பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தகவல் அறியும் உரிமை சட்டம் / முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்

தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்

தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்

முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது

 • பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது.
 • நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது.
 • துணை பொதுதகவல் அதிகாரியினை பணியமர்த்தாத போது/பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.
 • துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து அதனை பொதுத்தகவல் அதிகாரிக்கு அனுப்ப மறுக்கும் போது.
 • பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள் திருப்தியடையாதபோது
 • உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறானதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக்கும்போது.
 • தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது

முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்

 • கூறப்பட்டுள்ள, காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநில பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிராகரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தியப் பொது தகவல் அதிகாரியிடமிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).
 • மேல்முறையீடு (Appellate) தொடர்பான அதிகாரி, மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறையீட்டாளரின் மனுவினை 30 நாட்கள் கடந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்

 • விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது இணையதளத்தில் India Development Gateway Portal (http://www.indg.in/e-governance/rti/requestform.pdf), என்ற முகவரியிலிருந்து இறக்கல் செய்து கொள்ளலாம்.
 • விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்.
 • தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.
 • சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண்ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொதுத்தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப்பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.
 • விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.

எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?

 • பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ள முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 • நிறுவன நிலைமுறைப்படி (hierarchy) முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப்பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.
 • முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன்மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)

முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?

 • பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தரலாம்.
 • அஞ்சல் மூலம் மனுவை அனுப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.
 • நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும்.

தகவல் பெறக்கூடிய கால

 • பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதிவிலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
 • முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.

முதல் முறையீட்டிற்கான படிவம்

3.046875
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ப மணிவேல் Jul 03, 2019 07:28 AM

எங்கள் உரில்2008ஆம் ஆண்டு சிமென்டு சாலை அமைக்கபட்டுள்ளது இந்த சாலைபற்றிய விவரம் யாரிடம் கேப்பது

Amanullah Jun 26, 2019 09:53 PM

மதுவிலக்கு சம்பந்தமாக யாரை அணுகுவது

அண்ணாமலை Mar 06, 2019 12:30 PM

தகவல் உரிமை சட்டம் மூலமாக தொழிலார் வைப்பு நிதி குறித்து யாரிடம் அணுகவும்

Vinayagam c Feb 18, 2019 11:03 PM

1 தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகள் 2 கிராம வளர்ச்சி குறைகள் 3 கட்டுமான தொழிலாளர் மற்றும் குறைகள் பொதுநல குறைபாடுகளை பதிவு செய்தல் வேண்டும் மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பதிவு செய்தல் வேண்டும்

Anonymous Feb 14, 2019 10:00 AM

கூட்டுறவு துறையில் தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதில் இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என பதில் அளித்துள்ளார்கள் - இதற்கான பதிலை கேட்டு பெற என்ன செய்ய வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top