பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்கள்

சம்பாவில் நிறைய சம்பாதிக்க சம்பா சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்கள் என்னென்ன என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

“சரியான முறையில் நெல் ரகங்களைத் தேர்தெடுத்து அதற்கேற்ப நடவு முறைகளையும் திட்டமிட்டால் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு உட்படாமல் நல்ல மகசூல் பெற முடியும்.

  1. முதலில் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை திட்டமிட்டுக் கொள்ளவேண்டும். பின்னர் நெல் ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதைப்போலவே தண்ணீர் இருப்புக்கு ஏற்ப நாற்றுவிட்டு நடவு செய்யலாமா? அல்லது நேரடி விதைப்பு செய்யலாமா என்பதைனையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
  2. சரியான முறையில் நெல் ரகங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ப நடவு முறைகளையும் திட்டமிட்டமிட்டால் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு உட்படாமல் நல்ல மகசூல் பெற முடியும்.

நெல் ரகங்கள்

சம்பா பருவத்திற்கு நாற்று விடும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அப்போது தான் கடைசிநேர தண்ணீர்ப் பற்றாக்குறையில் பயிர்கள் சிக்காமல் பொங்கல் நேரத்தில் அறுவடை செய்ய இயலும். அதேபோல் கோடைப் பயிரையும் சிரம்மின்றிச் செய்யலாம்.

ஆடுதுறை 38 மற்றும் ஆடுதுறை 46:

இது 130 முதல் 135 நாட்கள் வயதுடைய நெல் ரகம் ஆகும். இந்த ரகங்கள் நாற்றுவிட்டு நடவு செய்ய ஏற்றவையாகும். அதே நேரத்தில் நேரடி நெல் விதைப்பு – புழுதி- நெல் விதைப்பு- சேற்று நெல் விதைப்பு- திருந்திய நெல் சாகுபடி ஆகிய முறைகளிலும் இவற்றை விதைக்கலாம். இது ஏக்கருக்கு உடன் மகசூல் கொடுக்கக்கூடியது. இவை ஓரளவு வறட்சியைத் தாங்கும் ரகங்கள் ஆகும்.

ஆடுதுறை 49 கோ 50 மற்றும் திருசசி 3

இவையும் 135 நாட்கள் வயதுடைய நெல் ரகங்கள் இவையும் அனைத்து நடவு முறைகளிலும் நடவு செய்ய ஏற்ற ரகங்கள். இந்த ரகங்கள் ஏக்கருக்கு உடன் மகசூல் கொடுக்க கூடியது. இந்த ரகங்கள் ஓரளவு வறட்சியைத் தாங்கி மகசூல் தரக்கூடிய ரகங்கள் ஆகும்.

மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி

இந்த நெல் 135 நாட்கள் வயதுடைய மத்தியக் கால ரகம். இந்த நெல் சன்ன ரகமாக இருப்பதால் மக்களிடமும் விவசாயிகளிடமும்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நெல்லுக்கு நல்ல சந்தை இருப்பதால் விவசாயிகள் இந்த ரதத்தினை விரும்பிப் பயிரிடுகின்றனர்.

தாளடிக்கு ஏற்ற நெல் ரகங்கள்

தாளடிப் பருவத்திற்கு நெல் பயிர் செய்பவர்கள் ஆடுதுறை 36,46 மற்றும் ஆடுதுறை 49 ஆகிய ரகங்களைப் பயிர் செய்யலாம். மேலும் திருச்சி 3. கோ 50 மற்றும்  மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய ரகங்களையும் பயிர் செய்யலாம்.

நேரடிப் நெல் விதைப்பதற்கான ரகங்கள்

கடைமடை மற்றும் கடலோரப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். அதனால் அந்தப் பகுதி விவசாயிகள் நேரடியாக நெல் விதைப்பு செய்வார்கள்.

ஆதாரம் : புதிய தலைமுறை

Filed under:
3.10185185185
manikandan Aug 30, 2016 01:11 PM

ரெஸ்பெக்டர் சார் சம்பா 34 எப்படி உற்பத்தி செய்வது எப்போழுது உர மிட வேண்டும் எப்போது களை எடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top