பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பார்த்தீனியம் மேலாண்மை

பார்த்தீனியம் பயிர்களினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை நிர்வாகம் செய்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

பார்த்தீனியம்

பார்த்தீனியம் ஹிஸ்டீரியோபோரஸ் எல்.

குடும்பம் : காம்போசிட்டே(ஏஸ்டேரசியே)

பொதுப்பெயர் : காங்கிரஸ் களை

தமிழ்ப்பெயர் : விஷப்பூண்டு

மார்ப்பாலஜி : பெரிய இலைக் களை

பண்பு : ஆண்டு மூலிகை 1.5 மீ வரைக்கும்.

தண்டு : மெலிதான மயிரிழைகளுடன் கூடியது.

இலை : மாற்றுமுறை இலைகள், காம்பற்றது, இரண்டாகப் பிளவு பட்டிருக்கும் 20x10 செ.மீ. வரைக்கும், இளம்பருவம், மடல் முழுவதும், கடுமையானது.

இனப்பெருக்கம்

விதை மூலம் பரவுகிறது.

வாழிடம்

பயிர் சாகுபடி செய்யும் நிலங்கள் மற்றும் சாலை ஓரங்கள்

வரலாறு

பார்த்தீனியம் நட்சத்திர களை, கேரட் களை, வெள்ளை தொப்பி, மேல் வெள்ளை என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையாக மெக்சிகோ, தென் மற்றும் வட அமெரிக்க, ஆஸ்திரேலியா, சைனா, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நூற்றாண்டுகளாக இக்களை காணப்படுகிறது. 1977 வரை இக்களை உலகில் கட்டுப்படுத்த முடியாத களைகளில் ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு பார்த்தீனியம் உலகில் உள்ள ஏழு முக்கிய களைகளில் ஒன்றாக உருவெடுத்தது

பார்த்தீனியத்தின் சூழ்நிலை

இந்தியாவில் பார்த்தீனியம் 1950-ல் கண்டறியப்பட்டது. இக்களைச் செடியானது 1950 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதுமை இறக்குமதி செய்தபோது ஊடுருவியதாகக் கருதப்படுகிறது. இச்செடியானது பெரும்பாலான இடங்களில் காணப்பட்டு, காட்டுத்தீ போல் இந்தியா முழுவதும் பரவியது. இதற்கு முக்கிய காரணிகளான.

  • இயற்கை எதிரிகள் இல்லாததால் அதன் இனப்பெருக்கம் அதிகரித்தது.
  • அதிக விதைகளை உற்பத்தி செய்தல்.
  • விரைவாக பரவக்கூடிய தன்மை
  • இக்களை உற்பத்தி செய்யும் நச்சுத்தன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்பு.
  • கால்நடைகள் உண்ண விரும்பாத களை செடியாக உள்ளது.
  • எல்லா பருவ காலங்களிலும் மற்றும் எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது.

பார்த்தீனியத்தின் பண்புகள்

பார்த்தீனிய செடிகள் முட்டை வடிவமான இலைகளை கொண்டது மற்றும் இலையின் மேல் வெள்ளை நிற ரோமங்கள் பெற்றுள்ளது. செடியின் முதிர்ந்த இலைகள், இளம் செடிகள் பொதுவாக அதிக ஆழம் கொண்ட ஆணிவேர் அமைப்புடையது.

தண்டு மற்றும் இலைகளின் வெள்ளை நிற ரோமங்கள் துள்ளியமாகக் காணப்படும். இச்செடிகள் பார்ப்பதற்கு நீலம் அல்லது சாம்பல் நிறத்திலும், பூக்கள் வெள்ளை நிறத்தில் செடிகளின் உச்சிப்பகுதியில் கொத்துக்கொத்தாகக் காணப்படும். பூக்கள் முதிர்ச்சி அடையும் போது தடிமனாகவும் காப்பி நிறத்துடனும் காணப்படும். இதன் விதைகள் தட்டையாகவும், 2 மிமீ நீளமாகவும் மற்றும் வைர வடிவமாக காணப்படும். பார்த்தீனிய செடியில் ஒவ்வொரு பூங்கொத்துகளிலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த விதைகள் நான்கே வாரத்திற்குள் நிலத்தில் விழுந்து முளைத்து மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒரு முறை பார்த்தீனியம் உற்பத்தியாகி விட்டால் எந்த சூழ்நிலையிலும் அதாவது மழை, வறட்சி எதையும் தாங்கி வளரக்கூடியது.

மனிதனுக்கு பார்த்தீனியத்தால் ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷ செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதகமான செடி. பிரச்சினைக்குரிய இக்களையானது ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய விஷமுள்ள களைச்செடியாக பரவியுள்ளது. இவை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்துமா, தொழுநோய் மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. மேலும், பார்த்தீனியம் நடைபாதையில் வளர்ந்து அழகிய பூங்காக்கள், குடியிருப்புப்பகுதிகள் மற்றும் தோட்டங்களின் தோற்றத்தைப் பாதிக்கிறது.

கால்நடை சுகாதாரத்தில் பார்த்தீனியம்

கால்நடைகளுக்கு பார்த்தீனியத்தின் தீமைகள்

கால்நடைகள் பார்த்தீனிய செடியை உண்ணுவதில்லை என்றாலும், அதன் நச்சுத்தன்மை கால்நடைகளின் உடல்களில் பார்த்தீனியம் செடிகளின் வழியாக நடக்கும் போது அல்லது அதனை நுகரும் போதும் பரவுகிறது. அதன் பின் கால்நடைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. எருமைகளுக்கும் அதன் கன்றுகளுக்கும் உணவாகக் கொடுக்கும் பொழுது குறைவான மற்றும் கடுமையான நச்சுத்தன்மை உடலில் ஏற்பட்டு, வாய்ப்பகுதிகள் மற்றும் குடல்பகுதிகளில் புண்கள் ஏற்படுத்துகின்றது. சிறுநீரகம் மற்றும் ஈரல் பகுதிகளில் ஏற்படும் நச்சுத்தன்மையால் கால்நடைகளில் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பார்த்தீனியம் பரவியுள்ள பகுதிகளில் மேயும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால் மனிதர்களுக்கு தீமை விளைவிக்கக் கூடியது.

பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள்கள், காற்று மண்டலத்தில் வருடம் முழுவதும் காணப்படுகிறது. பார்த்தீனியத்தின் மகரந்தத்தூள் சரும நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மை உடையது. இத்தன்மை ஜுன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இச்செடி ஆஸ்த்மா மற்றும் தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இக்களைச்செடியின் மகரந்தத்தூள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. ஒரு பார்த்தீனியம் செடி 624 மில்லியன் மகரந்தங்களை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை கொண்டது மற்றும் பல மைல்கள் தூரம் காற்றின் மூலம் பரவக்கூடியது.

பார்த்தீனியம் மேலாண்மை – ஒருங்கிணைந்த முறைகள்

  • உயிரியல் முறையில் பார்த்தீனிய கட்டுபாடுகள்
  • இரசாயனம் மூலம் பார்த்தீனிய கட்டுபாடுகள்
  • சாகுபடி அல்லாத பரப்பில் இரசாயனம் மூலம் பார்த்தீனிய கட்டுபாடுகள்

உயிரியல் கட்டுபாட்டில் மெக்சிகன் வண்டு

ஒருங்கிணைந்த பார்த்தீனிய களை மேலாண்மை தான் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்த முறை என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. இந்த ஒருங்கிணைந்த களை மேலாண்மை கடைப்பிடித்த இரண்டாம் வருடத்தில் இக்களைச்செடியின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, மூன்றாம் வருடத்தில் இருந்து இக்களையின் கட்டுப்பாடு முழுமையாகக் காணப்படும்.

ஒருங்கிணைந்த பார்த்தீனியம் கட்டுப்பாட்டு முறைகள்

பொது இடங்கள் அல்லது பயிரிடாத நிலங்களில் இருக்கும் பார்த்தீனிய செடிகளை இயற்கை சூழல் பாதிக்காமல் அகற்ற வேண்டும்.

ஆவாரை, அடர் ஆவாரை, துத்தி, சாமந்தி ஆகிய செடிகளின் விதைகளை மழைக்காலங்களில் விதைக்க வேண்டும். இந்த செடியின் அதிக வளர்ச்சி பார்த்தீனிய செடியை வளரவிடாமல் தடுத்து விடுகிறது.

மழைப்பருவம் ஆரம்பிக்கும் காலமே மெக்ஸிகன் வண்டுகளின் உற்பத்திக்கு உகந்த காலமாகும். ஆகையால் மெக்சிகன் வண்டுகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் போது வண்டுகளை சேகரித்து பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் விட வேண்டும்.

பூங்காக்களிலும், தோட்டங்களிலும், புல் தரைகளிலும் மற்றும் விவசாய நிலங்களிலும் பார்த்தீனியத்தினை ஆட்களைக்கொண்டு கையுரை அணிந்து கைக்களையாக அகற்றி விட வேண்டும். ஆட்களைக்கொண்டு அகற்றும் போது வேரோடு அகற்றுவதுடன் பார்த்தீனியத்தினால் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான உபாதைகளை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகமாகவும், மீண்டும் மீண்டும் பார்த்தீனியம் வளரும் இடங்களில், உடனடியாகக் கட்டுப்படுத்த அட்ரஸின், 2,4-டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரி பூசன் போன்ற களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனியத்தைக்கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனியக் களைகளை சேகரித்து, அவற்றை 5-10 செ.மீ. நீளவாட்டில் சிறிதாக நறுக்கி, 10 செ.மீ.சுற்றளவில் 10 செ.மீ. உயரத்திற்கு கீழே இருந்து 5 செ.மீ. அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10% மாட்டுச்சாணத்தை கரைச்சலாக கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். ஐந்து நாட்கள் கழித்து 250-300 மண் புழுக்களை இந்த மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45-60 நாட்கள் வரை தொடர வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் சதவீதம்

சத்துக்கள்

பார்த்தீனிய மண்புழு உரம்

தொழு உரம்

தழைச்சத்து

1.15

0.50

மணிச்சத்து

0.44

0.45

சாம்பல்சத்து

0.97

0.72

இவ்வாறாக பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை மேற்கண்ட முறைகளில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.

பார்த்தீனிய மேலாண்மை அணுகுமுறைகள்

நிர்வாக ஒருங்கிணைப்பு

  1. வேளாண் துறை
  2. கால்நடை வளர்ப்புத்துறை
  3. வனத்துறை
  4. உள்ளூர் நிர்வாகம்
  5. பொது வேலைத்துறை
  6. நெடுஞ்சாலைத்துறை
  7. பள்ளிக்கல்வித்துறை
  8. கல்லூரி கல்வித்துறை
  9. தகவல் மற்றும் செய்தித்துறை

வேளாண் நிலம்

வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை வளர்ப்புத்துறை, பட்டுப்பூச்சித்துறை, விவசாயிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்

வேளாண்மை செய்யப்படாத நிலங்கள்

வனத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பழங்குடியின நல சமூகம், மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், பொது வேலைத்துறை

பொதுவாக பயன்படுத்தும் இடங்கள்

உள்ளூர் அமைப்புகள், (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி), குடியிருப்போர் நல சமூகம், கல்வி நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

2.82352941176
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top