பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம்

இயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம் பற்றிய குறிப்புகள்

பூச்சி நோய்கள் தாக்காத இரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். சரியான விதைக்கும் பருவத்தில் விதைப்பதினால் பூச்சி, நோய் தாக்குதல் தவிர்க்கலாம். பயிர் சுழற்சி மற்றும் பல்வேறு மாற்றுப்பயிர்களை தேர்வு செய்வதன் மூலமும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க முடியும். இனக்கவர்ச்சி பொறி மற்றும் இதர பூச்சிப்பொறிகளை வைத்தும் பூச்சிகளை கட்டப்படுத்தலாம். இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பூச்சி, நோய் தாக்குதலை சமாளித்து வளரக்கூடியதாக உள்ளது. மேலும் மண் மூலமாக பரவும் நோய்களின் தாக்குதலும் இயற்கை வேளாண் சாகுபடி நிலங்களில் குறைவாகவே உள்ளது.

இயற்கை வேளாண்மையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்: இயற்கை வேளாண்மையில் பல்வேறுவிதமான நன்மைகள் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கிறது. இயற்கை வேளாண்மை செய்யப்படும் நிலத்தில் உள்ள அங்ககப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் மண்வளம் பராமரிக்கப்பட்டு மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.

மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கும். இதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன் பயிர்ச்சத்துக்கள் நன்முறையில் பயிர்களுக்கு கிடைக்கிறது.

சாதாரண சாகுபடி முறையினை விட இயற்கை வேளாண்மையில் நீர்வளம் மற்றும் நிலம் மாசுபடுதல் குறைவு. பல்வேறு விதமான பயிர்கள், பயிர் மரபியல் வளங்கள் இயற்கை வேளாண்மையில் அதிகம் உள்ளன.

இயற்கை வேளாண்மையினால் பறவைகள் மற்றும் சிறுபிராணிகளுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கிறது. இயற்கை வேளாண்மையினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் இதர உயிரினங்களின் பெருக்கம் சமநிலைப்படுகிறது.

இயற்கை வேளாண்மையினால் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்பட்டு பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறைகிறது. இயற்கை வேளாண்மையில் அங்ககப் பொருட்களின் சுழற்சி மற்றும் பயிர்ச்சத்துக்களின் உபயோகம் முறைப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதில்லை.

இயற்கை வேளாண்மை முறைகள் மண்ணின் வளம், மண்ணின் அமைப்பு மற்றும் நீர்பிடிப்புத்திறனை மேம்படுத்துவதினால் நிலமானது தரிசாகாமல் என்றென்றும் பசுமையாக இருந்து பலன் அளிக்க வல்லதாக இருப்பதற்கு உதவுகிறது.

எனவே, விவசாயப் பெருமக்கள் ஏதேனும் ஒரு வகையில் பயிர் சாகுபடியில் இயற்கை இடுபொருட்களின் (2-ம்) பசுந்தாள் உரப்பயிர்கள், மண்புழு உரம், கம்போஸ்ட், வேளாண் தொழிற்சாலைக் கழிவுகள்) பயன்பாட்டினை அதிகரித்து மண்வளத்தைக் காத்து பயன்பெற வேண்டுகிறோம்.


இயற்க்கை வேளாண்மை முறை எப்படி சுற்று சூழல் மாசுபடுவதை தடுக்கிறது

ஆதாரம் : முனைவர் து. செந்திவேல்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top