பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சம்பா, தாளடி நெற்பயிரில் நெற்பழநோய்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்களில் நெற்பழ நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெற்பழ நோய்

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இந்த நோயானது அஸ்டி லாஜி நாய்டியா வைரஸ் என்ற பூஞ்சாணத்தால் உண்டாகிறது.

பொதுவாக அதிகமான மழை பெய்யும் நேரங்களில் இந்நோயானது நெற்பயிரை தாக்குவதால் விவசாயிகள் நோய் தாக்கதலுக்கு ஆண்டில் அதிக விளைச்சல் கிடைப்பதாக நம்புகிறார்கள் இதற்கு லட்சுமி நோய் என்ற பெயரும் உண்டு.

ரகங்கள்

  • நெல் ரகங்களான கோ-43,
  • பிபீடி- 5204, பொன்மனி,
  • ஏடிடீ -38,
  • ஏடிடீ -39

போன்ற ரகங்களில் நெற்பழ நோய் தாக்குதல் அறிகுறி காணப்படுகிறது.

நெற்பயிரின் பூக்கும் தருணத்திலும் கதிர் வெளிவரும் நேரத்திலும் இதன் தாக்குதல் மிகவும் அதிகமாக காணப்படும். காற்றில் காணப்படும் அதிகமான ஈரப்பதம், 90 சதவீதத்துக்கு மேல் குறைந்த வெப்பநிலை 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் மற்றும் இரவு பனியும் நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளது.

நோய் பாதிப்புள்ளான விதைகள் காற்று, மண் மற்றும் நீர் மூலமாக பரவுகிறது. நோயின் பூஞ்சாண வித்துகளால் ஒரு வயலிலிருந்து மற்ற வயல்களுக்கும் பரவும்.

இதன் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நெற்கதிர் மணிகளும் பூசணத்தின் வித்துகளால் நிரம்பி அதன் வெளிப்பகுதி பச்சை நிறமாகவும் உட்பகுதி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகவும் உருண்டை வடிவில் மாறிவிடும்.

நோய் தாக்கிய பின் இதை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். எனவே நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரை காப்பாற்ற கலப்பு கதிர் வெளிவரும்போது ஒரு முறையும், பால் பிடிக்கும் தருவாயில் ஒரு முறையும் சூடோமோனாஸ் ஒரு கிலோ, புரோபிகோனசோல் 200 மிலி, காப்பர் ஹைட்ராக்ஸைடு 500 கிராம் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வேலைகளில் தெளிக்க வேண்டும்.

நோய் தாக்கதல் அதிகமாக இருப்பின் 15 நாள் கழித்து மீண்டும் தெளித்து பழநோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றனர்.

ஆதாரம் : நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம்

3.09090909091
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top