பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம் பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த தொடுதிரையை செயல்படுத்த தொடங்கியவுடன் கீரைகள், தானியங்கள், பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் வருகின்றன. பின்னர் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் அவற்றில் உள்ள வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகின்றன.

எடுத்துக்காட்டாக, கீரையை தேர்வு செய்தால் அதில் சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, புதினா, கருவேப்பிலை போன்ற கீரைகளின் வகைகள் உள்ளன.

அதில் ஏதாவது ஒரு கீரையை தேர்வு செய்தால் அந்த கீரையை பயிர் செய்ய எவ்வளவு நிலம் தேவைப்படும், அந்த இடத்தில் எவ்வாறு பயிர் செய்வது, நோய்கள் தாக்காமல் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு பராமரிப்பது, எத்தனை நாட்களில் அறுவடை செய்வது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல, தானியங்கள், பயறு வகைகள், காய்கள் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 17 அமைப்புகளை சேர்ந்த 650 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயம் குறித்த பொது தகவல்கள், வங்கியில் கடன் பெறும் முறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கே இந்த மையம் செயல்பட்டு வருகின்றது

ஆதாரம் : அருப்பே கொள்கை ஆய்வு மையம்

3.08695652174
வெ. செல்வராஜா Feb 16, 2019 05:13 PM

நான் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் முறை மற்றும் விற்பனை குறித்து தகவல்களை பெற யாரை அணுக வேண்டும்?

கவி rupa Feb 05, 2019 10:49 AM

வீட்டில் மா மரம்,வேம்பு வளர்ப்பதால் சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா...

மல்லையன் Aug 31, 2018 06:03 PM

இந்த காலத்தில் என்ன பயிரிட்டால் நல்ல மகசூல் மற்றும் நல்ல விலை கிடைக்கும் கூறுங்கள்

ம.நீதியரசன் Jun 10, 2018 12:38 PM

என் தந்தை என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார்.நான் தஞ்சை மாவட்டம் ,பாபநாசம் தாலுக்கா கூனஞ்சேரி என்ற கிராமத்தில் வசிக்கிறேன் விவசாய நிலமும் அங்கேதான் உள்ளது .மேலும் என்னிடம் டீசல் மோட்டார் மட்டுமே நீர் பாய்ச்ச உள்ளது . தற்போது நான் என்ன பயிர் செய்வது குறைந்த செலவில்....

வேல்முருகன் Feb 16, 2018 12:51 PM

நெற்பயிருக்கு தாக்கும் பூச்சிகள் அதன் தடுக்கும் மருந்துகள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top