பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / இந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள்

இந்தியாவில் உள்ள வன உயிர் மற்றும் நீர்ச் சட்டங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

வன உயிர் மற்றும் நீர் வளங்கள் சார்ந்த பல சட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால் நன்னீர் பல்லுயிர் பாதுகாப்புத் தொடர்பான சட்டங்கள் குறைந்த அளவிலியே உள்ளது. அவ்வித சட்டங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானது.

இந்திய மீன்பிடிச்சட்டம், 1987

  1. மீன்களை பேரளவில் அழிக்கக்கூடிய மீன்பிடி முறைகளான நச்சு மற்றும் வெடி வைத்து பிடிப்பது போன்றவற்றை தடை செய்தல்.
  2. சில நீர் நிலைகளில் மாநில அரசு விதிகள் மூலம் மீன்களுக்கு பாதுகாப்பு அளித்தல்

சில மாநிலங்களில், மாநிலங்கள் அளவிலான மீன்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவைகள் முறையே கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா

  • கேரளா : உள்நாட்டு மீன்பிடிச்சட்டம்
  • கர்நாடகா : கர்நாடகா உள்நாட்டு மீன்பிடி (பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் சீரமைப்பு) சட்டம், 1996
  • மகாராஷ்ட்ரா : 1961 மகாராஷ்ட்ரா சட்டம்

பல்லுயிர் சட்டம், 2002

இச்சட்டம் இந்தியாவில் காணப்படும் பல்லுயிரினங்களைப் பற்றியதாகும். அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளுக்கான பொருத்தமான மேலாண்மை நடவடிக்கை எடுப்பதன் அவசியத்தையும், வன உயிர்களைப் பிடிப்பதை தடைசெய்வது அல்லது கட்டுப்படுத்துவதைப் பற்றியதாகும்.

அனைத்து மாநில பல்லுயிரிய வாரியங்களும், உள்ளுர் மக்கள் இந்தச் சட்டத்தைப் பின்பற்ற ஏதுவாக பல்லுயிர் பதிவேட்டை பெற்றிருக்க வேண்டும்.

ஈர நில விதிகள் 2009

  1. ஈரநில விதிகள் அதன் அளவு, வாழிடம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை அடிப்படையாக கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு,  அந்தப்பிரிவு தகவலை ஈரநிலங்களுக்கு பொறுப்புடைய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவித்தல்.
  2. இந்த மூன்று பிரிவுகளின் கீழ் அடங்கும் ஈரநிலங்களில் குறிப்பாக எந்த செயல்கள் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது அனுமதிக்கப்பட கூடாது என்பதை விளக்குதல்

தேசிய நீர்க்கொள்கை, 2012

  1. மனிதன் உயிர் வாழ தண்ணீர் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது, தண்ணீரின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவில் தண்ணீரின் பயன்பாடு நீர் வள மேலாண்மையில் உள்ள இடைவெளிகளைப் பற்றி இக்கொள்கை விளக்குகிறது.
  2. எதிர்காலத்தில், நம் நீர் வளங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

ஆதாரம் : மேற்குத்தொடர்ச்சி மலை, நன்னீர் பல்லுயிரியம், தமிழ்நாடு வனத்துறை

2.44444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top