்படும்.

உம், சணப்பை, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, நரிப்பயறு, மணிலா அகத்தி, அவுரி

பசுந்தாழ் உயிர்பயிர்கள்

  • இலைகள் மற்றும் மெல்லிய தண்டுப்பகுதிகள் வேறு இடத்திலிருந்து அறுவடை செய்து கொண்டு வரப்பட்டு சாகுபடி நிலத்தில் மடக்கி உழுவதால் உரமாகின்றன.
  • இவ்வகைப் பயிர்கள் பசுந்தழை உரப்பயிர்கள் எனப்படும்.
  • உம், புங்கம், வேம்பு, எருக்கு, பூவரசு, கிளைரிசிடியா, ஆவாரை, சூபாபுல்

தீவனப்பயிர்கள் (Forage Crops)

கால்நடைகளின் தீவனத்திற்காக வளர்க்கப்படும் பயிர்கள் தீவனப்பயிர்கள் எனப்படும். இது நான்கு வகைப்படும்.

  • புல்வகை தீவனப்பயிர்கள் - கம்பு நேப்பியர், கினியாப்புல்
  • தானிய வகை தீவனப்பயிர்கள்- தீவன சோளம், தீவன மக்காச்சோளம்
  • பயறு வகை தீவனப்பயிர்கள் - குதிரைமசால், வேலிமசால், தீவன தட்டைப்பயறு
  • மரவகை தீவனப்பயிர்கள் - சுபாபுல், அகத்தி

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.57142857143
அசித்து Nov 15, 2018 04:31 PM

இந்தியாவில் அதிகம் விலையும் பயிர்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top