பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சந்தை மேலாண்மை மையங்கள்

சந்தை மேலாண்மை மையங்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

நெல்லிற்கான முக்கிய சந்தைகள்

தமிழ்நாடு

தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், கோயம்புத்துார், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல்.

மத்திய மாநில கூட்டுக்கொள்முதல் திட்டம்

மத்திய அரசின் இத்திட்டப்படி மாநில அரசு விவசாயிகளிடமிருந்து உரிய முறையில் கொள்முதல் செய்து, பொது விநியோக முறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

மாநில நுகர்பொருள் விநியோகக் கழகம், மார்க்ஃபெட், நபெஃட், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் டி.டி.சி.சி போன்ற நிறுவனங்கள் வழியே மாநில அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து நெல்லை நேரடிக் கொள்முதல் செய்கின்றது. எனினும் இந்திய உணவுக் கழகம் இதில் முக்கியப் பங்காற்றுகின்றது.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் குடிமை பொருள் வழங்கு துறை மட்டுமே மத்திய அரசின் தலையீடற்ற கொள்முதலில் ஈடுபடுகின்றது.

இதன் முக்கிய நோக்கம் விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையில் நெல்லினைப் கொள்முதல் செய்வதாகும். இதனால் விவசாயிகளுக்குரிய விலை கிடைக்கச்செய்கின்றது. இந்நிறுவனம் தொகையினை வங்கிக் கணக்கு வரைவோலை மூலம் செலுத்தி விடுகின்றது

நேரடி நெல் கொள்முதல் செய்யும் நிரந்தர மையம்

நேரடி நெல் கொள்முதல் திட்டமானது தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறையின் கீழ் இயங்குகின்றது. நெல் பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் பருவம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த நிரந்தரக் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குறுவைப் பட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினைக் கொள்முதல் செய்ய அக்டோபர்- நவம்பர் மாதங்களிலும், சம்பா பட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லினை ஜனவரி-மார்ச் மாதம் வரையிலும் நேரடி கொள்முதல் கொள்முதல் செய்ய மையங்கள் திறக்கப்படுகின்றன.

நுகர்ப்பொருள் விநியோகக் கழகங்கள் மூலம் மாநில அரசால் இம்மையங்களின் கொள்முதல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

கொள்முதல் செய்யப்பட்ட அளவு, சரக்கு இருப்பு, தொகை, சணல் பைகளின் இருப்பு போன்றவை தினந்தோறும் நுகர்ப்பொருள் விநியோகக் கழக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

இந்நேரடிக் கொள்முதல் நிலையங்களில் இரசீதுகள் சர்வதேசத் தரத்தில் அளிக்கப்படுகின்றன. இரசீதில் இரசீது எண், கொள்முதல்செய்யப்பட்ட நெல் இரகம், மொத்தப் பைகளின் எண்ணிக்கை, மொத்த எடையளவு, விலை/குவின்டால், ஆதார விலை/குவின்டால், மொத்த மதிப்பு, ஈரப்பத அளவு மற்றும் விவசாயிக்குச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை போன்ற அனைத்துத் தகவலும் இடம் பெற்றிருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 1300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 353 மையங்கள் உள்ளன. நெல் தானியங்களை அறுவடை செய்தவுடன் விவசாயிகள் இம்மையங்களிலிருந்து டோக்கன் பெற்றுக் கொள்கின்றனர். இந்த டோக்கன் எண்ணைப் பொறுத்து நெல் கொள்முதல் செய்யப்படுகின்றது.

காயவைக்கப்பட்ட நெல்லினை துாற்றுவதற்கு இலவசமாக நெல் துாற்றும் இயந்திரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வாறு துாற்றப்பட்ட நெல்லானது ஈரப்பதம், கல் மற்றும் மண் துகள்கள் நீக்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றது.இம்மையங்கள் செயல்படும் நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

நடமாடும் – பருவம் காலம் சார்ந்த நேரடி கொள்முதல் மையங்கள்

தமிழ்நாடு அரசு குடிமை பொருள் வழங்கு துறையால் இவை ஆரம்பிக்கப்படுகின்றது . இந்தக் குறுகிய கால மையங்கள், நேரடி கொள்முதல் மையங்களைப் போலவே இயங்கும். இந்த மையங்கள் சில பகுதிகளில் நேரடி கொள்முதல் மையங்கள் இல்லாததால் அமைக்கப்பட்டன. மேலும் இவைகள் கொள்முதல் காலங்களில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டன.

ஒரு பகுதியில் ஒரு தனி விவசாயியோ அல்லது குழுவாகவோ, 300 மூட்டைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு நெல் தானியங்கள் இருந்தால் நேரடி கொள்முதல் மையத்திற்கு தகவல் தெரிவித்தால் அவர்களே வந்து வாங்கிக் செல்வார்கள். பிற நேரடி கொள்முதல் மையங்களும் இவ்வாறே வயலுக்கு வந்து நெல் தானியங்களை கொள்முதல் செய்கின்றார்கள்.

நெல் கொள்முதல் மையங்கள்

தமிழ்நாடு

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்ய இந்த நேரடி கொள்முதல் மையங்களை தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறை அமைத்துள்ளது.

தமிழக அரசு, மத்திய மாநில கூட்டுகொள்முதல் திட்டத்தின் படி காவிரி டெல்டா மற்றும் பிற பகுதிகளில் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் மையங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி அமைத்துக்கொள்ள தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

நெல் உற்பத்தி அளவைப் பொறுத்து டெல்டா தவிர பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு விற்பனை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடனுதவிச் சங்கங்கள் வழியாக கொள்முதல் செய்துகொள்ள கூட்டுறவுச் சங்கப் பதிவாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதாவது டெல்டா மற்றும் பிற தாலுக்கா கிடங்குகளில் (சென்னை, நீலகிரி தவிர) நெல் நேரடி கொள்முதல் மையங்கள் மூலம், மத்திய அரசின் ஆணைப்படி மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் தானியங்கள் பொது விநியோகத்திற்காக மத்திய அரசின் தானியக் கிடங்குகளில் மொத்தமாக சேமித்து வைக்கப்படுகின்றன.

தொடர்புக்கு

தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கு கழகம் ,
தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறை, 
குறைகளைத் தெரிவிக்க: 094451 90660
நெல் கொள்முதல் பிரச்சனைகளுக்கு: 09445195840

முதுநிலை மண்டல மேலாளர், தஞ்சாவூர்
அலுவலகம்: 04362-235321, Private: 04362-231909

சந்தைப்படுத்துதலுக்கான குறிப்புகள்


சந்தைப்படுத்துதல்

ஆதாரம் : நெல்வல்லுநர் அமைப்பு வோளாண்மை விரிவாக்கமையம்

3.13333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top