பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பசுந்தீவனச் சோள சாகுபடி

பால் உற்பத்தியைப் பெருக்கும் பசுந்தீவனச் சோளம் பற்றிய குறிப்புகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

பசுந்தீவனச் சோளம்

 • நல்ல சத்துள்ள, தரமான பசுந்தீவனங்கள் போதிய அளவிலும், சரி விகிதத்திலும் கிடைக்காததே கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.
 • இதனைக் கருத்தில் கொண்டு பசுந்தீவனச் சோளம் (கோ.எப்.எஸ். - 31) பயிரிட்டு கால்நடைகளுக்கு வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்கிறது.
 • பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரகத்தின் சிறப்பியல்புகள்: அதிக கிளைக்கும் திறன் கொண்டது. அகலமான இலைகள், கதிர்களில் இருந்து மணிகள் கொட்டாமல் இருக்கும் தன்மை கொண்டது.
 • அதிக புரதச்சத்து (9.86 சதவீதம்) கொண்டதும், அதிக பசுந்தீவன உற்பத்தி கொண்டதுமாகும்.
 • அதாவது 1 ஹெக்டேருக்கு 1 ஆண்டில் 190 டன் என்ற அளவில் அறுவடை செய்யலாம். மறுதாம்பு பயிருக்கு ஏற்றது. சுவையான பசுந்தீவனமாகும். கால்நடைகள் இவற்றை விரும்பி உண்கின்றன.

சாகுபடி தொழில்நுட்பம்

 • இந்த பசுந்தீவனப் பயிரை ஆண்டு முழுவதும் எல்லா மண் வகைகளிலும் பயிரிடலாம்.
 • நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு 1 ஏக்கருக்கு 10 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பால்போ பாக்டீரியா கலந்து இட வேண்டும்.
 • பின்னர், 2 முதல் 3 முறை உழுது பண்படுத்தப்பட்ட நிலத்தில் 6 மீட்டர் நீளமும், 60 செ.மீ. இடைவெளியும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
 • மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்கள் இட வேண்டும்.
 • மண் பரிசோதனை செய்யாவிடில் ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 16 கிலோ மணிச்சத்து, 8 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
 • மேலுரமாக விதைத்த 25 நாள்கள் கழித்து 12 கிலோ தழைச்சத்து போட வேண்டும்.
 • மறுதாம்புப் பயிரில் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் 18 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
 • 4-ஆவது அறுவடையின் போது ஏக்கருக்கு 18 கிலோ தழைச்சத்துடன் 16 கிலோ மணிச்சத்து, 16 கிலோ சாம்பல் சத்தையும் இடுவது நல்லது.
 • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை பாத்திகளின் இருபுறமும் விதைக்க வேண்டும்.
 • விதைக்கு விதை இடைவெளி 10 முதல் 15 செ.மீ. இருக்க வேண்டும். விதைத்த 20 நாள்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
 • தேவைப்பட்டால், 35 முதல் 40-ஆவது நாளில் அடுத்த களை எடுக்கலாம்.

நீர் மேலாண்மை

 • நீர் மேலாண்மையைப் பொருத்தவரை விதைத்தவுடன் ஒரு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
 • 3-ஆவது நாளில் உயர் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

 • பொதுவாக பயிர் பாதுகாப்பு தேவையில்லை. விதை உற்பத்திக்காக பயிர் செய்தால், குருத்து ஈ காணப்பட்டால் விதைத்த 10-ஆவது நாளில் புரபனோபாஸ் 300 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • பசுந்தீவன அறுவடைக்கு 30 நாள்களுக்கு முன் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.

அறுவடை

 • விதைத்த 65 முதல் 70 நாள்களில் அறுவடை செய்து விடலாம். பிறகு ஒவ்வொரு மறுதாம்பு பயிரும் 50 நாள்கள் இடைவெளிகளில் அறுவடை செய்யலாம்.
 • கோ.எப்.எஸ். - 31 ரகம் 1 ஏக்கரில் 68 டன்கள் பசுந்தீவனம் முதல் 7 அறுவடைகளில் கிடைக்கும்.
 • பூக்கும் பருவத்துக்கு முன் கால்நடைகளுக்கு வழங்க வேண்டாம்: பசுந்தீவனச் சோளம் கோ.எப்.எஸ். - 31 ரக பயிர் விளைந்த 40 நாள்களுக்குள்பட்ட இளம் பயிர் பருவத்தில் கால்நடைகளுக்கு வழங்கக் கூடாது.
 • அந்த பருவத்தில் ஹைட்ரஜன் சயனைடு என்ற நச்சுப் பொருள் அதிகம் இருப்பதால் அது கால்நடைகளுக்கு ஏற்றதல்ல.
 • எனவே பயிர்கள் பூத்தப் பின் அறுவடை செய்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

விதை உற்பத்தி

 • இந்த தீவன சோளத்தை விதை உற்பத்தி செய்தால் அதிக லாபம் ஈட்டலாம்.
 • விதை உற்பத்தி செய்வதாக இருந்தால் பயிர் இடைவெளியை மட்டும் அதிகரித்து 60-க்கு 15 செ.மீ. அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • மற்ற தொழில்நுட்பங்களை சாகுபடி குறிப்பில் உள்ளதுபோல கடைப்பிடிக்கலாம். பயிர்கள் 110 முதல் 125 நாள்களில் விதை அறுவடை செய்யலாம்.
 • 1 ஏக்கருக்கு 300 கிலோ வீதம் விதை மகசூல் தரும். ஆண்டுக்கு 3 முறை விதை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த விதைகளை 60 நாள்களுக்குப் பிறகு விதைப்புக்கு உபயோகிப்பது நல்லது.


சோளம் விதைப்பது எப்படி

ஆதாரம் : வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்

3.04580152672
இசக்கி May 01, 2017 11:12 PM

விதை எங்கு கிடைக்கும்

TASNA Oct 19, 2015 03:08 PM

சிறப்பு அதிகாரி, விதை மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003.
தொலைபேசி: 0422-6611232
மின்னஞ்சல்: *****@tnau.ac.in என்ற முகவரியை தொடர்புக் கொள்ளுங்கள்.

Anonymous Oct 19, 2015 01:45 PM

விதை எங்கு கிடைக்கும் sir சொல்லுங்கள்

Deva Aug 10, 2015 03:29 PM

விதை எங்கு கிடைக்கும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top