பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை பயிர்கள் / நார் பயிர்கள் / பருத்தி / மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்ப முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்ப முறைகள்

மானாவாரி பருத்தி சாகுபடியில் மகசூலை அதிகரிக்க சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விதையளவு

பஞ்சு நீக்கிய விதைகள் ஹெக்டேருக்கு 15 கிலோவும், பஞ்சு நீக்கப்படாத விதைகள் 20 கிலோவும் தேவை. ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு பயிரிடுவதாக இருந்தால் ஹெக்டேருக்கு 10 கிலோ தேவை. தட்டைப் பயறுடன் பயிரிடுவதாக இருந்தால் 7.5 கிலோ போதும். நிலத்தை நன்றாக உழுதபின் 150 செமீ அகலத்துக்கு மேட்டுப் பாத்திகள் அமைத்து அதன் பக்கவாட்டில் 30 செமீ அகலமும் 30-க்கு 60 செமீ ஆழமும் உள்ள சால்களை அமைக்கவேண்டும். இதன் மூலம் மண்ணின் ஈரம் அதிக காலம் பராமரிக்கப்பட்டு பயிர் செழித்து வளர ஏதுவாகிறது. இல்லையெனில், சாதாரண சால் முறையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. விதை நேர்த்தி, இறவைப் பயிருக்கு செய்ததுபோலவே மானாவாரிப் பயிருக்கு செய்யவேண்டியது அவசியம்.

விதைப்பு

நிலத்தில் விதைகளை குறிப்பிட்ட ஆழத்தில் விதைக்கும்போது பயிர்களின் முளைப்புத்திறன் அதிகரித்து பயிரின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. பருத்தி விதையை 5 செமீ ஆழத்தில் விதைக்கவேண்டும். கொரு என்ற விதைப்பான் அல்லது டிராக்டரின் மூலம் விதைக்கக்கூடிய உழவு விதைப்பான் கொண்டும் விதைக்கலாம்.

பயிர் இடைவெளி

தனிப்பயிராக ரகங்களையோ வீரிய ஒட்டு ரகங்களையோ சாகுபடி செய்யும்போது வரிசை இடைவெளியாக 45 செமீ செடிகளுக்கு இடையே 15 செமீ அளவு இடைவெளி விடவேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது ஓர் இரட்டை வரிசை பருத்தியை அடுத்து இரண்டு வரிசை பயறுவகை பயிர்கள் ஊன்றப்படுகின்றன. இதனால் பருத்திச் செடியின் எண்ணிக்கை குறைவதில்லை.

அமில விதை நேர்த்தி, பஞ்சு நீக்கிய விதைகளில் பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி ஆகியவற்றை இறவைப்பயிருக்கு செய்வதைப்போன்று செய்ய வேண்டும்.

பலபயன் கருவியால் விதைப்பு, உரமிடலை ஒரேநேரத்தில் செய்யலாம். கூம்பில் உரக்கலவையை இட்டு நிரப்பி இயக்கவேண்டும். மூன்று பேரைப் பயன்படுத்தி இருவர் பருத்தியையும் ஒருவர் பயறுவகை விதைகளையும் இடவேண்டும்.

குறிப்பு: பருத்தி, பயறு வகை விதைகளை 5 செமீ ஆழத்தில் கரிசல் மண்ணில் விதைக்கும்போது குறைந்த மழையால் அவை பாதிக்கப்படுவதில்லை. அதிக மழை பெய்யும்போது மட்டுமே நீர் இந்த ஆழத்துக்கு இறங்கி விதைகள் முளைக்கின்றன.

இடைவெளி நிரப்புதல்: ஒவ்வோர் இடைவெளியிலும் 3 அல்லது 4 விதைகளை விதைக்கவேண்டும்.

செடி களைப்பு: ஒரு குத்துக்கு இரண்டு செடிகளைவிட்டு, விதைத்த 15ஆவது நாள் செடிகளைக் களைத்துவிட வேண்டும். பயறுவகை செடிகளை விதைத்த 20ஆவது நாள் தட்டைப்பயறுக்கு 20 செமீ, மற்றப் பயிர்களுக்கு 15 செமீ அளவில் விட்டு களைந்துவிட வேண்டும்.

களைக் கட்டுப்பாடு

பருத்திக்கு புளுகுளோரின் என்ற களைக்கொல்லியை ஹெக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளித்தலின் மூலம் முதல் 25 நாள்களுக்குள் களைகளைத் தடுக்கலாம். பின்பு 30 அல்லது 40ஆவது நாளில் களைக்கொத்தியைக் கொண்டோ, தந்துலு கலப்பையைக் கொண்டோ இரண்டாவது முறையாக களைகளை அப்புறப்படுத்தவேண்டும்.

இலைவழி தெளித்தல்: பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு கிலோ யூரியாவை 1 லிட்டர் நீரில் கலந்து 45, 65 நாள்களில் இலைகளில் தெளிக்கவேண்டும்.

பயிரிடை நேர்த்தி

விதைத்த 30, 45ஆவது நாள்களில் நீண்ட தகடுக்கத்திக் கலப்பையால் உழுவது செடி வளர்ச்சிக்கு உகந்ததாகிறது. களையைக் கட்டுப்படுத்த மட்டுமன்றி நீரைச் சேமிக்கவும் உதவுகிறது. மண் ஈரம் காக்கும்பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். இதற்காக கசிவுநீர், பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.

பயிர் வினையியல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காட்டன் ப்ளஸ் ஏக்கருக்கு 2.5 கிகி 200 லிட்டர் நீரில் கலந்து இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைகிறது, காய் வெடித்தல் அதிகரிக்கிறது, விதை பருத்தி மகசூல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியைத் தாங்கும் தன்மை கிடைக்கிறது.

அறுவடை

உயர்ந்த அளவில் விளைவிக்கும் பருத்தியை கட்டுக்கோப்பாக அறுவடை செய்வதும் கிடைத்த மகசூலை தரம் பிரித்து தக்கவாறு சேமித்து பின்பு விற்பனை செய்வதும் பருத்திச் சாகுபடியின் இறுதிக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பணி.

இவ்வகையில் பருத்தி மற்ற எல்லா பயிர் வகைகளிலிருந்தும் முற்றிலும் மாறுபடுகிறது. ஏனைய பயிர்கள் அடுத்தடுத்து ஒன்று அல்லது இரண்டு தடவைகளில் அறுவடையாகி விடும்போது, பருத்தி அறுவடை சுமார் நான்கு முதல் எட்டு வாரங்கள் வரை நீடிக்கிறது.

காலை இளம் வெயில் நேரத்தில் பத்து மணிக்குள்ளாகவும், மாலை மூன்று மணிக்கு பின்பும் பருத்தி எடுப்பது நல்லது. நடுப்பகலில், வெப்பமான சூழ்நிலையில் எடுக்கப்படும் பருத்தியில் காய்ந்து ஒடிந்த புழுவிதழ்களும், சருகுகளும் சேர்ந்து நல்ல பருத்தியோடு கலந்துவிடும். தும்பும் தூசியும் இல்லாதபடி எடுக்கப்படும் சுத்தமான பருத்திச் சுளைகளை தனியாக துணிப்பையிலோ, சாக்குப் பையிலோ வைத்துக்கொண்டு செடியிலிருந்து கிடைக்கும் தரம் குறைந்த கொட்டைப் பருத்தியை தனியாக இன்னொரு பையிலுமாக வைத்துக் கொள்ளவேண்டும். துணிப்பையில் சேமிப்பதால், பருத்தி மாசுபடாமல் சுத்தமாக இருக்கிறது. எடுத்த பருத்தியை, வயலில் மண் தரை மேல் கொட்டி வைப்பதோ, நாள் முழுவதும் சூரிய வெப்பத்தில் காயும்படி போட்டு விடுவதோ கூடாது. மரநிழலிலோ அல்லது பண்ணையைச் சேர்ந்த வீட்டு முற்றங்களிலோ, கெட்டியான மண் அல்லது சிமெண்ட் தரையிலோ பருத்தியை அம்பாரம் போட்டு வைக்க வேண்டும். விற்பனைக்கு முன் நல்ல பருத்தி, கொட்டைப் பருத்தியை மறுபடியும் தரம் பிரித்து. சாக்குப் பைகளில் தைத்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எங்கெங்கு பருத்தி தரம் பிரிக்கும் வசதிகள் உள்ளனவோ அவற்றை பருத்தி விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பருத்திக்கு தனி மதிப்பும், கூடுதல் விலையும் உண்டு என வேளாண் துறை தெரிவித்துள்ளது.


பருத்தி பயிரில் லாபம் பெற சிறந்த முறை

ஆதாரம் : தினமணி

2.84905660377
s Mariyappan Oct 25, 2017 08:51 PM

பருத்தி சாகுபடி பற்றிய வழிமுறை சொல்லுங்கள்

v .manivel Oct 03, 2017 12:50 PM

பருத்தியில் பச்சை பூச்சியை இயற்க்கை முறையில் எப்படி கட்டுப்படுத்துவது

முருகானந்தம் May 18, 2017 08:55 PM

பருத்தி சப்பாத்தி பூச்சி பரவுதற்கான காரணம்

கந்தன் Apr 30, 2017 11:09 PM

ஐயா, நான் முதல் முறை பருத்தி சாகுபடி செய்கிறேன்.. வழிகாட்டி இல்லை ,நிலத்தை உழுவாமலே விதை போட்டுவிட்டேன்.. தற்போது வயல் போக்கு களைகளின் விளைவாக சப்பாத்தி பூச்சி ஏறக்குறைய பாதியை தாக்கிவிட்டது.!

சப்பாத்தி பூச்சி என்று கூறியவர்கள் இதனை மோசமான பூச்சி பருத்தியை அழிக்க ஏற்ற பூச்சி என்றனர்.. !

இப்பூச்சியை ஒழிக்கும் வழிமுறைகள்,பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் . .என்பதை பதிவு செய்ய வேண்டிகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top